என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து வங்காளதேசம் தொடர்"
- இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் நடைபெற்றது.
- முதலில் பேட் செய்த வங்காளதேசம் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மவுண்ட்மாங்கானு:
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர் 4 விக்கெட்டும், சவுத்தி, மில்னே, பென் சீயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடந்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது..
தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி நியூசிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது.
சாண்ட்னர் ஆட்ட நாயகன் விருதும், ஷோரிபுல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
- இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது.
இதில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க முடியும்.
- டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நேப்பியர்:
வங்காளதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நீஷம் 48 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், முஸ்தபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி 42 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்காளதேசம் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக மெஹிதி ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 98 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இதனை தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா 8, ஹென்றி நிக்கோலஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்த சிறிது நேரத்தில் வில் எங் 24 ரன்களிலும் கேப்டன் டாம் லாதம் 21 ரன்களிலும் சோரிபுல் இஸ்லாம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்த வந்த வீரர்கள் டாம் பிளண்டல் 4, மால் சேப்மென் 2, ஜோஷ் கிளார்க்சன் 16 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 31.4 ஓவரில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்காளதேசம் தரப்பில் சோரிபுல் இஸ்லாம் 3, டன்சிம் ஹசன் 3, சௌம்மியா சர்கார் 3 விக்கெட்களை எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 99 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு அனாமல் ஹைக் 37 (33) கேப்டன் நஜ்முல் சாண்டோ 51* (42) ரன்கள் எடுத்து 15.1 ஓவரிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு போட்டியில் வென்று வங்கதேசம் புதிய வரலாறு படைத்தது. குறிப்பாக 2007 முதல் நியூசிலாந்து மண்ணில் இதற்கு முன் விளையாடிய 18 போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்தது. ஆனால் தற்போது அந்த மோசமான வரலாற்றை வங்காளதேசம் மாற்றியுள்ளது.
நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
- வங்காளதேச தரப்பில் சவுமியா சங்கர் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- நியூசிலாந்து தரப்பில் நிக்கோலஸ் 95 ரன்களில் அவுட் ஆனார்.
வங்காளதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக சவுமியா - அனுமுள் களமிறங்கினர்.
அனுமுள் 2, சாண்டோ 6, லிட்டன் தாஸ் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து ரஹீம் மற்றும் சவுமியா ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். ரஹிம் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.
ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற சவுமியா சதம் அடித்து அசத்தினார். இவர் 169 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்காளதேசம் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங்- ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கினார்.
யங் -நிக்கோலஸ் ஜோடியை பிரிக்க முடியாமல் வங்காளதேச பந்து வீச்சாளர்கள் திணறினர். யங் 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசன் பந்து வீச்சிலும் நிக்கோலஸ் 95 ரன்களில் சொரிபுல் இஸ்லாம் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டாம் லாதம் -டாம் ப்ளண்டெல் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இறுதியில் நியூசிலாந்து அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான சம்பர்தாய ஆட்டமான கடைசி ஒருநாள் போட்டி 23-ந் தேதி தொடங்குகிறது.
- முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 291 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக சவுமியா சங்கர் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சவுமியா சங்கர் - அனுமுள் களமிறங்கினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி, சவுமியா சங்கரின் சிறப்பான ஆட்டத்தால் 291 ரன்கள் குவித்தது. அவர் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்டு சதம் அடித்தார். 22 பவுண்டரி 2 சிக்சருடன் 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் வங்காளதேசம் அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த சதத்தின் மூலம் நியூசிலாந்து மண்ணில் சச்சின் சாதனையை சவுமியா முறியடித்துள்ளார். சச்சின் 2009-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 163 ரன்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை தற்போது வங்காளதேச வீரர் சவுமியா சங்கர் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் வங்காளதேச அணி வீரர்களில் ஒருவரின் தனிபட்ட அதிகபட்ச ரன்களில் சவுமியா சங்கர் 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் லிட்டன் தாஸ் (176) உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்