search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • ஒவ்வொரு நாளும் பீடாதிபதிகள் உபன்யாசங்கள் செய்வார்கள்.
    • அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

    திருமலையில் அனுமன் ஜெயந்தி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை 5 நாட்கள் பிரமாண்டமாக நடக்கிறது. மேலும் 16-ந்தேதி தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சம்பூர்ண சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடக்கிறது.

    அதையொட்டி திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஆகாச கங்கை, ஜபாலி தீர்த்தம், திருமலை கோவில் எதிரில் உள்ள நாத நீராஞ்சன மண்டபம், தர்மகிரி வேத விஞ்ஞான பீடம், பேடி ஆஞ்சநேயர் கோவில் ஆகிய 5 இடங்களில் 5 நாட்கள் அனுமன் ஜெயந்தி விழா நடக்க உள்ளது.

    ஒவ்வொரு நாளும் பீடாதிபதிகள் உபன்யாசங்கள் செய்வார்கள். திருமலையில் உள்ள வேத விஞ்ஞான பீடத்தில் 16-ந்தேதி காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை 18 மணி நேரம் அகண்ட பாராயண யாகத்தை 67 அறிஞர்கள் நடத்துகிறார்கள்.

    அனைத்து நிகழ்ச்சிகளும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கேற்கலாம்.

    ஆஞ்சநேயரின் பிறந்த இடத்தில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் கருத்துத் தெரிவிக்கலாம். புராணங்கள், வரலாற்றுத் தகவல்கள், ஆதாரங்களுடன் அஞ்சனாத்ரி அஞ்சநேயரின் பிறந்த இடம் என்பதை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது.

    இது பற்றிய விவரங்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பல்வேறு மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், அதற்கு பதில் அளிக்க திருப்பதி தேவஸ்தான பண்டிதர்கள் குழு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, பக்தி சேனல் அதிகாரி சண்முகக்குமார், வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணை வேந்தர் ராணிசதாசிவமூர்த்தி, அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் விபீஷண சர்மா, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி ராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாதம் பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 42.64 லட்சம். தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 9.03 லட்சம் ஆகும்.

    நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 853 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக்கட்டாக்களில் 33 ஆயிரத்து 381 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருக்கல்யாண உற்சவம் ஜூன் 4-ந் தேதி தொடங்கி ஜூலை 23-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.
    • திருக்கல்யாணம் அமெரிக்கா, கனடா நாடுகளில் முக்கிய 14 நகரங்களில் நடத்தப்படுகிறது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் திருக்கல்யாணம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வெளிநாட்டு பக்தர்கள் திருக்கல்யாண உற்சவ தரிசனம் செய்யும் வகையில் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் திருக்கல்யாணம் நடந்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த ஆண்டு திருக்கல்யாண உற்சவம் ஜூன் மாதம் 4-ந் தேதி தொடங்கி ஜூலை 23-ந் தேதி வரை அமெரிக்கா, கனடா நாடுகளில் முக்கிய 14 நகரங்களில் நடத்தப்படுகிறது.

    திருக்கல்யாணம் உற்சவம் குறித்த சுவரொட்டிகளை முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி முன்னிலையில் தாடி பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டனர்.

    அமெரிக்கா, கனடாவில் திருக்கல்யாண உற்சவம் நடத்துவதை அந்தந்த மாநகர நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    கல்யாண உற்சவத்திற்கு தேவையான பூஜை பொருட்கள், பூக்கள், வேத பண்டிதர்களை நியமிப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 67,853 பேர் தரிசனம் செய்தனர். 33,381 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3. 19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இலவச தரிசனத்தில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • பவுர்ணமி அன்று இரவில் தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
    • நாளை இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருட சேவை நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் தங்கக் கருட வாகனத்தில் (கருட சேவை) உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) பவுர்ணமி கருடசேவை நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    • சாமி-தாயார் திருக்கல்யாணம் ஆகிய வைபவங்கள் கோலாகலமாக நடந்தன.
    • புது வஸ்திரம் அணிதல், ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலையப்பசாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தனர்.

    மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க நாராயணகிரி தோட்டத்தை அடைந்த உற்சவர்களுக்கு முதல் நாள் போலவே மாலைகள் மாற்றுதல், பூப்பந்தல் ஆடுதல், புது வஸ்திரம் அணிதல், ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    நிகழ்ச்சியில் சதுர்வேத பாராயணம், சவுராஷ்ட்ர ராகம், தேசிகா, மலஹரி, யமுனா கல்யாணி, ஆனந்த பைரவி நீலாம்பரி ராகங்கள், சாமி-தாயார் திருக்கல்யாணம் ஆகிய வைபவங்கள் கோலாகலமாக நடந்தன.

