search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical"

    • முகாமில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பணி செய்தனர்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி புதுகிராமம் பகுதியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், நாடார் உறவின் முறை சங்க பொது நல மருத்துவமனை, மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டணமில்லா பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமினை நடத்தினர்.

    முகாமிற்கு நாடார் சங்க பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம் தலைமை தாங்கினார். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் மற்றும் பொதுநல மருத்துவமனை செயலாளர் எம்டிஎம்.தங்கராஜ், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    முகாமில் தோல் மருத்துவர் சாரங்கபாணி, மகப்பேறு சிறப்பு மருத்துவர் கமலா சுதன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஜெய செல்வராணி, எலும்பு முறிவு மூட்டு நோய் சிறப்பு மருத்துவர் பாலகிருஷ்ணன், காது மூக்கு தொண்டை நிபுணர் பாலசுப்பிரமணியன், உட்பட 10-க்கும் மேற்பட்ட சேவை மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பணி செய்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சேதுரத்தினம், ராஜவேல், ராஜு, கோபால்சாமி, செல்வமோகன், தயாளமோகன், ஜெயபால், ரத்தினகுமார், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் தனியார் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பேர்ட்ஸ் மற்றும் முகமது சதக் கல்வி குழுமம் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து இலவச இருதயம், எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை மனநல மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாமை கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் நடத்தியது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி உடல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.

    ரத்த அழுத்தம், சர்க்கரை, மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. இருதய சிகிச்சை டாக்டர் நிஜாமுதீன்,காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் பெர்னீஷ் ஸ்டெல்லா, பொது மருத்துவர் ராஜா,மனநல டாக்டர் அஸ்மா பாட்ஷா, எலும்பு முறிவு சிறப்பு டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முகமது சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மை இயக்குநர் பி.ஆர்.எல். ஹாமிது இப்ராஹிம், தொழிலதிபர் பி.ஆர்.எல் சதக் அப்துல் காதர் ஏற்பாட்டில் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் மற்றும் நகராட்சி கவுன்சிலர் சேக் உசைன், கூட்டமைப்பு துணைச் செயலாளர் சீனி இப்ராகிம், அனைத்து சமுதாய கூட்டமைப்பு பொருளாளர் பேராசிரியர் ஆசிப், நடுத்தெரு சுபைர், புதுத்தெரு சுபைர், வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், அப்பா மெடிக்கல் சுந்தர், சதக் ஜாரியா பள்ளி தாளாளர் முகமது ஜகரியா, நுகர்வோர் செயலாளர் செய்யது இப்ராஹிம், ஓ.எஸ்.அபுதாகீர் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் பங்கேற்று இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று சென்றனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் டாக்டர் விஜயகுமார் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

    முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சிறு உபாதைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்காடு வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் முகாமில் கலந்துகொண்ட பணியாளர்களுக்கு தோல் வியாதி குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் செய்திருந்தார். முகாமில் 70-க்கும் மேற்ட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன்காப்போம் அரசு சிறப்பு பொதுமருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமைதாங்கினார்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி முன்னிலை வகித்தார். சுகாதாரஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மருத்துவர்கள் அருண்கோபி, ஹரிபிரசாத், கிஷாமகேஷ், செல்வி உள்பட 8 டாக்டர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், சுகாதாரஆய்வாளர்கள் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், பிரபாகரன், இனியகுமார், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கண்ணன் நன்றி கூறினார். இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.

    • பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி கோட்டை அரிமா சங்கம் மற்றும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்தி கோட்டை அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் ராகா ஆயில் தமிழ்மணி வரவேற்றார். பரமத்தி அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமினை குமாரபாளையம் தங்கமணி எம்.எல்.ஏ, பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, அரிமா சங்கம் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திலகவதி வெற்றிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச புற்றுநோய் கண்டறியும் முகாமினை யூனியன் சேர்மன் ஜனகர் தொடங்கி வைத்தார்.
    • முகாமில் மேமோகிராம், எக்கோ கார்டியோகிராம், உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

    குரும்பூர்:

    நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனை, மதுரை குரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை சார்பில் இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நாலுமா வடியில் நேற்று நடந்தது.

