search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
    • அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்த அரசு ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33 ரூபாய்.

    ஆனால் இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

    செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33 ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும், அ.தி.மு.க. சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அரசை எச்சரிக்கை செய்கிறேன்.

    கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அ.தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டு அறிந்து வருகின்றனர்.
    • கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக யார் யார் இருந்தார்கள் என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டறிந்து பதிவு செய்து வருகின்றனர்.

    கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆகஸ்டு 25ம் தேதி விசாரித்தது.

    இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி அளித்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும்.

    இரு நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 2ம் தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை. எனவே இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டு அறிந்தனர்.

    இந்த மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசரத்தை அறிய விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக யார் யார் இருந்தார்கள் என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டறிந்து பதிவு செய்து வருகின்றனர்.

    நீதிமன்ற விசாரணை காரணமாக கட்சிப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

    ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக 2021, டிசமர்பரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறப்பட்டது. மேலும், கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றார்.

    • விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர்.
    • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் பிப்ரவரி 23-ந்தேதி 51 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று நெல்லை வந்தார். தச்சநல்லூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    போதை பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனைகூட்டம் நடத்தி உள்ளார். ஆனால் 1 ஆண்டுகளுக்கு முன்பே போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு இடதுசாரிகள் அமைப்புகள் எந்த போராட்டமும் நடத்தவில்லை. அவர்கள் மவுனம் சாதித்து வருகிறார்கள். தி.மு.க.வை எதிர்த்து கேள்வி கேட்க எந்த கட்சிகளும் தயங்கி வருகிறது. அ.தி.மு.க. மட்டுமே தி.மு.க.வை எதிர்த்து பல்வேறு கேள்விகளை எழுப்பி போராட்டங்கள் நடத்தி வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி முடியும் நேரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் கடந்த 19 தி.மு.க. ஆட்சியில் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

    தற்போது 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் விண்ணை முட்டும் வகையில் கடன் தொகை உயர்ந்துள்ளது. நிதி அமைச்சர் ஒரு பாதையில் செல்கிறார். அவரிடம் முதல்-அமைச்சர் எந்த கேள்வியும் கேட்க முடியாத நிலை உள்ளது.

    19 மாத தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள், மானிய கோரிக்கையின் போது அளித்த தகவல்கள், 110-ன் விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

    எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் உரிமைக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பினாலும், அமைச்சர்கள் தகுந்த பதிலை கூறுவதில்லை. இதனால் அ.தி.மு.க. சார்பில் சொத்துவரி, மின்கட்டணம் உயர்வு தொடர்பாக மக்கள் மன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறோம்.

    தற்போது பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 4 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறையிலும்120 விருதுகள் வாங்கப்பட்டது.

    விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண் போலீசாரிடம் தி.மு.க.வினர் அத்துமீறி உள்ளனர். இதுதமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் குறித்த தீர்ப்பு இன்று மாலை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. நானும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், ஜெயலலிதா பேரவை மாநில இணைசெயலாளர் சேதுராமானுஜம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பெரியபெருமாள், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆவரை பால்துரை, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சிராணி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, ஜெனி, மோகன், சண்முககுமார், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், நிர்வாகிகள் வக்கீல் அங்கு அங்கப்பன், பாறையடி மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள்.
    • அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.

    சென்னை:

    புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பிளவுபட்டு கிடப்பதாகவும், பா.ம.க.வுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க. என்ற கட்சியே வெளியில் தெரிந்து இருக்காது. அ.தி.மு.க. தயவால்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்தது" என்று கூறி இருந்தார்.

    இதற்கு பதில் அளித்து பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.பாலு நிருபர்களிடம் கூறுகையில், "அ.தி.மு.க. 4 பிரிவாக பிரிந்து இருக்கிறது என்று குழந்தைகளுக்கு கூட நன்றாக தெரியும். 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. பலவீனப்பட்டு கிடந்தபோது அதற்கு உயிரூட்டியதே பா.ம.க.தான்.

    1998-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும். பா.ம.க. வுடன் கூட்டணி அமைத்தப் பின் தான் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்" என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

    பா.ம.க.வின் கருத்துக்கு பதில் சொல்லி எங்கள் சக்தியையும், நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் லட்சியமே வேறு. நாங்கள் எங்கள் லட்சியத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே ஜெயலலிதா கைப்பற்றியது போல 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம்.

