search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி தீர்த்தம்"

    • நதிகள் பலவும் உன்னை வணங்கிட
    • பாவங்கள் போக்கிடுவாய், அம்மா பாவங்கள் போக்கிடுவாய்!

    ஓம் ஜெய ஜெய காவேரி

    அம்மா அன்னையே காவேரி!

    அன்பினால் உனக்கு ஆரத்தி செய்தோம்

    அன்னையே காவேரி. ஓம் ஜெய ஜெய காவேரி!!

    (ஓம் ஜெய)

    அகத்திய முனிவரின் தவத்தில் பிறந்தாய்

    அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!

    கணபதி அருளால் தரணியில் வந்தாய்

    அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!!

    (ஓம் ஜெய)

    குடகினில் தோன்றி பூமியில் தவழ்ந்து

    கடலினில் கலந்தாயே, அம்மா கடலினில் கலந்தாயே!

    மாந்தர்கள் வணங்கிட வளம் பல தருவாய்

    அன்னையே காவேரி, அம்மா அன்னையே காவேரி!!

    (ஓம் ஜெய)

    நதிகள் பலவும் உன்னை வணங்கிட

    பாவங்கள் போக்கிடுவாய், அம்மா பாவங்கள் போக்கிடுவாய்!

    நாங்களும் உன்னை வணங்கிட வந்தோம்

    பாவங்கள் தீர்ப்பாயே ஓம் ஜெய ஜெய காவேரி!!

    (ஓம் ஜெய)

    உந்தன் கரைதனில் புனித தலங்கள்

    தோன்றி வளர்ந்தனவே, அம்மா தோன்றி வளர்ந்தனவே!

    பக்தியும் தவமும் பெருகி வளர்ந்திட

    அருளினைத்தந்தாயே ஓம் ஜெய ஜெய காவேரி!!

    (ஓம் ஜெய)

    மாலையில் உனக்கு ஆரத்தி செய்தோம்

    வளம்பெற அருள்வாயே, அம்மா வளம் பெற அருள்வாயே!

    உன்னை வணங்கிட ஒன்றாய்ச் சேர்ந்தோம்

    உயர்வினைத் தந்திடுவாய் ஓம் ஜெய ஜெய காவேரி!!

    (ஓம் ஜெய)

    • வட மாநில மக்கள் இன்றும் நதிகளை தெய்வமாகவும், தாயாகவும் போற்றுகிறார்கள்.
    • குறிப்பிட்ட கிரகப் பெயர்ச்சிகளின் போது மிகச்சரியாக கும்ப மேளாக்களை நடத்தி விடுகிறார்கள்.

    நதிகளை நம் முன்னோர்கள் நம் குடும்பத்தில் ஒருவர் போல கருதினார்கள். அதனால்தான் நதிகளை "தாய்" என்று அழைத்தனர்.

    தாய்க்கும், தாய்ப் பாசத்துக்கும் இந்த உலகில் ஈடு இணையே கிடையாது.

    ஒரு தாய், எத்தனை பிள்ளைகள் பெற்றாலும், அனைவரையும் பாசத்தோடு வளர்ப்பாள். கண் இமைக்குள் வைத்து பாதுகாப்பது போல பாதுகாப்பாள்.

    அத்தகைய தாய் போன்றதுதான் நதியும். உணவு உற்பத்திக்கும், குடிநீருக்கும் நதிகள்தான் அடித்தளமாக உள்ளன.

    எனவேதான் நதிகளை தாயாக கருதிப் போற்றினார்கள்.

    இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நதிகளை கும்பிட்டு வணங்கினார்கள்.

    நம் முன்னோர்களிடம், நதிகளைப் போற்றும் பண்பு, உணர்வோடு இரண்டற கலந்திருந்தது.

    அது மரபு போல காலம், காலமாக நீடிக்க வேண்டும் என்பதற் காகத்தான் நதிக்கரைக்கு விழாக்கள் எடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

    ஜோதிட ரீதியாக கணித்து, ஒவ்வொரு கால கட்டத்திலும் நதிகளுக்கு விழா எடுக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தனர்.

