search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருங்கைக்காய்"

    • ஒரு கிலோ முருங்கை ரூ.6 முதல் 13 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
    • 100 விவசாயிகள் 45 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 100 விவசாயிகள் 45 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.10க்கும், மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.12 முதல் 13வரைக்கும் கொள்முதல் செய்தனர்,

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 110 விவசாயிகள் 50 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • முருங்கை ரூ.5 முதல் 12 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறு தோறும் முரு ங்கைக்காய் கொள் முதல் நிலையம் செயல் பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்மு தல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கை க்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று 110 விவசாயிகள் 50 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியா பாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடி முருங்கை ரூ.10க்கும், மரம் முருங்கை ரூ.5முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.10 முதல் 12 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்ட ன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெ ட்டுகளுக்கு அனுப்பி வைத்த னர்,இத்தகவலை முருங்கை க்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். நேற்று 85 விவசாயிகள் 25 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.25 முதல் 30வரைக்கும், மரம் முருங்கை ரூ.25முதல் 30வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.45 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர், இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது.
    • வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை.

    கோவை,

    கோவை உக்கடம் பகுதியில் டி.கே.மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், வெங்காயம், உருளைகிழக்கு போன்றவைகள் வருகின்றன.

    இங்கு வரும் காய்கறிகளை கோவை மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள்.

    அதே போல் கோவை மாநகர சுற்றுவட்டார மக்களும் காய்கறிகள் விலை கடைகளை காட்டிலும் குறைவாக உள்ளதால் இந்த மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.

    இதனிடையே இங்கு விற்பனைக்கு வந்த காய்கறிகளில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை. மக்களும் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் கூறும்போது, டி.கே. மார்க்கெட் மற்றும் கோவையின் இதர மார்க்கெ ட்டுகளிலும் முருங்கை க்காய் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மொத்த விற்பனை விலையில் கிலோ ஒன்றுக்கு முருங்கை ரூ.80 வரை விற்பனை செய்ய ப்பட்டது. இதனால் முருங்கை க்காயை வாங்க வந்த முருங்கை பிரியர்கள் அதிர்ச்சி யடைந்தனர். முருங்கைக்கு அடுத்து வெண்டை க்காய் ரூ.50க்கு விற்பனை செய்ய ப்பட்டது என்றார்.

    • 3 டன் முருங்கைக்காய்கள் விற்பனைக்காக வந்திருந்தது.
    • வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    மூலனூர்:

    மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம். இந்த சந்தைக்கு மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக் காய்களை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக் காய்களை வாங்கி செல்கின்றனர்.

    பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். வடமாநில வியாபாரிகள் முருங்கைக்காய் கொள்முதல் செய்வதை தொடங்கியுள்ளதால் மூலனூர் பகுதிகளில் தற்போது முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக விலை உயரத் தொடங்கியுள்ளது.

    கடந்த வாரம் ரூ.70- க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இந்த வாரம் உயர்ந்தது. செடி முருங்கை, மரம் முருங்கை, கரு முருங்கை என அனைத்தும் சராசரியாக ரூ.80-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விலை உயர தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் மூலனூர் வாரச்சந்தைக்கு சுமார் 3 டன் முருங்கைக்காய்கள் விற்பனைக்காக வந்திருந்தது. அதன் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும்.

    • கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • மர முருங்கை ,செடி முருங்கை,கரும்பு முருங்கை அனைத்து ரகமும் கிலோ 110 ரூபாய்க்கு விலைபோனது.

    வெள்ளகோவில் : 

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் முருங்கை மார்க்கெட்டுக்கு கடந்த வாரம் குறைந்த அளவே வரத்து வந்த நிலையில் கிலோ ரூ.90 க்கு விற்பனையானது. இந்நிலையில் இந்த வாரம் 300 கிலோ வரத்து வந்திருந்ததால் விலை ரூ.110க்கு உயர்ந்து விற்பனையானது‌.

    திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில் ,மூலனூர், தாராபுரம், முத்தூர் ,குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் முருங்கை ஆண்டு பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தொடர் மழை மற்றும் காற்று காரணமாக பூக்கள் உதிர்வால் முருங்கை இந்த வாரத்தில் வரத்து குறைவு காரணமாக வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்தில் முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு 110 ரூபாய்க்கு விற்பனையானது.

    வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கைக் காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். மேலும் அருகில் உள்ள ஒட்டன்சத்திரம் மார்கெட்டுக்கும் விவசாயிகள் முருங்கையை விற்பனைக்கு கொண்டு செல்வர்.இந்த வாரம் மர முருங்கை ,செடி முருங்கை,கரும்பு முருங்கை அனைத்து ரகமும் கிலோ 110 ரூபாய்க்கு விலைபோனது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், முருங்கைக்கு நிலையற்ற விலையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த பகுதியில் அதிக முருங்கை சாகுபடி நடைபெற்று வருவதால், இங்கு முருங்கை பொருட்களை பவுடராக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டாக உள்ளது. தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஒரு சீரான விலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கும். தற்போது பூக்கள் உதிர்வால் விளைச்சல் குறைந்த நிலையில் இருப்பதால் விலை உயர்ந்து விற்பனையானது எனக்கூறினர்.

    • வெயில் அதிகம் இல்லாததால் பூச்சி தாக்குதல் அதிகரித்தது.
    • நல்ல விலை கிடைத்த போதிலும் விளைச்சல் இல்லாததால் பயனடைய முடியவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    திருப்பூர் :

    கடந்த ஆடி மாதத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முருங்கை மரத்தில் இருந்த பெரும்பாலான பூக்கள் உதிர்ந்து விட்டன. வெயில் அதிகம் இல்லாததால் பூச்சி தாக்குதல் அதிகரித்தது. அவை இலை, கொழுந்து, பூக்கள் என அனைத்தையும் சாப்பிட்டு விட்டன.

    மருந்துகளை தெளித்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த இயலவில்லை. மரங்கள் வறண்டு போனது போல மாறிவிட்டது. கணிசமான விவசாயிகள் அவற்றை முற்றிலும் வெட்டி அகற்றி விட்டனர். சபரிமலை சீசன் என்பதால் பலரும் சைவ உணவுக்கு மாறிவிட்டனர். கார்த்திகை மாதத்தில் முகூர்த்தங்கள் அதிகம்.

    இதனால் முருங்கைக்காய் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் முருங்கைக் காய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உள்ளூர் விளைச்சல் முற்றிலும் நின்று விட்டது. நல்ல விலை கிடைத்த போதிலும் விளைச்சல் இல்லாததால் பயனடைய முடியவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    • உடன்குடி வட்டாரத்தில் உள்ள செம்மணல் பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது.
    • நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட உதிரமாடன்குடியிருப்பு, மெய்யூர், கந்தபுரம், நேசபுரம். தாங்கையூர் போன்ற செம்மணல் பகுதியில் தற்போது முழு மூச்சுடன் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பனை, தென்னை மரத்தோட்டங்களில் முருங்கையை ஊடுபயிராக விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் மழை காலம் என்பதால் முதிர்ந்த முருங்கையில் உள்ள கிளைகளை வெட்டி விட்டு வளர்த்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் மரங்களின் கிளைகளை வெட்டி விட்டனர். பல இடங்களில் புதியதாக முருங்கை கம்புகளை நடவு செய்துள்ளனர்.

    • குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • விலை உயர்வு பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி, தேனி, கரூர், சிதம்பரம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. 

    தமிழகத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் தற்போது உள்ள பனிப்பொழிவு காரணமாக முருங்கைக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து பெருமளவு குறைந்தது.

    தினசரி 10 வாகனங்கள் மூலம் 80 டன் அளவுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு வருவது வழக்கம் ஆனால் கடந்த சில நாட்களாக 10 டன் அளவு முருங்கைக்காய் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

    இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தற்போது கோயம்பேடுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்கப்பட்ட நிலையில் வரத்து குறைவு காரணமாக விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.150-க்கும், காய்கறி மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200 வரையிலும் விற்கப்படுகிறது.

    மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரை விலை எகிறி உள்ளது. இந்த விலை உச்சத்தால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, முருங்கைக்காய் சீசன் முடிந்து விட்டதால் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இதனால் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கோயம்பேடுக்கு தற்போது அதிக அளவு முருங்கைக்காய் வருகிறது. இந்த விலை உயர்வு பொங்கல் பண்டிகை வரை நீடிக்கும் என்றார்.

    • 25 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மழையின் காரணமாக இருக்கக்கூடிய காய்கள் கருத்து விட்டதால் விலை குறைந்து விட்டது.

