என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95042"
ஆட்டோ சேவை 2 விதங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல், நேரடியாக கட்டணம் பேசி ஆட்டோவில் பயணம் செய்வது ஒருவகை. செயலிகள் மூலமாக பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வது இன்னொரு வகை.
இந்த இரண்டு வகையான ஆட்டோ சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
இதனால், ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணிப்பதற்கு கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், நேரடியாக பேசி ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஜி.எஸ்.டி. விலக்கு நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை தனது அறிவிப்பாணையில் கூறியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பினார். அப்போது குஜராத்தில் ஏற்பட்டதை போன்ற வளர்ச்சியை உருவாக்க போவதாக ஒரு மாதிரி திட்டத்தை நாட்டு மக்கள் முன் நரேந்திரமோடி முன்வைத்தார்.
ஆனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனது. புதிய வேலைவாய்ப்புக்கான சாத்திய கூறுகளோ வாய்ப்புகளோ இல்லை. இந்த பாதிப்பு இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வாக்காளர்களையும் வெகுவாக பாதித்துள்ளது.
எனவே, அதற்கான விலையை பிரதமர் மோடி இந்த தேர்தலில் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இத்தேர்தலில் அவர் மிகப்பெரும் சரிவை சந்திப்பார்.
ஆனால் அவரது 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. தேசிய முற்போக்கு கூட்டணி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், நாட்டின் பொது வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் படுதோல்வி அடைந்தது.
ஜி.எஸ்.டி. அமல்படுத்துதல் மற்றும் பணமதிப்பு நீக்கம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் மோடி எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
அது இளம் தலைமுறையினரை வசீகரித்தது. மோடி தலைமையிலான பாஜனதா ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்த்தனர்.
அவரால் ராணுவ வீரர்களின் பெயரை வைத்து தேர்தலில் ஓட்டு பெற முடியாது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு குறைந்தது 100 இடங்களே கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #SharadPawar #PMModi
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் மிக மோசமாக மக்களை நடத்தினர். ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அ.தி.மு.க. அரசு தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்க வில்லை.
மத்தியில் இருக்கும் பா.ஜனதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை கொண்டு வந்து நமது பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைக்கு உருவாக்கி உள்ளது. நாம் அந்த பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் இது. இதனை புரிந்து கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.
தி.மு.க. வாக்குறுதி கொடுத்தால் அதனை நிறைவேற்றி தரக்கூடிய இயக்கம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாய கடன்களை ரத்து செய்து தருவதாக அறிவித்து உள்ளார். நிச்சயம் ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலை என்பது 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.
1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை மக்கள் எங்களுக்கு தர வேண்டும். பா.ஜனதா அரசின் ஜி.எஸ்.டி. வரியால் கடலைமிட்டாய், தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #pollachiissue #dmk
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இந்த தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம். ஒருபக்கம் பா.ஜனதா- அ.தி.மு.க. ஆகியவற்றின் பின்னால் ஒரு அணி. மற்றொரு பக்கம் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் பின்னால் ஒரு அணி.
தமிழ்நாட்டில் ஒரே ஒரு கட்சி பெரிய கட்சி உண்டென்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தனித்து நிற்கிறது. துணிந்து நிற்கிறது. உண்மையும் நேர்மையும் ஆக மக்களை அணுகுகிறது. மது, பணம், உணவு கொடுக்காமல் தன்னெழுச்சியாக மக்கள் தானாக திரண்டு கூடுகிறார்கள் என்றால் தமிழர் நாட்டிலேயே மிகப்பெரிய கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். இது உண்மையிலேயே மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி.
பா.ஜனதா அது ஒரு மதவாத கட்சி என்று மதவாதத்துக்கு எதிரான கூட்டணியான தி.மு.க. கூறுகிறது. இதே தி.மு.க. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து பதவி அனுபவித்து இருக்கிறது. அப்போது அது மதவாதம் அல்ல மிதவாதம். 5 ஆண்டு காலத்தில் செய்யாததை இந்த பா.ஜனதா அடுத்த ஆட்சி காலத்தில் செய்யப்போகிறதா? பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த வரியால் பல கோடிக்கணக்கான வியாபாரிகள், வர்த்தகர்கள் வாழ்விழந்து போனார்கள். இனிப்பு வார்த்தைகளை கூறி ஏமாற்றுகிறார்கள்.
