search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய் இறைச்சி"

    • நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர்.
    • பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்துகின்றனர்.

    அசாம் மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 நாய்களை போலீசார் மீட்டனர். நாய்களை கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்

    இந்த நாய்களை அசாம் மாநிலத்தில் இருந்து நாகாலாந்திற்கு கொண்டு சென்று நாய் இறைச்சிக்கு விற்பனை செய்ய கைது செய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    நாகாலாந்தின் பல்வேறு பகுதிகளில் நாய் இறைச்சி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். 2020 ஆம் ஆண்டு நாய் இறைச்சி வியாபாரத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு கவுகாத்தி உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது.

    நாகாலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடப்பட்டாலும் பிற மாநில மக்கள் நாய் இறைச்சியை சாப்பிடுவதில்லை. ஆகையால் பிற மாநிலங்களில் இருந்து நாகாலாந்திற்கு நாய்களை இறைச்சிக்காக கடத்தும் போக்கு அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.

    • ரெயில் நிலையத்தில் இருந்த மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • அவை நாய் இறைச்சி என்று புனீத் கேரஹல்லி என்ற பசுப் பாதுகாவலரும் அவரது சாகாக்களும் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    பெங்களூரு கேஎஸ்ஆர் ரெயில் நிலயத்தில் நேற்று இரவு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 150 பெட்டிகளில் 3 டன் [3000 கிலோ] பதப்படுத்தப்பட்ட இறைச்சி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் இருந்த அந்த இறைச்சிகளை பார்க்க ரெயில் நிலையத்திலிருந்த மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் அவை  நாய் இறைச்சி என்று புனீத் கேரஹல்லி என்ற பசுப் பாதுகாவலரும் அவரது சாகாக்களும் போலீசிடம்  தெரிவித்துள்ளனர்.மேலும் அவை பெங்களூரில் உள்ள ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்களை கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அப்துல் ரசாக்  என்ற டீலர் அதை அவர் விற்பதற்காக ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் தான்  வரவழைத்தது ஆட்டிறைச்சி தான் என்றும், அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அப்துல் ரசாக் மறுத்துள்ளார். தன்னை பொய் வழக்கில் மாட்டி விட கேரஹல்லி சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அது உண்மையில் என்ன இறைச்சி என்று அறிய போலீசார் அதை பரிசோதனைக்கு அனுப்பியுன்னர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தோழமைக்கு ஏற்ற உயிரினமாக நாய்களை கருதி பலர் அவற்றை வளர்க்கின்றனர்
    • தென் கொரிய அதிபரின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

    நாய்களை "மனிதனின் உற்ற நண்பன்" (Man's best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாகவும் கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம்.

    தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

    தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை தடை செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

    இத்தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறும் வகையில் 3-வருட-கால இடைவெளிக்கு பிறகே இச்சட்டம் 2027லிருந்து அமலுக்கு வரும்.

    அத்தொழிலாளர்கள் புதிய தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் மானியம் வழங்கி உதவவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

    இச்சட்டத்தின்படி, இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பது, கொல்வது, இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தும் சட்டவிரோதம். இதனை மீறுவோருக்கு 2-வருட-கால சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும்.

    தென் கொரிய அதிபரின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடைய அதிபரும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் 4 நாய்களும் 3 பூனைகளும் வளர்த்து வருகின்றனர்.

    நாய்களை கொன்று உண்பதை தடை செய்யும் சட்டத்தை வரவேற்றுள்ள பிராணிகள் ஆர்வலர்கள், பல வருடங்களாகவே அந்நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க எனது மனுவில் கையெழுத்திடுங்கள் என்று எழுதப்பட்ட பலகைக்கு அருகில் வாலிபர் நிற்கிறார்.
    • புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க கோரி நடத்திய கையெழுத்து இயக்கம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் வாலிபர், நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க எனது மனுவில் கையெழுத்திடுங்கள் என்று எழுதப்பட்ட பலகைக்கு அருகில் நிற்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒருவர், இந்த நபர் விளம்பரத்திற்காகவும், பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இது போன்று செய்வதாக பதிவிட்டுள்ளார்.

    ×