என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்"
- தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கும் வழக்கறிஞர் மேத்யூ நெடும்பராவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- இறுதியாக நீதிமன்றத்தை விட்டு வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா வெளியேறினார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.
நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.
எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்று நீட் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா தனது வாதங்களை முன்வைத்து கொண்டிருக்கும் போது மூத்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா அடிக்கடி குறுக்கிட்டு இடையூறு செய்தார்.
இதனால் கோவமான தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கும் வழக்கறிஞர் மேத்யூ நெடும்பராவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: இங்குள்ள வழக்கறிஞர்களின் நான்தான் சீனியர். நான் உங்களின் நண்பர்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: நான் எந்த நண்பரையும் இங்கு நியமிக்கவில்லை.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நான் உங்களின் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: எனக்கு உங்களின் பதில்கள் தேவையில்லை. அமைதியாக அமருங்கள். இல்லையென்றால் நீதிமன்றத்தை விட்டு உங்களை வெளியேற்றி விடுவேன்.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நீங்கள் என்னை மதிக்கவில்லை என்றால், நானே நீதிமன்றத்தை விட்டு வெளியே சென்று விடுவேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: வழக்கறிஞர் ஹூடா வாதாடும் பொது வேறு யாரும் குறுக்கிடுவதை நன் விரும்பவில்லை.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி கொள்கிறேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: தயவு செய்து காவலர்கள், வழக்கறிஞர் மேத்யூ நெடும்பராவை நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற்றுங்கள்.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நானே நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்கிறேன். ஆனால் இது நியாயமற்றது.
தலைமை நீதிபதி சந்திரசூட்: இதை நீங்கள் சொல்லவேண்டிய தேவையில்லை. கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை நான் பார்த்து வருகிறேன். நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையில் வழக்கறிஞர்கள் உத்தரவிட அனுமதிக்க முடியாது.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நான் நீதித்துறையை 1979 ஆம் ஆண்டிலிருந்து பார்த்து வருகிறேன்.
உச்ச நீதிமன்ற தலைமை வழக்கறிஞர்: இது நீதிமன்ற அவமதிப்பு
இறுதியாக நீதிமன்றத்தை விட்டு வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா வெளியேறினார்.
- மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக் கூடும்.
- மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது.
மாதவிடாய் விடுப்புக்கான கொள்கைகளை வகுக்க மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவதைக் கட்டாயமாக்குவது அவர்களை ஒதுக்கி வைக்க வழிவகுக்கும். "மாதவிடாய் விடுப்பு வழங்குவது கட்டாயம் என அறிவித்தால் அவர்களை வேலைக்கு எடுப்பது குறையக் கூடும். அதை நாங்கள் விரும்பவில்லை. பெண்களைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இது அவர்களுக்குப் பாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறது" என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
மேலும் "மாதவிடாய் விடுப்பு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடுங்கள்" என்று கூறி வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் முடித்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்