search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது"

    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள த.வா.க தலைவர் வேல்முருகன் மீது நெய்வேலி காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #VelMurugan
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடந்த 26-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இரண்டு நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சிறுநீரக கோளாறும் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட த.வா.க தலைவர் வேல்முருகன், சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் வேல்முருகன் நேற்று காலை புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு உண்மை நிலையை கண்டு அறிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து சாப்பிட மறுத்த வேல்முருகன் இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர் அறிவித்திருந்த நிலையில், திடீரென அவர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார்.

    இதனை அடுத்து, அவரை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
    கோவாவில், காதலனுடன் கடற்கரைக்கு சென்ற இளம்பெண்ணை கத்திமுனையில் கற்பழித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பனாஜி:

    தெற்கு கோவாவில் உள்ள செர்னாபடிம் கடற்கரைக்கு 20 வயது இளம்பெண் தனது காதலருடன் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் கத்தி முனையில் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அந்த இளம்பெண்ணை 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர். இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து காதல் ஜோடி கொல்வா போலீசில் புகார் அளித்தனர். அந்த இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சீவ் தனஞ்செய் பால் (23), ராம் சந்தோஷ் பரியா (19), விஷ்வாஸ் மக்ரானா (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது இளம்பெண்ணை கற்பழித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
    காஷ்மீரில் இளைஞரை ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்று பரபரப்பை ஏற்படுத்திய ராணுவ மேஜர், ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைய முயன்று ரகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் சென்றுள்ளார். ஆனால், அந்த பெண் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், ஓட்டல் நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை அடுத்து, கோகோய் மற்றும் அவரது டிரைவர் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.

    பின்னர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், கோகோயை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
    மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், சிறுவாலையை அடுத்துள்ளது செல்லகவுண்டன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன். இவரது மனைவி முத்து காமாட்சி (வயது 27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று அந்த சிறுமியின் தாத்தா முருகேசன் (50) அங்கு வந்து சிறுமியிடம் பிஸ்கட் வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார். அந்த சிறுமியும் அருகே உள்ள கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி வந்துள்ளது.

    முருகேசன் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

    இதனால் முத்துகாமாட்சி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது சிறுமியை, முருகேசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் தாயார் முத்துகாமாட்சி சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முருகேசன் மீது (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
    திருச்சி விமான நிலையத்தில் மதிமுக - நாம் தமிழர்கள் கட்சியினர் மோதிய விவகாரத்தில் முன் ஜாமீன் கோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வரும் 30-ம் தேதி வரை அவரை கைது செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. #Seeman
    மதுரை:

    கடந்த வாரம் திருச்சி விமான நிலையத்தில் வைகோ மற்றும் சீமான் வருகைக்காக காத்திருந்த மதிமுக, நாம் தமிழர்கள் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில், பிரச்சனையை தூண்டி விட்டதாக சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை அடுத்து, அவர் முன் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, மே 30 வரை சீமானை கைது செய்ய போலீசாருக்கு தடை விதித்தனர். மேலும், தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமான பேசக்கூடாது என சீமானுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். #Seeman
    தர்மபுரி நகரில் உள்ள கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் போதை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆலோசனையின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரம், கிருஷ்ணவேணி, கோபி மற்றும் போலீசார் தர்மபுரி நகரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குமார் (வயது 54), மணிவண்ணன் (42), ராஜேந்திரன் (58), சண்முகம் (40), ராமமூர்த்தி (42), ராஜேஸ்வரி (44), கலைவாணி (55) உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ரமேஷ்குமார், லாலாம் சவுதிரி ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
    தடை செய்யப்பட்டிருந்த களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் நுழைந்த வக்கீல் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேல் கோதையாறு சரகத்தில் உள்ள சின்ன குட்டியாறு அணை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் தடையை மீறி சிலர் அப்பகுதிக்கு சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் மேல்கோதையாறு வனசரகர் (பொறுப்பு) புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் நுழைந்த வீ.கே.புரத்தை சேர்ந்த மரிய அந்தோணி (வயது 57) அவரது உறவினர் சென்னையை சேர்ந்த வக்கீல் பிரின்ஸ் (30) உள்பட 12 பேரை கைது செய்தனர். அதனைதொடர்ந்து தலைமை வன பாதுகாவலரும், களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனருமான (பொறுப்பு) டிங்கர் குமார் உத்தரவின் பேரில், களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின் படி 12 பேருக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் அபராத தொகையை செலுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல அப்பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்த வன ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புலிகள் காப்பகத்தில் தடைச் செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை ஐதராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது. #IPLbetting
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இரண்டு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், இணையதளத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து ஐந்து செல்போனகள், ஒரு டி.வி மற்றும் ரூ.84,350 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் நான்கு பேர் மீதும் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #IPLbetting
    புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மது பாட்டில்கள் கடத்தி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் விழுப்புரம் கம்பன் நகரில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையிலிருந்து வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை செய்தனர்.

    அந்த காரில் 170 மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பாபு(வயது40), மற்றும் அவரது உறவினர் ராஜ்குமார்(55) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்களில் ராஜ்குமார் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். சென்னையில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக பாபுவும், ராஜ்குமாரும் புதுவையிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி கொண்டு சென்னைக்கு செல்லும் போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். காரும், 170 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுவிலக்கு சோதனை சாவடியில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரே புதுவையிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்திரமேரூரில், வாலிபரை கடத்தி சென்று ரூ.15 லட்சம் கேட்டு தந்தையை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரை அடுத்த சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). கடந்த 29-ந் தேதி ராஜேஷ் நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் முனியப்பனின் செல்போனுக்கு மர்ம வாலிபர் பேசினார். அப்போது ராஜேசை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க ரூ. 15 லட்சம் தர வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த முனியப்பன் இது குறித்து உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே கடத்தல் கும்பல் ராஜேசை திருவண்ணாமலையில் உள்ள காட்டுப்பகுதியில் சிறை வைத்து இருந்தனர். அவரிடம் இருந்த வங்கி டெபிட் கார்டை பறித்த கும்பல் அதன் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு ராஜேசை விடுவித்து விட்டனர்.

    இதைத் தொடர்ந்து அவர் அப்பகுதி மக்களிடம் பணம் பெற்று அரசு பஸ் மூலம் உத்திரமேரூர் வந்து சேர்ந்தார். இதுபற்றி உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராஜேசிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் கடத்தலில் ஈடுபட்டது சின்னமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வீரமுத்து, ஒலையூரை சேர்ந்த மகரஜோதி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் கூட்டாளிகள் மல்லிகாபுரம் சுதீஷ், நெல்வாய் பிரகாஷ், சின்ன மாங்குளம் புருசோத்தமன் ஆகிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
    வேலூர் அருகே பயிற்சி டி.எஸ்.பி. மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் பயிற்சி டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மற்றும் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் இனாயத்பாஷா ஆகிய 2 பேரும் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூர் அடுத்த அருணகிரி பேட்டை கொல்லை மேடு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த கார், பயிற்சி டி.எஸ்.பி. சென்ற பைக் மீது மோதுவது போல் வேகமாக சென்றது.

    இதுகுறித்த புகாரின் பேரில் காரை ஓட்டிய அருணகிரிபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 32) மற்றும் அவருடன் வந்த சுமதி (37) என்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×