search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • அதானி குழும விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் 2 நாட்களாக பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
    • பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி இடையூறு செய்து வருகிறது என மத்திய மந்திரி தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதானி நிறுவனங்கள் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து 2 நாட்களாக சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. எந்த அலுவலும் நடைபெறவில்லை.

    இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை மந்திரி ஸ்மிருதி இரானி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    எந்தவொரு விவாதத்துக்கும் தயார் என்று அரசு மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் அதைத் தொடங்க ஏன் அவர்கள் (காங்கிரஸ்) அனுமதிக்கக் கூடாது?

    எதிர்க்கட்சி எப்போதுமே ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் உரையை மட்டுமல்ல, நமது தற்போதைய வளத்தையும் காட்டும் உரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றி இருக்கிறார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    அந்த மதிப்பை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சி ஏன் தர மறுக்கிறது? ஆனால் ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல் அவர்கள் அவருக்கு அளிக்கும் மரியாதையை மறுப்பதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. அவர்மீது அவர்கள் கொண்டுள்ள பகைமையின் பிரதிபலிப்புதான் இது. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்கிறார்கள் என தெரிவித்தார்.

    • பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதி கோரினர்.
    • அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் கடும் அமளி.

    2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்த பட்ஜெட்டை, பிரதமர் மோடி வரவேற்றார்.

    இன்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    ஜனாதிபதி உரை விவாதம் நடைபெற இருந்த நிலையில் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதி கோரினர்.

    மேலும், அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் பாராளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பிறகு, 2 மணியளவில் இரு அவைகளும் கூடியது. இந்நிலையில், 2 மணிக்கு பிறகும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

    • நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும்.
    • ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும்.

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்ட நிதி மந்திரி, துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார்.

    மத்திய பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

    பான் கார்டு இனி முக்கிய அரசுத் துறை கொள்கை சேவைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும். நிதி சார்ந்த சேவைகளுக்காக கே.ஒய்.சி. என்ற தனி நபர் விவர முறை எளிதாக்கப்படும்.

    ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனி நபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
    • ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

    2019-ம் ஆண்டு அருண் ஜெட்லி மறைவுக்கு பிறகு நிதி மந்திரியாக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இதுவரை 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனுடன் இதுவரை 6 பேர் சுதந்திர இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள்.

    முதல் தமிழ் மந்திரி

    சுதந்திரம் பெற்றதும் 1947-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி இந்தியரின் முதல் பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார்.

    கோவையை பூர்வீகமாக கொண்ட இவர்தான் இந்தியாவின் முதல் நிதி மந்திரி ஆவார்.

    டி.டி.கிருஷ்ணமாச்சாரி

    மத்திய மந்திரியாக பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1957, 1958, 1964, 1965 ஆகிய 4 ஆண்டுகள் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில் பொருளியல் துறையில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

    சி.சுப்பிரமணியம்

    1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை 3 முறை இந்திராகாந்தி ஆட்சியில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இவரது பூர்வீகம் பொள்ளாச்சி.

    ஆர்.வெங்கட்ராமன்

    இந்திராகாந்தி மந்திரி சபையில் நிதி மந்திரியாக பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன் 1980, 1981 ஆகிய வருடங்களில் 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இவர் 1950-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்தவர். தொழில் துறை மற்றும் பாதுகாப்பு துறை மந்திரியாகவும் பணியாற்றியவர்.

    இந்தியாவின் 8-வது ஜனாதிபதியாக 1987-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இந்திய அரசியலில் இலங்கை சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் படுகொலை, பங்கு சந்தை ஊழல் என நெருக்கடியான கால கட்டத்தில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுக்கு சென்று வந்த முதல் ஜனாதிபதியும் இவர்தான்.

    ப.சிதம்பரம்

    ப.சிதம்பரம் எம்.பி. 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்தவர்களில் அதிக தடவை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ப.சிதம்பரம் மட்டுமே.

    இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள 75 பட்ஜெட்டுகளில் 6 தமிழர்கள் 23 பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள்.

    • மத்திய அரசு எழுதி அளிப்பதை ஜனாதிபதி பேசுவது வழக்கமானது.
    • முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    புதுடெல்லி :

    பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரை ஆற்றினார். அவரது உரை குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. இதுபற்றிய பார்வை வருமாறு:-

    மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ் தலைவர்):-

    மத்திய அரசின் அறிக்கை, ஜனாதிபதி வழியாக வந்திருக்கிறது. புதிதாக ஏதுமில்லை. நாடு பெருமளவில் முன்னேறி இருப்பதாக அரசு கூறுகிறதே, பிறகு ஏன் வேலையில்லா திண்டாட்டம், அதிகபட்ச விலைவாசி உயர்வினால் நாட்டின் ஏழைகள் தொடர்ந்து கஷ்டப்படுகிறார்கள்?

    டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்):-

    மத்திய அரசு எழுதி அளிப்பதை ஜனாதிபதி பேசுவது வழக்கமானது. என்றாலும், இதில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, கூட்டாட்சியை (நிதி) வலுப்படுத்துவது, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவது, பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவது என முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை

    பினாய் விஸ்வம் (இந்திய கம்யூ. மூத்த தலைவர்):-

    பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, தலித்துகளுக்கு, பழங்குடியினருக்கு அதிகாரம் வழங்குதல் என்பது காகிதத்தில்தான் உள்ளது. ஜனாதிபதி உரையானது அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான ஆளும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதி போல உள்ளது. வார்த்தைகள் அழகானவை. ஆனால் உண்மையில் அப்படி இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொண்டனர்.
    • சோனியா காந்தி தனிமையில் அமர்ந்திருந்தபோதும் அவரிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர்.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுக்கூட்டம், பாராளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனியாக வந்து அமர்ந்திருந்தார். வழக்கமாக அவர் தனது கட்சி எம்.பி.க்கள் புடைசூழ அமர்ந்திருப்பார்.

    இந்த முறை தனியாக அமர்ந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.

    காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், எம்.பி.க்களும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் நடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா பாத யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொள்ளச்சென்றிருந்தனர். மோசமான வானிலை காரணமாக விமான புறப்பாடு தாமதம் ஆனதால் அவர்கள் ஸ்ரீநகரில் சிக்கிக்கொண்டனர்.

    சோனியா காந்தி தனிமையில் அமர்ந்திருந்தபோதும் அவரிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர்.

    சோனியா காந்தியும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    சோனியா காந்தியின் அருகில் அமர்ந்திருந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவரிடம் பேசிக்கொண்டதை காண முடிந்தது.

    பின்வரிசையில் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையனிடம் சோனியா நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

    பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கட்சி வித்தியாசமின்றி உறுப்பினர்கள் ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டு அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

    அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கதா ராய், பா.ஜ.க. எம்.பி. நீரஜ் சேகர், சிவகுமார் உடாசி, நிஷிகந்த் துபே ஆகிய 6 பேரும் ஒன்றாக அமர்ந்திருந்ததை காண முடிந்தது.

    பிரதமர் மோடியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, கட்சி வித்தியாசம் பாராமல் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொண்டனர்.

    பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது தாயார் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்ததையும் பார்க்க முடிந்தது.

    • இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும்.
    • நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் ஆகும்.

    புதுடெல்லி :

    மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் என்பதால் சலுகைகள் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது.

    ஜனாதிபதி உரையைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலானது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று (1-ந் தேதி) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட், அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் ஆகும்.

    இது காகிதமில்லா பட்ஜெட் ஆகும். மடிக்கணினி மூலம்தான் இந்த பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், இதுதான் அவர் தாக்கல் செய்கிற முழுமையான கடைசி பட்ஜெட், அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.

    இந்த மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் கவர்ச்சிகரமான அம்சங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.

    அவை பற்றிய ஒரு பார்வை:-

    * புதிய வரி விதிப்புகள் தவிர்க்கப்படலாம்.

    * மாதச்சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2½ லட்சமாக இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இது குறைந்தபட்சம் ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம்.

    * வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின்கீழ் வழங்கப்படுகிற வரி விலக்கு சலுகை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படக்கூடும்.

    * வருமான வரி விதிப்பு அடுக்கில் மாற்றம் வரலாம்.

    * மின்சார வாகனங்களின் உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படலாம்.

    * உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், 100 நாள் வேலை திட்டத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    * விவசாயிகளுக்கு கூடுதல் கடன்கள் வழங்க திட்டம் எதுவும் அறிவிக்கப்படலாம்.

    * பெண்களை கவரும் விதத்தில் அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதாவது வரக்கூடும்.

    * இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.

    இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.

    சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி இருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு 13-ந் தேதி முடிவு அடைய இருந்தது. அதை முன்கூட்டியே 10-ந் தேதி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் எழுப்பி உள்ளன. 11-ந் தேதி, 12-ந் தேதி சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி 10-ந் தேதியே முதல் அமர்வை முடிக்கலாம் என்று கட்சிகள் கேட்டுள்ளன.

    அலுவல் ஆய்வு குழு முன் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி உள்ளார் என பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    • ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது.
    • பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    கடந்த ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் முதல் கூட்டுக்கூட்ட உரை இதுவாகும்.

    பாராளுமன்றத்தில் உரையாற்ற திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார். குதிரைப்படையினர் புடை சூழ பாராளுமன்றத்துக்கு சென்றார்.

    பாராளுமன்றத்துக்கு வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை சபாநாயகர் ஓம்பிர்லா, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

    பாராளுமன்றத்துக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு நுழைந்ததும் எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றனர்.

    பின்னர் பாராளுமன்ற மைய மண்டபத்துக்கு திரவுபதி முர்மு சென்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    அதன் பின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுதந்திரத்தில் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம்.

    2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

    புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதில் பழங்காலத்து பெருமையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும்.

    இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும். 2047-ம் ஆண்டில் முழு வளர்ச்சியை காண்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் இருக்கும் நிலை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக வேண்டும்.

    வெளிநாடுகளில் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுய சார்பு நாடாக மாறி உள்ளது. இந்தியா நவீன கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்திருக்கிறது.

    9 ஆண்டுகளில் இந்தியா வின் மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது.

    நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது.

    நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது.

    நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளன. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக, இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி. மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள் ஆகும். முன்பு வரி திரும்பப்பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்த சில நாட்களுக்குள் பணம் திரும்ப பெறப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வெளிப்படைத் தன்மையுடன் வரி செலுத்துவோரின் கண்ணியமும் உறுதி செய்யப்படுகிறது.

    கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்கியது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது.

    கொரோனா காலத்தில் ஒரு ஏழைக்கூட பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊழல் என்பது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

    ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பது அரசின் தெளிவான கருத்து ஆகும். கடந்த ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    ஊழலை ஒழித்து பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஊழலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஊழலை ஒழித்திருக்கிறோம்.

    குற்றமிழைத்து வெளிநாட்டுக்கு தப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். சரியாக முடிவுகள் காரணமாக பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

    நிலையான மற்றும் உறுதியான முடிவெடுக்கும் அரசால் நாட்டு மக்கள் பலன் பெறுகின்றனர். பழங்குடியினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வளர்ச்சி குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    பழங்குடி பெண்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு பணித்துறையிலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

    அரசின் திட்டங்களால் பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்பது குறைந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம்.

    ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது. முன் மாநில மாவட்டங்கள் திட்டம் மேலும் 500 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட உள்ளது.

    நாடு முழுவதும் 50 கோடி பேர் அரசின் இலவச மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழை, எளியோர் மருத்துவ வசதி பெற்று உள்ளனர்.

    கரீப் கல்யாண் யோஜன திட்டம் மூலம் கோடிக் கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறு கின்றனர்.

    2014-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 260 மருத்துவ கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது. மாவட்டங்கள் தோறும் மருத்துவ கல்லூரி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறோம். புத்தாக்க தொழில்கள் எண்ணிக்கை பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது.

    நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்திய விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    கேலோ இந்தியா திட்டம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை நினைவூட்டம் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. ராஜ பாதையை கடமை பாதை என பெயர் மாற்றியதன் மூலம் அடிமைத்தன விசயங்கள் மாற்றப்பட்டுள்ளன. பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    அரசின் புதிய முயற்சிகளால் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான தாங்கி கப்பலை நாமே கட்டியுள்ளோம். தனியார் நிறுவனம் கூட செயற்கைகோளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பசுமை வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது. ஜி.20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளை காண இந்தியா முயற்சிக்கிறது.

    இவ்வாறு ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது.

    2023-24-ம் ஆண்டுக் கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கூட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் முதல்கட்டம் பிப்ரவரி 14-ந்தேதி வரையும், 2-வது கட்டம் மார்ச் 12-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையும் நடைபெறும்.

    பட்ஜெட் கூட்டத்தொட ரின்போது இரு அவைகளும் 23 அமர்வுகளில் கூடவுள்ளது. இதில் 36 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    • டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
    • பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பாராளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:

    * கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன.

    * ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள்.

    * ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் மற்றும் மக்கள் மருந்தகம் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது.

    * டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பின் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளோம். ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமே இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது

    * பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருகிறது. அரசு துறையில் ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது. ஊழலை ஒழிக்க பினாமி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது

    * பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏழைகளை காப்பாற்றும் அதே வேளையில் நவீனத்துவமும் கடைபிடிக்கப்படுகிறது. இரு முறை இந்த அரசை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு நன்றி.

    * அரசு புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.

    * பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம்.

    * விளையாட்டு துறையில் திறமையானவர்களை ஊக்குவிக்க கேலோ இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * இந்தியாவின் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.

    * உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பகுதிகளாக நடக்கவுள்ளது.
    • முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கவுள்ளது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி உரை நிகழ்த்தி முடித்ததும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார்.

    இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பகுதிகளாக நடக்கவுள்ளது. முதல் அமர்வு இன்று தொடர்ங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடக்கும். அடுத்த அமர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

    பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களுக்கு பூஜ்ய நேரம் கேள்வி நேரம் எதுவும் இருக்காது. பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். இதன் முடிவில் இரு சபைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிப்பார்.

    இந்தக் கூட்டத்தொடரில் பி.பி.சி. ஆவணப்பட விவகாரம், சீன எல்லையில் நிலவும் பதற்றம், தொழில் அதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் பழைய கட்டடத்திலேயே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது.
    • 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.

    இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் கே.கேசவராவ் கூறுகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

    • வரும் 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை நடைபெறும்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணிகள் முடிந்து தயாராகி விட்டது. வரும் 31-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெறும் என தகவல் வெளியானது. இதில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், ஜனாதிபதி உரை பழைய கட்டிடத்தில்தான் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக ஓம் பிர்லா டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கு மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவார் என பதிவிட்டுள்ளார்.

    ×