search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.
    • நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்.

    சென்னை :

    நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

    மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

    * நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

    * அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.


    * சமூகநீதிக்கு எதிரானவை.

    * தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

    நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலினின் பதிவை ரீ-டுவிட் செய்து கூறியிருப்பதாவது:-

    சமூகநீதிக்கும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான நீட் என்னும் மோசடித் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஓயாது என்று கூறியுள்ளார்.

    • மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள்.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தும்.

    இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.

    அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.
    • நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்!

    சென்னை:

    நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

    வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

    இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

    மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

    * நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

    * அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.

    * சமூகநீதிக்கு எதிரானவை.

    * தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

    நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
    • சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன்.

    இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று பகல் 1 மணி அளவில் டெல்லி சென்றார்.

    விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதனைத்தொடர்ந்து அவர் தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு சென்றார். அங்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.

    கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்ப டெல்லி விமான நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு முதலமைச்சர் சென்றார். அப்போது, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்ப விமான நிலையம் சென்றிருந்தார்.

    அப்போது இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டனர். அந்த தருணத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைப்போல மு.க.ஸ்டாலினுக்கும் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    டெல்லி விமான நிலையத்தில் தலைவர் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். அவர் மத்திய அரசியலில் முக்கிய பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன் என கூறியுள்ளார்.

    • இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.
    • மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள உள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் சென்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவசர பயணமாக தற்போது டெல்லி விரைந்துள்ளார்.

     

    அவரது டெல்லி பயணத்துக்குக் காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றதற்கு அதன் தலைவரும் தனது நண்பருமான தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ள சந்திரபாபு நாயுடுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதற்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளத்தற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, அதைக் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
    • நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2004-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது முழுமையான வெற்றி கண்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.

    இந்த நிலையில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆன்மிக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோவில் கட்டிய மண்ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள்.

    சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழி நடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும்.

    அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும். இந்த வெற்றிக்குத் துணை நின்ற உடன்பிறப்புகள் அனைவருக்கும் என நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். தோழமைக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    மதவாதத்தையும் வெறுப்பரசியலையும் விதைக்க நினைப்பர்கள் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் எனத் திட்டமிட்டார்கள்.

    நாட்டின் பிரதமர் 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். திமுக மீது அவதூறு சேற்றினை அள்ளி வீசினார். திமுக வெறுப்புப் பிரசாரம் செய்யவில்லை. பொறுப்பான முறையிலே தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது.

    நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த வெற்றி இந்திய அரசியலின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெரும்பான்மையை பெற முடியாத பாஜக-வின் சரிவு காட்டுகிறது.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • காயிதே மில்லத் அவர்களது பிறந்தநாளான இன்று, அவரது தொண்டினை நினைவுகூர்வோம்!

    சென்னை:

    கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 129-வது பிறந்தநாள் இன்று. இதையடுத்து திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, சாமிநாதன், சேகர்பாபு, சிவி கணேசன், மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அன்னைத் தமிழ்மொழிக்காகவும் - இஸ்லாமியச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் - மதநல்லிண்ணக்கம் நம் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களது பிறந்தநாளான இன்று, அவரது தொண்டினை நினைவுகூர்வோம்! என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்.
    • பிரதமருக்கே முதல் 4, 5 சுற்றுகள் பின்னடைவு இருக்கும் சூழலில் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. மீண்டும் வாகை சூடினார். கனிமொழி எம்.பி.க்கு தொகுதி தேர்தல் அதிகாரியான கலெக்டர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார்.

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, கலைஞரின் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து கனிமொழி இன்று அஞ்சலி செலுத்தினார். 

    இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சர், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த வெற்றிக்காக உழைத்த, பிரசாரம் செய்த அனைத்து தலைவர்களுக்கும், எங்களுடைய மாவட்ட கழக செயலாளர்களுக்கும், தூத்துக்குடி உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மீண்டும் என் மீது இந்த அளவிற்கு நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்து, மீண்டும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய தூத்துக்குடி மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, இங்கே தாமரை மலராது என்பதை மிகத் தெளிவாக தமிழக மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

    நிறைய பேர் கனவோடு இருந்தார்கள். அந்த கனவெல்லாம் தெளிவாக்கப்பட்டுள்ள ஒரு சூழலை தமிழ்நாட்டில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    நிச்சயமாக ஒவ்வொரு இந்தியனும் எதிர்பார்த்ததைபோல ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணமும்.

    ஆனால் இன்று மாலை நடைபெறும் இந்திய கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

    அண்ணாமலை அடிக்கடி என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்பார் கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று.

    2-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக நான் அதற்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல.

    அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக மக்கள் அவர்களுக்கு தண்டனை தந்து கொண்டிருக்கிறார்கள்.

    பிரதமருக்கே முதல் 4, 5 சுற்றுகள் பின்னடைவு இருக்கும் சூழலில் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் தெரிவித்து இருக்கிறார். தார்மீக பொறுப்பேற்றுக்கொள்வது என்பது அரசியலில் புதிய விஷயம் இல்லை. நிச்சயமாக செய்யலாம் என்று தெரிவித்தார்.

    • அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது.

    கோவை:

    தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை கொங்கு மண்டலத்தின் தலைநகர் போல் திகழ்கிறது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரான கோவை எந்தவொரு பொதுத்தேர்தல் வந்தாலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நகரமாக மாறி விடுகிறது.

    இதற்கு காரணம் நடந்து முடிந்த பல தேர்தல்களும், தற்போது நடந்துள்ள 18-வது பாராளுமன்ற தேர்தலுமே சாட்சி. கடந்த பல ஆண்டுகளாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல நகரங்கள் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்பட்டு வந்தது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றி தான் முக்கிய காரணம் ஆகும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க. பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ல் அ.தி.மு.க.வும், 1-ல் அதன் கூட்டணி கட்சியாக இருந்த பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன.

    அதன்பிறகு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கவனம் முழுக்க கோவை பக்கம் திரும்பியது. ஆட்சி பொறுப்பேற்றதும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அதன்பலனாக உள்ளாட்சித் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

    தமிழகத்தில் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவையை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி இடங்களை தி.மு.க.வே பிடித்தது.

    அதைத்தொடர்ந்து தான் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை களமிறக்கப்பட உள்ளதை முன்கூட்டியே அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகங்களை அமைத்தார்.

    பல ஆண்டுகளாக கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வின் கூட்டணிகளிடமே இருந்தது. இந்த முறை எதிரணியான பா.ஜ.க. கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக கோவையை கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து தி.மு.க. கேட்டுப்ெபற்றது. அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. விட்டுக் கொடுத்தது. கோவையில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காண தி.மு.க. தயாரானது.

    தி.மு.க. சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவியது. மூத்த தலைவர்கள் பலர் முட்டிமோத யாரும் எதிர்பாராத வகையில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் அறிவிக்கப் பட்டதும் தி.மு.க.வின ரிடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. காரணம் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சமீபத்தில் தான் தி.மு.க.வில் சேர்ந்தவர். அண்ணாமலையை எதிர்த்து போட்டியிட இவர் வலுவான வேட்பாளர் இல்லை, சாதாரண வேட்பாளரை நிறுத்தி விட்டனர் என்றெல்லாம் பேசப்ப ட்டது.

    ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. கணபதி ராஜ்குமார் கோவை மாநகராட்சி மேயராக பணியாற்றியவர். மக்களுடன் நெருங்கி பழகியவர். அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்தவர். ஏற்கனவே பழக்கப்பட்ட முகம் என்பதால் எளிதில் மக்களை அடைந்து விடுவார் என எண்ணினார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து வந்த அவர் எதிரணியின் பலவீனங்களையும் நன்கு அறிந்தவர். இதுவும் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று கருதினார்.

    மு.க.ஸ்டாலினின் வியூகத்தை உணர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கணபதி ராஜ்குமாருடன் கைகோர்த்தனர். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள முத்துசாமியுடன் கூடுதலாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் களமிறக்கப்பட்டார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைப்படி அவர் கோவையிலேயே முகாமிட்டு தேர்தல் பணியை மேற்கொண்டார். அவரது பிரசார வியூகமே புது விதமாக இருந்தது.

    ஓட்டுக்களை கொத்து, கொத்தாக அள்ளுவதே அவரது குறிக்கோளாக இருந்தது. இதற்காக தொழில்துறையினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கடைசி கட்ட பிரசாரத்தை கோவையில் தான் அமைத்திருந்தார்.

    தி.மு.க. நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி களப்பணியாற்றச் செய்தார். இவ்வாறு அமைக்கப்பட்ட பல்வேறு வியூகங்கள் தான் இன்று கோவை தொகுதியில மாபெரும் வெற்றியை தி.மு.க.வு க்கு பெற்று தந்துள்ளது.

