search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95080"

    • தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ்.
    • இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

     

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீஷினில் ராஜுவும் டைட்டிலை கைப்பற்றினர். சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. 

     

    இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் நபர் குறித்த எதிர்ப்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதற்கு முன் நடந்து அனைத்து சீனனையும் கமல் தொகுத்து வழங்கி இருந்தாலும் இதற்கிடையில் கமல் தவிர்க்க முடியாத காரணங்களால் பங்கு பெற முடியாமல் போனதால் சிம்புவும் ரம்யா கிருஷ்ணனும் சில நாட்கள் தொகுத்து வழங்கினர். இதனால் இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா அல்லது வேறு ஏதேனும் திரைப்பிரபலங்கள் தொகுத்து வழங்குவார்களா என்ற கருத்துக்கள் இணையத்தில் பரவி வந்தது.

     

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனின் புரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குவது போன்று புரோமோ வீடியோ இடம் பெற்றுள்ளது. அதில், வேட்டைக்கு ரெடியா? என்று கமல் வசனம் பேசியுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து நாயகன் மீண்டும் வரார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இப்படத்தின் விழாவில் இணையவுள்ள பிரபலங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்-1". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    கமல் - ரஜினி

    கமல் - ரஜினி

     இந்நிலையில், பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் இவர்களின் முன்னிலையில் இதன் வெளியீடு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி மற்றும் கமல் இணையவுள்ளது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ''வெந்து தணிந்தது காடு".
    • இப்படத்தின் வெற்றி விழாவில், சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்கவேண்டும் என்று கமல் பேசினார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ''வெந்து தணிந்தது காடு". வேல்ஸ் இண்டர் நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

     

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது, ''வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள், ''தழல் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ". அதுபோல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், என்னை தந்தை போல் என்பார்.

     

    வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

    வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

    அவருக்கு, நான் தனியாக ஏதும் செய்யவில்லை. தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம்தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கைவிட்டது இல்லை. தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்.

     

    வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

    வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

    வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்துவிட்டது. வேல்ஸ் பிலிம்சில் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இம்மாதிரி வாய்ப்புகளை நான் 'மிஸ்' செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று கமல் பேசினார்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'இந்தியன்-2'.
    • 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மீண்டும் பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.

     

    இந்தியன்-2

    இந்தியன்-2

    'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

     

    இந்தியன்-2

    இந்தியன்-2

    அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இந்தியன்-2' படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதனிடையே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விவேக்கின் மறைவிற்கு பிறகு அந்த கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப்போவது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

     

    குரு சோமசுந்தரம்

    குரு சோமசுந்தரம்

    இந்நிலையில் விவேக்கின் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'இந்தியன்-2' படத்தில் நடிக்க ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா, ஜோக்கர், பேட்ட, மின்னல் முரளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் குரு சோமசுந்தரம் இதில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படம் 2006-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியன் 2-ம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். சில பிரச்சினைகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் சாதனை படைத்த விக்ரம் படத்தின் 2-ம் பாகமும் உருவாகவுள்ளது. தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

     

    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

    இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும், படப்பிடிப்பை தொடங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

     

    கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படம் 2006-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நல்ல வசூலும் பார்த்தது. கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இப்படத்தில் நாயகிகளாக ஜோதிகா, கமாலினி முகர்ஜி ஆகியோரும், வில்லனாக டேனியல் பாலாஜியும் நடித்து இருந்தனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான்.
    • இவரின் நீண்ட நாள் ஆசையான கமலுடன் நடிப்பது விரைவில் நடக்கவிருக்கிறது.

    தமிழ் சினிமாவின் 1990 காலகட்டத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான். மிரட்டும் முகபாவனை, அசாத்தியமான வசன உச்சரிப்பு என சினிமாவில் டிமாண்டான வில்லனாக வலம் வந்தார். மிகப்பெரிய கதாநாயகர்களுடன் சினிமாவில் மல்லுக்கட்டிய மன்சூர் அலிகானுக்கு, கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்காதது மிகப்பெரிய வருத்தமாக இருந்திருக்கிறது. இதை பல மேடைகளிலும் மன்சூர் அலிகான் சொல்லி இருக்கிறார்.