    அ.தி.மு.க. சிதைந்து கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. வலிமையான கட்சியாக இருக்கிறது என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தலின் மூலம் தெரியப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வதாக வந்த கடிதத்தையும், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
    • தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று முன்தினம் தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டு உள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகின்றனர்.

    இதில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வரும் கடித தொடர்புகள் அனைத்தும் தலைமைக் கழகத்துக்குதான் அனுப்பப்படுகிறது.

    அந்த வகையில் தேர்தல் கமிஷனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் கடிதங்களும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்குதான் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் கூட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டுதான் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தது.

    இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவித்திருந்தனர்.

    இப்படி எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் வாக்குப்பதிவு) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

    இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் கருத்தை கேட்டறிய யார் பெயருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்பதை விளக்கி இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு விளக்க கடிதம் அனுப்பி இருந்தது.

    அதில் அ.தி.மு.க.வுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி இருந்தது.

    இதன் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த வியாழக்கிழமை தபால் பட்டுவாடா செய்யும் மெசேஞ்சர் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு கடிதம் கொடுத்து அனுப்பி இருந்தார். இதே போல் தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கும் தபால் கொடுத்து அனுப்பினார்.

    இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை 'ஸ்பீடு போஸ்ட்' மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.

    2-வதாக வந்த அந்த கடிதத்தையும், அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று முன்தினம் தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    இதனால் கடிதம் திரும்பி வந்த விசயத்தை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று இ.மெயில் மூலம் தெரிவித்துள்ளார். இனி மேல் தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் பிரதிநிதியை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

    அது மட்டுமின்றி இனிவரும் கடிதங்களை தங்களுக்கு இ.மெயில் மூலம் அனுப்பி வைக்குமாறும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. சேலத்தில் இருந்து நேற்று சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளார்.

    அப்போது நடைபெற்ற ஆலோசனையில் தேர்தல் கமிஷன் மறுபடியும் நமக்கு இடைக்கால பொதுச்செயலாளர் என்று கடிதம் அனுப்பினால் நேரில் சென்று பங்கேற்கலாம். அப்படி கடிதம் அனுப்பாத நிலையில் தேர்தல் கமிஷனின் கூட்டத்தில் பங்கேற்றால் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நாம் கலந்து கொண்டதாக பதிவு செய்யப்பட்டு விடும்.

    எனவே இதை தவிர்ப்பதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் கடிதம் வாயிலாக அ.தி.மு.க.வின் கருத்துக்களை எழுதி கொடுத்து விடலாம் என்று தெரிவித்ததாக தெரிகிறது.

    தேர்தல் கமஷனின் ஆலோசனை கூட்டத்துக்கு இன்னும் 12 நாட்கள் அவகாசம் இருப்பதால் பொறுத்திருந்து அதற்கேற்ப முடிவு செய்யலாம் என்றும் கருத்து பரிமாற்றம் நடந்துள்ளது.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் இடையேயான பனிப்பேர் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கட்சி நிர்வாகிகள் ஆதங்கத்துடன் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.

    • செப்டம்பர் 2-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை.
    • இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி விசாரித்தது.இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி அளித்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ய வேண்டும். இரு நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை. எனவே இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.

    அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரிக்கிறது.

    • எங்களால்தான் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார்.
    • 1996-ம் ஆண்டை சற்று ஜெயக்குமார் திரும்பி பார்க்க வேண்டும்.

    சென்னை :

    புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30-ந் தேதி நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. பிளவுபட்டுக்கிடப்பதாகவும், பா.ம.கவுக்கு நல்ல ஒரு எதிர்காலம் உள்ளதாகவும் பேசினார்.

    அவர் தெரிவித்த இந்த கருத்துக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது. ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க., என்ற கட்சியே வெளியில் தெரிந்து இருக்காது. அ.தி.மு.க. தயவால்தான் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறியிருந்தார். இதற்கு பா.ம.க சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றுகிறது.

    இதுதொடர்பாக பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் கே.பாலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுவாக கூட்டணி வைப்பதால் தேர்தலில் இரு கட்சிகளும் பயன் அடைகிறார்கள். இதில் எங்களால்தான் வெற்றி என்று ஒரு தரப்பு கூற முடியாது. அ.தி. மு.க. 4 பிரிவாக பிரிந்து இருக்கிறது என்று குழந்தைகளுக்குக்கூட நன்றாக தெரியும்.

    அ.தி.மு.க. பிளவு என்பது அதன் உள்கட்சி விவகாரம் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    ஆனால், இதற்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றம் சென்றதுக்கு அ.தி.மு.க.தான் காரணம் என்றெல்லாம் கூறியுள்ளார்.

    ஆனால், 1996-ம் ஆண்டை சற்று ஜெயக்குமார் திரும்பி பார்க்க வேண்டும். அப்போது அ.தி.மு.க. கடும் வீழ்ச்சி அடைந்து இருந்தது. அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க.வும், பா.ம.க.வும் தலா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. பலவீனப்பட்டு வீழ்ந்து கிடந்தபோது, அதற்கு உயிர் ஊட்டியதே பா.ம.க.த்தான். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக 1998-ம் ஆண்டு தேனாம்பேட்டையில் உள்ள பா.ம.க. அலுவலகத்துக்கு ஜெயலலிதா நேரில் வந்தார்.

    1998-ம் ஆண்டு அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் அ.தி.மு.க. மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கும். அதேபோல, 2001-ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க.வுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாசின் வருகைக்காக வழி மீது விழி வைத்து ஜெயலலிதா காத்திருந்தார். பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால், 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியை பிடித்தார்.

    எங்களால்தான் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராகவும், ஜெயக்குமார் அமைச்சராகவும் 2 ஆண்டுகள் தொடர்வதற்கு நாங்கள்தான் காரணம் என்று ஒருபோதும் பா.ம.க. சொன்னது இல்லை. அது எங்களது வேலையும் இல்லை.

    பா.ம.க. மீது விமர்சனம் வைக்கும்போது, ஜெயக்குமார் மிக கவனமாக இருக்கவேண்டும்.

    இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.
    • வருகிற 16-ந் தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

    இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு யார் பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் விளக்கி இருந்தது.

    அதன்படி அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தி.மு.க., பா.ம.க.வில் தலைவர்களுக்கும், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளர்களுக்கும் பதவிகளை குறிப்பிட்டு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்திய தேர்தல் கமிஷனின் இந்த விளக்க கடிதம் கடந்த வியாழக்கிழமை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கிடைத்ததும் அதன் அடிப்படையில் அவர் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் கமிஷனின் தபால் பட்டுவாடாவை ஊழியர் மூலம் (மெசேஞ்சர்) ஒவ்வொரு கட்சிக்கும் கொடுத்து அனுப்பினார். அதில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளாமல் வியாழக்கிழமையே திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.

    2-வதாக வந்த அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    இதனால் 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறுகையில், "அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் இடைக்கால பொதுச் செயலாளர் பதவிதான் உள்ளது என்றும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே 3 கடி தங்கள் கொடுத்து இருக்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.

    எனவே இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு மறுபடியும் கடிதம் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.

    எனவே வருகிற 16-ந் தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த சூழலில் தேர்தல் கமிஷனின் கடிதத்தை 2 முறை அ.தி.மு.க. நிராகரித்து திருப்பி அனுப்பிய விவரத்தை இந்திய தேர்தல் கமிஷனுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு விரிவாக தெரிவித்துள்ளார்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதால் அதை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வாங்க மறுத்து உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    மின்னஞ்சல் மூலம் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர்.
    • முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத். இவர் தொழில் துறை அமைச்சராக இருந்த போது நேர்முக உதவியாளராக மேல் குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் இருந்து வந்தார்.

    இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத், அண்ணன் எம்.சி. தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குமார் மாமனார் ராமச்சந்திரன் மற்றும் மாமியார் ஆகியோரை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தாக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசார் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இத்தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. மேலும் தற்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருவதால் எந்தவித விசாரணையும் இன்றி முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என கடும் குற்றம்சாட்டி இருந்தனர்.

    இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே திரளாக கருப்பு பேட்ச் அணிந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் எம்.சி.எஸ்.பிரவீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீது தி.மு.க. அரசு பொய்யான வழக்கினை பதிந்து உள்ளது என கூறி சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
    • என்றென்றும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    திருவெண்ணைநல்லூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட விருத்தாச்சலம் மெயின் ரோட்டில் நரிக்குறவர் சமுதாய மக்கள் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்து வந்தனர். இதனை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு தனது சொந்த செலவில் நரிக்குறவ மக்களுக்கு வீடு கட்டி முடித்துள்ளார். இந்த 20 வீடுகளை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    2023-ம் ஆண்டின் சிறப்பான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன். அ.தி.மு.க சார்பில் சிறப்பான வீடுகளை கட்டிக் கொடுத்த மாவட்ட செயலாளர் குமரகுருவை நான் பாராட்டுகிறேன். அனைவருக்கும் வீடு வேண்டும். உடுத்த உடை வேணும். சாப்பிட உணவு வேண்டும். இந்த மூன்றையும் வழங்கியவர் எம்.ஜி.ஆர். அதற்குப் பிறகு ஜெயலலிதா தொடர்ந்து பணியாற்றினார்.

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம். 20 நரிக்குறவர்களின் குடும்பங்களில் நாம் சிரிப்பை காண்கிறோம். இதுதான் அ.தி.மு.க.. இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பதில் முதலிடம் தமிழ்நாடு. இதை உருவாக்கி காட்டியது அதிமுக.

    அரசு பொங்கல் தொகுப்பு என்கிற பெயரில் தொகுப்பு பொருட்களை தற்போது அறிவித்தார்கள். ஆனால் அதில் கரும்பை தவிர்த்து விட்டார்கள். கரும்பு தான் நமது பாரம்பரிய பழக்கம். ஆனால் கரும்பை கூட வழங்காமல் நிராகரித்து விட்டார்கள். ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்று போராட்டத்தினை அறிவித்தது.

    அதன்பின்னர்தான் தற்போது கரும்பையும் பொங்கல் தொகுப்பில் சேர்த்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் பொங்கல் தொகுப்பு என்கிற திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2500 அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அறிக்கை கொடுத்தார். ஆனால் தற்போது 1,000 ரூபாய் தான் வழங்குகிறார்.

    கொரோனா காலத்தில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். என்றென்றும் ஏழை மக்களுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்திலேயே பெண்ணுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
    • கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவுடைதங்கம் (வயது 75). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவி இறந்து விட்டார்.

    ஆவுடைதங்கத்தின் தங்கை பத்மாவதி (65). இவருக்கு திருமணமான சில ஆண்டுகளிலே கணவன் இறந்து விட்டார். இதன் காரணமாக ஆவுடைதங்கம் தனது தங்கை பத்மாவதியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

    இதனை தொடா்ந்து விளாத்திகுளம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆவுடைதங்கம், பத்மாவதி ஆகியோருக்கு புத்தாடைகள், காலணிகள் மற்றும் உணவுப் பொருட்களை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வழங்கினார்.

    பின்னர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்பதற்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பும் வர உள்ளது. அதன் பிறகு இப்பிரச்சனைகள் எல்லாம் நிறைவு பெற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று நிலைநிறுத்தப்படும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் சென்று கனிமொழி எம்.பி. பேசி வந்தார். அப்போதைய அ.தி.மு.க. அரசு பாரபட்சம் பார்க்காமல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தோம். அந்த ஒரு சம்பவத்தை வைத்து 2021-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மையக் கருத்தாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரசாரம் செய்தனர்.

    சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கூட்டத்திலேயே பெண்ணுக்கு தி.மு.க. நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வதாக வந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
    • தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி செயல்பட்டு வருகின்றனர்.

    தற்போது வரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வருகிற கடிதங்கள் அனைத்தும் தலைமைக் கழகத்துக்கு தான் அனுப்பப்படுகிறது.

    அந்த வகையில் தேர்தல் கமிஷனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் கடிதங்களும் அ.தி.மு.க.வின் தலைமை கழகத்துக்குதான் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் கூட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தது.

    இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவித்திருந்தனர்.

    இப்படி எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

    இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு யார் பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் விளக்கி இருந்தது.

    அதன்படி அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தி.மு.க., பா.ம.க.வில் தலைவர்களுக்கும், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளர்களுக்கும் பதவிகளை குறிப்பிட்டு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்திய தேர்தல் கமிஷனின் இந்த விளக்க கடிதம் கடந்த வியாழக்கிழமை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கிடைத்ததும் அதன் அடிப்படையில் அவர் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் கமிஷனின் தபால் பட்டுவாடாவை ஊழியர் மூலம் (மெசேஞ்சர்) ஒவ்வொரு கட்சிக்கும் கொடுத்து அனுப்பினார். அதில் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளாமல் வியாழக்கிழமையே திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.

    2-வதாக வந்த அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    இதனால் 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறுகையில், "அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிதான் உள்ளது என்றும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே 3 கடிதங்கள் கொடுத்து இருக்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.

    எனவே இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மறுபடியும் கடிதம் அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பதாக" தெரிவித்தார்.

    எனவே வருகிற 16-ந்தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ×