search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகம்.
    • நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள்.

    மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.

    ஏற்கனவே அறிவித்தபடி, சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? என்ற பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்துள்ளார்.

    இதில், கிருஷ்ணிகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள்.

    அப்போது அறிமுக கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    தனித்து நிற்கிறோம், தனித்துவத்தோடு நிற்கிறோம். தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்ட வேண்டும் என்பதாலே தனித்து நிற்கிறோம்.

    மாற்று மாற்று என்று பேசிவிட்டு பின்பு அதே கட்சியுடன் கூட்டணி வைப்பது ஏமாற்று.

    சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை விட்டுவிட்டு எண்ணத்தை பார்த்து வாக்களியுங்கள்.

    இங்கு கூடியிருப்பது சீமானுக்கான கூட்டம் அல்ல. சீமான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்கான கூட்டம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ?
    • திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாகை, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண் வருகிறார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கருணாநிதி பிறந்த, வளர்ந்த, வென்ற பகுதிகளை உள்ளடக்கிய தொகுதிக்கு வந்துள்ளேன். இந்தியாவின் புதிய அத்தியாயத்தை எழுதக்கூடிய தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ளேன்.

    பிரசார கூட்டத்தை மாநாடு போல் ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகள்.

    முரரொலியை படித்து வளர்ந்த நான், வேட்பாளர் முரசொலிக்காக வாக்கு கேட்கிறேன். இந்திய கம்யூ.வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது. மாநிலங்கள் இருக்காது.

    கண்ணுக்கு எதிரிலேயே ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டதை பார்த்தோம். காஷ்மீரில் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் வைத்துள்ளனர்.

    இந்தியாவில் எல்லா கட்டமைப்புகளையும் பாஜக சிதைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமை தமிழகத்திற்கு வரலாம்.

    பாஜகவிற்கு மாறுபவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்யாதது ஏன் ? பாஜக அழுகுனி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. மோடியின் ஆட்சி தொடர்வது தமிழகத்திற்கு அழிவு, இந்தியாவிற்கு நல்லது அல்ல.

    தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் வெளிச்சம் பாய்ச்சும் அளவிற்கு விடியலை திமுக அரசு வழங்கி வருகிறது.

    திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். வங்கிகளில் குறைந்தபட்ச தொகை திட்டம் இருக்காது.

    திமுக ஆதரிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும். விற்பனை சந்தைகள் அமைக்கப்படும். திருவாரூரில் இருந்து புதிய ரெயில்கள்.

    அதிமுகவின் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. திமுக அறிக்கையை காப்பி அடித்து தேர்தல் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

    அதிமுக ஆட்சியில் ஆளுநர் ஆய்வுக்கு புறப்பட்டபோது திமுக போராட்டம் நடத்தியது. இப்போது, ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியுள்ளோம்.

    ஆளுநர் விவகாரத்தில் இப்போது அதிமுக என்ன செய்கிறது? அதிமுக ஆதரித்ததால் தான் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது. மதுரை எய்ம்ஸ் விஷயத்தில் இழுத்தடிப்பது குறித்து மோடியிடம் அதிமுக கேள்வி கேட்டதா ?

    கருப்புபணம் உள்ளிட்ட மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா ? 15 லட்சம் கூட வேண்டாம், 15 ரூபாயாவது மோடி கொடுத்தாரா ?

    வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்த இளைஞர்கள் பக்கோடா விற்கலாம் என கூறினார்கள்.

    விவசாயிகளை பாதிக்கும் 3 சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தபோது அதிமுக என்ன செய்தது. பச்சை துண்டு போட்டபடி விவசாயிகளை ஈபிஎஸ் ஏமாற்றினார்.

    விவசாயிகளுக்கு எதுவும் செய்யாததால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடக்கிறது. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விட விவசாயிகள் தான் மோடிக்கு எதிரியாக தெரிகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது.
    • தேனியில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்குகிறார்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை அறிவிக்க உள்ளார்.

    பாஜக கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோயில் அருகே நாளை 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார்.

    அதன் தொடர்ச்சியாக தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்கவிருக்கிறார். அதற்கான விவரப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதாவில் வெற்றி பெற முடியவில்லை.
    • நாகாலாந்தில் இரண்டு தொகுதிகளிலும் என்பிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவது இல்லை என பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

    மேகாலயாவில் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    மணிப்பூரில் உள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. நாகாலாந்தில் தேசியவாத குடியரசு முற்போக்கு கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் சம்பித் பத்ரா எக்ஸ் தளத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவுறுத்தலின்படி, இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு மேகாலயாவில் உள்ள இரண்டு இடங்களிலும், மணிப்பூரில் ஒரு இடத்திலும் பா.ஜனதா போட்டியிட்டது. ஆனால் மூன்று இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதலால் ஏற்பட்ட அரசியல் விளைவு, பா.ஜனதாவை இந்த முடிவு எடுக்க வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் மூன்று மாநிலங்களிலும் ஆதரவு அளிக்கும் இடங்களில் கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இந்த கட்சிகள் தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு அடிக்கடி ஆதரவு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு.
    • மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணக்கையும் ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்கவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்றும் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, கட்சிகள் தங்களின் கூட்டணிகளை முடிவு செய்த நிலையில் தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.
    • இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது

    காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

    அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.

    திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.

    இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக் மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அமமுக தேனீ, திருச்சி தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ், ஈரோடு, ஸ்ரீபெரம்பத்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் போட்டியிடுகிறது

    • தொகுதி பங்கீடுகள் நிறைவுபெற்ற நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது.
    • ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

    ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றே முடிவும் தெரிந்துவிடும்.

    மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீடுகள் நிறைவுபெற்ற நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது.

    பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் ஏற்கனவே இரண்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

    தற்போது, காங்கிரஸ் 3ம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். 

     

    • மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது
    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

    முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் தனக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையை, 'IAM WAITING' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் வரவேற்றுள்ளார்.

    • பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டி.
    • கிருஷ்ணகிரியில் நரசிம்மன் போட்டியிடுகிறார்.

    மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

    முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

    இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

    தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டி.
    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.

    தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதில், 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    மேலும், 4 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

    பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதிகளில் போட்டிறயிடுகின்றன.

    இந்நிலையில், 24 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் உடன் டெல்லி செல்வதாக கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம் முடிவு குறித்து நான் அறிவிப்பது நன்றாக இருக்காது. அவரே விரைவில் அறிவிப்பார் என அண்ணாமலை கூறினார்.

    இதற்கிடையே, பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுவிட்டதால், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம்.
    • இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மாநில தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெள்ள பிரசாத் முன்னிலை வகித்தார்.

    பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் கலந்துரையாட உள்ளோம். இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் மத்திய தேர்தல் குழு தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு இன்று இரவுக்குள் பட்டியல் வெளியிடப்படும். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம்.

    இதேபோல, பிரதமர் மோடி கலந்துகொண்ட மாநாட்டில் ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனை மேடையில் வைத்துக்கொண்டு பா.ஜனதா தலைவர்கள் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். எனவே, திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் உறுதுணையாக இருக்கிறார்களா? என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    இதேபோல, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாசை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்கிறார்கள். இதற்கு அவர்களும் பதில் சொல்ல வேண்டும்.

    ராகுல் காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்வார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம். 400 இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார். ஒருவேளை தமிழகத்தில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×