search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • பராமரிப்புப் பணிகாரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள்

    காங்கயம் :

    தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம்பாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம், செட்டிபாளையம், முருகன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம்.

    பழையகோட்டை, நத்தக்காடையூர், மரு–துறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

    காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு, தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகர், அண்ணா நகர், ஏ.பி.புதூர், எஸ்.ஆர்.ஜி.வலசு ரோடு, சேரன் நகர், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம், புதுப்பை துணை மின் நிலையத்திற்குட்பட்ட புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூர், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூர், கரைவலசு, பட்டத்திபாளையம், செம்மடை, புள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் அறிவித்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தாராபுரம் கோட்டம் மூலனூர் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் கம்பிகளின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வஞ்சி வலசு, நத்தம்பாளையம், சாணார்பாளையம், குருநாதர் கோட்டை, பாரக்கடை, அக்கரைப்பாளையம், மாம்பாடி, புளியம்பட்டி, நாராயணா வலசு, நால்ரோடு, எரிசனம்பாளையம், ஒத்தப்பாளையம், கருப்பணவலசு, நடுப்பாளையம், மணலூர் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • விஸ்வநாதப்பேரி உப மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின் விநியோக செயற்பொறி யாளர் மாரியப்பன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதப்பேரி உப மின் நிலையத்தில் நாளை (28-ந் தேதி ) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதில் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வ நாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழி வழிக் குளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தா டப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

    மின் கம்பிகளில் தொடும் நிலையிலுள்ள மரக்கிளை களை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தெப்பக்குளம் துணை மின்நிலையம் காமராஜர் சாலை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    ஆரப்பாளையம் துணை மின்நிலையம் தமிழ்ச்சங்கம் பீடர் மற்றும் தெப்பக்குளம் துணை மின்நிலையம் காமராஜர் சாலை பீடரில் நாளை (28-ந் தேதி) மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக வடக்கு வெளி வீதி, வடக்கு மாசி  வீதி, (பிள்ளையார் கோவில் முதல் ராமாயணசாவடி வரை), மேல மாசி வீதி, (பிள்ளையார் கோவில் முதல் மீனாட்சி பேன் ஹவுஸ் வரை), சேணையர் காலனி, கீழஅண்ணா தோப்பு, ஒர்க் ஷாப் ரோடு, நாயக்கர் 4-வது தெரு, வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி.

    காமராஜர் சாலை மெயின்ரோடு, பங்கஜம் காலனி 3-வது தெரு, சந்தைபேட்டை, நவரத்தினபுரம், ஏ.வி.டி.பந்தல் தெரு, சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி சுற்றியுள்ள பகுதிகள், காதர்கான் பட்லர் சந்து, மாயாண்டி தெரு, வெங்கடபதி தெருக்கள் முழுவதும், பிஷர் ரோடு, சீனிவாசா பெருமாள் கோவில் தெருக்கள் முழுவதும், சுடலைமுத்து சந்து, பழைய இங்கிலீஷ் கிளப் சந்து, தொழில் வர்த்தக சங்க அலுவலக பகுதி ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • விருதுநகர் திருத்தங்கல், ஆவியூர், விருதுநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம், அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (28-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல், செங்கமநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடப்பட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவியூர், குரண்டி, அரசகுளம், மாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழ்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சுழி, தமிழ்பாடி, பச்சேரி, ஆனைக்குளம், அம்மன்பட்டி, வளையப்பட்டி, காத்தான் பட்டி, இலுப்பையூர், பனையூர், வி.கரிசல்குளம், காரேந்தல், ஜெயவிலாஸ் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது.

    அதேபோல புல்வாய்க்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான புல்வாய்க்கரை, ஆவரங்குளம், அ. முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், எஸ்.நாங்கூர், பிள்ளையார்குளம், தச்சனேந்தல், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

    நரிக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உழக்குடி, இருஞ்சிறை, கட்டனூர், நாலூர், இலுப்பைக்குளம், பனைக்குடி, இனக்கனேரி, எஸ். மறைக்குளம், குறவைகுளம், பெரிய ஆலங்குளம், முடுக்கன்குளம் ஆகிய பகுதிகளிலும் நாைள மின்தடை செய்யப்படும்.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அப்பகுதியில் பழைய மின் கம்பிகளை அதிக திறன் கொண்ட மின் கம்பிகளாக மாற்றும் பணி மற்றும் மரக் கிளைகளை வெட்டும் பணி நடைபெற உள்ளது. ஆதலால் மதுரைரோடு, கச்சேரி ரோடு, லட்சுமிகாலனி, நேருஜிநகரில் சில பகுதிகள், கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், என்.ஜி.ஓ. காலனியில் முத்தமிழ் வீதி, அம்மன் வீதி, வி.வி.வி. கல்லூரி பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம், அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • மாதந்தோறும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • அதன்படி திண்டுக்கல் நகர் பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 27-ந்தேதி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி அசோக்நகர், பிள்ளையார் பாளையம், பாண்டியன் நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், போடிநாயக்கன்பட்டி, ஸ்பென்சர் காம்பவுண்டு, ஆரோக்கியமாதாதெரு,

    மென்டோன்சான் காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை
    • காந்திநகா், ரத்தினபுரி நகா், ஐஸ்வா்யா நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளா் கே.அறம்வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.