    ஒரு கட்டத்தில் அண்ணாமலை என்ற பெயர் கோவை முழுக்க எதிரொலிக்க அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் 3 முறை பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க.வினர் சற்று தடுமாற வெற்றி நமக்கு தான், தைரியமாக பணியாற்றுங்கள் என்று கூறி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.

    தேர்தல் முடிந்த கையோடு தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து கருத்து கேட்டார். வெற்றி உறுதி என்று நிர்வாகிகள் சொன்னதும் அனைவரையும் அவர் பாராட்டினார்.

    இவ்வாறு பல்வேறு அதிரடி வியூகங்கள் அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலையை வீழ்த்தியே விட்டார். 28 ஆண்டுகளுக்கு பின் கோவை தொகுதியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    இதற்கிடையே அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணாமலை பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது.

    கோவை தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் என பலரும் பிரசாரம் மேற்கொள்ள எப்படியும் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார் என்றே பா.ஜ.க.வினர் கருதி வந்தனர். ஆனால் தி.மு.க. வேட்பாளரிடம் அண்ணாமலையை தோல்வியை தழுவி விட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

    தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை, விலையில்லா பஸ் பயண திட்டம் ஆகியவை தி.மு.க.வுக்கு கைகொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனியே நின்றது அண்ணாமலையின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். கோவை தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் மொத்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு சென்று விட்டன. ஊரகப்பகுதியில் தி.மு.க.வுக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளது.

    2026 சட்டசபை தேர்தல் களம் இளைஞர்களின் காலமாக இருக்கும். அந்த தேர்தலில் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் என பலரும் தேர்தல் களத்தில் நிற்பார்கள். அண்ணாமலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை ஏற்க மறுக்கும் பா.ஜ.க.வினர், தங்களுக்கு அதிக வாக்கு கிடைக்கும் தொகுதியான கவுண்டம்பாளையத்தில் பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்களின் பெரும்பாலானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தங்களுக்கு பின்னடைவாக அமைந்ததாக தெரிவிக்கின்றனர்.

    இதுஒருபுறம் இருக்க பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது. மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அ.தி.மு.க. வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரனால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    இதுவரை கோட்டை என வர்ணிக்கப்பட்ட இடத்தில் ஓட்டை விழுந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் அ.தி.மு.க.வை வசைபாடு கிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதியிலும் அ.தி.மு.க. 3-வது இடத்தையே பெற்றுள்ளது. இந்த தோல்வி அ.தி.மு.க. தொண்டர்களிடை யே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த வெற்றி உங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சி...
    • பதற்றமில்லாமல் வெற்றியின் பகட்டு இல்லாமல் இயல்பான புன்னகையோடு இருந்தார்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40-க்கு 40 என்று வெற்றி பெற்றுள்ளது. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வுக்கு கிடைத்த முழு வெற்றியாகும். இதற்கு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாற்பதுக்கு நாற்பது என்பது

    மாயத்தால் நிகழ்ந்ததல்ல

    நிர்வாகத் திறம் என்ற

    நியாயத்தால் நிகழ்ந்தது

    இந்த வெற்றி

    உங்கள் ஆட்சியின்

    மாட்சிக்குக் கிடைத்த சாட்சி

    என்று சொல்லி

    முதலமைச்சருக்குப்

    பொன்னாடை பூட்டினேன்

    பதற்றமில்லாமல்

    வெற்றியின் பகட்டு இல்லாமல்

    இயல்பான புன்னகையோடு இருந்தார்

    வென்றார்க்கு அழகு

    தோற்றாரை மதித்தல்

    தோற்றார்க்கு அழகு

    வென்றாரை வியத்தல்

    பதவிக்கு அழகு

    உதவிகள் தொடர்தல்

    மக்களுக்கு அழகு

    மறுவேலை பார்த்தல்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு டெல்லி செல்கிறார்.
    • ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்வதாக தகவல்.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    நாடு முழுவதும் பா.ஜ.க. 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முழு தொகுதிகளை கைப்பற்றினாலும் உத்தர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு டெல்லி செல்கிறார். 

    • 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் முதல் தேர்தல் ஆகும்.
    • தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. எப்போதும்போல் தமிழகத்தின் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    இந்த வெற்றி தி.மு.க.விற்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மகுடம் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது.

    இதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    அதன்பின் இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு மறைந்தார். அதன்பின், தி.மு.க. தலைமைப் பொறுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார். 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் முதல் தேர்தல் ஆகும்.

    தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் தி.மு.க. கூட்டணிக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 100 சதவீத வெற்றியை மு.க.ஸ்டாலின் தேடித்தந்துள்ளார்.

    ×