நாங்கள் ஓட்டுக்காக பேசவில்லை. உங்கள் உரிமைக்காக பேசுகிறோம். இந்த தேர்தலை ஒரு தேர்தலாக பார்க்காமல் ஒரு மாறுதலாக பார்த்து, இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை தாருங்கள். உழவை மீட்போம், உலகைக் காப்போம் என்ற முழக்கத்தோடு நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். எனவே நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் பேசினார். #seeman #pmmodi #gst
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரியாளூர் விலக்கு ரோடு பகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானவுடன், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத, ஊழல் மலிந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்.
அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராவார். இதைத்தான் தமிழக மக்களும் எதிர்நோக்கி உள்ளனர்.
எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் மனதில் வைத்து தயாராக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நாடு சோதனையில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த நரேந்திர மோடி, கடந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி பிரதமரானார்.
அவர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொல்லாத வாக்குறுதிகளான பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்றவற்றை கொண்டு வந்து இந்த நாட்டையே நாசப்படுத்தி விட்டார்.
மதவெறி கொண்ட மோடி நாட்டை மதங்களின் பெயரால் தூண்ட நினைக்கிறார். இந்தியாவில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து விட்டு ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து பல லட்சம் பேர் வேலை இழக்க காரணமாகி விட்டார்.
கஜா புயலின்போது, பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளை நேரில் சென்று நான் பார்வையிட்டேன். ஆனால் நாட்டின் பிரதமர் பெயரளவிற்குகூட வந்து செல்லவில்லை. ஒரு வேளை புதுக்கோட்டை தனி நாடாக இருந்தால், வந்திருப்பார்போல. மத்தியில் காங்கிரஸ் கட்சியும், அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்தவுடன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயமான நிவாரணம் வழங்கப்படும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பார்த்து, இதை எப்படி செயல்படுத்த முடியும் எனக்கேட்ட பா.ஜ.க. இப்போதும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் எப்படி ரூ.72 ஆயிரம் வழங்க முடியும் எனக்கேட்கிறது. காங்கிரஸ் கட்சியும், நானும் என்றும் முடியாததை சொல்ல மாட் டோம். சொல்லியதை பா. ஜ.க. போல செய்யாமல் இருக்க மாட்டோம்.
நிச்சயம் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். அதை காங்கிரஸ் செய்து காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #pchidambaran #rahulgandhi #mkstalin
ஓட்டப்பிடாரம்:
பா.ஜனதா மாநில தலைவரும் தூத்துக்குடி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்படவில்லை. வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் வங்கி கடன் எளிதாக கிடைக்கிறது. மாதந்தோறும் ஜி.எஸ்.டி.கவுன்சிலிங் கூடுவதால் வரிகள் குறைக்கப்பட்டு வருகின்றன. 124 நாடுகளில் ஜி.எஸ்.டி. நடைமுறையில் உள்ளது. மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரிவிகிதம் குறைக்கப்படும். நடைமுறைக்கு சாத்திய மில்லாதவற்றை தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி பேசுகிறார்.
தூத்துக்குடியை பொறுத்தவரை குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மேலும் வளர்ச்சி பெற புதிய திட்ட அறிக்கையை கொடுத்துள்ளேன். ராஜ்யசபாவில் இதுவரை தூத்துக்குடியை பற்றி பேசாத கனிமொழிக்கு திடீர் அக்கறை ஏன்? அரசியலில் எனக்கு பயமே கிடையாது.
நாங்கள் சொன்னதை செய்வோம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார். எங்களது கனவு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilisai #kanimozhi #gsttax
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அவர் 2,000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. வீட்டுக்கு வீடு ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 ரூபாய் கூட வந்து சேரவில்லை. கடந்த தேர்தலில் அளித்த வாக்கு உறுதிகளை மோடி நிறை வேற்றவில்லை.
