search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95056"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி அமளியில் ஈடுபட்டனர்.
    • எதிர்க்கட்சியினர் சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வந்தன.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிடட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள யங் இந்தியா நிறுவனத்தின் ஆபீசுக்கு அமலாக்கத்துறை யினர் தற்காலிகமாக சீல் வைத்தனர்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் இதை முன்வைத்து அவையில் பிரச்சினையை கிளப்பினார்கள். சபையின் மைய பகுதிக்கு வந்த அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

    அமலாக்கத்துறையை அரசு தவறாக பயன்படுத்து வதாக கூறி அமளியில் ஈடுபட்டனர். இதே போல் ஜி.எஸ்.டி. உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தும் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக அவை 11.30 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.

    பின்னர் அவை கூடியதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மேல்சபையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதே பிரச்சினையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

    விசாரணை அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாக கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.

    இதற்கு பா.ஜனதா உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை அவை தலைவர் நிராகரித்தார்.

    இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து அமளியில் ஈடு பட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் முழுக்கம் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக பிரதமர் மோடி அரசைக் கண்டித்து மெகா பேரணி நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசைக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி அரசைக் கண்டித்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையில் அடுத்த மாதம் 12-ம் தேதி தலைநகர் டெல்லியில் மெகா பேரணியை நடத்த உள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார்.

    இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், மக்களின் தீராத வலியையும் துன்பத்தையும் பிரதமர் மோடி அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது எனவும் தெரிவித்தார்.

    குஜராத் மாநிலத்தில் கொரோனாவுக்கு 3 லட்சம்பேர் பலியாகி உள்ளனர். இதை உறுதிப்படுத்த காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்றனர். ஆனால், வெறும் 10 ஆயிரம் பேர் பலியானதாக மாநில அரசு கணக்கு காட்டுகிறது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், பா.ஜனதா ஆட்சி நடக்கும் குஜராத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர், தங்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி பேசியுள்ளனர்.

    இந்த வீடியோவுடன் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

    ‘குஜராத் மாடல்’ என்று பெருமையாக பேசப்படுகிறது. ஆனால், கொரோனா காலத்தில் குஜராத் மாடலின் உண்மைத்தன்மை அம்பலமாகி விட்டது.

    கொரோனா வைரஸ்


    குஜராத் மாநிலத்தில் கொரோனாவுக்கு 3 லட்சம்பேர் பலியாகி உள்ளனர். இதை உறுதிப்படுத்த காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்றனர். ஆனால், வெறும் 10 ஆயிரம் பேர் பலியானதாக மாநில அரசு கணக்கு காட்டுகிறது. அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    கொரோனா மரணங்கள் குறித்து நம்பகமான புள்ளிவிவரங்கள் வெளியிட வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சி, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    பா.ஜனதா அரசு அதானி, அம்பானி போன்றோருக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. இது மக்களுக்கான அரசாக செயல்படவில்லை என்று அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் கூறினார்.
    நெல்லை:

    விலைவாசி உயர்வு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் விழிப்புணர்வு பிரசார பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளை அருங்காட்சியகம் அருகே இன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் முன்னிலை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து அவர் கூறியதாவது:-

    மத்திய பா.ஜனதா ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்டு உள்ளது.

    பா.ஜனதா அரசு அதானி, அம்பானி போன்றோருக்கான அரசாக செயல்பட்டு வருகிறது. இது மக்களுக்கான அரசாக செயல்படவில்லை. விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பேரணிக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    சென்னை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அன்றைய தினம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை வழங்கலாம். இதை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக் கொள்வார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 1.12.2021 புதன்கிழமை காலை 10 மணி முதல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வழங்கப்படுகிற விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தேர்தலில் போட்டியிட விரும்புகிற பொது பிரிவினர் ரூ.1000, பட்டியலினத்தவர்கள் மற்றும் மகளிர் ரூ.500 என்கிற கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை வழங்க வேண்டும்.

    காங்கிரஸ்

    பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அன்றைய தேதியில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

    சென்னை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அன்றைய தினம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை வழங்கலாம். இதை அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இணைந்து பெற்றுக் கொள்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... 300 சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்துக்கு மாற்ற திட்டம்- தமிழக அரசு அனுமதி

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலை அடுத்த மாங்கன்றுவிளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் தொடங்கப்பட்டது.

    பிரசார பயணம் தொடங்கி 100 மீட்டர் தொலைவில் சென்றவுடன் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    அந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். போராட்டத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பினர்.

    இதனை அடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ரெயில்வே கிராஸிங் பகுதியை சென்று பார்வையிட்டனர்.
    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்- விரிகோடு ரெயில்வே கிராசிங்கில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கேட்டும், மாற்று வழியாக மேம்பாலம் அமைக்க முயற்சி செய்யும் அதிகாரிகளை கண்டித்தும்  விரிகோடு சந்திப்பில்  அனைத்துக்கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு போராட்டக் குழுத் தலைவர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். புலவர் அருளப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசியதாவது:- இதற்கு முன்பு இந்த ரெயில்வே மேம்பாலத்திற்கு எனது அப்பா போராடி - பொறியாளர்களுடனும், மாவட்ட ஆட்சியாளருடனும் , பேச்சுவார்த்தை நடத்தினார்.

    தற்போது இந்த விரிகோடு மக்களுக்கு  எது நல்லதோ அதை நான் செய்வேன். அதேபோல் எல்லா துறையினரையும் இங்கு வரவழைத்து நடவடிக்கை எடுப்பேன். மறு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே மேம்பாலத்தை இந்த மார்த்தாண்டம்  விரிகோடு ரெயில்வே கிராசிங்  வழியாக கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

    அதன் பின்னர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ரெயில்வே கிராஸிங் பகுதியை சென்று பார்வையிட்டனர். மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட சேவா தள தலைவர் ஜோசப் தயாசிங் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சாதனையான வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திரா காந்தியின் அளப்பரிய சாதனைகளை நினைவுகூர்வோம்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் அன்றைய இந்திய பிரதமர் அன்னை இந்திரா காந்தி தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் ஆற்றிய பணிகள் வங்கதேச வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாதவை. வங்கதேச அரசியலில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும், பழைய கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு உறுதியான ஆதரவளித்த இந்திரா காந்தியை வங்கதேச மக்கள் எப்போதும் நேசித்து வந்துள்ளனர்.

    மேற்கு பாகிஸ்தானோடு நடைபெற்ற 13 நாள் போரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வங்கதேச விடுதலைக்கு வித்திட்டு மக்களின் பேராதரவு பெற்ற ஷேக் முஜிபூர் ரகுமான் அவர்களை பிரதமர் பொறுப்பில் அமர்த்தியவர் அன்னை இந்திரா காந்தி. அந்த காலகட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுத உதவியை மேற்கு பாகிஸ்தானுக்கு வழங்கின.

    அந்த நேரத்தில் உற்ற துணையாக இருந்து அனைத்து ராணுவ உதவிகளையும் செய்து, சோவியத் நாடு ஆற்றிய பங்கை எவரும் மறந்திட இயலாது. கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கடுமையான துன்பங்களுக்கு ஆளாகினர்.

    இதனால் ஒரு கோடி மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் ஏற்பாடு செய்து அரவணைத்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. மேலும் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்காக 20 நாட்கள் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச விடுதலைக்கு ஆதரவாக கருத்தொற்றுமையை திரட்டியவர். அன்னை இந்திரா காந்தியின் தொலைநோக்குப் பார்வையும் இந்திய ராணுவத்தின் தெளிவான அணுகுமுறையும் வங்கதேச விடுதலைக்கு பெரும் உதவியாக இருந்தன. இத்தகைய சாதனைகளைப் புரிந்து வங்கதேசம் விடுதலையைப் பெற்ற 50-வது ஆண்டு பொன்விழாவை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு சார்பாக நாடு முழுவதும் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழா நாளை (22-ந்தேதி) காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில் நடைபெறுகிறது. விழாவில், சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் அமைப்பாளர் கேப்டன் பிரவீன் தவார் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னோடிகள் பலர் பங்கேற்கின்றனர்.

    இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சாதனையான வங்கதேச விடுதலையின் 50-வது ஆண்டு பொன்விழாவில் அன்னை இந்திரா காந்தியின் அளப்பரிய சாதனைகளை நினைவுகூர்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிறது- தேர்தல் ஆணையம் ஏற்பாடு தீவிரம்

    காங்கிரசின் மூத்த தலைவர்களும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும் வர இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்தது போலவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

    விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை பல்வேறு தரப்பினர் வரவேற்று உள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கருத்து தெரிவித்த போது, “இது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றனர்.

    இதேபோல காங்கிரசின் மூத்த தலைவர்களும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும் வர இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.

    இந்தநிலையில் 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் இன்று நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி வெற்றி பேரணிகளை நடத்த முடிவு செய்தது.

