search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ் தாக்குதல்"

    • இசை விழா நடைபெற்ற இடத்தில் ஹமாஸ் துப்பாக்கிச்சூடு
    • பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றுள்ளது

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் திடீரென்று தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், தரை வழியாக இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர்.

    இஸ்ரேலில் ஜெவிஷ் விடுமுறை கொண்டாடப்பட்டு வந்தது. சனிக்கிழமை காஸா- இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள்- பெண்கள் என இளையோர் கலந்து கொண்டனர்.

    வெளிநாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காஸா பயங்கரவாதிகள் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத இளைஞர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். இதனால் இந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தன. ஒரே கூச்சல் குழப்பம் நிலவியது. தங்களுடன் வந்தவர்களை பார்க்க முடியாத வகையில் தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க, அங்கும் இங்கும் ஓடி மறைய முயற்சித்தனர். பலர் காருக்கு அடியில் பதுங்கி கொண்டனர். சுமார் ஆறு மணி நேரம் எந்தவித சத்தமும் போடாமல் தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.

    இந்த தாக்குதல் காரணமாக அந்த இடத்தில் இளைஞர்கள் உடல்கள் சிதிறக் கிடந்தன. கிட்டத்தட்ட 260 பேர் உடல்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக, இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விழா அமைப்பாளர்கள், விழாவில் கலந்து கொண்டு மாயமானவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்புப் படைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள், இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் பலரை பிணைக் கைதியாக பிடித்து சென்றுள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல்
    • இருபக்கமும் சேர்ந்து பலி ஆயிரத்தை தாண்டியுள்ளது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை சுட்டுக்கொன்று, பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே நேற்று ஐ.நா. அவசர கூட்டம் நடைபெற்றது. பூட்டிய அறைக்குள் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது ஹமாஸின் இந்த கொடூர தாக்குதலுக்கு, அனைத்து (15) உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஆனால், சில நாடுகள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    கூட்டம் முடிவடைந்த பின், அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறுகையில் ''பெரும்பாலான சிறந்த நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. ஆனால், சில கவுன்சில் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் யார் என்று கூற முடியும்'' என்றார்.

    ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸ்சிலி நெபன்ஜியா கூறுகையில் ''கூட்டத்தில் நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை சொல்ல அமெரிக்க முயற்சி செய்தது. ஆனால், நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது உண்மையல்ல'' என்றார், மேலும், ''மக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது என்னுடைய கருத்து'' என்றார்.

    சீனாவுக்கான தூதர் ''பொதுமக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்றார். ஆனால், ஹமாஸ் என்ற பெயரை அவர் உச்சரிக்கவில்லை.

    இறுதியில் ஐ.நா. உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ×