search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • 10 நாள்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி அணில்குமார் சிங்கால் திருமலையில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது: வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜனவரி 1ந் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். 10 நாட்களுக்கு தொடர்ந்து டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் எதிரே விஷ்ணுநிவாசம், ரெயில் நிலையம் பின்புறம் உள்ள சத்திரங்கள், பேருந்து நிலையம் எதிரே சீனிவாசம் வளாகம், இந்திரா மைதானம், ஜீவகோனா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி, பைராகிப்பட்டேடாவில் ராமநாயுடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர். பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி ராமச்சந்திர புஷ்கரணி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஜனவரி 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
    • நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதை முன்னிட்டு 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால், 27-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    எனவே இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • ஜனவரி 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 3-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கின்றன. அதையொட்டி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அலிபிரியில் உள்ள பூதேவி வளாகம், இந்திரா மைதானம் பகுதியில் உள்ள துடா அலுவலகம், ராமச்சந்திரா புஷ்கரணி, ஜீவகோணா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி வளாகம், விஷ்ணு நிவாசம், சீனிவாசம் ஆகிய தங்கும் விடுதிகள், பைராகிபட்டிடையில் உள்ள மகாத்மா காந்தி பள்ளிக்கூட வளாகம், திருப்பதி சேஷாத்ரி நகர் ஜில்லா பரிஷத் பள்ளி வளாகம் (எம்.ஆர். பள்ளி போலீஸ் நிலையம் பின்பக்கம்), திருப்பதி கோவிந்தராஜசாமி சத்திரங்கள் மற்றும் திருமலையில் உள்ள கவுஸ்தூபம் தங்கும் விடுதி வளாகம் ஆகிய இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன.

    பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட இருக்கும் கவுண்ட்டர்களை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் (பொறுப்பு) அனில்குமார் சிங்கால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதலில் அவர் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டோக்கன் வழங்கும் மையம், தரிசன டிக்கெட்டுகள் வழங்கும் கவுண்ட்டர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதி ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் வைகுண்ட துவார தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டிகள் வினியோகம் செய்ய திருப்பதியில் மட்டும் 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்களுக்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

    கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க போலீசாரும், தேவஸ்தான அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிற வைணவ கோவில்களில் நடக்க உள்ள ஏகாதசி விழாவை முனனிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், கலெக்டர் மற்றும் பிற துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் நடந்தது.

    கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் (பொறுப்பு) பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி, தேவஸ்தான பாதுகாப்புத்துறை அதிகாரி நரசிம்மகிஷோர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குலசேகர், திருப்பதி கிழக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிகிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    • நாளை விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி 11 நாட்களுக்கு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகைகள் 2.20 லட்சம் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதேபோல் ஜனவரி 2-ந் தேதி முதல் முதல் 11 ஆம் தேதி வரை தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதியில் 9 இடங்களிலும், திருமலையில் தேவஸ்தான நிர்வாக கட்டிடத்திலும் டைம் ஸ்லாட் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம், ராமா நாயுடு பள்ளி, ராமச்சந்திர புஷ்கரணி, எம்.ஆர். பள்ளி போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளி மற்றும் ஜீவகோணா உள்ளிட்ட 9 இடங்களில் இலவச டைம் ஸ்லாட் தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி என்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

    தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்காததால் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வைகுண்ட ஏகாதசி ஒட்டி நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் சுமார் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வைகுண்ட ஏகாதசி தினத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அசோக் சிங்கால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று பக்தர்களின் தரிசன வரிசையை ஆய்வு செய்தனர்.

    அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் தரிசனத்திற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    திருப்பதியில் நேற்று 70,373 பேர் தரிசனம் செய்தனர். 32,954 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.5.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • சொர்க்கவாசல் தரிசனத்தில் 10 நாட்கள் அனுமதி.

    திருப்பதி :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

    இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    • ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள்.
    • 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை ரூ.1029 கோடி வசூல் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம்  ஏற்படும்  என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

    2021ல் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கி வேகமெடுத்தது. இதனால் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்தபோது கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்க துவங்கினர். தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தினமும் கோவிலில் ஆர்வமாக குவிந்து வருகின்றனர். குடும்பத்துடன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பணத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மாதங்களில் ரூ.1000 கோடியை கடந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை ரூ.1029 கோடி வசூல் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • சொர்க்கவாசல் தரிசனத்தில் 10 நாட்கள் அனுமதி.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    அன்று காலை சுப்ரபாத சேவை முடிந்த பின்னர் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று 20,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

    இந்த நிலையில் ஜனவரி 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    • 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.
    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் சங்கராந்தி, தீபாவளி ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 27-ந் தேதி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மூலவர் மீது பட்டு துணியால் மூடப்படும்.

    கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, வகுலமாதா, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் பச்சை கற்பூரம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும்.

    கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. அன்று காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.

    திருப்பதியில் நேற்று 63,145 பேர் தரிசனம் செய்தனர். 22,411 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி மாதம் 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஏழுமலையானை தரிசனம் செய்தால், துன்பங்கள் நீங்கி, பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும் என்பதால் திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    தற்போது ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் என தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி தொடங்கும் 2 ந்தேதியில் இருந்து 11-ந் தேதி வரை தினமும் 2000 பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஸ்ரீ வாணி டிரஸ்ட் டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. அதன்படி ஸ்ரீ வாணி டிரஸ்ட்க்கு ரூ.10 ஆயிரமும், தரிசனத்திற்கு ரூ.300 என ரூ.10,300 செலுத்தி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பக்தர்கள் பதிவு செய்தனர்.

    இந்த டிக்கெட் பெற்ற பாக்தர்கள் மகா லகு தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 68,469 பேர் தரிசனம் செய்தனர். 27,025 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • 22-ந்தேதி தொடங்கி 2023 ஜனவரி 15-ந்தேதி வரை 25 நாட்கள் நடக்கிறது.
    • 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் ஆத்யாயன உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆத்யாயன உற்சவம் வருகிற 22-ந்தேதி தொடங்கி 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி வரை 25 நாட்கள் நடக்கிறது. இந்தத் திருவிழா வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்கள் முன்பு தொடங்கி நடக்கும் விழாவாகும்.

    நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் எனப்படும் 12 ஆழ்வார்கள் எழுதிய 4 ஆயிரம் பாசுரங்கள் இந்த 25 நாட்களிலும் வைஷ்ணவர்களால் தினமும் ஓதப்படுவது இந்த விழாவின் தனிச்சிறப்பாகும்.

    25 நாட்கள் நடக்கும் விழாவில் முதல் 11 நாட்கள், 'பகல் பத்து' என்றும், அடுத்த 10 நாட்கள், 'ராப்பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. 22-வது நாள் கண்ணிநுண் சிறுத்தாம்பு, 23-வது நாள் ராமானுஜ நூற்றந்தாதி, 24-வது நாள் வராஹ சாமி சாத்துமுறை, 25-வது நாள் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது.
    • பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் 16 மற்றும் 31-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது.

    பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
    • ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும்.

    தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏழுமலையான் கோவில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை நேற்று கூட்டம் நடந்தது.

    காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்றைய தினம் கோவில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி ஆகியவை குறித்து ஆலோசனை நடந்தது.

    வைகுண்ட ஏகாதசி அன்று கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடி நீர் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

    வரிசையாக பக்தர்கள் செல்ல போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாதாரண பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது வி.ஐ.பி.கள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது.

    அவர்களை எந்தவொரு தொந்தரவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை சொர்க்க வாசல் 10 நாட்கள் திறந்திருக்கும்.

    வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சுப்ரபாத சேவை முடிந்தபின் கோவிலின் சொர்க்கவாசல் திறக்கப்படும்.ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நீதிபதிகள், மத்திய மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும்.

    அதனை தொடர்ந்து சாதாரண பக்தர்கள் வரிசையில் வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×