    மன்சூர் அலிகான்

    மன்சூர் அலிகான்

     

    அதேபோல, 'மன்சூர் அலிகானை ஒரு படத்திலாவது பயங்கரமான வில்லனாக நடிக்க வைத்து விடுவேன்' என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி எடுத்துள்ளார். 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகத்தையும் எடுக்க லோகேஷ் ஆர்வமாக இருக்கிறார்.

    மன்சூர் அலிகான்

    மன்சூர் அலிகான்

     

    எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் 'விக்ரம்' படத்தின் அடுத்த பாகத்தில் கமல்ஹாசனுடன் மல்லுக்கட்டும் வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் மன்சூர் அலிகானின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறப்போகிறது.

    • கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது கமல் இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

    கமல்ஹாசனின் விக்ரம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்த நிலையில் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் விபத்து, கொரோனா போன்ற காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது.

    தீபிகா படுகோனே

    தீபிகா படுகோனே

     

    இதையடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர். தற்போது படத்தின் இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்து விட்டு இந்தியன்-2 படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    தீபிகா படுகோனே

    தீபிகா படுகோனே

     

    இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்த காஜல் அகர்வால் படத்தில் இருந்து விலகி விட்டார். எனவே அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட முடிவு செய்து உள்ளனர். காஜல் அகர்வாலுக்கு பதிலாக கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே ஏற்கனவே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே இப்படத்தில் நடிக்க மறுத்தால் இந்தி நடிகை கேத்ரினா கைப்பை அழைக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.
    • இதில் திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


    இந்த போட்டிகள் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி, அரசியல் தலைவர்கள் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


    இந்தவிழாவில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் கலாசார வளர்ச்சி குறித்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று முதலாம் நூற்றாண்டில் கரிகால சோழன் கல்லணை கட்டியது குறித்து முப்பரிமாண படத்துடன் கமல் குரலில் விளக்கமளிக்கப்பட்டது.


    இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் குழுவினர் கலந்துரையாடும் வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'உலக நாயகனுடன் சில மணி நேரங்கள் செலவழிக்க நேரம் கிடைத்ததை எண்ணி நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் எங்களுக்கு கூறிய நுணுக்கங்கள் ஆகியவை எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடிக்கிறார்.
    • உதயநிதி ஸ்டாலின் படத்தின் புதிய அறிவிப்பை கமல் வெளியிட்டார்.

    'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார்.

    மேலும், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 25-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார்.


    உதயநிதி ஸ்டாலின் - கமல்ஹாசன்

    இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் "ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன், "அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
    • 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

    2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

    தேசிய திரைப்பட விருது வென்ற அனைவருக்கும் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல் வாழ்த்துக் கூறி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


    ரஜினி பதிவில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப்போற்று பட இயக்குனர் மற்றும் விருது பெறும் திரையுலக கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என்று பதிவிட்டுள்ளார்.


    கமல் பதிவில், சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்க செய்துள்ளது தமிழ் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கமல் பதிவிட்டுள்ளார். 


    • நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி நடிக்க தயாராகி உள்ளார்.
    • இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். அடுத்த மாதத்தில் (ஆகஸ்டு) இருந்து தொடர்ச்சியாக ஐதராபாத் திரைப்பட நகரில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். ஜெயில் அதிகாரியாக வரும் ரஜினி சிறைக்குள் நடக்கும் தாதாக்களின் சமூக விரோத திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    அருண்ராஜா காமராஜ் - லோகேஷ் கனகராஜ்

    அருண்ராஜா காமராஜ் - லோகேஷ் கனகராஜ்

    இந்த படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது, கனா படத்தை இயக்கி பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் பெயர் அடிபடுகிறது. இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க விரும்புவதாகவும் தெரிகிறது.

    ரஜினி - கமல்

    ரஜினி - கமல்

    ஏற்கனவே கமல்ஹாசனும், லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். அப்போது புதிய படத்தில் இணைவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் 4 வருட இடைவெளிக்கு பிறகு நடித்து திரைக்கு வந்த விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.
    • விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது.

    விக்ரம்

    விக்ரம்

    இந்நிலையில் 'விக்ரம்' திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்பட்ட, இந்தியத் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் தரவரிசை பட்டியலை ஐஎம்டிபி என்கிற திரைப்படங்களை மதிப்பீடு செய்யும் இணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 8.6 மதிப்பீடு பெற்று முதலிடைத்தை பிடித்துள்ளது. இது கமல் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ×