search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94372"

    ஆலங்குடி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி போலீசார் அரசடிபட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாண்டான்விடுதியை சேர்ந்த பாக்கிய நாதன் (வயது 37) மற்றும் குழந்தை விநாயகர் கோட்டையை சேர்ந்த விக்னேஷ் (24) ஆகியோர் மறைத்து வைத்து மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 54 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி அருகே மது பாட்டில்கள் பதுக்கிய 44 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் ஆகிய பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 44 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கிருஷ்ணகிரி அருகே லாட்டரி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் லாட்டரி விற்றதாக ஜாகிர் உசேன் (வயது 50), சுரேஷ் (27) ஆகிய இருவரையும் டவுன் போலீசார் கைதுசெய்தனர். மேலும் பர்கூடர் போலீசார் முருகேசன் என்பவரையும், போச்சம்பள்ளி போலீசார் வடமலம்பட்டி ரவி என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கிருஷ்ணகிரி அருகே குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை, ஓசூர், மத்திகிரி, சூளகிரி பகுதியில் போலீசார் பெட்டிக் கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது சுபேதார்மேடு ராமநாதன் (வயது 43), பெத்தனப்பள்ளி அருள்ராஜ் (29), ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதி அமீர் (55), மத்திகிரி சத்யன் ராவ் (40), சூளகிரி கலீல் (26) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள், ரூ.800-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னை பாரிமுனையில் மளிகை கடையில் ரூ.1½ கோடி பண மோசடி தொடர்பான வழக்கில் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சென்னை:

    சென்னை பாரிமுனையில் பாண்டி என்பவர் மளிகை கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த கடையில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வேலை செய்து வந்தார். இவர் கடையின் முழு பொறுப்பையும் கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வேல்முருகன் தனது வங்கி கணக்கில் செலுத்தியதுடன் தனது மனைவி பூர்ணிமா மற்றும் அவரது தம்பி, மைத்துனி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ரூ.1½ கோடி பணத்தை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    இது தொடர்பாக கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

    மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வேல்முருகன் மனைவி பூர்ணிமா மற்றும் இன்னொரு பெண்ணான வினோதா ஆகியோரும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
    புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை பெரியபாலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் பெரியபாலம் பகுதியில் உள்ள தனது மளிகை கடையில் புகையிலை பொருட்களை வைத்து விற்ற குளித்தலை வைசியாள் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 48) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    கம்பைநல்லூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொங்கரப்பட்டியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற பழனிசாமி (வயது 49), ஜக்குப்பட்டியை வெங்கடேசன்(50), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    மொரப்பூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    மொரப்பூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது அண்ணல் நகரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற வேலு (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று நவலையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றதாக சுமேஷ்( 39) என்பவரை கம்பைநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
    வாணியம்பாடியில் கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகரில் பல இடங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் வழிகாட்டுதலின்படி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் போலீசார் கலந்திரா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் ராணி என்பவரின் வீட்டின் பின்புறம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராணியை (வயது 50) கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    குளித்தலை அருகே மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை சேர்ந்தவர் பானுமதி (வயது 60). இவரது பேத்தி மற்றும் அவரது உறவினரது மகளும் ஆகிய 2 சிறுமிகளும் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (40) அரிவாளை காட்டி சிறுமிகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கேட்ட பானுமதியை அவர் தகாதவார்த்தைகளால் திட்டி, தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குளித்தலை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்துள்ளனர்.
    ராசிபுரம் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம் டவுன் கமலம் மண்டபம் அருகில் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தவர் இனாய்துல்லா (வயது 50). இவர் தனது ஆம்னி வேனில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக எடுத்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்காய வியாபாரி விஜயகுமார் (49) என்பவரிடம் இருந்து குட்கா வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து விஜயகுமாரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 35 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    மத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி போலீசார் பஸ் நிலையம், கொடமாண்டப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாக வேல்முருகன் (வயது 44), பெரியசாமி (50) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ×