search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிச்சாங் புயல்"

    • வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.
    • குப்பைகளை சேகரித்து செல்லும் லாரிகளும் கொட்ட முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றன.

    சென்னை:

    சென்னையை புரட்டிப் போட்ட புயல் மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் பொருட்கள் சேதம் அடைந்தன. கார், இரு சக்கர வாகனங்கள், மின் சாதனங்கள், சேர், டேபிள், படுக்கைகள் சேதம் அடைந்தன. கீழ் தளத்தில் குடியிருந்தவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர்.

    வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தாலும் பாதிப் பில் இருந்து விடுபடவில்லை.

    வெள்ளத்தில் இருந்து மீண்ட மக்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். சாக்கடை கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் சுத்தம் செய்வது பெரிய சுமையாக உள்ளது.

    மேலும் வீட்டில் சேதம் அடைந்த பொருட்களை வெளியேற்றி வருகிறார்கள். வீட்டு உபயோக பொருட்கள், இரு சக்கர வாகன பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.

    இதனால் குப்பை கழிவுகள் வழக்கத்தை விட அதிகமாக தெருக்களிலும், சாலைகளிலும் குவிகிறது. சென்னையில் வழக்கமாக தினமும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படும். ஆனால் வெள்ள பாதிப்புக்கு பிறகு 9 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிக ரித்துள்ளது.

    எங்கு பார்த்தாலும் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ள அள்ள மேலும் குவிகிறது.


    மழை வெள்ளத்திற்கு பிறகு 50 சதவீத குப்பை கழிவுகள் தினமும் கூடுதலாக வருகின்றன. இதனை அகற்ற ஊழியர்கள் முழு வீச்சில் இரவு-பகலாக ஈடுபட்டாலும் கூட குப்பைகள் மலை போல் தேங்குகின்றன.

    பிற மாவட்டங்களில் இருந்து வந்த ஊழியர்களை பயன்படுத்தி விரைவாக எடுத்தாலும் கூட தொடர்ந்து ஒரு புறம் குப்பைகள் குவிகிறது. மேலும் குப்பைகளை கிடங்குகளில் கொட்டுவதற்கு இடம் இல்லை.

    நகரின் முக்கிய குப்பை கிடங்குகள் அனைத்தும் நிரம்பி விட்டன. குப்பைகளை சேகரித்து செல்லும் லாரிகளும் கொட்ட முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றன.

    சென்னையில் உள்ள பெரும்பாலான தெருக்கள், சாலைகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. சூளைமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, தி.நகர், அரும்பாக்கம் போன்ற பல குடியிருப்பு பகுதிகளில் சாலையில் குப்பை அழுகி கிடக்கிறது. வீடுகளில், தெரு வீதிகளிலும் முறையாக குப்பை எடுக்காததால் கண்ட இடங்களில் குப்பைகளை மக்கள் கொட்டி வருகின்றனர்.

    குப்பைகளை மாற்றம் செய்யக்கூடிய நிலையங்களில் தேங்கி கிடப்பதால் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

    ஒவ்வொரு பகுதியிலும் குப்பைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் தேங்கி வருவதால் அகற்றுவதில் சுணக்கம் ஏற்படுகிறது.

    புளியந்தோப்பில் உள்ள குப்பை மாற்றும் மையங்களில் குப்பை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. கொட்டுவதற்கு இடம் இல்லாததால் தாமதம் ஆகிறது.

    மேலும் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மால்கள் போன்றவற்றின் இடங்களில் உருவாகும் மொத்த கழிவுகளை சேகரிக்க ஊழியர்கள் பணிக்கு வராததால் அவர்கள் தங்கள் கழிவுகளை சாலைகளில் கொட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "திடக்கழிவுகளை பிரிப்பது அல்லது பதப்படுத்துவது பற்றி மாநகராட்சி தற்போது சிந்திக்கவில்லை. சாலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் பணியாளர்களை இந்த பணியில் கூடுதலாக நியமித்துள்ளோம். சாலையில் உள்ள அனைத்து கழிவுகளையும் நாங்கள் சேகரித்தவுடன் சில கழிவுகளை மறுசுழற்சிக்காக பொருள் மீட்பு மையத்திற்கு அனுப்புவோம்" என்றார்.

