search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • ஆவணங்களை திருடிச் சென்றதாக சி.வி.சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்

    சென்னை:

    சென்னை அருகே வானகரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அங்கு குவிந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் தரப்பினர் அலுவலக கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். பொருட்கள் சூறையாடப்பட்டன.

    இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்களை திருடிச் சென்றதாக சி.வி.சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது இனி நடக்காது என எடப்பாடி தரப்பு வாதம்
    • நாளை எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவு

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.

    அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடும்போது, யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார் என்றும், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்றும் குறிப்பிட்டார். தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பயன் அடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயன் அடையும் வகையில் அல்ல என்றும் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலை ஏற்படும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட முன் வரமாட்டார்கள் என்பதால் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும். அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு.

    கூட்டம் நடத்த கூடாது என ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது. இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளதால், ஒரு தரப்பு நீதிமன்றத்துக்கு வந்து கூட்டங்களை கூட்டுவது குறித்து நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டி வரும். எனவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.

    பிற்பகலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் வாதாடினர். "மாவட்ட செயலாளர்கள் தான் ஒற்றை தலைமை கோரியதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது, அதனால் தான் எந்த புள்ளி விவரமும் இல்லை என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார் கட்சி துவங்கிய போது 1972-ல் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாது என விதி உள்ளது. 2017ல் இரு பதவிகள் உருவாக்கப்பட்ட போது, பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது' என ஓபிஎஸ் வக்கீல்கள் தெரிவித்தனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். மேலும், எழுத்துப் பூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்யும்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    • ஜூலை 1-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தனி நீதிபதி கூறி உள்ளது தவறு.
    • அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளதும் தவறானது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ண குமார் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயணன், சி.எஸ். வைத்தியநாதன், அரிமா சுந்தரம், நர்பதா சம்பல் ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள். அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய ஒதுக்கப்பட்டது.

    முதலில் எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடினார். அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு அப்பால் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். ஜூலை 1-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளதை தனி நீதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

    ஜூலை 1-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தனி நீதிபதி கூறி உள்ளது தவறு. அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளதும் தவறானது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது.

    கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோர எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி அடிப்படை உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி கூறி உள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.

    தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பயன் அடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயன் அடையும் வகையில் அல்ல. தனி நீதிபதியின் உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

    2,190 பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி நடக்கும் என்று ஜூன் 23-ந்தேதி அறிவிக்கப்பட்டது. 2,539 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கட்சியின் பொதுக்குழு உச்சபட்ச அமைப்பு என்பதால் ஒன்றரை கோடி அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவும் இல்லை என்று கூற முடியாது. ஒன்றரை கோடி அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற வாதம் ஏதும் முன்வைக்கவில்லை.

    ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கவில்லை. கோரப்படாத நிவாரணம் வழங்கியது அசாதாரணமானது.

    ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு குறித்து ஜூன் 23-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. 2539 பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர்.

    கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக்கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும்.

    ஜூன் 23-ந்தேதி பொதுக்குழுவில் ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்பு ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்தார். பொதுக்குழு ஜூன் 23-ந்தேதி நடந்தது என்பதிலோ, அதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார் என்பதிலோ அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி நடக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டதிலோ பிரச்சினையும் இல்லை.

    பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. கட்சி விதிகளின்படிதான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டுவது தொடர்பான கட்சி விதிகளில் நோட்டீஸ் கொடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் மறுத்ததால் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடினார்.

    அவர் வாதாடுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலை ஏற்படும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட முன் வரமாட்டார்கள் என்பதால் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும். அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு.

    அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க கட்சியில் அதிகாரமில்லை. பொதுக்குழுவுக்கு அடிப்படை உறுப்பினர்களை அழைப்பதில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் தான் வழக்கே தொடரப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படவில்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கூட்டம் நடத்த கூடாது என ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது. இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளதால், ஒரு தரப்பு நீதிமன்றத்துக்கு வந்து கூட்டங்களை கூட்டுவது குறித்து நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டி வரும்.

    எனவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.

    தொடர்ந்து வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. இன்று பிற்பகலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் வாதாடுகிறார்கள்.

    • ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில் ஒரே அமர்வு அமைக்க கோரிக்கை
    • அதிமுக வழக்குகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் பட்டியலிட நீதிபதி உத்தரவு

    சென்னை:

    அதிமுக நிர்வாகம் மற்றும் பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிப்பதற்கு சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் என ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிசாமி மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில் ஒரே அமர்வு விசாரிக்கும் வகையில் இந்த சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் என மனுதாரர்கள் கூறியிருந்தனர்.

