என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95056"
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 1955-ம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் காமராஜர் நேரடியாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கடுமையாகப் பணியாற்றியதை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணா பாராட்டியதை எவரும் மறந்திட இயலாது.
அதைப்போல, இன்றைக்கு தமிழக முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதைப் பாராட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது.
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முதலமைச்சரால் அனுப்பப்பட்ட அமைச்சர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததற்காக விவசாயிகளுக்கு இழப்பீடாக ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்குவதாக அறிவித்ததோடு, மறு சாகுபடி செய்திட ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
அதேபோல் குறுகிய கால விதைகள், நுண்ணூட்ட உரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கி, அவர்களது துயரைத் துடைக்கிற பணியில் முதலமைச்சர் ஈடுபட்டு இருக்கிறார். மக்கள் துன்பத்தில் பாதிக்கப்பட்டிருக்கிற போது, எத்தகைய நிவாரணங்களை வழங்க வேண்டுமோ அதை அறிந்து, அதற்கேற்றாற்போல் உதவிகளை அறிவித்து வருகிற முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வை அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலமாக 37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கனமழை பெய்த ஒரு வார காலத்துக்கு அம்மா உணவகத்தின் மூலம் 14 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கிற போது, கடந்த 6 மாத காலமாக தமிழக முதலமைச்சர் மிக அற்புதமாக செயல்பட்டு தமிழக மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய பணிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். அவரது பணி மேலும் சிறப்பாக தொடர கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடுவதற்கான வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. அந்த மாநில பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி அங்கு முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். அவர் அங்கு அனுப்ஷாகர் என்ற இடத்தில் நேற்று பேசினார்.
மராட்டிய மாநிலம் வார்தாவில் உள்ள சேவாகிராமம் ஆசிரமத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 4 நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் சித்தாந்தம் உயிர்ப்புடனும், துடிப்புடனும் உள்ளது. நமது சித்தாந்தம் அழகிய ஆபரணம். அதில் முடிவில்லாத ஆற்றல் உள்ளது. இது தான் நமது பலம். காங்கிரஸ் கட்சியின் அன்பு, பரிவு மற்றும் தேசிய அளவிலான சித்தாந்தத்தை பா.ஜனதா மறைத்துவிட்டது. ஊடகங்களும், தேசமும் முற்றிலுமாக கைப்பற்றப்பட்டுள்ளதால் அது மறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல நமது மக்களிடம் நாமே நமது கொள்கைகளை தீவிரமாக பரப்பாததாலும் மறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்து மதம் வேறு, இந்துத்வா வேறு. இதுபோன்ற விஷயங்களை தான் நாம் வெளிப்படுத்த வேண்டும். இதை ஆழமாக புரிந்து கொண்ட 100, 200 அல்லது 500 பேரை செயலாக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
சீக்கியர்கள் அல்லது இஸ்லாமியர்களை இந்து மதம் தாக்குமா?. ஆனால் இந்துத்வாவாதிகள் அதை செய்வார்கள். இந்து மதம் மற்றும் இந்துத்வாவிற்கு வித்தியாசம் உள்ளது என நாங்கள் கூறுகிறோம். நீங்கள் இந்து என்றால் உங்களுக்கு இந்துத்வா ஏன் வேண்டும்?. இந்த புதிய பெயர் உங்களுக்கு எதற்கு?.
காங்கிரஸ் சித்தாந்தம் இந்தியாவில் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும். பா.ஜனதா அவர்களின் சித்தாந்தத்தை கண்டறிந்து அதில் உறுதியாக உள்ளனர். நாமும் நமது சித்தாந்தத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இதை நாம் செய்ய தொடங்கினால், அவர்களின் சித்தாந்தம் உறைபோட்டு மூடப்படும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
அப்போது முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகளுடன் கலந்து ரையாடினார். மேடையில் ராகுல்காந்தி தண்டால் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோ காட்சி சமூவலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவிகளில் சிலரை ராகுல் காந்தி டெல்லிக்கு வரவழைத்து தனது வீட்டில் தீபாவளி விருந்து வழங்கினார்.
அப்போது அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோ காட்சிகள் சிலவற்றை ராகுல்காந்தி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவில் மாணவி ஒருவர், ‘‘நீங்கள் பிரதமரானால் முதலாவதாக என்ன உத்தரவு பிறப்பிப்பீர்கள்?’’ என்று ராகுல்காந்தியிடம் கேட்டார்.
அதற்கு ராகுல்காந்தி, ‘‘பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவேன்’’ என்று கூறினார்.
மற்றொரு மாணவி, ‘‘குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, ‘‘குழந்தைகள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும், அந்த பணிவு அவர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்கும் என்று கூறுவேன்’’ என்றார்.
மேலும் ராகுல்காந்தி கூறும்போது, ‘‘தீபாவளி நிகழ்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு கலாச்சாரத்தின் சங்கமம்தான் நமது நாட்டின் வலுவான சக்தியாக இருக்கிறது. இதை நாம் எப்போதும் காப்பாற்ற வேண்டும்’’ என்று கூறினார்.
இந்த விருந்தின் இடைவெளி நேரத்தில் பிரியங்காவும் அங்கு வந்தார். அவர் அந்த மாணவிகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் ராகுல்காந்தியிடம், ‘‘பிரியங்கா விவசாயிகள் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து பங்கேற்றது குறித்து என்ன கூறுகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘விவசாயிகளோடு நாங்களும் இருக்கிறோம் என்பதை அவரது பங்கேற்பு காட்டியது’’ என்றார்.
இதையும் படியுங்கள்...சென்னையில் 2015-க்குப்பின் அதி கனமழை: 23 செ.மீட்டர் அளவு கொட்டித் தீர்த்தது
புதுடெல்லி:
13 மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஓரளவு தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 8 சட்டசபை தொகுதிகளும், ஒரு எம்.பி. தொகுதியும் கிடைத்துள்ளது. இவ்வளவு காலமும் தோல்வியையே பிரதானமாக கொண்டு இருந்த காங்கிரசுக்கு இது ஒரு ஆறுதலாக கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அது காங்கிரசுக்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இடைத்தேர்தலில் கிடைத்துள்ள சில வெற்றி காங்கிரசுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது சம்பந்தமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “காங்கிரசுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. அனைத்து வெற்றிகளையும் தொண்டர்களின் வெற்றியாக கருதுகிறோம். எந்தவித அச்சமும், வெறுப்புணர்வும் இல்லாமல் தொடர்ந்து தொண்டர்கள் போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா வெளியிட்டுள்ள செய்தியில், “3 எம்.பி. தொகுதிகளில் 2 தொகுதிகளை பா.ஜனதா இழந்துள்ளது. இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, மராட்டியம் ஆகியவற்றில் பா.ஜனதாவுடன் காங்கிரஸ் நேருக்கு நேர் மோதியதில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
மோடி ஆட்சியை விட்டு வெளியேறும் காலம் வந்து விட்டது. அவர் கொண்டு வந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாசில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும்” என்று கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடைத்தேர்தல் முடிவு குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. அவர் மண்ணின் மகன் என்று உணர்வுபூர்வமாக பேசினார். ஆனால் மக்கள் அவரது பேச்சை நிராகரித்துவிட்டனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் 2 தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
அனைத்து மந்திரிகளும் அந்த தொகுதியில் தங்கி ஓட்டு சேகரித்தனர். ஆனால் மக்கள் காங்கிரசை ஆதரித்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. எடியூரப்பா ஆட்சியில் நீடித்து இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவு இவ்வாறு தான் வந்திருக்கும். பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது.
பா.ஜனதா எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. நான் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு மற்றும் மேலிடத்தின் முடிவே இறுதியானது.
ஹனகல் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி டெபாசிட் இழந்துள்ளது. தேவேகவுடா 10 நாட்கள் 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். அவர் அனுபவம் வாய்ந்த தலைவர். அவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணம் என்ன என்பதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை நம்பவில்லை. அந்த கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பது அவர்களுக்கு தெரியும்.
மக்களின் பிரச்சினைகள்
இந்த மாத இறுதிக்குள் பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவில்லை. வட கர்நாடக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அங்கு சுவா்ண சவுதா கட்டப்பட்டது. பிட்காயின் வழக்கில் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை முதல்-மந்திரி கூற வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன.
இதையொட்டி காங்கிரஸ் கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மோடி ஆணவத்தை கைவிட வேண்டும், 3 கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் கொள்ளையை நிறுத்த வேண்டும்’’ என கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்