search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94998"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டமாக ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.
    • இந்த கண்காட்சியை இன்று நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டமாக சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 55 ஆண்டுகால பொது வாழ்க்கை அனைத்துமே புகைப்பட கண்காட்சியாக தொகுப்பட்டிருக்கிறது.


    கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்

    இந்த கண்காட்சியை அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பத்து நாட்களுக்கு மேலாக ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இவருடன் அமைச்சர் சேகர் பாபு , நடிகர் யோகிபாபு ஆகியோர் உடனிருந்தார்கள்.


    கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்

    குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, " முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்று தான். 55 ஆண்டுகாலமாக அவர் பொது வாழ்க்கையில் ஈடுப்பட்டிருக்கிறார். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர். " என்று கூறினார். பின்னர் இந்த கண்காட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் புத்தகம் ஒன்றில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புகைப்படம் உணர்த்தும் வரலாற்றை ரஜினியிடம் அமைச்சர் சேகர்பாபு எடுத்துரைத்தார்.
    • படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    சென்னை, பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலினின் எழுபது ஆண்டுகால பயணம் குறித்தான புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகர்கள் ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் இன்று பார்வையிட்டனர். புகைப்படம் உணர்த்தும் வரலாற்றை ரஜினியிடம் அமைச்சர் சேகர்பாபு எடுத்துரைத்தார்.

    புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான்.

    * படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் தனது கருத்தை எழுத்து மூலம் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்தார்.

    • மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:-

    எனது இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்.

    இவ்வாறு வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அன்னதானம் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவிப்பது, முதியோர்களுக்கு அன்னதானம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "ஜெயலலிதா இல்லாத இந்த சூழலில் அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதாபோல இன்னொரு பெண்மணியைப் பார்க்கவே முடியாது. அவருடைய அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை, எம்.ஜி.ஆருக்கு புரட்சித்தலைவர் என்கிற பட்டம் வந்தது. நடிகராக இருந்து ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக ஆனார்.

    அவர் மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது அந்தக் கட்சியிலேயே மிக மிக அனுபவம் உள்ள தலைவர்கள் பலர் இருந்தும் ஒரு பெண் தனியாகப் பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி அதை இன்னும் பெரிய கட்சியாக மாற்றினார். இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் தலைவர்களும் அவரை மதித்தார்கள். அவருடைய திறமையைப் பார்த்துப் பிரமித்தார்கள். ஒரு காலக்கட்டத்தில் அவரை எதிர்த்து நான் பேசும் சூழல் ஏற்பட்டது. எனக்கும் அவருக்கும் ஒரு மனஸ்தாபம் வந்தது. பிறகு என்னுடைய மகள் கல்யாணத்திற்கு அழைக்கப்போனபோது அதையெல்லாம் மறந்து கல்யாணத்திற்கு வந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தார். கருணை உள்ளம் கொண்டவர் ஜெயலலிதா" என்று பேசினார்.

    • சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர்.

    பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். அவரை 23, 24 வயது இருக்கும்போதே எனக்கு தெரியும். மிமிக்கிரி ஆர்டிஸ்டா இருந்து அதற்கு பிறகு சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்தார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு தெரியும்.

     

    மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி

    மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி

    அவர் தீவிர எம்.ஜி.ஆரின் ரசிகர், அதைவிட மிக தீவிர சிவனின் பக்தர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம், அப்போது நான் சினிமா துறையை பற்றி அவரிடம் கேட்பேன், அவர் சினிமாவை பற்றி பேசவே மாட்டார். இரண்டு விஷயங்களை பற்றி தான் பேசுவார். ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று சிவன். நாங்கள் இந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தும் கூட அதிக படங்கள் நடிக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய கார்த்திகை தீபத்திற்கு அங்கே சென்றுவிடுவார்.

    அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு அவர் ஹீரோவாக நடித்து விட்டு வெற்றிகரமாக படம் ஓடுவது போன்று அவர் சந்தோஷப்படுவார். அங்கிருந்து ஒவ்வொரு தடவையும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வார். கடைசி முறை கார்த்திகை தீபத்திற்கு என்னை தொடர்பு கொண்டார், நான் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் எடுக்க முடியவில்லை. மூன்று முறை தொடர்பு கொண்டிருக்கிறார் என்னால் எடுக்கவே முடியவில்லை. அடுத்த முறை என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் பேச முடியவில்லை என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே மறந்துவிட்டேன், இப்போ அவரே மறைந்துவிட்டார்.

     

    செய்தியாளர்களை சந்தித்த ரஜினி

    செய்தியாளர்களை சந்தித்த ரஜினி

    சினிமா துறையில் இரண்டு நகைச்சுவை நடிகர்கள் இழப்பு பேரிழப்பு. ஒன்று விவேக், மற்றொன்று மயில்சாமி. இவர்களுடைய இழப்பு சினிமாதுறைக்கு மட்டுமில்லை, அவர்களுடைய நண்பர்களுக்கு மட்டுமில்லை சமூகத்திற்கே பேரிழப்பு. இரண்டு பேரும் நல்ல சிந்தனைவாதிகள்.

    மயில்சாமியின் இழப்பு தற்செயலாக நடந்தது கிடையாது, சிவனின் கணக்கு. தன்னுடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் கூட்டி சென்றுவிட்டார். அவருடைய குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. அவர்களுடைய வாரிசுகளுக்கு சினிமா துறையில் நல்ல ஒரு எதிர்காலம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

     

    கடைசியாக மயில்சாமி பங்கேற்ற நிகழ்ச்சி
    கடைசியாக மயில்சாமி பங்கேற்ற நிகழ்ச்சி

    நேற்று நடந்த சிவன் கோவில் நிகழ்ச்சியில் ரஜினி பாலபிஷேகம் செய்வதை நான் பார்க்க வேண்டும் என்று மயில்சாமி, டிரம்ஸ் சிவமணியிடம் சொல்லியிருக்கிறார். கட்டாயம் சிவமணியிடம் இதைபற்றி பேசிவிட்டு மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்.

    இவ்வாறு ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.

    • அனுமதியின்றி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • வர்த்தக நிறுவனங்கள் ரஜினி பெயரை அனுமதியின்றி பயன்படுத்துவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    பல தளங்களில் பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அவரது அனுமதியின்றி பயன்படுத்துகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

    இதனால் ரஜினியுடைய பெயர், புகைப்படம், குரலை ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நடத்துனராக இருக்கும்போது தினமும் மது குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், மாமிசம் சாப்பிடுவேன்.
    • நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமே என் மனைவிதான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    சென்னை:

    சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டு, விரைவில் படமாக்கப்பட உள்ள அந்த திரைப்படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

    கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் 'ரகசியம் பரம ரகசியம்' நாடகம் பார்க்கச் சென்றேன். அரை மணி நேரம் காத்திருந்தும் நாடகத்தைப் பார்க்க உள்ளே விடவில்லை. காலம் ஒருவரை எங்கிருந்து எப்போது எங்கு கொண்டு போகும் என தெரியாது. அதனைத்தான் மகா காலம் என்று சொல்வார்கள்.ஆனால் இன்று ஐம்பதாவது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் விளையாட்டுதான்.

    ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் ஒய்.ஜி.பி நாடகக் குழுவில் இருந்து வந்தவர்கள். பாதுகாப்பும் கண்ணியமும் மிக்க நாடகக் குழுவினராக திகழ்கிறார்கள். இந்த நாடகத்தைப் படமாக எடுக்கும்போது நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

    ஒய்.ஜி.மகேந்திரனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியாது. எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஒய்.ஜி. மகேந்திரன்தான். நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமே என் மனைவிதான்.

    நான் கெட்ட சிநேகிதர்களால் கெட்ட பழக்கங்கள் வைத்துக் கொண்டவன். நான் நடத்துனராக இருந்தபோது எவ்வளவு பாக்கெட் சிகரெட் அடித்தேன் என்றே தெரியாது. காலையிலேயே பாயா, ஆப்பம் , சிக்கன் 65 சாப்பிடுவேன். சிகரெட், மது மற்றும் அசைவ உணவு என மூன்றையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததே கிடையாது. இப்படிப்பட்ட பழக்கம் கொண்ட என்னை அன்பால் மாற்றிவர் எனது மனைவி லதா. என்னை ஒழுக்கமாக மாற்றி இருக்கிறார்.

    நடத்துனராக இருக்கும்போது தினமும் மது குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், நாள்தோறும் 2 முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களைப் பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும் என தெரிவித்தார்.

    • நகரின் முக்கிய இடங்களில் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.
    • அண்ணாத்த குரூப்ஸ்-திண்டுக்கல் மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    திண்டுக்கல் :

    தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் திகழ்கிறார். இந்த நிலையில் சினிமா உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று கடந்த சில நாட்களாக தீவிர விவாதம் நடக்கிறது.

    இந்த நிலையில் அன்றும், இன்றும், என்றுமே ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் ஒட்டி இருக்கும் சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் நகரின் முக்கிய இடங்களில் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.

    அதில் "உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது, அன்றும் இன்றும் என்றுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான், தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான், அண்ணாத்த குரூப்ஸ்-திண்டுக்கல் மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இவர் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

    2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.


    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    இவர் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.


    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். பொங்கலின் போது தன் பெற்றோர்கள் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்திடம் ஆசிர்வாதம் பெறும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து "உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இது மறக்க முடியாத பொங்கலாக இருக்கும் என்று நம்புகிறேன். கடவுள் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆர்ஆர்ஆர்'.
    • இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


    ஆர்.ஆர்.ஆர்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    ஆர்.ஆர்.ஆர்.

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும் இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப் விருதை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.



    • நடிகர் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியதற்காக பத்திரிகையாளர் பிஸ்மி வீட்டிற்கு சென்று ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நடிகர் ரஜினியை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்றும் விஜய்தான் இன்றைய சூப்பர் ஸ்டார் என்றும் பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து ரஜினி ரசிகர்கள் பிஸ்மி வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.


    சீமான்

    இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

    தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ரஜினிகாந்த் திரைத்திரையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின். தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக விஜய் உச்சத்தில் இருக்கிறார்.

    இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான பிஸ்மியை, அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த திரு. ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.


    சீமான் அறிக்கை

    ஐயா ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் அப்படியானவர்களில் சிலரே. மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று. ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது.

    இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஐயா ரஜினிகாந்த் அவர்களே இதனை விரும்பமாட்டார்கள். இத்தகைய செயல்களானது ஐயா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.




    • பிரதமர் மோடியில் தாயார் ஹீராபென் மோடி இன்று காலை காலமானார்.
    • இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.


    நரேந்திர மோடி - ஹீராபென் மோடி

    இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "மரியாதைக்குரிய மோடி அவர்களுக்கு. உங்கள் வாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது மனமார்ந்த அனுதாபங்கள்... அம்மா!" என்று பதிவிட்டுள்ளார்.



    ×