    மேலும் அன்னமாச்சாரியாரின் பக்தி கீர்த்தனைகள் பாடப்பட்டது. புகழ்பெற்ற ஹரிகத பாகவதர் வெங்கடேஸ்வரலு பத்மாவதி-சீனிவாசர் பரிணயம் குறித்த ஹரிகதா பாராயணம் செய்தார். 2-வது நாள் நிகழ்ச்சியையொட்டி நேற்று கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டன.

    • தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பியது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

    தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனைத்து அறைகளும் நிரம்பியது. அதற்கு பிறகு சுமார் 1 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர்.

    தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்க ளுக்கு குடிநீர், மோர், பால், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

    சிறிய குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

    திருப்பதி ரெயில் நிலையம் அருகே உள்ள வைகுண்டம் காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள சீனிவாசம், அலிபிரி ஆகிய இடங்களில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    இலவச தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரத்துக்கும் மேலாகிறது.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 82 ஆயிரத்து 582 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 43,526 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி மலையில் இதமான தட்ப வெப்ப நிலை நிலவியது. மலையில் ஜல்லென காற்று வீசியது.

    இதனால் பக்தர்கள் அதிகளவில் தங்கியுள்ளனர். அங்குள்ள தங்கும் அறைகள் நிரம்பியது.

    • 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி நடக்கிறது.
    • 5-ந்தேதி பவுர்ணமி கருட சேவை நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    மே 1-ந்தேதி சர்வ ஏகாதசி, பத்மாவதி பரிணயோற்சவம் நிறைவு, 4-ந்தேதி நரசிம்ம ஜெயந்தி. தரிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி, அனந்தாழ்வார் சாத்துமுறை, 5-ந்தேதி பவுர்ணமி கருட சேவை, 6-ந்தேதி அன்னமாச்சாரியார் ஜெயந்தி, 7-ந்தேதி பராசரபட்டர் வருட திருநட்சத்திரம், 14-அனுமன் ஜெயந்தி, 24-ந்தேதி நம்மாழ்வார் ஜெயந்தி உற்சவம் தொடக்கம், 28-ந்தேதி போக சீனிவாசமூர்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம், 30-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கின்றன.

    • 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • இன்று முதல் ஜூன்15-ந் தேதி வரை 24 மணி நேரமும் பணியில் இருக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஏற்கனவே ரூ.300 மற்றும் கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை உள்ளிட்ட பல்வேறுகட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதவிர திருப்பதியில் சீனிவாச காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் என 3 இடங்களில் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த டோக்கன்களை பெறுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

    இதனால் இலவச டோக்கன்களை பெறுவதற்கு சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 75,625 பேர் சாமி தரிசனம் செய்தனர். 37,027 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியன் காணிக்கை ரூ.3.21 கோடி வசூலானது.

    இலவச தரிசனத்தில் வைகுண்டம் கியு காம்ப்ளக்ஸ்சில் அறைகள் நிரம்பி வழிந்தன. இன்று காலை முதல் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது.

    கோடை விடுமுறையொட்டி பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் இன்று முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 24 மணி நேரமும் பணியில் இருக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • உற்சவர் மலையப்பசாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார்.
    • உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கில் எழுந்தருளினர்.

    திருமலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் கலைநயத்துடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அஷ்டலட்சுமி, தசாவதார மண்டபங்களில் நேற்று பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

    அதையொட்டி உற்சவர் மலையப்பசாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார். உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கில் எழுந்தருளினர். மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஏழுமலையான் கோவிலில் இருந்து உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு நான்கு மாடவீதிகள் வழியாக மாலை 5.30 மணியளவில் ஊர்வலமாக வந்து பரிணயோற்சவ மண்டபத்தை அடைந்தனர்.

    மண்டபத்தில் புதுமணத் தம்பதிகளான சாமி, தாயார்களை எதிர் எதிரே வைத்து மாலைகள், புது வஸ்திரங்களை அணிவித்து பரிணயோற்சவம் நடத்தப்பட்டது. அதன்பின் சாமிக்கு கொலு ஆஸ்தானம் மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது.

    பத்மாவதி பரிணயோற்சவ மண்டபம் ஆப்பிள், அன்னாசி, சோளக்கதிர்கள், ஆஸ்திரேலிய ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சாமந்தி, வெட்டி வேர், வாடாமல்லி, நான்கு வண்ண ரோஜாக்கள் உள்பட பல்வேறு மலர்கள் மண்டபத்தை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 3 டன் பழங்கள், 1.5 டன் பாரம்பரிய மலர்கள், 30 ஆயிரம் கட் பிளவர்ஸ் பயன்படுத்தப்பட்டன.

