search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • டலூர் அடுத்த பெரியபட்டில் தனியார் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலை உள்ளது‌.
    • இந்த தொழிற்சாலை இயங்காத காரணத்தினால் தொழிற்சாலைகளில் இருந்து டன் கணக்கில் இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பெரியபட்டில் தனியார் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலை இயங்காத காரணத்தினால் தொழிற்சாலைகளில் இருந்து டன் கணக்கில் இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருடி வருகின்றனர்இந்த நிலையில் இன்று அதிகாலை தனியார் தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை 3 பேர் கொண்ட கும்பல் திருடிக் கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலை நிர்வாகி சாமிநாதன் என்பவர் பார்வையிட்டு 3 பேரை பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    மேலும் அவர்களிடமிருந்து 150 கிலோ இரும்பு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் ஆலப்பாக்கம் சேர்ந்த தீனதயாளன் (வயது 36), தீர்த்தனகிரி சேர்ந்தவர்கள் தட்சிணாமூர்த்தி (50), குமார் (40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • கேமரா உள்ளிட்ட பொருட்களை ரங்காராவ் திருடிச்சென்றது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்காராவை வலை வீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). ஸ்டூடியோ உரிமையாளர். திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ஆந்திராவை சேர்ந்த ரங்காராவ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ரங்காராவ் தனது தங்கைக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அதற்கு 'போட்டோ சூட்' நடத்த வேண்டும் என்று ராஜேசிடம் கூறி அவரை புதுவைக்கு அழைத்து வந்தார். இருவரும் புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினர். அவரது தங்கை மறுநாள் வருவதாக கூறினார்.

    இந்த நிலையில் இருவரும் அண்ணாசாலைக்கு சென்றனர். ரங்காராவ் அங்கு ராஜேசை நிற்க வைத்து விட்டு இதோ வருகிறேன் என கூறிச்சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் வராததால் ராேஜஷ் தான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வைத்திருந்த ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை ரங்காராவ் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்காராவை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • 115 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • கண்ணன் மற்றும் பால்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அடுத்துள்ள கரம்பவிளை மற்றும் ஆண்டிவிளையில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடப்பதாக தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் தேரிவிளை பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 115 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் துணிகரம்
    • சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலு–வலகம் எதிரே வசிப்பவர் செல்லம் கடம்பன். இவர் செந்துறை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வரு–கிறார். இவரது வீட்டுக்கு கத்தி, அரிவாள்மனை உள்ளிட்ட ஆயுதங்களை சாணை பிடிக்க வந்துள்ளார்.பின்னர் அவர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கத்தி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சாணை பிடித்து விட்டு வீட்டை நோட்டமிட்டுள்ளார். வீட்டில் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது மகள் மட்டுமே இருப்பதை அறிந்த அந்த நபர் மீண்டும் மாலை நேரத்தில் வந்துள்ளார்.அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைந்திருந்த சைக்கிளை லாவகமாக திருடி சென்றார். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதே போன்று அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்த மின் கேபிள்கள் மற்றும் எல்இடி விளக்கு போன்றவை கடந்த மாதம் திருடு போனது.மேலும் முன்னாள் பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டில் இதே போன்று பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு இருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். கடந்த வாரம் ஆதிகுடிக்காடு மற்றும் நந்தையன்குடிக்காடு கிராமங்களில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.பகலில் பெண்கள் மட் டுமே தனியாக இருப்பதை அறிந்து இதுபோன்ற பகு–திகளை நோட்டமிட்டு அந்த மர்ம நபர் மற்ற இடங்க–ளிலும் கைவரிசை காட்டி உள்ளாரா என்பது குறித்து செந்துறை போலீசார் விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவம் நடைபெறும் நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணி–கரமான திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப–டுத்தியுள்ளது.

    • சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.
    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.  இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்    இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.உரிமையாளர்உரிமையாளர்

    • தாமரைச்செல்வி (வயது32). இவர் கேன்சர் நோய்க்காக, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • தாமரைச்செல்வி தனது கைப்பையில் சிறிய அளவிலான மணி பர்சில் ரூ.23 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வெள்ளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (வயது32). இவர் கேன்சர் நோய்க்காக, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மார்ச் 31-ந்தேதி, தனது தந்தை சிங்காரவேலு உதவியுடன், புதுச்சேரி சென்று சிகிச்சை பெற்று இரவு காரைக்காலுக்கு பஸ்சில் திரும்பினார். புதுச்சேரியிலிருந்து நேரடி பஸ் கிடைக்காததால், சிதம்பரம் வந்து அங்கிருந்து காரைக்காலுக்கு தனியார் பஸ்ஸில் வந்தார். தாமரைச்செல்வி தனது கைப்பையில் சிறிய அளவிலான மணி பர்சில் ரூ.23 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    பஸ்சில் அவர் அருகில், 4 ஆண்கள் அமர்ந்து, பேச்சு கொடுத்தவாறு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாலை காரைக்காலுக்கு பஸ் வந்த போது. கைப்பையை இருந்த மணி பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பஸ்சில் பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் தாமரைச்செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • செல்போன் எண்ணுக்கு பஞ்சவர்ணம் போன் செய்துள்ளார். அதில் பேசிய அந்த நபர்கள், கோவிலில் பூஜை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளிடம் நகை-பணத்தை நூதனமாக அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 65). சம்பவத்தன்று இவர் தனது மருமகள் பிருந்தாவுடன் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க 2 இளம்பெண்கள், பஞ்ச வர்ணம் மற்றும் அவரது மருமகளிடம் காவி உடை அணிந்த 2 பேர் இங்கு வந்தார்களா? என கேட்டு பேச்சு கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

    அப்போது அந்த பெண்கள், தங்களது உறவினர் மகளுக்கு இருந்த உடல் பிரச்சினையை காவி உடை அணிந்து வந்த நபர்கள் தீர்த்து வைத்ததாக கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்நிலையில் மறுநாள் பஞ்சவர்ணமும், அவரது மருமகளும் வீட்டின் முன் அமர்ந்திருந்தபோது, முந்தைய தினம் வந்த பெண்கள் கூறியதுபோல் காவி உடை அணிந்து 2 நபர்கள் வந்தனர். அவர்களை பார்த்த பஞ்சவர்ணம், உங்களை பற்றி 2 பெண்கள் கூறியதாக அந்த நபர்களுடன் பேசி உள்ளார்.

    அப்போது அந்த நபர்கள், தங்களின் கையை பார்த்து உங்களுக்குள்ள பிரச்சினையை கண்டறிந்து அதற்கு பரிகாரம் செய்து தீர்த்து வைப்போம் என கூறி உள்ளனர். அதனை நம்பிய பஞ்ச வர்ணம், தனது கையை அந்த நபர்களிடம் காட்டி உள்ளார்.

    அப்போது அந்த நபர்கள் உங்களுக்கு உடல் சூடு அதிகமாக இருப்பதாக கூறி அதனை போக்க சாப்பிடு மாறு ஒரு மருந்தை கொடுத்துள்ளனர். இதையடுத்து பஞ்சவர்ணத்தின் மருமகள் பிருந்தாவின் கையை பார்த்து, பொன் (தங்க நகை) தோஷம் இருப்பதாக கூறி உள்ளனர்.