    கோப்பு படம்

    மேலும் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய மெழுகு வர்த்தி அணிவகுப்பும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரான கே.சி.வேணுகோபால் கூறும்போது, “அனைத்து மாநில கட்சி பிரிவுகளும் பேரணிகள் மற்றும் மெழுகு வர்த்தி அணிவகுப்புகளை மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவில் நடத்துமாறு கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் வரலாற்று வெற்றியாக கருதி தேசத்துடன் இணைந்து செயல்படும் நிகழ்ச்சிகளுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் நிர்வாகிகள் விவசாயிகளின் வெற்றி பேரணிக்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி இன்று அவர்கள் பேரணிகளை நடத்தினார்கள். வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நடனமாடி உற்சாகமாக சென்றனர். இனிப்புகளும் வழங்கப்பட்டது.

    விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களுக்காக பிரார்த்தனைகளையும் செய்தனர்.

    இதையும் படியுங்கள்... சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை டோனி -முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

    பிரியங்கா காந்தி விசாரணை அமைப்புகளை நம்பவில்லை என்றால், யாரை நம்புகிறார் என்று தெரியவில்லை என காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங் கூறினார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங், கட்சி தலைமை குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன்வைக்கிறார்.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் செயல்பாடு குறித்து அதிதி சிங் கூறியதாவது:-

    லக்கிம்பூர் வன்முறை மற்றும் பிற பிரச்சினைகளைப் பொருத்தவரை, பிரியங்கா காந்தி எப்போதும் அதை அரசியலாக்கினார். லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றம் அதை கவனத்தில் கொண்டுள்ளது. பிரியங்கா காந்தி விசாரணை அமைப்புகளை நம்பவில்லை என்றால், யாரை நம்புகிறார் என்று தெரியவில்லை.

    மசோதாக்கள் கொண்டு வரப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு பிரச்சினையாக இருந்தது. சட்டங்கள் (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்யப்பட்டபோதும் பிரச்சினையாக இருக்கிறது. அவருக்கு என்னதான் வேண்டும்? அவர் தெளிவாக சொல்ல வேண்டும். அவர் இந்த விஷயத்தை மட்டுமே அரசியலாக்குகிறார். இப்போது அரசியல் செய்ய வேண்டிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

    இவ்வாறு அவர்  கூறினார்.

    வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அடுத்த பிரச்சனையை கையில் எடுத்தார் பிரியங்கா காந்தி. விவசாயிகள் மீது பிரதமருக்கு உண்மையில் அக்கறை இருந்தால், லக்கிம்பூர் கேரி வழக்கில் உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், டிஜிபிக்கள் மாநாட்டில் அவருடன் மேடையைப் பகிரக் கூடாது என பிரியங்கா கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
    விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் குஞ்சன் நாடார் சிலை வரை பேரணியாக சென்று விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ததை கொண்டாடினர்.
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்மை திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் களமிறங்கியது.

    இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்துச் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் உள்ள குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் இருந்து விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் குஞ்சன் நாடார் சிலை வரை பேரணியாக சென்று கொண்டாடினர். விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை மோடி ரத்து செய்ததை காங்கிரஸ் கட்சி போராட்டம் வெற்றிபெற்றது என கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் முருகேசன், ஸ்ரீநிவாசன், நவீன், அருள் சபிதா, மகேஸ் லாசர், கால பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறை ஊராட்சி ஒன்றியம் மாராயபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது சொந்த செலவில் கணினி வழங்கினார்.
    தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலந்தூரில் ஏற்பாடு செய்திருக்கிற நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

    கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இருமடங்கு உயர்ந்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் 300 ரூபாய் உயர்ந்துள்ளது.

    எரிபொருட்களின் விலையை உயர்த்தி சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி


    இதைப் பற்றி
    பிரதமர் மோடி கவலைப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை சொத்துகளை நீண்டகால குத்தகையின் அடிப்படையில் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு தாரை வார்க்க முயற்சி நடைபெறுகிறது. கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

    மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

    சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனையின்படி நடைபெறும் இப்பிரச்சாரப் பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கதர் குல்லா அணிந்து, கையில் மூவர்ணக் கொடியையும், கண்டன பதாகைகளையும் தாங்கிக் கொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு தயாரிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை பொது மக்களிடையே காங்கிரஸ் கட்சியினர் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களிடையே கருத்துகளை திரட்டுவதே இந்த அறப்போராட்டத்தின் நோக்கமாகும்.

    தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலந்தூரில் ஏற்பாடு செய்திருக்கிற நிகழ்ச்சியில் நான் (கே.எஸ்.அழகிரி) பங்கேற்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    ×