search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரீஸ் ஒலிம்பிக்ஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன்
    • வினேஷை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார்.

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். தங்கம் யாருக்கு என்று நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியானது இன்று மதியம் 2.30 அளவில் நடக்க உள்ளது.

     

    முன்னதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். அவர் உள்ளிட்ட மற்றைய வீரர்கள் மீது கடுமையான அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

     

    இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடன் களத்தில் நின்று போராடிய சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது சமூக வலைதள பக்கத்தில், 'பிரதமர் மோடி வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்யும் தருணத்திற்கு காத்திருக்கிறேன். அந்த நேரத்தில், அவர் மீண்டும் 'இந்தியாவின் மகள்' ஆகிவிடுவார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத அவருக்கு, வினேஷ்க்கு ஃபோன் செய்து வாழ்த்தும் துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்' என்று பதிவிட்டுள்ளார். 

     

    முன்னதாக நேற்று மதியம் நடந்த காலிறுதி போட்டியில் வினேஷ் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து பஜ்ரங் புனியா வெளியிட பதிவில்,'பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.  

     

    • பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.
    • இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

    வரலாற்றுச் சாதனை படைத்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

     

    அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார். வினேஷ் மற்றும் அவரது சக வீராங்கனைகளின் போராட்டத்தை விமர்சித்தவர்கள், அவர்களின் எண்ணம் மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் ஆகிய அனைவருக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது.

    இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்துதான் பதிலளிப்பார்கள்.

     

    வாழ்த்துகள் வினேஷ். பாரிஸ் நகரில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சொந்த நாடே உதறித்தள்ளியது இப்போது அவர் உலகையே ஆளப்போகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
    • . ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது.

    இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் யூசுப், எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதாவது, எதிர்காலத்தில் வரவுள்ள ரோபோட்கள், ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வாய்ப்பிருக்கிறதா? இதைப்பற்றி கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரமான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    முன்னதாகவே யூசுபின் ஒலிம்பிக் ஸ்டைலை வியந்து பாராட்டிய எலான் மஸ்க் தற்போது அவரது பதிவுக்கு உடனே பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,எ திர்கால ரோபோட்கள் பலகையின் மையத்தைக் குறிவைத்தே சுடும் திறன் கொண்டிருக்கும். நான் இஸ்தான்புல் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்று அது என்று பதிலளித்துள்ளார்.

    இவர்களின் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
    • தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் விளையாட்டு என்பதையும் கடந்து வீரர்களின் ஆத்மார்த்தமான உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதாக உள்ளது. வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் அது அழுகையாக வெளிப்படுகிறது. இது ரசிகர்கள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

    அந்த வகையில் செர்பிய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இடையே நடந்த போட்டியானது அத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று நடந்த இந்த டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸிடம் ஜோகோவிச் தோற்ற நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. இது இரு வீரர்களையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாக அமைந்தது.

    பார்வையாளர்கள் இடத்தில் இருந்த தனது மகளை கட்டியணைத்து ஜோகோவிச் அழுத காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் தோல்வியால் கார்லோஸ் அல்காரஸ் கண்கலங்கும் காட்சிகளும் ரசிகர்களைக் கலங்க வைத்துள்ளது. 

    • விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனத்தின் CEO மோஹக் நாஹ்டா அறிவித்துள்ளார்.
    • நானே தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் விசாக்களை அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 53ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஈட்டியெறிதல் பிரிவுக்கான போட்டிகள் நாளை [ஆகஸ்ட் 6] தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ராவும் கிஷோர் ஜெனாவும் விளையாடுகின்றனர்.

    இதில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் இந்தியர்கள் அனைவருக்கும் இலவச  விசா வழங்கப்படும் என்று ஆன்லைனில் விசா விண்ணப்பிக்கும் சேவையை வழங்கும் நிறுவனமான Atlys நிறுவனத்தின் CEO மோஹக் நாஹ்டா அறிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் நீரஜ் தங்கம் வென்றால் Atlys இந்தியப் பயனர்களுக்கு உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல இலவச  விசா வழங்கப்படும். இதன்மூலம் பயன்பெற விரும்புவார்கள் உங்களின் இமெயில் முகவரியை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

     

    நானே தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் விசாக்களை அனுப்பி வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ் ஈட்டியெறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
    • இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

     

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவரே இணையத்தின் நாயகன். ஆனால் அந்த 45 நொடிகளுக்காக தான் தனது வாழ்க்கை முழுவதும் உழைத்ததாக யூசுப் மனம் திறந்துள்ளார்.

     

     

    தனது வெற்றி குறித்து துருக்கி ஊடகத்தில் பேசியுள்ள யூசுப், எனக்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவைப்பட்டதில்லை, எனது நண்பர்கள் கூட அது பற்றி என்னிடம் கேட்பதுண்டு. ஏன், பிற வீரர் வீராங்கனைகளும் என்னிடம் அதுபற்றி கேட்டனர். நான் அவர்களிடம் சொல்வதெல்லாம், நான் இயல்பாக இருக்க விரும்புகிறேன், நான் இயற்கையாகவே ஒரு ஷூட்டர் என்று தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் துருக்கியின் சிவில் பாதுகாப்புப் படையான Gendarmerie இல் பறிச்சி பெற்றவர் ஆவார். 2001 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடுதல் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். ISSF உலக சாம்பியன் போட்டிகளில் 5 கோப்பைகளை வென்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

     

     

    மேலும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நிச்சயம் தான் தங்கம் வெல்வேன் என்றுநம்புவதாக யூசுப் தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் போட்டியின்போது ஒரு கையை பாக்கெட்டுக்குள் வைத்து மற்றொரு கையால் சுட்டது பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு மட்டுமல்ல. அதன்மூலம் சுடும்போது அதிக பேலன்ஸை ஏற்படுத்தவும் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், யூசுப் இன்றைய இன்டர்நெட் சென்சேஷன் என்பது மிகையாகாது. 

    • பீச் வாலிபால் போட்டிகள் ஈபிள் டவர் அருகே நடைபெறுகிறது.
    • தற்காலிகமாக அமைக்கப்படும் அரங்கங்கள் போட்டிகள் முடிந்தவுடன் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும்.

    ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடுகளில் வழக்கமாக ஒரு நகரமே உருவாக்கப்பட்டு புதிதாக மைதானங்கள் கட்டப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் பாரீசில் 95 சதவீதம் ஏற்கெனவே உள்ள ஸ்டேடியங்களிலும் தற்காலிக மைதானங்கள் அமைக்கப்பட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அதிக அளவில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்வதை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஒலிம்பிக் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களை கவரும் வகையில் தற்காலிக மைதானங்கள் பாரீஸ் நகரின் முக்கிய அடையாள சின்னங்களான ஈபிள் டவர், கிரான்ட் பேலஸ் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பீச் வாலிபால் போட்டிகள் ஈபிள் டவர் அருகே நடைபெறுகிறது. இவ்வாறு தற்காலிகமாக அமைக்கப்படும் அரங்கங்கள் போட்டிகள் முடிந்தவுடன் அகற்றப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும்.

    லிங்கை கிளிக் செய்யவும்- 162 படகுகளில் Entry... 4 மணி நேர கொண்டாட்டம்.. பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்


    • உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக்ஸ் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்துக்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு அனுமதி இல்லை.

    2-வது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900-ம் ஆண்டில் நடந்தது. 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர், வீராங்கனைகள் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 162 படகுகள் மூலம் வீரர்கள் மற்றும் கலைஞர்களை செய்ன் நதிக்கு அழைத்து வந்து, சுமார் 6 கி.மீ தூரப்பாதையில் 4 மணி நேரம் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ×