search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94484"

    • உடுமலை நகராட்சியில் 5 டிவிசன்கள் 33 வார்டுகள் உள்ளன.
    • தினசரி ரூ.340 ஊதியம் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியில் 5 டிவிசன்கள் 33 வார்டுகள் உள்ளன. மொத்தம் 240 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு தினசரி ரூ 340 ஊதியம் வழங்கப்படுகிறது, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதன் மூலம் மாதம் சுமார் ரூபாய் 8000 ஊதியமாக பெறுகின்றனர். இந்நிலையில் புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் 90 பேரை ஆள் குறைப்பு செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறி பணியாளர்கள் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி தலைவர் தொழிலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்கப்படும் .யாரும் நீக்கப்பட மாட்டார்கள். தகுந்த ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.அப்போது நகராட்சி அதிகாரிகள் நாட்ராயன், சிவகுமார், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

    • சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியத்திற் குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மிகப்பெரிய ஊராட்சியாகும். இங்கு நடந்த தலைவர் பதவி தேர்தலில் இருவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப் பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி ஊராட்சி தலைவியாக தேவி மாங்குடி பொறுப் பேற்றார்.

    இந்தநிலையில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றப்படவில்லை என அவ்வப்போது தர்ணா, ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன், பா.ஜனதா உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி, செயலாளர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து துணை தலைவர் பாண்டியராஜன் கூறுகையில், ஒரு சிலருக்கு வரி ரசீது வழங்குவதில் பாரபட்சம் நிலவுகிறது.மக்களின் அடிப்படை வசதி கள் உடனடியாக நிறை வேற்றப்பட வேண்டும் என்றார்.

    தேவி மாங்குடி (தலைவர்) கூறுகையில், மக்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன.துணைத்தலைவர் மற்றும் ஒருசில உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றார்.

    ஆர்ப்பாட்டம் நடத்திய வர்களிடம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, துணை தாசில்தார் சிவராமன், காவல் ஆய்வாளர் ரவீந்தி ரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாலியல் புகார் கூறப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    • போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் மற்றும் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2 மாதத்திற்கும் மேலாகி வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மதுரையில் இன்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை ரெயில் நிலையம் முன்பு பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் பாலியல் புகார் கூறப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவரது உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.

    உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதைத்தொடர்ந்து போராட்டகாரர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ரெயில் மறியல் போராட்டம் நடத்த அனுமதியில்லை. எனவே கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து செல்லாமல் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாதர் சங்க நிர்வாகி பொன்னுத் தாய், சசிகலா, இந்திய வாலிபர் சங்க நிர்வாகி கருப்புசாமி, மாணவர் சங்க செயலாளர் பாலா உள்பட 150 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கடை வியாபாரிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சிட்கோ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான தெருவோர கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற தொழிற்பேட்டை சிட்கோ சார்பில் இன்று நோட்டீசு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர கடை வியாபாரிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    மேலும் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
    • சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது.

    வாடிகன்:

    இத்தாலி வாடிகன் நகரில் உலக பிரசித்தி பெற்ற புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள்.

    இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் தேவாலயத்துக்கு வந்தார். திடீரென அவர் உக்ரைனில் நடந்து வரும் போரை எதிர்ப்பதாக கூறி தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். இதைபார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் அந்த வாலிபர் தனது உடலில் கைவிரல் நகத்தால் கீறி ஆவேசத்துடன் சத்தம் போட்டார். தனது முதுகு பகுதியில் உக்ரைனில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பெயிண்டால் எழுதி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி அறிந்ததும் இத்தாலி போலீசார் அங்கு விரைந்து வந்து நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது. வாலிபரின் நிர்வாண போராட்டத்தை சுற்றுலா பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    • கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி கருமத்தம்பட்டி பாஜகவினர், பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் மதுபான கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் நாளை(இன்று) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து சமரசம் அடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிைடயே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூட்டத்தை ஆய்வு செய்தார்.

    • பாய்லரில் வேகவைத்து அரைத்து கோழி தீவனமாக மாற்றப்படுகிறது.
    • 3 மினிலாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த மாபுஸ்கான் பேட்டையில் கோழி தீவனம் தயார் செய்யும் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு கோழி தீவனம் தயாரிப்பதற்காக கோழி கழிவுகள்,மீன், இறால் கழிவுகள் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம்கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் இதனை பாய்லரில் வேகவைத்து அரைத்து கோழி தீவனமாக மாற்றப்படுகிறது. இதனால் அப்பகுதியை சுற்றி உள்ள ஞாயிறு, மாபுஸ்கான் பேட்டை, பசுவன் பாளையம், வழுதிகைமேடு, பூதூர் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் தீவனம் தயாரிக்க 3 மினிலாரிகளில் கொண்டு வரப்பட்ட கோழிக்கழிவுகளை மாபுஸ்கான் பேட்டை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    • நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
    • குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நகராட்சியில் 25க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று காலை பணியை புறக்கணித்து குன்றத்தூர் நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் நகராட்சி கமிஷனர் தாமோதரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் முடிவை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் தங்களது பணியை புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அருகே காட்டுப்பள்ளி பஞ்செட்டி பகுதியில் உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இடையே நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பொன்னேரி அருகே உள்ள ஆமூர் ஏரியில் இருந்து சவுடு மண் எடுத்து சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் ஏரியில் விதிமுறையயை மீறி சுமார் 20 அடி ஆழம் மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வெளியிடங்களுக்கு முறைகேடாக விற்கப்படுவதாகவும் தெரிகிறது.

    ஏரியில் மணல் அள்ளப்படுவதால் சுற்றி உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு கால்நடைகளுக்கும் விவசாயத்திற்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஏரியில் மணல் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்ட மான சூழ் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏரியில் மணல் அள்ளுவது தற்கா லிகமாக நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மணப்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஒப்பந்த பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் துப்புரவு பணியை மேற்கொள்ள 176 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.இந்நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்தும், திடீரென 15 ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், பணிச்சுமை அதிகரிப்பதைக் கண்டித்தும், ஒப்பந்த பணியாளர்களிடம் குப்பையை எடை போட்டு அதற்கு தகுந்தார் போல் சம்பளம் நிர்ணயிக்கும் முறையை கைவிட வேண்டும்,நகராட்சி சட்டப்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் பேருந்து நிலையம் மற்றும் விராலிமலை ரோடு ஆகிய பகுதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் பணி வழங்கியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • லாரிகளில் அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க ஏற்கனவே லாரிகளை சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள், விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர் சாலைமறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விதிமுறைகளின் படி ஜல்லிக்கற்கள் மற்றும் எம். சாண்ட் கொண்டு செல்லப்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இரவு கோடாங்கிபாளையத்தில் அதிக அளவில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்த கேரள மாநில லாரியை அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறைப்பி டித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த லாரிக்கு ரூ.71 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    லாரிகளில் அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க ஏற்கனவே லாரிகளை சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம். இதை தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம் என அறிவித்ததையடுத்து, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் சில நாட்கள் கேரள லாரிகள் வராமல் இருந்தன. தற்போது இரவு நேரங்களில் மீண்டும் வருவதாக தெரிகிறது. இது மேலும் தொடர்ந்தால் பொதுமக்கள் மீண்டும் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×