என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வேளாண் சங்கமம் 2023"
- பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார்.
- கண்காட்சியில் உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவுகள், மண் வள அட்டை வழங்கும் சேவைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
திருச்சி:
திருச்சிக்கு 2-நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வருகை தந்தார்.
பின்னர் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு அந்த போரில் வீர மரணம் அடைந்த திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனின் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி மைதானத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட டெல்டா மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து இன்று காலை (வியாழக்கிழமை) திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 3 நாள் வேளாண் சங்கமம் - 2023 நிகழ்ச்சி தொடக்க விழாவில் பங்கேற்றார். இங்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினார். மேலும் இந்த விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கினார்.
இந்த வேளாண் கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், பசுமை குடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன எந்திரங்கள், டிரோன்கள் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
வேளாண்மையில் தற்போது புகுத்தப்பட்டுள்ள புதிய நவீன தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல், செயல் விளக்கங்கள் மற்றும் வேளாண்துறை திட்டங்கள் சார்ந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பலா மர கன்றுகள் மற்றும் காய்கறி விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விவசாயிகளை பெரிதும் கவர்ந்தது.
மேலும் தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த கண்காட்சியில் உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவுகள், மண் வள அட்டை வழங்கும் சேவைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் புதிய தொழில்நுட்பங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பம், வேளாண் எந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. இந்த வேளாண் கண்காட்சி, கருத்தரங்கில் 3 நாட்களும் சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த வேளாண் கண்காட்சி பயனுள்ளதாக அமைந்துள்ளது.
- பழங்கள், காய்கனிகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கண்கொள்ளாகாட்சியாக அமைந்துள்ளது.
- மண்ணும் ஈரமானது. உழவர்களது உள்ளமும் ஈரமானது. மண்ணும் மக்களும் வாழ்ந்தார்கள் மகிழ்ந்தார்கள்.
திருச்சி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று 3 நாள் வேளாண் சங்கமம்-2023 விழாவை தொடங்கிவைத்து கண்காட்சிகளை பார்வையிட்டு, 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் மற்றும் விருதுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மிக மிக பசுமையான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடை கிறேன். இதற்கு காரணம் இப்பொழுது மனமும் பசுமையாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சியை பார்வையிட்டபோது இன்றைக்கு நான் பெற்ற உணர்வை அன்றைக்கு நான் பெற்றேன்.
பழங்கள், காய்கனிகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கண்கொள்ளாகாட்சியாக அமைந்துள்ளது.
அந்த உணர்வை எனக்கு ஏற்படுத்தி தந்திருக்க கூடிய அந்த பெரும் வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்க கூடிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு முதலில் என்னுடைய நன்றியை காணிக்கையாக்க விரும்புகிறேன்.
நம்முடைய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரைக்கும் அவரை வேங்கையின் மைந்தன் என்று நாங்கள் அரசியல் மேடைகளில் சொல்வது உண்டு. ஆனால் வேளாண் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு அவர் ஆற்றும் பணிகளை பார்க்கும்போது அவர் உழவர் மகனாகவே இப்பொழுது மாறி இருக்கிறதை பார்க்க முடிகிறது.
வேளாண் துறையை தலைசிறந்த துறையில் ஒன்றாக அவர் மாற்றி இருக்கிறார். கழக ஆட்சி அமைந்ததற்கு பிறகு அனைத்து துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று நாங்கள் உழைத்து வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள்.
மிக சிறப்பான வளர்ச்சியை மற்ற துறைகளை போல வேளாண் துறையை நினைத்த உடனே வளர்த்து விட முடியாது. மற்ற துறைகளை வளர்க்க நிதி வளம் இருந்தால் போதும். ஆனால் வேளாண் துறை வளர்க்க நிதித்துறை மட்டும் அல்ல நீர் வளமும் வேண்டும்.
அது காலத்தில் கிடைக்க வேண்டும். நீர் வளமும் கை கொடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு தேவையான இடுப்பொருட்களை வேளாண் துறை குறித்த காலத்தில் தேவையான அளவு வழங்கியதால் உற்பத்தி பெருகியது. உற்பத்தி பரப்பும் அதிகமானது.
