search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • இந்த தெப்போற்சவம் 5 நாட்கள் நடக்கிறது.
    • நாதநீராஞ்ச மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும். வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    முதல் நாளான நேற்றிரவு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருடன் ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தெப்பல் உற்சவத்தில் சாமி வலம் வருவதை காண தெப்பக்குளத்தை சுற்றி தரிசனத்துக்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டபடி வணங்கினர்.

    இன்று இரவு 2-வது நாள் கிருஷ்ணர், ராதா ருக்மணியுடனும், நாளை 3-வது நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் தெப்பல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    6-ந் தேதி 4-வது நாள் 5 சுற்றுக்களும், 7-ந் தேதி 5-வது நாள் 7 சுற்றுக்களும் ஏழுமலையான் உற்சவம் நடக்கிறது.

    • பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் 18 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.114.29 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது. 92.96 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. அன்னப்பிரசாதம் 34 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 7 லட்சத்து 21 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 682 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக் கட்டாக்களில் 24 ஆயிரத்து 291 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 32 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது.
    • 22-ந்தேதி உகாதி பண்டிகை நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மார்ச்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    மார்ச் மாதம் 3-ந்தேதி குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 3-ந்தேதியில் இருந்து 7-ந்தேதி வரை 5 நாட்கள் வருடாந்திர தெப்போற்சவம், 7-ந்தேதி குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம், 18-ந்தேதி தாலப்பாக்கம் அன்னமாச்சார்யா நினைவுநாள், 22-ந்தேதி உகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு), உகாதி ஆஸ்தானம், 30-ந்தேதி ராம நவமி ஆஸ்தானம், 31-ந்தேதி ராமர் பட்டாபிஷேக ஆஸ்தானம்.

    மேற்கண்டவை நடக்கின்றன.

    • தெப்போற்சவம் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.
    • இந்த விழா 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. 3-ந்தேதி முதல் நாள் நிகழ்ச்சியில் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    4-ந்தேதி இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கிருஷ்ணர், ருக்மணி எழுந்தருளி 3 சுற்றுகள் வலம் வருகிறார்கள். 5-ந்தேதி மூன்றாவது நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 6-ந்தேதி நான்காம் நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் பவனி வருகிறார்கள். 7-ந்தேதி ஐந்தாவது நாள் நிகழ்ச்சியில் உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    தெப்போற்சவத்தையொட்டி மார்ச் மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளில் சஹஸ்ர தீபலங்கார சேவை, 5 மற்றும் 6-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தோமால சேவை, அர்ச்சனை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகின்றன. 7-ந்தேதி ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் தெப்போற்சவம் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடக்கிறது.

    • தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது.
    • 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் ரூ.300 தரிசன டிக்கெட் வெளியிட்டு வருகிறது.

    அதேபோல் சிறப்பு நுழைவு தரிசனம், ஸ்ரீ வாணி அறக்கட்டளை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அங்கப் பிரதட்சணம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

    மேலும் தரிசன டிக்கெட்டுகள் இல்லாமல் வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்படுகிறது.

    இதனால் தினமும் 70 முதல் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதன் மூலம் தினமும் சராசரியாக ரூ.4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது.

    நேற்று முன்தினம் 1.16 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. டிக்கெட் வெளியிடப்பட்ட 90 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.

    அதே போல் தினமும் 150 பேர் அங்க பிரதட்சணம் செய்யும் வகையில் 60 நாட்களுக்கு 15,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 5 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தினமும் ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் தரிசன டிக்கெட் கூடுதலாக விநிேயாகிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 81, 170 பேர் தரிசனம் செய்தனர். 27,236 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.23 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
    • சணல் பை பயன்படுத்தப்பட்டது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தை பெற்றுச்ெசல்ல கவுண்ட்டர்களுக்கு வரும் பக்தர்கள் முதலில் பாலித்தீன் கவர்களை விலை கொடுத்து வாங்கி, அதில் லட்டு பிரசாதங்களை வாங்கி எடுத்துச்சென்றனர்.