ஜிஎஸ்டியால் தமிழகத்தில் 50,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கின்றனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் புதிதாக அணை கட்டுவோம். பென்னிகுக் கட்டிய அணையை உடைப்போம் என்று கூறும் கேரள அரசுக்கு மத்திய அரசு பச்சைக் கொடி காட்டுகிறது. தமிழகத்தை வஞ்சிக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பாலைவனமாக மாறி விடும்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. முதல்வர் மீதே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அதிமுக அரசு உள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்குமா? பாசிச சர்வாதிகாரம் நிலைக்குமா? என்பது தான். அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார். #vaiko #parliamentelection
நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூலுக்காக ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரி அமலாக்கத்தை சீராக நடத்துவதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. மத்திய நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில், அவ்வப்போது கூடி ஜி.எஸ்.டி. குறித்து விவாதித்து பல்வேறு முடிவுகளை செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் இந்த கவுன்சிலின் 34-வது கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறைக்கான வரியை குறைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வருகிற கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
கட்டுமானப்பணியில் இருக்கும் வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்க கடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஜி.எஸ்.டி. குறைப்பு உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த ஒப்புதல் அவசியமாகும்.
எனவே இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன் 19-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
வீடுகள், வீட்டுமனை விற்பனை செய்யும் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் 2 வருடங்களுக்கு முன்பு கொடி கட்டி பறந்தது.
இந்த நிலையில் புதிதாக கட்டி விற்பனை செய்யும் வீடுகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதனால் வீடுகளின் விலை 12 சதவீதம் அதிகரித்தது.
எனவே நடுத்தர மக்கள் வீடு வாங்க முன்வரவில்லை. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் தேக்கம் அடைந்தது. கட்டிய வீடுகள் விற்பனை ஆகவில்லை. இதனால் கட்டிட தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.
தற்போது கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரிமியர் ஹவுசிங் அண்ட் பிராப்பர்ட்டிஸ் நிறுவன உரிமையாளர்கள் சிவபிரகாஷ், சந்திரசேகர் ஆகியோர் கூறியதாவது:-
5 வருடங்களுக்கு முன்பு வீடுகளை கட்டும் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. எனவே இதில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். இதனால் கட்டிட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் அதிகமானது. நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்குவது அதிகரித்தது.
அடுக்குமாடி மற்றும் தனி வீடுகளுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்ட பிறகு வீடு விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது. வங்கியில் கடன் வாங்கி கட்டிய வீடுகள் விற்பனை ஆகாததால் ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது.
இப்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மீண்டும் ஒளி மயமான எதிர்காலத்தை காட்டி இருக்கிறது. சொந்த வீடு வாங்கும் கனவில் இருந்த மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பு புதிய வீடு வாங்க விரும்பிய மக்கள் மனதில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இனி நடுத்தர மக்களிடம் வீடு வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். வீடு விற்பனை இரண்டு மடங்காக உயர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கட்டி விற்பனையாகாத வீடுகள்- விற்கத் தொடங்கும் போது ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து வந்த தேக்கம் முடிவுக்கு வரும். கட்டிட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சிமெண்ட், செங்கல், மணல் உள்ளிட்ட கட்டிட பொருட்கள் விற்பனை அதிகமாகும்.
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சத்துக்கு வீடு வாங்குபவர்களுக்கு ரூ.2.67 லட்சம் சலுகை வழங்கப்பட்டது. தற்போது ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்குபவர்களுக்கும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
இதனால், நடுத்தர மக்கள் அதிக அளவில் வீடுகள் வாங்க வாய்ப்பு ஏற்படும். பொறியியல் படித்த மாணவர்களுக்கும் இனி வேலை வாய்ப்பு உருவாகும். இந்த வரி குறைப்பு, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மத்திய அரசு வழங்கிய அங்கீகாரம். எனவே கட்டிட தொழில் மீண்டும் புத்துயிர் பெறும். பொருளதாரம் உயரும். 12 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் பத்திரப்பதிவு உள்ளிட்ட செலவுகள் குறைக்கப்பட்டு ஜி.எஸ்.டி.யிலேயே அடங்கி விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சென்னையில் சுமார் 50 ஆயிரம் புதிய வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளதால் இந்த வீடுகள் அனைத்தும் விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. நடுத்தர மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அறிவிப்பாக இது உள்ளது என்று பல்வேறு ரியல் எஸ்டேட் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #GST #RealEstate
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்