    இந்நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அமர்வு தொடர்பாக மனு அளிக்கப்பட்டிருப்பது தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுப்பதுதான் வேலையா? தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என்று நினைக்கிறீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து அதிமுக வழக்குகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி மீண்டும் தனக்கு முன்பாக பட்டியலிடுமாறு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

    • பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர்.
    • அரசியலில் பச்சோந்தி என்றால் அது கே.பி.முனுசாமிதான். பன்னீர்செல்வம் நிறம்மாறாத பூ போன்றவர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அருகில் இருந்து செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதிகார வெறியால் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதல் காரணமாக என்னை மட்டுமின்றி தனது தம்பி ஓ.ராஜாவையும் கட்சியில் இருந்து நீக்கினார். அவர்கள் கூறிய அத்தனை விஷயங்களையும் ஏற்றுக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் அமைதியாக செயல்பட்டார்.

    ஆனால் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்க துடிக்கிறார். அவர் ஒருபோதும் அ.தி.மு.க.வின் மன்னனாக முடிசூட முடியாது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4500 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த வழக்கில் அவர் விரைவில் சிறைக்கு செல்வார்.

    பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர். அரசியலில் பச்சோந்தி என்றால் அது கே.பி.முனுசாமிதான். பன்னீர்செல்வம் நிறம்மாறாத பூ போன்றவர். எப்போதும் ஒரேமாதிரிதான் இருப்பார். கே.பி.முனுசாமி ஒரு எட்டப்பன். பழனிசாமி கூடவே இருந்து அவரை காலி செய்யும் பணியை செய்து வருகிறார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா என்னிடம் பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததுதான் மிகப்பெரிய தவறு என்று கூறினார். இந்தியாவின் ஊழல்களுக்கு எல்லாம் மிகப்பெரிய ஊழலாக செய்த நெடுஞ்சாலைத்துறை ஊழலில் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய அறிக்கை குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீது ஜெயக்குமார் குற்றம் சாட்டுவது கண்டணத்துக்குரியது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தும்படி தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறேன். இதற்காக பெரிய போராட்டத்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதே வழக்கு தொடர்பாக, ஓபிஎஸ் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை இன்று முன் வைக்கின்றனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதே வழக்கு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இதனை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமியின் கூடுதல் மனுவை இன்று விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து இந்த வழக்க இன்று விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது இருதரப்பும் தங்களது தரப்பு வாதங்களை முன் வைக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
    • நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11-ந் தேதி சென்னையில் நடந்தது.

    அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி விதிகளில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.

    ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த பொதுக்குழுவில் ஏகமனதாக சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் சமீபத்தில் அந்த மேல் முறையீடு மனு விசாரணைக்கு வந்த போது, "ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது" என்று நீதிபதி அறிவித்தார். மேலும் ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலையே அ.தி.மு.க.வில் நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி தனது உத்தரவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது. எனவே மீண்டும் இருவரும் சேர்ந்து கூட்டலாம் என்று நீதிபதி கூறி இருந்தார்.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. அவர்கள் மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் சமரச முயற்சிகளை மேற்கொண்டனர்.

    ஆனால் இந்த சமரச முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து உள்ளார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த விசாரணை நடந்தது.

    இந்த மேல் முறையீட்டு வழக்கில் தங்களை கேட்காமல் தீர்ப்பளிக்க கூடாது என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஏற்கனவே மனு செய்திருந்தனர். இதனால் இன்றைய வழக்கு விசாரணையின் போது ஓ.பன்னீர் செல்வம் அணி வக்கீல்களும் ஆஜரானார்கள்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு நாளை பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். எனவே நாளை முதல் விசாரணை நடைபெறும்.

    • கோவைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
    • கோவையில் முதல்-அமைச்சர் செல்லக்கூடிய வழிகள் எங்கும் திரளான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் உள்ள தி.மு.கவினர் செய்து வருகின்றனர்.

    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக அவர் நாளை (23-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.

    நாளை இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுநாள்(24-ந் தேதி) கோவை ஈச்சனாரியில் நடக்கும் பிரம்மாண்ட அரசு விழாவில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் இரவில் பொள்ளாச்சியில் நடக்கும் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேரூரையாற்றுகிறார். அப்போது அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோவைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    மேலும் கோவையில் முதல்-அமைச்சர் செல்லக்கூடிய வழிகள் எங்கும் திரளான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியில் உள்ள தி.மு.கவினர் செய்து வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதே நாளில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கோவைக்கு வருகை தர உள்ளார்.

    கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மகள் பூப்புனித நன்னீராட்டு விழா நாளை மறுநாள் 24-ம் தேதி (புதன்கிழமை) சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்.

    அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரம் ஆன பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி கோவைக்கு வருகிறார். இதனால் அவருக்கு மற்ற இடங்களில் கொடுக்கப்பட்ட வரவேற்பை விட மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அ.தி.மு.கவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அரச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் கோவை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் திரளாக வந்து உற்சாக வரவேற்பு கொடுப்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    ஒரே நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கோவையில் இருப்பதால், மாவட்ட முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர்.
    • ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டம் புளியஞ்சேரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம், எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தவர். இந்த இயக்கத்திற்கு எந்தவிதமான தியாகமும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

    சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தவித சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களை சேர்க்க விடமாட்டேன்.

    இதேபோல் டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். பல்வேறு காலக்கட்டங்களில் தன்நிலையை மாற்றி பேசி சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் அவர் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஒரு இயக்கத்தில் கடுமையாக போராடி, பல சோதனைகளை சந்தித்து, பல அவமானங்களை சந்தித்து, அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. அவர் ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர்.

    அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தலைவர் நாட்டின் பிரதமர் சொன்னார் என்பதற்காகதான் நான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என சொன்னால், அவர் எவ்வளவு சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும். அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சுய நலத்திற்காக கட்சியையும், கட்சி தலைமையையும் பயன்படுத்தி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தரமற்ற உணவு காரணமாக, உணவகங்களை நம்பி வசிப்போர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
    • உயிருக்கு உலை வைக்கும் தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக, வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், கிராமப்புறங்களில் இருந்தும் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு வருபவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் உள்ளனர். இதற்கேற்ப உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும், நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன.

    பெரும்பாலான சைவ மற்றும் அசைவ உணவகங்களில் தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறையினரின் ஆய்வு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய உணவகங்களில்கூட, சமையலறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததையும், உணவுப் பொருட்களில் புழு, பூச்சியும், கெட்டுப்போன இறைச்சி வைக்கப்பட்டு இருந்ததையும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

    தரமற்ற உணவு காரணமாக, உணவகங்களை நம்பி வசிப்போர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உயிருக்கு உலை வைக்கும் தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து உணவகங்களிலும் காலமுறை ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தனிக்கவனம் செலுத்தி, உணவகங்களின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப் பாதுகாப்புத் துறையினை மேம்படுத்தி, கால முறை ஆய்வுகளை மேற்கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது.
    • ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலை கசியவிட்டார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018-ல் ஜெயலலிதாவின் அரசுதான் ஆணையம் அமைத்தது. அதே நேரத்தில், ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக இந்த அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை 3,000 பக்கங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. அரசும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. அந்த ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலை கசியவிட்டார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைவதற்கான கோர்ட்டு தடை விலகிய பிறகும் தொண்டர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • அ.தி.மு.க.வினரோ, அல்லது சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்களே அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த மாதம் 11-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தொண்டர்கள் இரண்டு பிரிவாக மோதிக்கொண்டனர்.

    பூட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. தலைமை கழகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பொருட்கள் சூரையாடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆட்களும் தலைமை கழகத்தில் புகுந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை திருடிக் கொண்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து தலைமை கழகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

    இதுதொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்டு 20-ந்தேதி வரையில் அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் யாரும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதன்படி அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. அலுவலகத்துக்குள் யாரும் செல்லாமலேயே இருந்தனர். அங்கு 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தினுள் இன்று முதல் கட்சி தொண்டர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் திடீர் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதலில் சேதம் அடைந்த பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. கட்சியினர் உள்ளே நுழைந்தால் இது தொடர்பான ஆதாரங்கள் காணாமல் போக வாய்ப்பு ஏற்படும் என்றும், எனவே கட்சியினர் யாரும் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வரவேண்டாம் என்றும் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைவதற்கான கோர்ட்டு தடை விலகிய பிறகும் தொண்டர்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் அ.தி.மு.க.வினரோ, அல்லது சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்களே அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை கழகம் மற்றும் இருபுறம் உள்ள சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெறும் நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பும் உள்ளது. அப்போது மீண்டும் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் போலீசார் கருத்தில் கொண்டுள்ளனர்.

    இதையடுத்து அ.தி.மு.க.வில் மோதல் விலகி இயல்பு நிலை திரும்பும் வரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்னை மாநகர காவல் முடிவு செய்துள்ளது.

    ×