    பாலித்தீன் கவர்களாலும், பிளாஸ்டிக் பொருட்களாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை தற்போது வரை அமலில் உள்ளது. இதனையடுத்து சணல் பை பயன்படுத்தப்பட்டது.

    ஆனால் லட்டுகளில் உள்ள நெய்யை சணல் உறிஞ்சி விடுவதால் சுவை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின்னர் காகித அட்டைப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது.

    இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய முயற்சியாக லட்டு பிரசாதத்துக்காக பனை ஓலைகளால் தயார் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளின் பயன்பாட்டை திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

    அதன்படி பக்தர்களுக்கு வினியோகிக்கும் லட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பல்வேறு அளவுகளில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வேளாண் விஞ்ஞானி விஜயராம் வழங்கினார்.

    இவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் பனை ஓலை பெட்டிகள், கூடைகள் விரைவில் லட்டு கவுண்ட்டர்களில் பயன்படுத்தப்படும் என்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்தார்.

    • இந்த விழா 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன.
    • இந்த நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்போற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்போற்சவம் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கின்றன. தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் வழியாக வலம் வந்து, புஷ்கரணியில் மிதக்கும் தெப்பத்தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    இந்தப் தெப்போற்சவத்தால் மார்ச் மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளில் ஏழுமலையான் கோவிலில் சஹஸ்ர தீபலங்கார சேவை, மார்ச் மாதம் 5, 6 மற்றும் 7-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    • இன்று பிற்பகல் 2 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த மாதத்துக்கான (மார்ச்) ரூ.300 தரிசன டிக்கெட் ஒதுக்கீடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

    ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று பிற்பகல் 2 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் மார்ச் மாதத்துக்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, உற்சவ சேவைக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் கவனத்தில் கொண்டு தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 28-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 150 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
    • தரிசன டிக்கெட்டுகள் ஆதார் அட்டையுடன் நேரடியாகச் சென்றால் மட்டுமே வழங்கப்படும்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஏழுமலையானை எளிதாக தரிசிக்க திருமலையில் உள்ள கோகுலம் அலுவலகத்தில் நேற்று முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகளை நேரில் (ஆப் லைன்) வழங்குவதை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் தொடங்கி உள்ளது.

    இந்த மாதத்துக்கு (பிப்ரவரி) ஏற்கனவே 750 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. எனவே திருமலையில் வருகிற 28-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 150 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

    அடுத்த மாதம் (மார்ச்) முதல் 1000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளில் 500 ஆன்லைனில், 400 திருமலையில் உள்ள கோகுலம் அலுவலகத்தில், 100 ரேணிகுண்டா விமான நிலையத்தில் வழங்கப்படும். தரிசன டிக்கெட்டுகள் தேவைப்படுவோர் தங்களின் ஆதார் அட்டையுடன் நேரடியாகச் சென்றால் மட்டுமே வழங்கப்படும். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு நேரில் வந்து ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24-ந் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது.
    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு.

    திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி நகரத்தை தோற்றுவித்தார் என்று வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24-ந் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது.

    ஸ்ரீ லக்ஷ்மி தேவியைத் தேடி வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீநிவாஸர் என்ற பெயரில் ஆதிவராஹ ஸ்தலமான திருமலை மலைக்குச் சென்று ஸ்ரீ ஏழுமலையானை வழிபட்டார் என்பது அனைவரும் அறிந்த புராணங்கள். கலியுகத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை அனைத்து நித்ய சேவை கைங்கர்யங்களும் பரம்பரை வைகானச ஆகமத்தின்படி நடந்து வருகின்றன.

    ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமலையில் பல்வேறு வகையான திருவிழாக்கள் தெளிவற்ற நடைமுறைகளுடன் நடந்தது.

