என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அழுத்தம்"
- நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும்.
- காவல்துறை பணி கடுமையான சவாலான பணி.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெ்கடர் ரமேஷ்குமார், எடையூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து விருப்ப ஒய்வு பெற்று உயிரிழந்த நம்பிராஜன் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் வீதம் 14 லட்சம் வழங்கினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேசும்போது காவல்துறையில் தங்களது பேட்ஜ் நண்பர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என காட்டுவதாக இந்த நிகழ்வு உள்ளது. காவல்துறை பணி கடுமையான சவாலான பணி. மன அழுத்ததை தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டு இனி மாதம் ஒரு முறை குடும்பத்தினருடன் அதிகாரிகளுடன் தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்ற பழமொழிக்கு எடுத்துகாட்டாக நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும். அதனால் மது. புகையிலை பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும் என்றார். இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி.சோமசுந்தரம். இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உடனிருந்தனர்.
- டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 70 அடிக்கும் கீழே சரிந்துள்ளது.
- மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
20 நாட்கள்
டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 70 அடிக்கும் கீழே சரிந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் 20 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய 41.24 டி.எம்.சி. தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
விவசாய பணிகள்
தண்ணீர் பெற்று தந்தால் மட்டுமே காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி மற்றும் பல லட்சம் ஏக்கரில் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியும். விவசாயிகளை காப்பாற்ற உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை முதல்-அமைச்சர் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும்.
மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்