என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஐபிஎல்2024"
- முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
ஐபிஎல் 2024 சீசனில் 68வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 191 ரன்கள் மட்டுமே எடுத்து
தோல்வி அடைந்தது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் சி.எஸ்.கே. இழந்தது.
போட்டியில் தோல்வி அடைந்ததால் எம்.எஸ்.டோனி கோபம் அடைந்ததாகவும், அதனால் போட்டி முடிந்ததும் அவர் எதிரணி வீரர்கள் யாருக்கும் கை கொடுக்காமல் சென்றார் என கூறப்பட்டது.
இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் யாரி என்ற யூடியூப் சேனலுக்கு ஹர்பஜன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாக சுஷாந்த் மேத்தா என்பவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
எம்.எஸ்.டோனி ஏன் ஆர்.சி.பி. வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றார் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், டோனி கை குலுக்காமல் சென்றது மட்டுமின்றி அங்கு டிவி ஒன்றையும் உடைத்துள்ளார். அங்கிருந்த எதையோ ஒன்றை பலமாக குத்தியுள்ளார். அந்த ஷாட்டை அடிக்காததால் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.
- சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
- சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மழை பெய்து ஆட்டம் நின்றுவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. எப்படியாவது சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிகணக்கான ரசிகர்களில் பிரார்தனை வீணாகியது.
ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை அவர்கள் போட்டியை வென்ற சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் அதனால் டோனி கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுக் குறித்து பலரும் பல கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகின்றனர்.
இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் "தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் "லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்" என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள். என கூறியுள்ளார்.
- பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி.
- ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி.
17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் - சஞ்சு சாம்சன் தலைமையலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணி விளையாடிய 5 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் 15 ஆட்டங்களிலும், பஞ்சாப் 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
- விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார்.
- பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அதிக ரன்கள் குவித்தும் குறைந்த ஓவரில் மும்பை அணி வெற்றிபெற்றது ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் டு பிளேசிஸ் தலைமையில் பெங்களூரு அணி கொஞ்சம் கூட போராடாமல் தோல்விகளை சந்தித்து வருவதாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள் என்று சொல்வேன். அதை செய்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய அணியில் வெற்றிக்கான போராட்டம் இருக்கும்.
விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார். பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும். அவரால் சில வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் ஒரு வீரர் வெளியே அமர்ந்திருக்கிறார். அதாவது டு பிளேஸிஸ் கேப்டனாக இருப்பதால் விராட் கோலி எதுவும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருக்கிறார்.
எனவே விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள். அவருடைய தலைமையில் இந்த அணி போராடி பின்னர் வெல்லும்.
என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்