மண்ணும் ஈரமானது. உழவர்களது உள்ளமும் ஈரமானது. மண்ணும் மக்களும் வாழ்ந்தார்கள் மகிழ்ந்தார்கள். நம்மால் இன்றைக்கு பெருமையோடு சொல்ல முடியும்.
தி.மு.க. அரசு அமைந்ததும் வேளாண்மை துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்களை நாம் தொடங்கி இருக்கிறோம்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், வேளாண் நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம், நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மண்வள மேலாண்மை ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் தான் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. நமது அரசு பொறுப்பேற்று செயல்படுத்திய திட்டங்களினால் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2021-2022-ம் ஆண்டு 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக்டன் அளவில் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு சாதனையை நாம் படைத்திருக்கிறோம்.
குறுவை சாகுபடி மேற்கொள்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 36,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை நாம் எட்டி இருக்கிறோம்.
தமிழ் மண்வளம் என்ற இணையதளத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். விவசாயிகளுக்கு மிகுந்த பயனளித்து வரும் உழவன் செயலி பயன்பாட்டில் உள்ளது.
இந்தியாவிலேயே முதன் மாநிலமாக நமது அரசு நலத்திட்டங்கள் சரியான பயணிகளை பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்திட உழவர்கள் அனைத்து விவரங்களை உள்ளடக்கிய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட கூடுதலாக சன்னரக நெல்லுக்கு ரூ.100-ம், இதர ரகங்களுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நெல் கொள்முதலில் ரூ.376 கோடியே 63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவித்த ஆதார விலையிலிருந்து டன் ஒன்றுக்கு தமிழக அரசு ரூ.195 சிறப்பு ஊக்கத்துறையாக வழங்கி வருகிறது.
தி.மு.க. அரசு அமைந்ததற்கு பிறகு முதலில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். பின்னர் கூடுதலாக 50,000 மின் இணைப்புகளை கொடுத்தோம். இப்போது மேலும் 50,000 மின் இணைப்புகளை வழங்குகிறோம்.
ஆனால் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கியுள்ளது.
உழவர்களுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டத்தை 1990-ம் ஆண்டு தொடங்கி வைத்தவர் அன்றைக்கு முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்.
இந்த 30 ஆண்டு காலத்திலும் எல்லா காலத்திலும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்கள் வளம் பெற தலைவர் கலைஞர் தான் அன்றும் இன்றும் காரண கர்த்தராக அமைந்திருக்கிறார்.
வேளாண் துறையானது அதிகமான அளவுக்கு வளர்ந்து வருகிறது என்று அடையாளமாகவும் இது போன்ற கண்காட்சிகளை மூலமாக நாம் சொல்லலாம். நவீன தொழில்நுட்பங்கள் புதிய ரகங்கள் வேளாண்மை இயந்திரங்கள் மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கின்றன.
இதனை பொதுமக்களுக்கும், விவசாயிகளும் அறிந்து கொள்ள இதுபோன்ற கண்காட்சிகள் அவசியமாகின்றன.
விவசாயம் என்பது விரும்பும் அனைவரும் பார்க்கும் தொழிலாக மாற வேண்டும். நிலத்தை மதிப்புக்குறியது எதுவும் இல்லை.
அந்த நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். உழவர்களுக்கு தொழில் நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும்.
இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் வேளாண்மை வர்த்தக தொழிலாக மாறும். இதுபோன்ற கண்காட்சிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த ஆண்டு விவசாயிகள் சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்ட் மாதம் வரை நீடித்து தர வேண்டும் என என்னிடம் நேற்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 15-ந் தேதி வரை சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான தேதி நீடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 1.5 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- 3 புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள், தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்பட்டுள்ளன.
திருச்சி:
திருச்சியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழா வருகிற 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து வேளாண் சங்கமம் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வேளாண் துறையை வளர்க்க நிதி மட்டுமல்ல நீர் வளமும் தேவை. வேளாண் துறையை வளர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
6 ஆண்டுகளுக்கு பின் 119 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. உழவர்கள் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஏற்கனவே ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம்.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2.20 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. 2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 1.5 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
3 புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள், தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து வளர நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண் துறையை சிறந்த துறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாற்றி உள்ளார். வேளாண் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
வேளாண் லாபம் தரும் தொழிலாக இன்றும் முழுமையாக மாறவில்லை. வேளாண்மையில் வருமானத்தை பெருக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல் விற்பனையாளர்களாகவும் மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருச்சியில் 3 நாள் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை வேளாண்மைத்துறை நடத்த உள்ளது.