    வெள்ளகோவில் : 

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 25 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.40 முதல் 45வரைக்கும், மரம் முருங்கை ரூ.45முதல் 50வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.50முதல் 55வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். மழையின் காரணமாக முருங்கைகாய் வரத்து குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி மழையின் காரணமாக இருக்கக்கூடிய காய்கள் கருத்து விட்டதால் விலை குறைந்து விட்டது. அடுத்த வாரத்தில் இருந்து வட மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வரத் தொடங்கிவிடும் என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • 30 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ முருங்கை ரூ.30 முதல் 70வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 30 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.30 முதல் 35வரைக்கும், மரம் முருங்கை ரூ.30முதல் 35 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.65முதல் 70வரைக்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • மரம் முருங்கை ரூ.20முதல் 25 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.65முதல் 70வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    மடத்துக்குளம்,அக்.31-

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம்-இந்திராணி தம்பதியரின் மகள் பட்டீஸ்வரி (வயது 19). சற்று காது கேட்கும் திறனை இழந்த மாற்றுத்திறனாளியான இவர் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிப்பை முடித்து, மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினார். இதில் 720க்கு 117 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    மாற்றுத்திறனாளி மாணவி

    மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வாகி உள்ளார். ஆனால் படிப்பதற்கு போதிய பண வசதி இல்லாததால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். பட்டீஸ்வரியின் தந்தை கூலி வேலையும், தாய் தூய்மை பணியாளராகவும் பணியாற்றி வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இல்லை. இதனால் அரசு தனக்கு மருத்துவ படிப்பு படிக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பட்டீஸ்வரி மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனக்கு சிறு வயது முதலே விருப்பம். இதனால் சிறுவயதில் இருந்தே நன்றாக படித்து வந்தேன். 10-ம்வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்ணும், பிளஸ்-2 தேர்வில் 512 மதிப்பெண்ணும் பெற்றேன். மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினேன்.கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்றேன். இதனால் எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. 2-வது முறையாக 2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். இதில் 117 மதிப்பெண்கள் பெற்றேன். இதன் மூலம் எனக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் போதிய பண வசதியில்லாததால் மருத்துவம் படிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

    ஆசிரியர்கள் உதவி

    எனது தந்தை தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார். தாய் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். அண்ணன் காளீஸ்வரன் காட்டுவேலைக்கு சென்று வருகிறார். இதன் மூலம் எங்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. எனது தாய்க்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்க செலவு ஆகிறது. இதனால் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும் என்னால் படிக்க முடியாத நிலை உள்ளது.

    மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு கூட எங்களது குடும்பத்திடம் பணம் கிடையாது. நான் படித்த மடத்துக்குளம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் வசூலித்து தந்தார்கள். மருத்துவம் படிக்க புத்தகம், தங்குவதற்கான விடுதி கட்டணம் என நிறைய செலவாகும். அந்த அளவுக்கு எங்களால் பணத்தை புரட்ட முடியவில்ைல. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.

    தாய்க்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால் நான்தான் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. முதலில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் ஒரு வருடம் வீட்டில் இருந்தவாறே அடுத்த நீட் தேர்வுக்கு தயாரானேன். மாநில பாட புத்தகங்களை வைத்தே படித்தேன். யூ-டியூப் மூலம் ஆசிரியர்கள் கற்றுகொடுத்தவற்றையும் பார்த்து தேர்வுக்கு தயாரானேன். தாய்க்கு உடல் நிலை பாதிப்பால் வீட்டில் உள்ள ஆடு-மாடுகளை நான்தான் மேய்த்து விட்டு வருகிறேன். அதனை பராமரிக்கவும் செய்கிறேன். சமையல் வேலைகளையும் செய்கிறேன். தம்பி யுவபாரதி(10) 5-ம்வகுப்பு படிக்கிறான். அவனையும் கவனிக்க வேண்டியது உள்ளது.

    வீட்டுவேலைகள்

    வீட்டு வேலைகளையும் பார்த்து விட்டு நீட் தேர்வுக்கு தயார் ஆனேன்.தினமும் அதிகாலை 4மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு வீட்டு வேலைகள் முடிந்ததும் 8-30மணி முதல் 11-30 மணி வரை படிப்பேன்.

    எனக்கு காது லேசாக கேட்காது. இதனால் என்னை சிலர் ஏளனமாக கூட பேசுவார்கள். அதையெல்லாம் மனதில் வைக்காமல் தேர்வுக்கு தயாரானேன். தற்போதைய செலவுக்காக வீட்டில் உள்ள ஆடு, மாடுகள் சிலவற்றை விற்று விட்டோம். மீதி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறேன். தற்போது பலர் உதவி செய்து வருகிறார்கள். மடத்துக்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் , வேடப்பட்டி பள்ளி ஆசிரியர்கள் , வேடப்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் நிதி அளித்துள்ளார்கள். இருப்பினும் அரசு எனது மருத்துவ படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×