    அதன்படி காந்திநகா், ரத்தினபுரி நகா், ஐஸ்வா்யா நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் என்று செயற்பொறியாளர்கள் கூறி உள்ளனர்.
    • மேற்கண்ட தகவல்களை செயற்பொறியாளர்கள் மோகன், பழனி தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை நகரில் நாளை (24-ந்தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    அனுப்பானடி, சுப்பிர மணியபுரம், தெப்பம் துணை மின் நிலையங்களில் அவசர கால பணிக்காக பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    தாய் நகர், மாருதி நகர், கங்கா நகர், சரவணா நகர், மாணிக்கம் நகர், ெஜ.ஜெ.நகர், அம்மன் தெரு, ராஜீவ்காந்தி தெரு கடைசி பகுதிகள், மாறன் ஆயில் மில் பகுதிகள். சுப்பிரமணியபுரம் துணை மின் நிலையத்தில் பவர் ஹவுஸ் ரோடு பகுதி மட்டும்.

    பாலரங்காபுரம், புதுராம்ரோடு, பழைய குயவர் பாளையம் ரோடு, இந்திரா நகர், சி.எம்.ஆர். ரோடு ஒரு பகுதி மற்றும் நரசிம்மபுரம்.

    மதுரை வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    யாகப்பா நகர், சிவா ரைஸ்மில், மருதுபாண்டியர் தெரு, நெல்லை வீதி, தாசில்தார் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    கூடல்நகர், செக்டார் 6 ஏரியா, ஆனையூர் ஆபீசர்ஸ் டவுன், சிலேயனேரி, கணபதி நகர், மல்லிகை நகர், இந்திரா நகர், பிரசன்னா நகர், மலர் நகர், செல்வா கார்டன், தோபாஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    எஸ்.என்.ஏ. அப்பார்ட்மெண்ட், சர்வேஸ்வரன் கோவில், மவுலானா சாகிப் தெரு, பாண்டியன் அப்பார்ட்மெண்ட், பூந்தமல்லி நகர், குலமங்கலம் மெயின் ரோடு, ஜீவா ரோடு, போஸ் வீதி, சக்தி மாரியம்மன் கோவில் தெரு, மீனாட்சிபுரம்-சத்திய மூர்த்தி 1 முதல் 7 தெருக்கள், ஓடக்கரை, குருவிகாரன் சாலை, கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, சட்டக்கல்லூரி, மடீசியா மகால், ராஜாமுத்தையா மன்றம், உலக தமிழ் சங்கம மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகள்.

    ஆத்திகுளம், கங்கை தெரு, குறிஞ்சி நகர், கற்பகவிநாயகர் கோவில் தெரு, வீரபுலவர் காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

    கோமதிபுரம், மேலமடை, ஹவுசிங் போர்டு, செண்பக தோட்டம், வளர் நகர், ஸ்ரீநகர், டி.ம்.நகர், பிரீத்தி மருத்துவமனை, பூம்புகார், உத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    வேல்நகர், அன்புநகர், படையப்பா நகர், ஷீபா நகர, அதிபராசக்தி நகர், முனீஸ்வராநகர், அண்ணாமேடு, இ.பி.காலனி, தாமிரபரணி தெரு, மீனாட்சி நகர், மயில் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் சிக்னல் அருகில், டி.டி.சி.நகர், லே ஏரியா பகுதிகள், அண்ணா நகர் 80 அடி ரோடு, சுகுணா ஸ்டோர், வைகை காலனி, எச்.ஐ.ஜி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல், பிள்ளையார்கோவில் தெரு, ெபான்மேனி நாராயணன் தெரு, ஜானகிநாராயணன் ெதரு, அருணாச்சலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வாழ்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது ெதரு, ராமையா ஆசாரி தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு.

    ஏ.பி.கே. மெயின் ரோட்டில் உள்ள வெற்றி தியேட்டர் முதல் ரினால்ட் கம்பெனி வரை, வில்லாபுரம் தமிழ்நாடு ஹவுசிங்போர்டு காலனி கிழக்கு பகுதிகள், மீனாட்நி நகர், துளசிராம் தெரு, கணபதிநகர், செந்தமிழ் நகர், காவேரி நகர், முத்துராமலிங்கபுரம் 1 முதல் 4-வது தெரு வரை, குரு மகால் பகுதிகள், ஓம் சக்தி நகர், பரமேஸ்வரர் அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1-2, வாசுகி தெரு மற்றும் நேதாஜி தெரு.

    சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, மேக்ஸ் அபார்ட்மெண்ட், கணபதி நகர், பொற்றாமரை நகர்.

    எம்.எம்.காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்குபிள்ைள நகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, பை-பாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேட் பேங்க், மதுரா வீடுகள், மல்லிகை வீடுகள் குடியிருப்பு பகுதிகள், பிரியங்கா அவென்யு, அர்ஜூனா நகர், க்ளாட்வே கிரீன் சிட்டி, வ.உ.சி. தெரு, பராசக்தி நகர், காவேரி நகர் 1 முதல் 7 வரை, ஆறுமுக நகர் 1,2-வது தெரு, ஜவகர் நகர், ஸ்ரீராம் நகர், எம்.எம்.சிட்டி.

    மேற்கண்ட தகவல்களை செயற்பொறியாளர்கள் மோகன், பழனி தெரிவித்துள்ளனர்.

    • காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி மின் கோட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, கானாடுகாத்தான், கல்லல், சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் நாளை(24-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை உயரழுத்த மின் பாதையில் உள்ள மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணிக்காக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    அதன்படி காரைக்குடி துணை மின் நிலையத்தில், அண்ணாநகர் பீடரில் ஜீவா நகர், போலீஸ் காலனி, செக்காலை, சுப்பிரமணியபுரம் தெற்கு, புதிய பஸ் நிலையம், அழகப்பாபுரம், எச்.டி.சி. பீடரில் ஆறுமுகநகர், மன்னர் நகர், திலகர் நகர், பாரிநகர், தந்தை பெரியார் நகர், சிக்ரி. கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் கானாடுகாத்தான், சூரக்குடி, திருவேலங்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி, உ.சிறுவயல், ஆவுடைப் பொய்கை, நெற்புகப்பட்டி, நேமத்தான்பட்டி.

    கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் கல்லல், கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், சாத்தரசம்பட்டி, வெற்றியூர், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, சாக்கவயல் துணை மின் நிலையத்தில் வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, பீர்க்கலைக்காடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை. மித்ராவயல் பீடரில் சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பக்குடி, லட்சுமி நகர், பொன்நகர். தேவகோட்டை துணை மின் நிலையத்தில், வேப்பங்குளம் பீடரில் - உடப்பன்பட்டி, கோட்டூர், மாவிடுதிகொட்டை, திருமணவயல் மேலமுன்னி, வேலாயுத பட்டினம். கண்ணங்குடி பீடரில் கண்ணங்குடி, ராம்நகர், இறகுசேரி, பைக்குடி, அகதிகள் முகாம், நடராஜபுரம், அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

    இத்தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை மற்றும் பொட்டப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகள், தெ.புதுக்கோட்டை, இடைக்காட்டூர் ஆகிய 4 உயரழுத்த மின் பாதைகளில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், எஸ்.காரைக்குடி, சன்னதி புதுக்குளம், மேலப்பிடாவூர், குசவபட்டி, காஞ்சிரங்குளம் காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. ஆனால் மானாமதுரை சிப்காட், கொன்னக்குளம், மனக்குளம், மானாமதுரை நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
    • பல்லடம் மின்சார வாரிய இயக்குதல் மற்றும் பேணுதல்

    பொங்கலூர் :

    பொங்கலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவினாசிபாளையம், வடக்கு அவினாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர்பகுதியில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு பல்லடம் மின்சார வாரிய இயக்குதல் மற்றும் பேணுதல் செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும்.
    • கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை சுப்ரமணியபுரம் துணைமின்நிலையம், டி.பி.கே.ரோடு பீடர், மாகாளிப்பட்டி துணைமின் நிலையம், மூலக்கரை மற்றும் கீரைத்துறை பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (23-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை டி.பி.கே. ரோடு, கிரைம்பிராஞ்ச், காஜிமார்தெரு, தெற்குமாடவீதி, மேல கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச், மேல பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்கார தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்லமுத்து ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளியம்மன் கோவில் தெரு, கீரைத்துறை பகுதிகள், மேலத்தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    திருப்பரங்குன்றம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (23-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடல்மலைத் தெரு, என்ஜினீயரிங் கல்லூரி, ஜி.எஸ்.டி.ரோடு, சன்னதிதெரு, பாம்பன்நகர், கிரீன்நகர், திருமலையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது
    • பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் அறிவிப்பு.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன்.22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளதால் அன்று காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை கரடிவாவி, கரடிவாவிபுதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆராக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி,பருவாயின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார்அறிவித்துள்ளார்.

    • காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
    • செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    பூமலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாைள செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் சென்ராம் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளானது மங்கலம், பூமலூா், மலைக்கோயில், அக்ரஹாரப்புதூா், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரை புதூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    ×