    • சங்கிலிபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • பக்தர்கள் அடிவார நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தர சந்தன மகாலிங்க கோவில் உள்ளது. சித்தர்கள் வழிபட்டதாக கூறப்படும் இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி பகுதியில் மழை பெய்யும் சூழல் இருந்தது. இதன் காரணமாக கார்த்திகை மாத அமாவாசைக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சதுரகிரி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலை பகுதியில் எலும்போடை, மாங்கனியோடை, சங்கிலிபாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் சில இடங்களில் திடீர் காட்டாற்று வெள்ளமும் உருவானது. தடையை அறியாத வெளிமாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் அமாவாசையான இன்று அதிகாலை அடிவாரத்தில் குவிந்தனர்.

    அப்போது அங்கிருந்த வனத்துறை போலீசார் மழை பெய்வதால் மலையேற அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் அடிவார நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு சென்றனர். சிலர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதையும் காண முடிந்தது.

    • பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
    • பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அரூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவர் தமிழரசன் அரூருக்கு வருகை தந்தார்.

    முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேல் சென்னை மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் கடலூர் தொகுதிகளிலும் எதிர்பாராத அளவிற்கு கடும் மழை புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    வீடுகளில் தண்ணீர் புகுந்து, பொதுமக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் இழந்து வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.


    பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதில் அரசு சார்பில் நிவாரண பணிகள் போதுமானதாக இல்லை. எனவே, நிவாரண பணிகளை உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது.

    இனிவரும் காலங்களிலே இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வுகளை காண நல்லத்திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    திருமாவளவன் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர் பணிக்கு உள்இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றதால் தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து இப்போது இருக்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசிலும் இது நடக்கவில்லை. கேட்டால் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்கிறார்கள். இப்போது மாநில அரசு வழங்குகிற இட ஒதுக்கீடு 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 1 சதவீதம் பழங்குடியின மக்களுக்கு 1969 முதல் வழங்கப்படுகிறது.

    தற்போது அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில் மக்கள் தொகை கூடிவிட்டது, ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19சதவீதமும், குறைந்தபட்சம் 22 சதவீதமும், மலைவாழ் மக்களுக்கு 1 சதவீதம் குறைந்தபட்சம் 2சதவீதம் ஆக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும்.

    தி.மு.க. அரசுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான உண்மையான சமூக கல்வி பொருளாதார இந்த வளர்ச்சியில் அக்கறை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது.
    • மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் வாக்குச்சாவடி கமிட்டியின் பாசறையை அமைத்து வருகிறோம்.

    சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்று மழை பெய்தால் எந்த ஒரு நகரமும் தாங்காது. சென்னையை பொருத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையாகவே கையாண்டுள்ளது.

    ரூ.4 ஆயிரம் கோடியை முறையாக செலவு செய்துள்ளனரா என்பதை அவர்களது தணிக்கை குழு முடிவு செய்யும். அதனை நம்மை போன்றவர்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா கூட்டணி தற்போது பளிச்சென உள்ளது. மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.
    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த அக்டோபர் 27-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்தால்கூட, பெயர் சேர்த்தல், திருத்தம் போன்றவற்றுக்காக ஆன்லைனிலும், தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் ஜனவரி மாதத்துக்குப் பின்னர்தான் பரிசீலிக்கப்படும்.

    தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.

    இதுதவிர, ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருப்போர், புதிய அட்டைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் அலுவலகம் ஆகியவற்றில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு எந்திரம் வைக்கப்பட உள்ளது. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த எந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

    தேசிய வாக்காளர் தினத்திற்கு பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்று, வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து மக்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தயார்நிலை பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள காலகட்டத்தில் வரும் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் திருவிழாக்கள், பண்டிகைகள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    மிச்சாங் புயல், மழை காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
    • சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள், 13,08,847 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால் பவுடர் வழங்கப்பட்டது.

    மேலும், 4,35,000 கிலோ அரிசி, 23,220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாக தமிழ் அரசு அறிவித்துள்ளது.


    • அதிமுக ஆட்சியைப் போல் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை.
    • ஓட்டு போடாதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை விமர்சிப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு மேலும் கூறியதாவது:-

    2011 டிசம்பரில் 'தானே' புயல் கடலூரை சூறையாடிய போது அதிமுகவினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

    2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தார்கள்.

    2017ல் கன்னியாகுமரியை நிலைகுலைய வைத்த 'ஒக்கி' புயலின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் அமைச்சர்கள் இருந்தனர்.

    2018ல் 'கஜா' புயல் டெல்டா பகுதியை தாக்கிய போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார்.

    ஆனால், இப்போது புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம்.

    அதிமுக ஆட்சியைப் போல் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை.

    டெல்லியில் உள்ள தலைவர்களை போல் மணி அடியுங்கள், தட்டை தட்டுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கொரோனா காலத்தில் திமுக அரசு செயல்பட்டது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர் இருப்பு, உபரி நீர் திறப்பை முன்கூட்டியே கணித்து சரிவர கையாண்டோம். அதனால், பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.

    யாருக்கு உதவி தேவையோ, அவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

    கடந்த 2015ம் ஆண்டின் வெள்ளத்தின்போது 10,780 கோடி நிவாரண தொகையாக மத்திய அரசிடம் அதிமுக கேட்டிருந்தது.

    தற்போது 5 ஆயிரம் கோடி மட்டுமே நிவாரணம் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

    சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழையால் பாதிக்கப்பட்ட வட்டங்களில் நிவாரண நிதியாக ரூ.6,000 வழங்கப்படும்.

    ஓட்டு போடாதவர்கள் ஏன் நமக்கு வாக்களிக்கவில்லை என வருத்தப்படும் அளவிற்கு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    அரசு தரப்பில் எந்த ஒரு விவரங்களும் மூடி மறைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்வோக்கம் கொண்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • 10,11,12,13,14 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 46, மேற்கு மாடவீதி, திருவொற்றியூர்.
    • 145, 148, 149, 152 வார்டுகளை சேர்ந்தவர்கள் சி.வி. கோவில் தெரு, ஆழ்வார்திரு நகர்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில், மிச்சாங் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    இதைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் ( 1 முதல் 15 வரை) உள்ள கீழ்கண்ட 46 பகுதி அலுவலகங்களில் நாளை (செவ்வாய்க் கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    1,2,3,4 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.606, கே.எச்.ரோடு, எண்ணூர் என்ற இடத்தில் நடைபெறும் முகாமில் சான்றிதழ்களை பெறலாம்.

    மேலும் சான்றிதழ்கள் வழங்கப்படும் இடங்களும், வார்டுகளும் வருமாறு:-

    5,6,7,8,9 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.5/17, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, மஸ்தான் கோவில் தெரு, கக்கன்ஜி நகர், திருவொற்றியூர்.

    10,11,12,13,14 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 46, மேற்கு மாடவீதி, திருவொற்றியூர்.

    15,16,17 வார்டுகளை சேர்ந்தவர்கள்- ஆண்டார் குப்பம் செங்குன்றம் ஹைரோடு, ஜங்சன் டி.பி.பி. சாலை, மணலி.

    18,19,20,21,22 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 127, பட சாலை தெரு, மணலி.

    23,24,32 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.1, காந்தி முதல் தெரு, புழல்.

    25,26,27,28 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.1, பெருமாள் கோவில் மெயின் ரோடு, மாதவரம் பஸ் நிலையம் அருகில்.

    29,30,31,33 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.1, எம்.ஆர்.எச். ரோடு, மாதவரம்.

    34,35,36,37,38 வார்டுகளை சேர்ந்தவர்கள்- சர்மா நகர், யு.பி.சி. மருத்துவமனை.

    39,40,41,42,43 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.600, திருவொற்றியூர் ஹைரோடு, கிருஷ்ணமூர்த்தி தெரு, தண்டையார்பேட்டை.

    44,45,46,47,48 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 96, பார்த்த சாரதி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.

    49,50,51,52,53 (எல்.எப்.இசட்) வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.6/86, பெரம் பாலு தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.

    54,55,56,57,60 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 28, சண்முகம் தெரு, ஏழுகிணறு தெரு, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன்.

    58,59,61,62,63 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.2, ஆதி கேசவலு தெரு, சிந்தாதிரிபேட்டை.

