search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    • இலங்கை அணியின் பதும் நிசங்கா 46 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய நிசங்கா மற்றும் கருணரத்னே முறையே 46 மற்றும் 15 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் குசல் மெண்டிஸ் 39 ரன்களையும், சதீர சமரவிக்ரம 36 ரன்களையும் எடுத்தனர். சரித் அசலங்கா 14 ரன்களையும், மேத்யூஸ் 23 ரன்களிலும், சமீரா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய தீக்ஷனா பொறுப்பாக ஆடி 29 ரன்களை எடுத்தார். போட்டி முடிவில் இலங்கை அணி 241 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரகுமான்  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரஷித் கான், அப்துல்லா ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக ஆடிய இப்ராஹிம் 87 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 58 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் 40 ரன்களுடனும், ஷாகீன் ஷா அஃப்ரிடி 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக், முகமது நபி, ஒமர்சாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி முறையே 65 மற்றும் 87 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹமத் ஷா 77 ரன்களை அடித்தார்.

    இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய கேப்டன் ஹஷ்மதுல்லா சிறப்பாக விளையாடி 48 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

    • கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 58 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்த வந்த சௌத் ஷகீல் 25 ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அகமது 27 பந்துகளில் 40 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இவருடன் சிறப்பாக விளையாடிய ஷதாப் கான் 40 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நவீன் உல் ஹக், முகமது நபி, ஒமர்சாய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளிடையேயான போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • பாகிஸ்தான் அணி கடந்த இரு போட்டிகளில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களம் காண்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடி இருக்கும் நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

    அந்த வகையில், இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகின்றன. உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

    • சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
    • நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
    • சனிக்கிழமை நிலநடுக்கத்தில் 4 ஆயிரம் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

    இந்த நிலையில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    • நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான், உலகக் கோப்பை போட்டியில் வாங்கும் சம்பளத்தை தனது நாட்டு மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது. இதை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது.
    • புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். அந்தவகையில் பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது. எனினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இந்தநிலையில் சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறி உள்ள அனைவரும் வருகிற 31-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலீல் அப்பாஸ் ஜிலானி கூறினார். பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

    • பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின.
    • பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் தலிபான்கள் ஆட்சி நடக்கின்றது. தற்போதைய ஆட்சியில் மிக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி அதனை பின்பற்றும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்சியாளர்களின் உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனால் ஆப்கானிஸ்தானை சமூக அரசியல் கொள்கை அங்கீகாரத்தில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விலக்கி வைத்தன. அதன்மீது பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின. இதன் காரணமாக பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானை ஆளும் சக்தியாக அங்கீகரிக்க முடியாது. இருப்பினும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை பெற ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் தகுந்த வரைமுறைகளை பின்பற்ற வேண்டும், திறம்பட்ட ஆட்சிக்கு பெண்கள், குடிமக்களை கொண்டு பொருளாதாரத்தை உயர்ந்த வேண்டும். மேலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்" என்றார்.

    • கிறிஸ்தவத்தை பரப்புதல், ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு
    • இதுகுறித்து என்.ஜி.ஓ. அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை

    ஆப்கானிஸ்தானில் தலிபான், ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பெண்களுக்கான சுதந்திரத்தில் தலையிட்டு கல்லூரிக்கு பெண்கள் செல்லக் கூடாது, அழகு நிலையத்தில் பணிபுரியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்தது.

    மேலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் 18 ஊழியர்களை பிடித்து வைத்துள்ளதாக சர்வதேச உதவி பணி என்ற அமைப்பு, "தங்களுடைய 18 ஸ்டாஃப்களை தலிபான் பிடித்து வைத்துள்ளது. மத்திய கோர் மாகாணத்தில் உள்ள இரண்டு என்.ஜி.ஓ. அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களை தலிபான் பிடித்துள்ளது. அவர்கள் காபுல் சென்று கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஸ்டாஃப்களை பிடித்துச் செல்லவதற்கான காரணம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

    ஆப்கான் அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    கிறிஸ்தவத்தை பரப்புதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டதால் அமெரிக்காவைச் சேர்ந்தவர் உள்ளிட்ட ஸ்டாஃப்கள் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக உள்ளூர் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

    இந்த குற்ற்சாட்டுக்கு அமெரிக்கா, என்.ஜி.ஓ. ஆகியவை பதில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த என்.ஜி.ஓ. சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மட்டும் பணியாற்றி வருகிறது.

    • இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:

    ஹஷ்மதுல்லா ஷாஹிதி , ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சட்ரன், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சட்ரன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்

    • ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுக்கலாம்.
    • சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது ஆப்கானிஸ்தானுக்கு தெரியவில்லை.

    ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 37.4 ஓவரில் 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் ஆட்ட அதிகாரிகளால் ரன்ரேட் குறித்த சரியான கணக்கீடுகள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று ஆப்கானியர்கள் கூறினர்.

    37 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. சூப்பர் சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் நுழைய ஒரு பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என்ற தகவல் மட்டுமே அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. 37-வது ஓவரின் முதல் பந்தில் முஜீப் உர் ரஹ்மான் தூக்கி அடித்து பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இதனால் நான்-ஸ்ட்ரைக்கரில் இருந்த ரஷித் கான் போட்டி முடிந்து விட்டது என சோகத்தில் இருந்தார்.

    ஆனாலும் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

    ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரில் 293, 37.3 ஓவரில் 294, 37.5 ஓவரில் 295, 38 ஓவரில் 296, அல்லது 38.1 ஓவரில் 297 ரன்கள் எடுத்தால் கூட ஆப்கானிஸ்தான் ரன்ரேட் அதிகமாகி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். இந்த தகவலை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ட்ராட் கூறியுள்ளார்.

    இது குறித்து ட்ராட் கூறியதாவது:-

    கூறப்பட்ட நிபந்தனைகளை அதிகாரிகள் தனது அணிக்கு தெரிவிக்கவில்லை. அந்த கணக்கீடுகள் எங்களுக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் 37.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் 295 அல்லது 297 ரன்களைப் பெறலாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 

    ×