search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை மகளிர் கால்பந்து"

    • நேற்று முன்தினம் 'லீக்' போட்டிகள் முடிவடைந்தன.
    • 16 நாடுகள் நாக்அவுட் சுற்றான 2-வது ரவுண்டுக்கு தகுதி பெற்றன.

    ஆக்லாந்து:

    உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது.

    போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கியது. இந்தப்போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. நேற்று முன்தினம் 'லீக்' போட்டிகள் முடிவடைந்தன.

    இதன் முடிவில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஆஸ்திரேலியா, நைஜிரியா, ஜப்பான், ஸ்பெயின், இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜமைக்கா, சுவீடன், தென் ஆப்பிரிக்கா, கொலம்பியா, மொராக்கோ ஆகிய 16 நாடுகள் நாக்அவுட் சுற்றான 2-வது ரவுண்டுக்கு தகுதி பெற்றன.

    நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, அயர்லாந்து, ஜாம்பியா, கோஸ்டாரிகா, சீனா, ஹைத்தி, போர்ச்சுக்கல், வியட்நாம், பிரேசில், பனாமா, இத்தாலி, அர்ஜென்டினா, ஜெர்மனி, தென் கொரியா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஸ்பெயின்-சுவிட்சர்லாந்து, ஜப்பான்-நார்வே அணிகள் மோதுகின்றன.

    • அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது.
    • 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.

    டுனிடின்:

    9-வது உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.

    நியூசிலாந்தில் உள்ள டுனிடினில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் 'ஜி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

    அர்ஜென்டினா தரப்பில் சோபியா பிரான் (74-வது நிமிடம்), ரோமினா நுனாஸ் (79) ஆகியோரும், தென் ஆப்பிரிக்கா தரப்பில் லிண்டா மொதாலோ (30-வது நிமிடம்), ககட்லனா (66) ஆகியோரும் கோல் அடித்தனர். 2 கோல் பின்தங்கி இருந்த அர்ஜென்டினா பின்னர் 2 கோல் அடித்து சமன் செய்தது.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 0-1 என்ற கணக்கில் தோற்று இருந்தது. இதே போல தென்ஆப்பிரிக்கா 1-2 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோற்றது.

    இன்று நடைபெறும் மற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் ('ஜி' பிரிவு), இங்கிலாந்து-டென்மார்க், சீனா-ஹைதி ('டி' பிரிவு) அணிகள் மோதுகின்றன.

    ×