    முகாமுக்கு புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவ மனையின் இயக்குநர் டாக்டர் அன்புராஜன் தலை மை தாங்கினார். ஆழ்வை வட்டார மருத்துவ அலுவலர் பாத்திபன் முன்னிலை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆழ்வை. யூனியன் சேர்மன் ஜனகர் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    முகாமில் மேமோகிராம், ரத்த சர்க்கரை, ஈ.சி.ஜி, எக்கோ கார்டியோகிராம், பிஏபிசமீர், எப்என்ஏசி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் நாலுமாவடி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முகாம் இன்றும் நடக்கிறது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • ஊராட்சி தலைவர் பழனிவேல், துணை தலைவர் கேபிள் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளைகள் மற்றும் ராக்ஸ் மருத்துவமனை இணைந்து அரசு மேல்நிலைப்பபள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. ஊராட்சி தலைவர் பழனிவேல், துணை தலைவர் கேபிள் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    டாக்டர் வீரபத்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சர்க்கரை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளித்து மாத்திரைகள் வழங்கினர். அறக்கட்டளை நிர்வாகிகள் நாகு ஆச்சாரி, முருகேசுவரி, பஞ்சவர்ணம் நாகஜோதி, கார்த்திக், செல்லபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்களுக்கு பயிற்சியாளர் சங்கரபாண்டி மூச்சு பயிற்சியளித்தார்.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
    • நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

    நெல்லை வருகை

    அதன்படி வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) அவர் நெல்லைக்கு வருகிறார். அவரது வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் நலத்திட்ட உதவிகள் பெறுபவர்கள் விபரங்களை தயார் செய்து வருகிறது.

    அடிக்கல் நாட்ட வேண்டிய திட்டங்கள், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளின் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவ கல்லூரி மைதானம்

    நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மைதானத்தில் விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    உற்சாகம்

    மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் முதல்-அமைச்சர் வருகை குறித்த முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு விழா நடைபெறும் மைதானத்தை சமன்படுத்தி, மருத்துவக்கல்லூரியை சுற்றிலும் சுகாதார பணிகளை விரைந்து மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் விழாவுக்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் 230 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி ஒன்றியம் காப்பரப்பட்டி சமுதாயக்கூடத்தில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயசுந்தரி சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சித்த மருந்து வழங்குதல், வர்ம சிகிச்சை, மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு, யோகா பயிற்சி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, கண் பரிசோதனை ஆகியவை பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. இதில் 230 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • ராமநாதபுரத்தில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • இளம்பெண்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்து டாக்டர் விளக்கி பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, இன்னர்வீல் கிளப் இணைந்து வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    இளம்பெண்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும், இயற்கை காய்கறிகள் சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் ஆரோக்கியா மருத்துவமனை டாக்டர் வித்யா பிரியதர்ஷினி விளக்கினார்.

    கிளப் தலைவி ரூபா, செயலாளர் பாக்கியலட்சுமி, முன்னாள் தலைவர் ரேகா, தலைமை ஆசிரியை ஜோ விக்டோரினா, தொழிற்கல்வி ஆசிரியை சிவகாமசுந்தரி உட்பட மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    • 12 பேருக்கு காசநோய் அறிகுறி இருந்ததையடுத்து பரிசோதனை மாதிரிகள் பகுத்தாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • மாணவ, மாணவிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மீரான்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவ குழுவினர் டாக்டர் பாபு தலைமையில் தென்திருப்பேரை காசநோய் பணியாளர்கள் ஜெயவண்ணன், சுரேஷ், பார்த்திபன், சங்கரலிங்கம், செவிலியர்கள் மெர்சி மகேஸ்வரி, நாகவள்ளி, சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார் மற்றும் ஆஷா, டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் பங்கேற்று கணக்கெடுப்பு நடத்தினர்.

    இதில் 1,250 பேர்களுக்கு கணக்கெடுக்கப்பட்டதில் 12 பேருக்கு அறிகுறியும் இருந்ததையடுத்து அவர்களது பரிசோதனை மாதிரிகள் பகுத்தாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து துணை சுகாதார நிலையம் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் மலேரியா குறித்து விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் நேபல் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கும், சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.
    • 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    செய்துங்கநல்லூர்:

    கொரோனா தொற்று தற்போது படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு இலவச சித்த மருத்துவ முகாம்கள், கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவப் பிரிவு மற்றும் மத்திய சித்த மருத்துவ ஆய்வு மையம் பாளையங்கோட்டை கிளை இணைந்து வசவப்பபுரம் கிராமத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. மருத்துவர்கள் செல்வகுமார், அரிகர மகாதேவன் ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கும், சித்த மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், அமுக்கரா மாத்திரை ஆகியன பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருந்தாளுநர் வெங்கடேசன் பணியாளர்கள், இசக்கியப்பன், வேம்பன், மேரி ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×