    அந்தந்த வம்சங்கள் ராமானுஜச்சாரியார் 11-ம் நூற்றாண்டில் தனது வாழ்நாளில் 3 முறை திருமலைக்கு வந்து கருவறையில் காணப்படும் அசல் தன்மை குறித்த சந்தேகங்களைப் போக்கினார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் திருமலை மூலமூர்த்திக்கு சங்குச்சக்கரங்களைக் காணிக்கையாகக் கொடுத்து, ஸ்தல லட்சுமியை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ மஹாவிஷ்ணு தசாவதார ரூபம் என்று அறிவித்தார். திருமலை கோவிலின் நித்ய பூஜைகள், கைங்கர்ய நடைமுறைகளை பரம்பரையாக ஆகம விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த வழக்கமான பூஜைகளின் பொறுப்புகளை கண்காணிக்க பஞ்சராத்ர துணை ஜீயர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில், ஏழுமலையான் கோவில் பகுதி வனப்பகுதியாக இருந்தது, அங்கு வழக்கமான சேவைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றன. கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன்பின், கோவிலின் நான்கு புறமும் மாடவீதிகள், அர்ச்சகர்கள் குடியிருப்புகள், ஜீயரைக் கொண்டு கட்டப்பட்டது. கோவிந்தப்பட்டினம் என்ற பெயரில் மடங்கள் மற்றும் மக்கள்தொகை விரிவாக்கம் தொடங்கியது.

    அவ்வாறு உருவான கோவிந்தப்பட்டினம், திருமலை அடிவாரத்தில் உள்ள கபிலதீர்த்தம் அருகே ஏற்கனவே மறைந்துவிட்ட கோத்தூர் என்ற கிராமப் பகுதி வரை நீண்டு, தற்போதைய திருப்பதி நகரம் உருவாகக் காரணமாக இருந்தது.

    கோவிந்தராஜர் கோவில் வளாகத்தில் காணப்படும் பல கல்வெட்டுகள் மூலம் இந்த வரலாறு வெளிப்படுகிறது. தற்போதைய திருப்பதி நகரத்தை ராமானுஜாச்சாரியார் 1130-ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று நிறுவினார் என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    இதற்கு சாட்சியாக கோவிந்தராஜசுவாமி கோவிலில் பரம்பரை பரம்பரையாக நடைபெறும் நித்ய பூஜை நடவடிக்கைகளில் அன்றைய தேதி தொடர்பான வருட, திதி, வார, நட்சத்திரங்களை வைத்து அர்ச்சகர்கள் தீர்மானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகப் புகழ் பெற்ற திருப்பதி நகரம் திருமலையின் பாத பீடமாகத் திகழ்கிறது. அதன் தோற்றத்தின் விழாவின் ஒரு பகுதியாக, நகர மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்பதி மாநகராட்சி சார்பில் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்கள் மூலம் அழகுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • மாலை 4 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது.
    • ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலமாக தரிசிக்க மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஒதுக்கீட்டை இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடுகிறது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை அதில் அடங்கும்.

    அதேபோல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீதமுள்ள ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் லக்கி டிப் (குலுக்கல் முறை) பதிவு செயல்முறை இன்று காலை 10 மணியில் இருந்து 24-ந்தேதி காலை 10 மணி வரை இருக்கும். லக்கி டிப்பில் டிக்கெட் பெற்றவர்கள் பணம் செலுத்தி உறுதிப்படுத்த வேண்டும். பக்தர்கள் இந்த நடைமுறைகளை கவனித்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த முறை சோதனை அடிப்படையில் மார்ச் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
    • கவுண்ட்டர்களில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன், லட்டுப்பிரசாதம், அறை ஒதுக்கீடு, பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு பக்தரின் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட உள்ளது.

    தனிநபர் அதிக லட்டு டோக்கன்களை பெறுவதைத் தவிர்க்கவும், இலவச தரிசன வளாகத்திலும், அறை ஒதுக்கீடு மையங்கள் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் கவுண்ட்டர்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×