    கிறிஸ்டல் பந்துகளும் சர விளக்குகளும் இடை இடையே தொங்க விடப்பட்டு இருந்தன. சிறிய அளவிலான கிருஷ்ணா சிலைகள், வெண்ணெய் பானைகள், தாமரைகள் மற்றும் மயில்கள் ஆகிய கலை உருவங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

    சென்னையைச் சேர்ந்த 30 நிபுணர்கள் 15 நாட்களும், திருப்பதி தேவஸ்தான பூங்கா இலாகா ஊழியர்கள் 100 பேர் 2 நாட்களும் பூங்கா இலாகா துணை இயக்குனர் சீனிவாசுலுவின் வழிகாட்டுதல் படி வசீகரமான முறையில் மண்டபத்தை அலங்கரித்தனர். உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புனே ஸ்ரீவெங்கடேஸ்வரா அறக்கட்டளை சார்பாக பரிணயோற்சவ மண்டபத்தின் அலங்காரத்துக்காக ரூ.24 லட்சம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.

    • இன்று முதல் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது.
    • இந்த விழா 1992-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

    திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்தன.

    திருமலையில் உள்ள நாராயணகிரி கார்டனில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் முடித்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறையின் மேற்பார்வையில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த 30 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 50 அலங்கார நிபுணர்கள் பரிணயோற்சவ மண்டபத்தை அலங்கரித்ததாக, தோட்டக்கலைத்துறை மேற்பார்வையாளர் சீனிவாசுலு தெரிவித்தார்.

    புனேவைச் சேர்ந்த காணிக்கையாளர் ரூ.24 லட்சத்துடன் அரங்கை பிரமாண்டமாக அமைக்க முன்வந்தார். 3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் கஜ வாகனத்திலும், 2-வது நாள் குதிரை வாகனத்திலும், கடைசி நாள் கருட வாகனத்திலும் உற்சவர் மலையப்பசாமி வீதிஉலா வருகிறார். அவருடன் பரிணயோற்சவ மண்டபத்துக்கு உபய நாச்சியார்கள் தனித்தனி பல்லக்குகளில் வலம் வருகின்றனர். அதன் பிறகு கல்யாண மஹோற்சவம் நடக்கிறது.

    புராணங்களின்படி சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கலியுகத்தின் ஆரம்ப நாட்களில் மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து வெங்கடேஸ்வரராக பூமிக்கு வந்தார். அப்போது நாராயணவனத்தை ஆண்ட ஆகாசராஜன் தனது மகள் பத்மாவதியை வெங்கடேஸ்வரருக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆகாசராஜன் வைஷாக சுத்த தசமி அன்று பால்குனி நட்சத்திரத்தில் நாராயணவனத்தில் தனது கன்யாதானம் நிகழ்த்தியதாக வெங்கடாசல மஹாத்யம் கிரந்தம் கூறுகிறது.

    பத்மாவதி சீனிவாசரின் மங்களகரமான நிகழ்வை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வைஷாக சுத்த தசமிக்கு ஒரு நாள் முன்பும் ஒரு நாள் பின்பும் மொத்தம் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது.

    இந்த விழா 1992-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அன்றைய நாராயணவனத்தின் அடையாளமாக, திருமலை நாராயணகிரி பூங்காவில் பத்மாவதியின் பரிணயோற்சவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

    • வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் பக்தர்களால் நிரம்பியது.
    • நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமா நிலையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

    இதனால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் நேற்று 59 ஆயிரத்து 71 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இவர்களில் 27 ஆயிரத்து 651 பேர் முடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ரூ.4.12 கோடி காணிக்கையாக கிடைத்ததுள்ளது. இந்த நிலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் பக்தர்களால் நிரம்பியது.

    இலவச தரிசனத்திற்கு 12 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் பாராயணம் நடந்தது.
    • சாமவேத பாராயணம் மே 1-ந்தேதி தொடங்கி ஜூன் 30-ந்தேதி வரை நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் சதுர்வேத பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக சாமவேத பாராயணம் மே மாதம் 1-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை நடக்கிறது. வேத பண்டிதர்கள் ஒவ்வொரு குழுவிலும் 13 பேர் வீதம் 6 குழுக்களாகப் பாராயணம் செய்கிறார்கள். இந்தப் பாராயணம் தினமும் காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் நடக்கிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் பாராயணம் நடந்தது. கொரோனா தொற்று பரவலின்போது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந்தேதி வரை கிருஷ்ண யஜுர் வேத பாராயணம் நடந்தது. அதன் பிறகு ரிக் வேத பாராயணம் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×