search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    • கடந்த 4 நாட்களில் பகல் நேர வெப்பம் 38.5 டிகிரி செல்சி யஸ் ஆகவும், இரவு வெப்பம் 21.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. கடந்த 4 நாட்களில் பகல் நேர வெப்பம் 38.5 டிகிரி செல்சி யஸ் ஆகவும், இரவு வெப்பம் 21.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவியது.

    இன்று 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி வரை இருக்கும்.

    வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 55 முதல் 75 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    இந்த நிலையில், இன்று 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டத் தில் பரவலமாக மழை பெய்ய வாய்ப்புள்ளளது. இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் தலா 8 மி.மீ, 5 முதல் 7-ந் தேதி வரை தினசரி 4 மி.மீ மழை யும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கோழிப்பண்ணையாளர்களுக்கு: சமீப நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருவதால், கோழிப்பண்ணைகளில் ஈக்களின் தொல்லை அதிக மாகியுள்ளது. ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்தும் முறைகளை கையாள வேண்டும். ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் கார்டை பயன்படுத்தலாம்.

    கால்நடை வளர்ப்போருக்கு: தற்போது மாவட்டத்தில் ஆங்காங்கே ஆட்டுக் கொல்லி நோய் தாக்குதல் தென்படுகிறது. இதை தடுக்க அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒரு முறை மறு தடுப்பூசி போட வேண்டும்.

    விவசாயிகளுக்கு:நடப்பு சித்திரைப் பட்டத்தில் நிலக்கடலை கோ-7 மற்றும் தரணி ரகத்தை தேர்வு செய்து விதைக்கலாம். நடப்பு மானாவாரி பரு வத்தில் ஆமணக்கு, உளுந்து, பாசிப்பயறு ரகத்தினை பயிரிடலாம். மரவள்ளிக்கி ழங்கு பயிரில் செம்பேன் நோய் தாக்குதலை கட்டுப்ப டுத்த இலை வழியாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும் என வானிலை முன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்று காரணமாக திருவாலங்காடு அடுத்த மணவூர் கிராமத்தில் சாலையோரம் மற்றும் வீடுகளில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் அந்த பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.

    மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்ற னர், இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,

    • பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது.
    • திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாநகரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன்காரணமாக பி.என்.ரோட்டில் 5 இடங்களில் சாலையோரத்தில் நின்ற மரங்கள் முறிந்து விழுந்தது. சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள வீதியில் சாலையோர மரத்துக்கு அடியில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. பலத்த காற்றுக்கு மரம் வேரோடு சாய்ந்து கார் மேல் விழுந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்து சேதமானது.

    உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு உதவி மாவட்ட அதிகாரி வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றி காரை அப்புறப்படுத்தினார்கள். இதுபோல் பி.என்.ரோட்டில் சரிந்த மரங்களால் போக்குகுவரத்து பாதிக்கப்பட்டது. அந்த மரங்களையும் வெட்டி அகற்றினார்கள். இதுபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் பகுதிகளில் சாலையோரம் நின்ற மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணியில் இருந்து மழை கொட்டியது. அத்துடன் காற்றும் பலமாக வீசியது. இதனால் ஆங்காங்கே உள்ள குட்டைகளில் மழைநீர் நிரம்பியது. தொடர்ந்து குளிர் காற்றும் இதமாக வீசியது.  

    • பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மாலை சுமார் பலத்த மழை பெய்தது.
    • கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் அடுத்துள்ள பெருமாநல்லூர் மற்றும் செங்கப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3.30 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது.

    இதனால் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், பாண்டியன் நகர், பூலுவபட்டி மற்றும் செங்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது பெய்துள்ள மழையினால் பூமி குளிர்ந்து, இதமான குளிர் காற்று வீசியது. இதனால் இந்த பகுதியில் குளிர்ச்சி நிலவியது. விவசாயிகள் வைகாசி பட்ட சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். 

    • அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
    • யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.

    தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.

    யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.

    சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 867 கன அடியாக சரிந்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    தற்போது இந்த பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 867 கன அடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட, திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 103.78 அடியாக இருந்த அணை நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.72 அடியாக சரிந்தது.

    இனிவரும் நாட்களில் இதேபோல் தொடர்ந்து நீர்வரத்து குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • காலையில் கடும் வெயிலும், மாலையில் கோடை மழையும் பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயிலும், மாலையில் கோடை மழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக கரிய கோவில், ஆனைமடுவு, வீராணம், ஆத்தூர் உள்பட பல பகுதி களில் கனமழை கொட்டி யது. இந்த மழையால் சாலை களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது.தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்ச மாக கரிய கோவிலில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதேபோல், ஆனைமடு 14, வீராணம் 13, ஆத்தூர் 11.2, கெங்கவல்லி 9, தம்மம்பட்டி 7, ஏற்காடு 2.6 மில்லிமீட்டர் என மாவட்டம் முழுவதும் 84.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

    • மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
    • 16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்சும் அகமதாபாத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது.

    ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

    இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மழை நிற்க வேண்டும் என ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    தொடர்ந்து மழை நீடித்ததால் நேற்று போட்டி நடைபெறாமல் போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனை தொடர்ந்து மாற்றுநாளான இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

    16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    • சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார்.
    • தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    இதேபோல், சந்தனகிரி பகுதியில் மாரியம்மன், விநாயகர் உள்ளது. இதன் அருகே இருந்த பழமை வாய்ந்த அரசமரம், வேப்பமரம் ஆகியவை நேற்று பெய்த மழையில் கோவில் கலசத்தின் மேல் சாய்ந்தது. இதில் கோவில் சுவர் இடிந்தது. இதனால் பக்தர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

    இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து மீண்டு வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.ஆத்தூர் நகரில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆத்தூர் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நேரம் காப்பாளர் அலுவலகமும் மழையால் சேதமடைந்தது.

    இதேபோல் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். நேற்று மாலை தலைவாசல் பகுதியல் மழை பெய்தது. இதையடுத்து மழைக்கு ஒதுங்குவதற்காக, செல்வி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த ஹாலோ பிளாக்ஸ் கல்லால் கட்டப்பட்ட வீட்டின் அருகே ஆடுகளுடன் ஒதுங்கியுள்ளார்.

    அப்போது, தொடர் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார். ஒரு ஆடு உடல் நசுங்கி பலியானது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.
    • நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 'லீக்' ஆட்டம் கடந்த 21-ந் தேதி முடிவடைந்தது.

    இதன் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி, ஐதராபாத் ஆகிய அணிகள் 5 முதல் 10-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    'பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

    24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது.

    26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த பலத்த மழையால் குறைந்த அளவு ஓவர்கள் வைத்து கூட நடத்த இயலாமல் போனது.

    இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் விளையாடப்படும்.

    9.45 மணிக்கு தொடங்கினால் 19 ஓவர்களாக குறைக்கப்படும். 10 மணிக்கு 17 ஓவர்களாவும், 10.30 மணிக்கு 15 ஓவர்களாகவும் குறைக்கப்படும்.

    நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவர்கள் வீதம் ஆடப்படும்.

    அதுவும் முடியாவிட்டால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும். நள்ளிரவு 1.20 மணிக்குள் ஆடுகளம் விளையாட தயாராக இருந்தால் சூப்பர் ஓவர் நடைபெறும்.

    சூப்பர் ஓவரும் நடத்த இயலாமல் போனால் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருந்ததால் குஜராத் அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும். அந்த அணி 'லீக்' முடிவில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று இருந்தது. சி.எஸ்.கே. 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

    இன்று மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றன.

    மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டால் டோனியால் 5-வது ஐ.பி.எல். கோப்பை கனவு நனவாகாமல் போய்விடும். தனது கடைசி தொடரில் கோப்பையுடன் விடைபெறும் ஆர்வத்தில் டோனி உள்ளார்.

    போட்டி முழுமையாக நடைபெற்று சிறப்பாக ஆடி அணி கோப்பையை வெல்வதே நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் கடுகாம்பாளையம், தோட்டகாட்டூர், ஆலங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை,நேந்திரன், கதளி உள்ளிட்ட 500-க்கும் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.

    ஒரு வாழை நடவு செய்ய சுமார் 10 முதல் 150 ரூபாய் வரை செலவு செய்து இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடபட்ட வாழை மரங்களுக்கு காப்பீடு செய்து இருந்தும் காற்றினால் சாய்ந்த மரங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில்லை எனவும், பெரும்பாலும் இயற்கை சீற்றத்தின் போது காற்றினால் வாழை மரங்கள் சேதம் ஆவதாகவும் அவ்வாறு காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கும் காப்பீட்டு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன
    • குஜராத்தில் இன்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் குஜராத்தில் தற்போது நிலவும் வானிலை ரசிகர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான குவாலிஃபையர்- 2 போட்டியின் போதும் மழை பெய்தது.

    இன்று மதிய நிலவரப்படி வானம் ஓரளவு தெளிவாக இருந்தது. ஆனாலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழைக்குப் பிறகு போட்டி தொடங்கி குறைந்தபட்சம் 5 ஓவர்களை முடிக்க முடியாவிட்டால், போட்டியை நடத்த மற்றொரு நாள் (ரிசர்வ் நாள்) ஒதுக்கப்படும். ஆனால், சில கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்படும். இன்று குறைந்தபட்சம் ஒரு பந்தாவது வீசப்பட்டால், ரிசர்வ் நாள் போட்டி முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி நடைபெறும். இன்று டாஸ் போடப்பட்டாலும், ஆட்டம் நடக்காத சூழ்நிலையில், நாளை இரு தரப்புக்கும் 20 ஓவர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு போட்டி தொடங்கும். ரிசர்வ் நாளில் மீண்டும் டாஸ் போடப்படும். அணிகளில் மாற்றம் செய்ய கேப்டன்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

    ×