search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் நிலைய மறுசீரமைப்பு"

    • பா.ஜ.க.வும், காங்கிரசும் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • திட்ட பணிகள் நிறைவேற இருவேறு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    கரூர்:

    நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் புதுப்பிக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் கரூர், தஞ்சாவூர் உட்பட 18 ரெயில் நிலையங்கள் ரூ.515 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    அதனை தொடர்ந்து கரூர் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதி மணி அந்த அடிக்கல்லை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரெயில்வே கோட்ட முதன்மை திட்ட மேலாளர் அணில்குமார் பஞ்ஜியார், கரூர் உதவி கலெக்டர் ரூபினா, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தின் படி கரூர் ரெயில் நிலையத்தில் லிப்ட், நகரும் படிக்கட்டு, பயணிகள் காத்திருப்பு அறை, பயணிகள் உள்ளே, வெளியே செல்ல தனித்தனி வழிகள் உள்ளிட்ட வசதிகள் ரூ.34 கோடியில் அமைக்கப்படுகிறது. மேற்கண்ட பணிகளை அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளதற்கு காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளும் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.ஜோதிமணி நிருபர்களிடம் கூறும்போது, கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வலியுறுத்தி மத்திய ரெயில்வே அமைச்சரிடம் கடந்த 2020-ம் ஆண்டு கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் தற்போது ரூ.34 கோடியில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றார்.

    இதனை பா.ஜ.க. ஏற்க மறுத்தது. அந்த கட்சியின் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், கரூருக்கு வந்திருந்த மத்திய ரெயில்வே இணை மந்திரி தர்ஷனா ஜர்தோஷிடம், கரூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்தக் கோரி பா.ஜ.க. சார்பில் கடிதம் அளித்திருந்தோம்.

    அதன் அடிப்படையிலேயே கரூர் ரெயில் நிலையத்தை ரெயில்வே அமைச்சகம் தேர்வு செய்து நிதி ஒதுக்கி உள்ளது என்றார்.

    இது குறித்து பயணிகள் தரப்பில் கூறும் போது, நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் பா.ஜ.க.வும், காங்கிரசும் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி அடித்துக்கொள்வதால் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவே திட்ட பணிகள் நிறைவேற இருவேறு கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    • 24 ஆயிரத்து 470 கோடி செலவில் ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு
    • ஜம்மு நிலையத்திற்கு மட்டும் 259 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது

    நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் காஷ்மீர் ரெயில் சேவை மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜிதேந்திர சிங் கூறுகையில் ''காஷ்மீர் ரெயில்சேவை மூலம் நாட்டின் பிற பகுதிளுடன் இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் இணைக்கப்படும். இதில் உதம்புர் முக்கிய பங்காற்றும்.

    பிரதமர் அறிவித்ததில் ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு மட்டும் 295 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. ஜம்மு நிலையத்திற்கு மட்டும் 259 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. உதம்புர் ரெயில் நிலையத்திற்கு 15.94 கோடி ரூபாயும், புத்காம் ரெயில் நிலையத்திற்கு 15.94 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட இருக்கிறது.

    பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக உதம்புர் மாவட்டத்திற்கு. மோடி தலைமையின் கீழ் இந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோடிக்கு முன் ஆட்சியில் இருந்த மத்திய அரசு பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை'' என்றார்.

    • அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரெயில் நிலையங்கள் மறுசிரமைக்கப்படுகின்றன.
    • ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18 ரெயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன.

    நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

    இந்த 508 ரெயில் நிலையங்களில் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரெயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்காளத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, அரியானாவில் 15, கர்நாடகாவில் 13 என 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த மறுசீரமைப்பு பணியானது, நன்கு வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து சுழற்சியுடன் பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குகிறது. ரெயில் நிலைய கட்டிடங்கள் உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

    ×