என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி கட்டணம்"
- பதிவு வைரலாகி 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 7,800 லைக்குகளையும் பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர்.
- கல்வி மிகவும் விலை உயர்ந்துவிட்டது என ஒரு பயனர் குறிப்பிட்டார்.
பிளே ஸ்கூல் படிக்கும் தனது மகனுக்கு கட்டணமாக ரூ.4.3 லட்சம் செலுத்தியதாக பட்டய கணக்காளர் ஒருவர் வலைதளத்தில் பதிவிட்ட பதிவு எக்ஸ் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் பட்டள கணக்காளராகவும், முழு நேர பங்கு சந்தை வர்த்தகராகவும் உள்ளார். இவர் எக்ஸ் தளத்தில் தனது மகனின் பள்ளி கட்டணத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, எனது ஒட்டுமொத்த கல்வி செலவை விட எனது மகனின் 'பிளே ஸ்கூல்' கட்டணம் அதிகமாக உள்ளது என பதிவிட்டிருந்தார். அதில், ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.10 ஆயிரம், வருடாந்திர கட்டணமாக ரூ.25 ஆயிரம், நான்கு பருவங்களுக்கும் சேர்த்து ரூ.98,750 என தனித்தனியாக குறிப்பிட்டு மொத்தமாக ரூ.4.30 லட்சம் என கட்டணம் உள்ளது.
அவரின் இந்த பதிவு வைரலாகி 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 7,800 லைக்குகளையும் பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். கல்வி மிகவும் விலை உயர்ந்துவிட்டது என ஒரு பயனர் குறிப்பிட்டார். இதே போல பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட ஆகாஷ்குமாரின் பதிவு இணையத்தில் பள்ளி கட்டணம் தொடர்பாக விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அடுத்து பள்ளி ரெஸ்ட்ரூம் அல்லது மூச்சு விடுவதற்கு பணம் வசூலிக்குமா?
- பணம் சம்பாதிப்பதற்காகவே பள்ளி பைத்தியமாகிவிட்டது என விமர்சனம்
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் தொடக்க பள்ளி ஒன்று, மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு தூங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு பள்ளி சார்பில் தகவல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
அதில் குழந்தைகள் பள்ளி மேஜையில் (டெஸ்க்) தலை வைத்து தூங்குவதற்கு இந்திய பண மதிப்பல் 2,275 ரூபாய் செலுத்த வேண்டும். அதேவேளையில் வகுப்பறை தரையில் தூங்குதவற்கு 4,049 ரூபாய் செலுத்த வேண்டும். மிகவும் வசதியாக பெட்டில் (மெத்தை) தூங்க வேண்டுமென்றால் 7,856 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் தூங்க விருப்பம் இல்லாத மாணவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என அறிவித்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தூங்கும்போது, ஆசிரியர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் பணம் வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளது.
"இது நகைச்சுவையா? பணம் சம்பாதிப்பதற்காகவே பள்ளி பைத்தியமாகிவிட்டது" என ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர், "மாணவர்கள் தங்கள் மேஜைகளில் தூங்குவதற்கு ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பதை நான் மட்டும் புரிந்து கொள்ளவில்லையா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், "இது கேலிக்கூத்தானது. அடுத்து பள்ளி ரெஸ்ட்ரூம் அல்லது மூச்சு விடுவதற்கு பணம் வசூலிக்குமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்