    64,65,69 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.45/107, எஸ்.ஆர்.பி. கோவில் தெரு (தெற்கு), அகரம்.

    66,67,68,70 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.32, ஜவகர் நகர், 3-வது சர்கிள், 2-வது குறுக்குத் தெரு, பெரவள்ளுர்.

    71,72,73,74,75,76,77,78 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.50, அருணாச்சலம் தெரு, கொசப்பேட்டை, 5 லைட் அருகில்.

    79,80,81,82,83 வார்டுகளை சேர்ந்தவர்கள்- வடக்கு பூங்கா தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர்.

    84,85,86,87,88 வார்டுகளை சேர்ந்தவர்கள்- சர்ச் ரோடு, பாடி.

    89,90,91,92,93 வார்டுகளை சேர்ந்தவர்கள்- சீதக்காதி சாலை, முகப்பேர் கிழக்கு, இ-சேவை மையம்.

    94,95,96,97,104 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.4, யுனைடெட் இந்தியா நகர், முதல் பிரதான சாலை, பாலவாயல் மார்க்கெட் அருகில், அயனாவரம்.

    102, 103, 105, 106, 107 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.124,கேபிளாக், அண்ணா நகர், 2-வது மெயின் ரோடு.

    98, 99, 100, 101, 108 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.4, கோவில் தெரு, கீழ்பாக்கம்.

    109, 110, 111, 118, 119 வார்டுகளை சேர்ந்தவர்கள்-எண்.9, சி.ஐ.டி. காலனி, 6-வது குறுக்குத் தெரு, மைலாப்பூர்.

    123, 124, 125, 126 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.1, சித்திரக்குளம் தெற்கு தெரு, மைலாப்பூர்.

    112, 113, 117, 122 வார்டு களை சேர்ந்தவர்கள்- ஆலயம்மன் கோவில் தெரு, தேனாம்பேட்டை.

    114, 115, 116, 120, 121 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.12, துளசிங்கம் பெருமாள் கோவில், 2-வது சந்து, திருவல்லிக்கேணி.

    136, 137, 138, 139 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.27, 61வது தெரு, 10-வது செக்டர், கே.கே.நகர்.

    127, 128, 129, 130 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.2 அம்மன் கோவில் தெரு, வடபழனி.

    133, 140, 141, 142 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 12, மாசிலாமணி தெரு, தியாகராய நகர்.

    131, 132, 134, 135 வார்டுகளை சேர்ந்தவர்கள்- க.எண்.1, கார்பரேஷன் காலனி ரோடு, கோடம்பாக்கம்.

    143, 144, 146, 147 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எம்.எம்.டி.ஏ. 6-வது பிளாக், 33-வது தெரு, மதுரவாயல்.

    145, 148, 149, 152 வார்டுகளை சேர்ந்தவர்கள் சி.வி. கோவில் தெரு, ஆழ்வார்திரு நகர்.

    150, 151, 153, 154, 155 வார்டுகளை சேர்ந்தவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை, போரூர்.

    156, 157, 158, 159 வார்டுகளை சேர்ந்தவர்கள்- வார்டு அலுவலகம், கோட்டம்-156, அரசு உயர்நிலைப் பள்ளி பாடசாலை, முகலிவாக்கம்.

    160, 161, 162, 163 வார்டுகளை சேர்ந்தவர்கள்- சூப்பர் பஜார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், புதுத் தெரு, ஆலந்தூர்.

    164, 165, 166, 167 வார்டுகளை சேர்ந்தவர்கள்- வார்டு அலுவலகம், கோட்டம்-165. ராம் நகர், 8-வது தெரு, நங்கநல்லூர்.

    174, 179, 180 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.2, 8-வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், தெற்கு அவென்யு சாலை, திருவான்மியூர்.

    176, 177, 178 வார்டுகளை சேர்ந்தவர்கள்- 65, வேளச்சேரி மெயின்ரோடு, வேளச்சேரி,

    169, 170, 171, 173 வார்டுகளை சேர்ந்தவர்கள்-115, டாக்டர் முத்துலெட்சுமி சாலை, அடையாறு.

    168, 172, 175 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.92, மகாலட்சுமி நகர், ஆதம்பாக்கம்.

