search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு விவசாயிகள்"

    • கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது.
    • கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில், 2023-24-ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் வேளாண்மை துறை அமைச்சர் அறிவித்தார்.

    அதையே உறுதி செய்து தீபாவளிக்கு முன்பு அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் இத்தொகை வழங்கப்படும் என்று அரசின் சார்பில் செய்தி குறிப்பும் வெளியிடப்பட்டது.

    ஆனால் இன்று வரை இத்தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான எந்த விதமான நடவடிக்கைகளையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.

    தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஊக்கத்தொகை கிடைக்காத கரும்பு விவசாயிகள் இந்தாண்டு தீபாவளியை வழக்கமான உற்சாகத்தில் கொண்டாட முடியாமல் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

    உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள்.
    • 2023-24 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவுசெய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ரூ.247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2,919.75 யுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையான ரூ.215 சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,134.75 கிடைக்கும்.

    இந்த சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள்.

    2023-24 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவுசெய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

    • கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தினர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக் கடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தியும், ஆலையை இயக்க தேதியை அறிவிப்பு செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரே சன், மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் அடக்கி வீரனன், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ஆண்டிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஸ்டாலின் குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஆலை தொடர்ந்து இயங்க ஆய்வு குழு அறிவித்த ரூ.26 கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க கோரியும், அரவை செய்தவுடன் கரும்பு விவசாயிகளுக்கு உடனடி யாக பணம் பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும், விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்ட போதும் பீல்டு மேன், கேன் ஆபிசர்களுக்கு சம்பளம் போடாத காரணத்தால் கரும்பு பதிவு செய்யாமல் ஆலையை முடக்கியதை கண்டித்தும், தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, கண்டன கோஷங்களை எழுப்பி கரும்பு விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் ஆலை துணைத் தலைவர் ராமராஜ் நன்றி கூறினார்.

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கரும்பு அரவை

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பருவத்திற்கு இதுவரை 4,270 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டு இதுநாள் வரை ஆலையின் அரவைக்கு பதிவு செய்யாத விவசாயிகள், அந்தந்த பகுதி கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்ற 15-ம் தேதிக்குள் விடுபடாது பதிவு செய்துகொள்ளலாம்.

    சொட்டுநீர் பாசனம்

    கரும்பு விவசாயிகளுக்கு நடப்பாண்டில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 375 எக்டர் பரப்பளவில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதத்திலும் அரசு மானியம் வழங்கப்படுகிறது.

    நடவு பருவத்தில் அதிக அளவில் அகல பார் முறையில் 4.5 அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு முன்பதிவு செய்து பயன்பெறலாம். எனவே கரும்பு விவசாயிகள் அனைத்து அரசு திட்டங்களையும், பயன்பெற உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்யலாம்.

    கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைமை கரும்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு முழுவதுமாக கரும்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 1 மாதத்திற்குள்ளாக அறுவடை செய்வதற்கு ஆலைநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப் பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ஆலை வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட ப்பட்ட இணை மின் நிலைய பணிகளை தொடங்கி, விரைந்து முடித்திட வேண்டும். ஆலை இயங்கும்போது வெளியேறும் கரிதுகள்கள் பரவுவதை தடுப்பது, வெட்டு க்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், விவசாயிகள் பயிர் செய்த கரும்புகளை 1 மாதத்திற்குள்ளாக அறுவடை செய்வதற்கு ஆலைநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் முதல் தேதியில் அரவை பணியை தொடங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×