- முதல் நாளான இன்று முதலமைச்சர் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
திருச்சி:
வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் வணிகத் திருவிழா சென்னையில் கடந்த 8-ந் தேதி நடந்தது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, திருச்சியில் 3 நாள் வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை வேளாண்மைத்துறை நடத்த உள்ளது. அதன்படி, வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த சங்கமம் நடக்க உள்ளது.
திருச்சி கேர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழா 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இதையடுத்து பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்குகிறார்.
தொடர்ந்து, நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள் இந்த சங்கமத்தில் கலந்துரையாடப்படுகிறது.
- அதிக விளைச்சல் பெற்ற மூன்று விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
- இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு, ஜூலை 27 முதல் ஜூலை 29 வரை திருச்சி, கேர் பொறியியல் கல்லூரியில் "வேளாண் சங்கமம் 2023" விழாவினை சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நாளை 27-ந்தேதி வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி வாழ்த்த உள்ளார். தொடர்ந்து, நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியினையும் துவங்க இருக்கிறார்.
வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களில் உயர் விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான செயல் விளக்கங்கள், புதிய வேளாண் இயந்திரங்கள், சூரியசக்தி மூலம் இயங்கும் கருவிகள், விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான வழிமுறைகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்தான கருத்தரங்குகள், உழவன் செயலி பதிவிறக்கம், அரசின் திட்டப்பலன்களை பெறுவதற்கு முன்பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன.
இக்கண்காட்சியில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை, வேளாண் பொறியியல், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), கைத்தறி, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், பட்டு வளர்ச்சி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பல்வேறு பயிர்கள் சார்ந்த வாரியங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களும் பங்கேற்கின்றன.
அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது, நுண்ணீர் பாசன நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள், வேளாண் இயந்திர நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வங்கிகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டு பிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளார்கள்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நுண்ணீர்ப் பாசனத்திட்டம், இயற்கை வேளாண்மை, ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய இயக்கம், தென்னையில் பயிர்ப்பாதுகாப்பு, பாரம்பரிய நெல் ரகங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில், செங்குத்து தோட்டம், நீரியல் தோட்டம், மாடித் தோட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதல், மதிப்புக்கூட்டுதல் போன்ற உழவர்களுக்காக அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உழவன் செயலி பதிவிறக்கம், திட்டப்பதிவு மையம், தமிழ் மண்வள இணையதளம் மூலம் மண்வள அட்டை விநியோகம் போன்ற இணையவழி சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியுடன், விவசாயிகள் வாங்கிச் சென்று தங்கள் பண்ணையில் சாகுபடி செய்வதற்கேற்றவாறு, புதிய ரகங்களின் காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளில் ஒட்டு ரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்களும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அங்கக வேளாண்மை, விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள், வேளாண் காடுகள் மூலம் வருமானம், நவீன வேளாண்மையில் புதிய உரங்களின் பயன்பாடு, வேளாண் இயந்திர மயமாக்கல் மற்றும் மதிப்புக் கூட்டல், தோட்டக்கலை சாகுபடியில் புதுமைகள், மின்னணு வேளாண்சந்தை மூலம் மின்னணு வர்த்தகத்தை அணுகுவதற்கான வாய்ப்புகள், வேளாண்மையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், சிறுதானிய சாகுபடி, முருங்கை சாகுபடி மற்றும் ஏற்றுமதி போன்ற பத்து தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள விருக்கிறார்கள்.
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களின் விற்பனையினை எளிதாக்கும் வகையில், கொள்முதல் செய்பவர்-விற்பனையாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது.
பாரம்பரிய நெல் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அதிக விளைச்சல் பெற்ற மூன்று விவசாயிகளுக்கு விருதும், பணப்பரிசும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்