    181, 182, 183, 184 வார்டுகளை சேர்ந்தவர்கள்- எண்.2, ஸ்கூல் ரோடு, கந்தஞ்சாவடி, கோட்டம்- 182, வார்டு அலு வலகம், பெருங்குடி.

    185, 186, 187, 188 வார்டுகளை சேர்ந்தவர்கள்- கோட்டம்- 188, வார்டு அலுவலகம் எண்.1, டாக்டர் அம்பேத்கர் சாலை, மடிப்பாக்கம்.

    189, 190, 191 வார்டுகளை சேர்ந்தவர்கள்- கோட்டம்- 189, வார்டு அலுவலகம் எண்.1, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

    192, 194, 197, 199 வார்டுகளை சேர்ந்தவர்கள்- கோட்டம்- 194, வார்டு அலுவலகம், எண். 14, வி.ஓ.சி. தெரு, ஈஞ்சம்பாக்கம்.

    193, 195, 196, 198, 200 வார்டுகளை சேர்ந்தவர்கள்-கோட்டம்- 196, வார்டு அலுவலகம் கண்ணகி நகர் 8-வது பிரதான சாலை, துரைப்பாக்கம்.

    சிறப்பு முகாம்கள் நாளை தொடங்கி தினந்தோறும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமானது.
    • பொதுமக்கள் ஆன்லைனில் துப்புரவு நிறுவனத்தை அணுகும் போது இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 3 லட்சம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 2 முதல் 4 நாட்கள் வரை பல வீடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, சோபா, டிவி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சேதமானது.

    இந்நிலையில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்துள்ள நிலையில் வீடுகளை சுத்தம் செய்வது என்பது பொதுமக்களுக்கு சவாலான பணியாக மாறியுள்ளது. வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி கழுவி வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள். ஆனார் பலர் தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளனர். ஏராளமானோர் துப்புரவு நிறுவனங்களை அணுகுவதால் அவர்கள் கெடுபிடி காட்டுகிறார்கள். அத்துடன் வீடுகளை கழுவி சுத்தம் செய்வதற்கான கட்டணத்தை 2 மடங்காக அதிகரித்துவிட்டனர்.

    சென்னையில் இதற்கு முன்பு ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகளை சுத்தம் செய்ய ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வசூலித்தனர். தற்போது அந்த கட்டணத்தை ரூ.7,500 ஆக அதிகரித்துவிட்டனர். 2 படுக்கை அறை, 3 படுக்கை அறை கொண்ட வீடுகளுக்கு இன்னும் அதிகமாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர். பொதுமக்கள் ஆன்லைனில் துப்புரவு நிறுவனத்தை அணுகும் போது இந்த கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.

    வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் வட சென்னையில் உள்ள பல் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் திணறி வருகிறார்கள். குறிப்பாக மூத்த குடிமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேறு வழியில்லாமல் அவர்கள் அதிக கட்டணம் கொடுத்து வீடுகளை சுத்தம் செய்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் வீடுகளில் இருந்த பொருட்களை இழந்துள்ள நிலையில் இந்த கட்டணம் அவர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

    இதுகுறித்து தனியார் துப்புரவு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வீடுகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக ஏராளமான வீடுகளில் இருந்து எங்களுக்கு அழைப்பு வருகிறது. ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக எங்களால் அனைத்து அழைப்புகளையும் ஏற்க முடியவில்லை.

    எனவே நாங்கள் தற்காலிக ஊழியர்களையும் பணிக்கு நியமித்துள்ளோம். ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தால் ஒன்றரை மணி நேரத்தில் சுத்தம் செய்து விடுகிறோம். அதை விட பெரிய வீடுகளுக்கு கூடுதல் நேரம் ஆகிறது. தினமும் 16 மணி நேரம் வேலை செய்கிறோம். ஒரு நாளில் 4 முதல் 5 வீடுகளை சுத்தம் செய்கிறோம். எங்களிடம் வீடுகளை சுத்தம் செய்வதற்கான தனித்தனி பேக்கேஜ்கள் உள்ளன.

    தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் சாக்கடையாக மாறி விட்டதால் சுத்தம் செய்யும் பணிக்கு செல்லும் பல ஊழியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
    • பள்ளத்தை உடனே மூடி இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் பெய்த பலத்த மழையால் சூளைமேடு பகுதியில் பல தெருக்களை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக அண்ணா நெடும்பாதை, நேரு தெரு, 3-வது சந்து, சுப்பராயன் தெரு, ஆண்டவர் தெரு, ராஜ வீதி, பெரியார் பாதை உள்ளிட்ட பல தெருக்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து 4 நாட்கள் வரை தேங்கி நின்றது. பல வீடுகளில் சுமார் 6 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    மேலும் அண்ணா நெடும்பாதையில் உள்ள பல கடைகளுக்குள்ளேயும் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்து 2 நாட்கள் தேங்கி நின்றது. இதனால் கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. இது மார்க்கெட் பகுதி என்பதால் மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள், இறைச்சி கடைகள், மருந்து கடைகள், ஆஸ்பத்திரி வளாகம் என பல கடைகளிலும் தண்ணீர் புகுந்தது. இந்த பகுதிகளில் தேங்கிய தண்ணீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.

    நேரு தெருவில் 4 நாட்களாக வெள்ளம் வடியாததால் ராட்சத மோட்டார் மூலம் வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக அண்ணா நெடும்பாதை நேரு தெரு சந்திப்பில் சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் கால்வாயை உடைத்து பெரிய அளவில் பள்ளம் தோண்டி தண்ணீரை அகற்றும் பணி நடந்தது.

    அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்றிய பிறகு சாலை ஓரத்தில் உள்ள பெரிய பள்ளத்தை மூடாமல் ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த பள்ளத்தாலும், அதில் தோண்டிய மண்ணை சாலை ஓரத்திலேயே போட்டு வைத்திருப்பதாலும் அண்ணா நெடும்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    மேலும் இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை உடனே மூடி இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

    • நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
    • மிச்சாங் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மழைநீர் வெளியேற்றுதல், உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல், நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, எழும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 99-வது வார்டு, மெக் நிக்கல் சாலை, சர்வோதயா காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும், புதிய பூபதி நகர், ஓசங்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கும், திருநங்கைகள் காப்பகத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 59-வது வார்டை சேர்ந்த டி.என்பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தேவராஜ் முதலியார் தெரு, மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மிச்சாங் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா ராஜன், தயாநிதி மாறன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் இளம்சுருதி, ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுந்தர்ராஜன், பரிமளம் மற்றும் முரளி, ராஜசேகர், ஜெகதீஷ், பிரபாகரன், வேலு சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
    • சென்னை மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்கிய 359 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. வடசென்னை, தென்சென்னை பகுதிகளில் குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன.

    செவ்வாய்கிழமை முதல் நிவாரண பணிகளும், மீட்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டன.

    இதுவரை 95 சதவீத இடங்களில் மழை தண்ணீர் அகற்றப்பட்டு விட்டது. இன்னும் 5 சதவீத புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தெருக்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. அந்த தெருக்களில் தண்ணீரை வெளியேற்ற இன்னும் ஒரு வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் வெள்ளம் அகற்றப்பட்ட பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் டன் கணக்கில் குப்பைகள் இருப்பதால் அவற்றோடு போராடும் நிலைமைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 24 ஆயிரம் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளை செய்து வருகிறார்கள்.

    கடந்த 6, 7-ந்தேதிகளில் சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு இருந்தன. கடந்த 3 நாட்களில் மேலும் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது. லாரி, லாரியாக குப்பைகள் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    கடந்த 5 நாட்களில் சுமார் 30 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டு இருந்தன. இன்னமும் நூற்றுக்கணக்கான தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே சென்னையில் இன்னும் 10 டன் குப்பைகள் அகற்றப்படும் என்று தெரிகிறது.

    ஆனால் குப்பைகளை கொட்டுவதுதான் கடும் சவாலாக மாறி வருகிறது. பெரும்பாலான மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் வெற்றிடங்களில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதற்கு சில பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    சென்னை மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்கிய 359 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. மீதமுள்ள இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    சாலை மற்றும் தெருக்களில் விழுந்த 1,351 மரங்களில் 1,255 மரங்கள் அகற்றப்பட்டன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 726 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 51,158பேர் பரிசோதனை மேற்கொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் 22 ஆயிரம் பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ×