search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    • பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.
    • ரூ.2 லட்சம் மற்றும் ஆர்.சி. புக் காணாமல் போனது

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்(வயது 30). இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.இவர் கடந்த மாதம் ஜூலை29ந் தேதி வெள்ளி கிழமை வழக்கம் போல் காலை 10 மணிக்கு பைனான்சைத்திறந்து, மாலை 4 மணி வரை இருந்துவிட்டு, வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு 6 மணிக்கு மேல் வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் சி புக் காணாமல் போனது தெரிய வந்தது, உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை,

    இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றினர். பின்னர் சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி இந்த மாதம் 25ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தாராபுரம் கிளை சிறையில் சந்தோஷ் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.

    • துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • இராமாயண சொற்பொழிவு நடைபெற்றது .

    வெள்ளகோவில்

    வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் பௌர்ணமியையொட்டி துர்க்கை அம்மனுக்கு நேற்று மாலை சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, அதைத்தொடர்ந்து இராமாயண சொற்பொழிவு நடைபெற்றது .விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 1லட்சத்து 10 ஆயிரத்து 542 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • 187 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 187 விவசாயிகள் கலந்து கொண்டு 1லட்சத்து 10 ஆயிரத்து 542 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 13 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.71.99க்கும், குறைந்தபட்சம் ரூ.58.69க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.74லட்சத்து 97ஆயிரத்து 597க்கு வணிகம் நடைபெற்றது.

    விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை புதன்கிழமை காலை 6 மணி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம் என வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 80 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.10 முதல் 20 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 80 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.10 முதல் 14 வரைக்கும், மரம் முருங்கை ரூ.10 முதல் 12 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.17 முதல் 20 வரைக்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார். வரக்கூடிய வாரங்களில் முருங்கைக்காய் விலை இன்னும் கூட வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், கண்ணபுரம் மாரியம்மன், எல்.கே.சி நகர், புற்றுக்கண் நாகாத்தாள், மயில்ரங்கம் திருமலை அம்மன், மாரியம்மன், மஞ்சள் மாதா பகவதி அம்மன், உத்தமபாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.ஆடிவெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு வகைகள், இரும்பு சத்துள்ள உணவு, சத்தான காய்கறிகள் போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
    • பேரணியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய மேற்கு நடுநிலைப்பள்ளியில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது, அதை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது, இந்த விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு வகைகள், இரும்பு சத்துள்ள உணவு வகைகள். சத்தான காய்கறிகள் போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

    இந்த பேரணியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துராம லட்சுமி, மேற்பார்வையாளர் லட்சுமி , உதவியாளர் யோக பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கீழே விழுந்த பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பழனிசாமி உயிரிழந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி என்ற இடத்தில் நேற்று முன்தினம் 1ந்தேதி தேதி அன்று திங்கட்கிழமை காலை லக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (77) என்பவர் மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த முத்தூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வேன் ஒன்று பழனிச்சாமி ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்த பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்று முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 84.60க்கும், குறைந்தபட்சம் ரூ.69 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்,இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை.

    திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 138 விவசாயிகள் கலந்து கொண்டு 70 ஆயிரத்து 627 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 12வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 84.60க்கும், குறைந்தபட்சம் ரூ.69 க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று முன் தினம் மொத்த ரூ.54லட்சத்து 66ஆயிரத்து 61க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • கோழிக்கழிவுகளை போட்ட நபரை பிடித்து வெள்ளகோவில் நகராட்சி தலைவிடம் ஒப்படைத்தனர்.
    • நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பலமுறை அறிவிக்கப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    நேற்று முன்தினம் 2 ந்தேதி செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளகோவில் கோவை ரோட்டில் சோழா ஓட்டல் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வரும் நிர்வாகத்தினர், கோழி கழிவுகளை குமாரவலசு என்ற பகுதியில் போட்டுள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் கோழிக்கழிவுகளை போட்ட நபரை பிடித்து வெள்ளகோவில் நகராட்சி தலைவி மு. கனியரசியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் எஸ்.சரவணன் கோழிக்கழிவு கொட்டிய சோழா ஓட்டல் நிர்வாகத்திடம் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு ஹோட்டல் திறக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

    வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் சாலையோரங்களில் யாரேனும் குப்பைகளை கொட்டினால் திடக்கழிவு மேலாண்மை விதியின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகர மன்ற தலைவி மு. கனியரசி மற்றும் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் தெரிவித்துள்ளனர்.

    • வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
    • 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆடி பண்டிகையொட்டி சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க 4 ந்தேதி நாளை வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறாது, அடுத்த வாரம் 11ந் தேதி வியாழக்கிழமை வழக்கம் போல் ஏலம் நடைபெறும் என வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது.
    • தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (50) இவரது மனைவி செல்வராணி வயது (45) இருவரும் கூலித் தொழிலாளி. கடந்த மாதம் 27 ந்தேதி புதன் கிழமை காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிறகு வேலை முடிந்து 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் சம்பவத்தன்று சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது தெரியவந்தது இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில், காங்கேயம் போலீஸ் துணை சூப்பரெண்டு பார்த்திபன் மேற்பார்வையில், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார் மற்றும் காவலர்கள் கோபிநாத், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.நேற்று திங்கட்கிழமை காலையில் வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது இந்த இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருக்காவூர்,தெற்கு தெரு குமரன் ( எ ) முத்துக்குமாரன் (27) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (22) என்பது தெரிய வந்தது.

    அவர்களை கைது அவர்கள் ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மற்றும் தங்க நகைகள், செல்போன்களை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குமரன் ( எ) முத்துக்குமரன் மற்ற சிலருடன் சேர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

    • 80 விவசாயிகள் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சென்னை, கோவை, பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய் வியாபாரி அனுப்பி வைத்தனார்.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 80 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.12 முதல் 15 வரைக்கும், மரம் முருங்கை ரூ.10 முதல் 12 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.16 முதல் 20 வரைக்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    ×