என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94740"
கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிக அளவு வருகை தருகிறார்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலோர் ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு வருவதால் ரெயில் நிலையத்தில் அதிக கூட்டம் காணப்படுகிறது. மேலும் டிக் கெட் எடுக்கவும் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை வழக்கம்போல ஊழியர்கள் பணியில் இருந்தனர். டிக்கெட் எடுக்க பயணிகளும் வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது சிறப்பு டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தனது காலை ஏதோ கடித்ததை உணர்ந்தார். பாம்புதான் தன்னை கடித்துவிட்டது என்று பீதி அடைந்த அவர் பாம்பு.... பாம்பு.... என்று அலறியபடி கவுண்டரில் இருந்து வெளியே ஓட்டம்பிடித்தார். அவருடன் பணியில் இருந்த மற்ற ஊழியர்களும் பதட்டத்துடன் வெளியே ஓடினார்கள்.
இதைப் பார்த்ததும் டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள் இடையேயும் பாம்பு பீதி ஏற்பட்டது. மேலும் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ரெயில் டிக்கெட் கவுண்டருக்குள் சென்று பாம்பை தேடினார்கள். நீண்ட நேரம் சோதனை நடத்திய பிறகும் பாம்பு எதுவும் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த பொந்து ஒன்றில் இருந்து எலி வெளியே வந்து ஓடியது. இதனால் ரெயில்வே ஊழியரை அந்த எலிதான் கடித்திருக்க வேண்டும். அவர் பயத்தில் தன்னை பாம்பு கடித்துவிட்டதாக பீதி அடைந்து உள்ளார் என்பதை தீயணைப்பு வீரர்கள் உறுதி செய்தனர்.
பாம்பு பீதி காரணமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னை:
வாக்குப்பதிவின்போது ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் (விவிபேட்) கோளாறு ஏற்பட்டு பல பகுதிகளில் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
நேற்று கேரளாவின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கண்ணூரு தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களித்துக் கொண்டு இருந்த போது திடீரென விவி பேட் இயந்திரத்தில் இருந்து சிறிய அளவிலான பாம்பு வெளியில் வந்தது. இதை பார்த்த வாக்காளர்கள் கூச்சலிட்டனர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
விவிபேட் இயந்திரத்தில் பாம்பு இருந்தது சர்ச்சையானது. காங்கிரசின் முன்னாள் அமைச்சர் சசி தரூர் இதுபற்றிய செய்தியை பகிர்ந்ததோடு இந்திய ஜனநாயகத்தில் இதுதான் முதல் முறை என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவை தனது டுவிட்டரில் பதிந்த நடிகை குஷ்பு மோடி ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிவிட்டார். இதற்கு சமூக வலை தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.
விவிபேட் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததற்கு கூடவா மோடியை விமர்சிக்க வேண்டும்? மோடி இயந்திரத்தையோ பாம்பையோ சப்ளை செய்தாரா? என்ற ரீதியில் குஷ்புவை விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால் குஷ்புவோ தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தன்னுடைய ஒரு படத்தை பகிர்ந்து இது விமர்சகர்களுக்கான பிரத்தியேக படம் என்று குறிப்பிட்டுள்ளார். #kushboo #PMModi
அரியாங்குப்பம் அருகே உள்ள மணவெளியை சேர்ந்தவர் ராஜா. வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு வசந்த் (வயது 19) என்ற மகனும், சந்தியா (17) மகளும் உள்ளனர்.
நேற்று இரவு ராஜா வெளியே சென்றிருந்தார். விஜயா தனது குழந்தைகளுடன் வீட்டில் படுத்திருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டுக்குள் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. எனவே விஜயா எழுந்து விளக்கை போட்டு பார்த்தார்.
அப்போது அங்கே 5 அடி நீளம் கொண்ட கருப்பு நிற பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தாயும், குழந்தைகளும் தவித்தனர். அக்கம் பக்கத்தினரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.
இதனால் அவசர போலீஸ் 100 எண்ணுக்கு போன் செய்து உதவி கேட்டனர். அவர்கள் வனத்துறை போன் எண்ணை கொடுத்து அங்கு பேசும்படி கூறினார்கள். அதன்படி வனத்துறை அலுவலகத்துக்கு போன் செய்தனர். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரம் முயற்சித்தும் எந்த பலனும் இல்லை.
அந்த நேரத்தில் பாம்பு அவர்களை பார்த்து சீறிக் கொண்டிருந்தது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. அப்போது வசந்த் அவர்கள் வீட்டில் உள்ள ஒரு அரசு டைரியை எடுத்து அதில் உள்ள போன் நம்பரை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று முடிவு செய்தார்.
அதன்படி விடுமுறையில் இருந்த 2 ஊழியர்களை இரவோடு இரவாக எழுப்பி அங்கு அனுப்பி வைத்தனர். கோபி, தாமரைச்செல்வன் ஆகிய ஊழியர்கள் அந்த வீட்டுக்குள் சென்று பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். அது கருநாகப் பாம்பு ஆகும். கடுமையான விஷத்தன்மை கொண்டது. பாம்பு பிடிபட்ட பிறகு தான் அவர்கள் நிம்மதியாக தூங்கினார்கள்.
இன்று காலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த வீட்டுக்கு மீண்டும் போன் செய்து விசாரித்தார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் புதரால் அடிக்கடி பாம்பு நடமாட்டம் இருப்பதாக கூறினார்கள். அவற்றை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று நாராயணசாமி உறுதி அளித்தார்.
அதன்பின்னர் நாராயணசாமி, தொகுதி எம்.எல்.ஏ. அனந்தராமனிடம் தகவல் தெரிவித்து நேரில் சென்று பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். இதனால் அனந்தராமன் இன்று காலை அங்கு சென்று அங்குள்ள புதர்களை பார்வையிட்டார். அவற்றை அகற்றுவதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக கூறினார். #Narayanasamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்