என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94747"
- போக்குவரத்து கழகத்தில் 168 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
- 451 பேரை ஊக்கப்படுத்தும் வகையில் 6 மண்டலங்களில் பரிசு வழங்கப்படுகிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய மிகப்பெரிய இயக்கப் பகுதியாக கும்பகோணம் கோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டத்தில் 3184 பஸ்கள் மூலமாக தினமும் 15 லட்சம் கி.மீ. இயக்கப்பட்டு 23 லட்சம் பயணிகளுக்கு சேவை புரிகிறது.
இந்த போக்குவரத்து கழகத்தில் 168 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும், அதிக வருவாய் ஈடுட்டிய கண்டக்டர்கள், அதிக டீசல் செயல்திறன் ஈட்டிய டிரைவர்கள், சிறப்பாக பணியாற்றிய தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், டிரைவர் போதகர்கள், பொறியாளர்கள், போக்குவரத்து மேற்பார்வையாளர்கள், கிளை மேலாளர்கள் உட்பட 451 பேரை ஊக்கப்படுத்தும் வகையில் 6 மண்டலங்களில் பரிசு வழங்கப்படுகிறது.
அனைத்து தரப்பு பணியாளர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக டீசல் செயல்திறன் 5.72 ( கேஎம்பிஎல்) என்ற அளவிலும், டயர் உழைப்பு திறனில் 3.50 லட்சம் கி.மீ. என்ற அளவிலும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் கும்பகோணம் கோட்டம் முதல் இடத்தில் உள்ளது.
கும்பகோணம் கோட்டம் இன்றைய அளவில் ஒரு கி.மீ.க்கு ஈட்டப்படும் பஸ் இயக்க வருவாய் ரூ.25.70 என்ற அளவில் உள்ளது. விபத்திலா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய அனைத்து டிரைவர்களும், கண்டக்டர்களும் கவனத்துடன், பாதுகாப்பு டன் பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் ஜெபராஜ் நவமணி, முகமது நாசர், கோவிந்தராஜன், துணை மேலாளர்கள் முரளி, சிங்காரவேலு, ராஜா, ஸ்ரீதர், கணேசன், உதவி மேலாளர்கள் ராஜேஷ், ரவிக்குமார், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.