    கும்ப மேளாக்கள், தீர்த்த மாடல்கள் இப்படித்தான் தோன்றின. நம் மூதாதையர்கள் இந்த விழாக்களை மிக, மிக கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

    நதிகளை அவர்கள் எப்படி மதித்தனர், பேணி பாதுகாத்தனர் என்பது சங்க கால இலக்கியங்களில் நிறைய உதாரணங்களாக உள்ளது.

    வட மாநில மக்கள் இன்றும் நதிகளை தெய்வமாகவும், தாயாகவும் போற்றுகிறார்கள்.

    குறிப்பிட்ட கிரகப் பெயர்ச்சிகளின் போது மிகச்சரியாக கும்ப மேளாக்களை நடத்தி விடுகிறார்கள்.

    வட மாநில மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கங்கை மாதாவுக்கு ஜே என்று கூறிக் கொள்ள தவறுதில்லை.

    கங்கை நதியை அவர்கள் எந்த அளவுக்கு உயிர்மூச்சு போல வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

    குறிப்பாக குரு பெயர்ச்சி நடக்கும் போது, அது ஒரு ராசியில் இருந்து, இன்னொரு ராசிக்குள் செல்லும்போது, அந்த ராசிக் குரிய நதியில் புஷ்கரம் நடத்துவார்கள்.

    அதாவது அந்த நதியில் புனித நீராடுவார்கள். ஹோமம் வளர்த்து அந்த நதியை வணங்குவார்கள்.

    அதோடு அந்த நதிக்கு ஆரத்தி காட்டி தங்கள் நன்றியைத் தெரிவிப்பார்கள்.

    • மயிலாடுதுறையில் அபயாம்பிகை மயில் வடிவம் கொண்டு பரமசிவனை பூஜை செய்கிறார்.
    • 63 சித்தர்கள் வாழ்ந்து பெருமை சேர்ந்த ஊராக மயிலாடுதுறை விளங்குகிறது.

    'புஷ்கரம்' என்பது ஒரு வடமொழி சொல். நீரில் இறைவனின் அருள்சக்தி சேர்ந்தால் தீர்த்தம் என்று பெயர்.

    அந்த அருள் சக்தி நிறைந்த தீர்த்தங்கள், திருக்கோவில்களில் இருக்கும். புண்ணிய நதிகளும் தீர்த்தமாக கருதப்படுகிறது.

    இந்தியாவில் 7 புண்ணிய நதிகள் உள்ளன.

    'புஷ்கரம்' என்பவர் வருண பகவானின் தாய் மாமன் ஆவார். அவர் எல்லா நதிகளிலும் அருள்பாலித்து கொண்டு தீர்த்தமாக மாறி உயிரினங்களை வாழ வைக்கிறார்.

    இந்த புண்ணிய நதிகள் எங்கு பாய்கிறதோ, அங்கு பூமி விளையும், வாழ்வு வளம்பெறும்.

    குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையும் காலத்தில், துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கரம் விழா நடக்கிறது.

    குரு பகவான் ஒரு ஆண்டு அங்கிருந்து அருள்பாலிப்பார்.

    அந்த ஆண்டு நடைபெறும் புஷ்கரம், காவிரி மகாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவில் 3 ஆயிரம் துறவியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்ற பழமொழி உள்ளது.

    இதில் ஆயிரம் என்பது மங்கலம், சுபம், பரமசிவம் என்ற ஆயிரம் அர்த்தங்களை கொடுக்கிறது.

    அத்தனையும் மயிலாடுதுறை மக்கள் பெறுவார்கள்.

    மயிலாடுதுறை ஒரு முக்தி ஸ்தலம் ஆகும்.

    இங்கு பாயும் புண்ணிய நதியான காவிரியில் மகாபுஷ்கரம் விழாவின் போது புனித நீராடினால் அனைவரும் சுப வாழ்வு வாழ்ந்து பரமானந்தம் பெறலாம்.

    இங்கு ரிஷப பகவான் பாதாளத்தில் இருந்து வெளிபட்டு வழிபடுகிறார்.

    மயிலாடுதுறையில் அபயாம்பிகை மயில் வடிவம் கொண்டு பரமசிவனை பூஜை செய்கிறார்.

    63 சித்தர்கள் வாழ்ந்து பெருமை சேர்ந்த ஊராக மயிலாடுதுறை விளங்குகிறது.

    உலகிலேயே ஞானபூமி, அருள்பூமி, தெய்வீக பூமி என்று போற்றப்படுவது மயிலாடுதுறை ஆகும்.

    இந்த புனித பூமியை தெய்வீக பூமியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குருப்பெயர்ச்சி நாட்களில் குடும்பத்துடன் மன மகிழ்வுடன் காவிரி தாய்க்கு மஞ்சள் தூள், புஷ்பம் சமர்ப்பணம் செய்து வணங்கி நீராட வேண்டும்.
    • நீராடும்போது குலதெய்வம், இஷ்டதெய்வம், முன்னோர்களை வணங்கி நீராட வேண்டும்.

    காவிரி புஷ்கரம் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது நடத்தப்படும் திருவிழா ஆகும்.

    12 ராசிகளும் 12 நதிகளுக்கும் உரியது. அவை மேஷம்-கங்கை, ரிஷபம்-நர்மதை, மிதுனம்-சரஸ்வதி, கடகம்-யமுனை, சிம்மம்-கோதாவரி, கன்னி-கிருஷ்ணா, துலாம்-காவிரி, விருச்சிகம்-தாமிரபரணி, தனுசு-சிந்து, மகரம்-துங்கபத்ரா, கும்பம்-பிரம்மபுத்ரா, மீனம்-பரணீதா.

    குருப்பெயர்ச்சி நாட்களில் குடும்பத்துடன் மன மகிழ்வுடன் காவிரி தாய்க்கு மஞ்சள் தூள், புஷ்பம் சமர்ப்பணம் செய்து வணங்கி நீராட வேண்டும்.

    நீராடும்போது குலதெய்வம், இஷ்டதெய்வம், முன்னோர்களை வணங்கி நீராட வேண்டும்.

    மேலும் நமது வீடுகளில் உள்ள பூஜை விக்ரகங்களையும், கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளையும் காவிரிக்கு எடுத்துச் சென்று தீர்த்தவாரி செய்து வருதல் அல்லது காவிரியிலிருந்து தீர்த்தக்கலசம் எடுத்து வந்து மூலருக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்வது நல்லது.

    இந்தப் புனித நாட்களில் இல்லறத்தார்கள் பித்ருக்களுக்கு காவிரி கரையில் பிண்டம் கொடுப்பது நல்லது. காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து வீடுகளில் தெளித்துப் புனிதப்படுத்திக் கொள்ளலாம்.

    துவக்க நாளான்று அகில பாரதிய துறவியர்களின் மாபெரும் சங்கமத்துடன் ஒன்று கூடி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி மாநாடாக நடைபெறும்.

    நாகை மாவட்ட பூஜாரிகளின் பேரமைப்பு அன்னை காவிரியின் தீர்த்த கலசமெடுத்து மாபெரும் ஊர்வலமாக வருவார்கள்.

    13 நாட்களும் யாகங்கள், கோவில் உற்சவமூர்த்திகளின் தீர்த்தவாரி, துறவியர் பெருமக்களின் புனித நீராடல், லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், தேவார, திருவாசக, திருப்புகழ், நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருவருட்பா பாராயணங்கள் மற்றும் தினந்தோறும் காவிரி ஆரத்தி, மாலை சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    உலகத்தின் நதிகளிலேயே மிகவும் புண்ணியமும் பவித்ரமுமான அன்னை காவிரியின் கரையிலே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் நாம் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி புனிதம் அடைவோமாக!

    அன்னை காவிரியின் மஹா புஷ்கரத்தில் கங்கையும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், பதினெண் சித்தர் பெருமக்களும், வாசம் செய்வதால் நாம் நீராடி வழிபாடுகள் செய்து காவிரித்தாய்க்கு மாலை நேரத்தில் ஆரத்தி செய்வதால் நமது பாவங்கள் தீர்ந்து வேண்டுதல்கள் நிறைவேறும்.

    ×