    அதனை போக்குவதற்கு வீட்டில் உள்ள நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். அதனை நம்பிய பஞ்சவர்ணம் வீட்டில் இருந்த சில தங்க நகைகளை அந்த நபர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் பரிகார பூஜை செய்ய கேட்ட ரூ.5,500 பணத்தையும் அந்த நபர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

    தங்க நகைகள் மற்றும் பணத்தை வாங்கி கொண்ட அந்த மர்ம நபர்கள், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நகைகளை கொண்டு சென்று பூஜை செய்து எடுத்து வருவதாக சென்றுள்ளனர். மேலும் தங்களது செல்போன் எண்ணையும் கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் நகையை வாங்கி சென்ற நபர்கள் வராததால், அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு பஞ்சவர்ணம் போன் செய்துள்ளார். அதில் பேசிய அந்த நபர்கள், கோவிலில் பூஜை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனால் வெகு நேரமாகியும் அந்த நபர்கள் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பஞ்ச வர்ணம், மீண்டும் போன் செய்தார். ஆனால் அந்த நபர்களின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றியதை அறிந்த பஞ்சவர்ணம், அதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தோஷம் நீக்குவதாக கூறி மாமியார், மருமகளிடம் நகை-பணத்தை நூதனமாக அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கடலூர் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் நகை திருடப்பட்டது.
    • அப்போது ஒரு வாலிபர் ஆனந்தராஜா பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்

    கடலூர், :

    கடலூர் மாவட்டம் புவனகிரி கொத்தட்டைைய சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). சம்பவத்தன்று பிரகாஷ் தனது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று பிரகாஷ் தூங்கிவிட்டார். தூக்கத்திலிருந்து விழித்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரம், செல் மற்றும் அரசு ஆவண கார்டு அனைத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.  இதன் மதிப்பு சுமார் 25 ஆயிரம் ஆகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவை சோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடலூர் எம்.புதூரை சேர்ந்த ஆனந்தராஜா (வயது 33) என்பவர் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஆனந்தராஜா பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதில் திடீரென்று விழித்துக் கொண்ட ஆனந்தராஜா அந்த வாலிபரை பின்தொ டர்ந்து திருடன் திருடன் என கத்திக்கொண்டு துரத்தினார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.
    • பீரோ திறக்கபட்ட நிலையில் 6 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி அருகே உள்ள நம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது72). இவர் பொதுப்பணித்துறை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் வந்து பார்க்கும் போது பீரோ திறக்கபட்ட நிலையில் 6 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கோபிநாத ம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எட்வி ன்ஜார்ஜ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார்.
    • திருடியது கூடலூர் யானைசெத்தகொல்லியை சேர்ந்த மனோகரன்(37) என்பது தெரியவந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் எட்வின் ஜார்ஜ்(வயது58).

    இவர் கூடலூர்-தேவர்சோலை ரோடு பகுதியில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த ரூ.14 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போய் இருந்தது.

    இவர் கடையை பூட்டி சென்றதை நோட்டமிட்ட நபர்கள் அதன்பின்னர் கடையை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து எட்வி ன்ஜார்ஜ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையை உடைத்து பொருட்களை திருடியது கூடலூர் யானைசெத்தகொல்லியை சேர்ந்த மனோகரன்(37) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், நேற்று காலை வந்து பார்த்தார்.
    • வெல்டிங் வயர் உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய் பேட்டை கந்தசாமி பிள்ளைக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவர் கிச்சிப்பாளையம் சிவன் கரடு பகுதியில் லாரிக்கு பாடி கட்டும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பட்ட றையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற இவர், நேற்று காலை வந்து பார்த்தார். அப்போது பட்ட றையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், உள்ளே சென்று பார்த்தபோது வெல்டிங் வயர் உட்பட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள வயர்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ரமேஷ், கிச்சிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
    • இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே வசந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராசு. இவர் நாமக்கல் கடை வீதியில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 26-ந் தேதி பணிக்கு வந்த செல்வராசு தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு முன்பு நிறுத்தினார். அப்போது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்றார்.

    பணி முடிந்ததும் இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்தபோது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    இதே போல கடந்த 25-ந் தேதி நாமக்கல் சேலம் சாலையில் தனசேகரன் என்பவருக்கு சொந்தமான கடைக்கு வந்த 4 பெண்கள் கடையில் ஊழியர் இல்லாத நேரத்தை பயன்படுத்தி முந்திரி, உளுந்தம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    இவை அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான 4 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×