search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • ரவி செல்வம் அடிக்கடி தொழில் நிமித்தமாக கோவை வருவது வழக்கம்.
    • திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கரூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் ரவி செல்வம் (38), கைத்தறி உரிமையாளர். இவர் அடிக்கடி தொழில் நிமித்தமாக கோவை வருவது வழக்கம். அப்படி வரும்போதெல்லாம் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் தங்குவார். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்த அவர் அங்கு தங்கினார்.

    இந்நிலையில், கடந்த 23ம் தேதி அங்கு வந்த சிலர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி கரூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அன்று இரவு ரவி செல்வம் மீண்டும் கோவை திரும்பினார். அபார்ட்மென்டுக்கு சென்ற போது, அங்கு அலமாரியில் வைத்திருந்த முக்கியமான ஆவணங்கள், ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து ரவி செல்வம் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவி செல்வத்தை விசாரணைக்கு என அழைத்து சென்றவர்கள் யார்? திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • காங்கயம் போலீசார் நள்ளிரவு திருப்பூா் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை நிறுத்தி விசாரித்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் புலிமாநகா் பகுதியை சோ்ந்தவா் கனகரத்தினம் (வயது 46). இவா் காங்கயம்-திருப்பூா் சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறாா். கனகரத்தினம் இரவு வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.இந்தநிலையில் காங்கயம் போலீசார் நள்ளிரவு திருப்பூா் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு நபா் கையில் சாக்கு மூட்டையுடன் நடந்து வந்துள்ளாா். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை நிறுத்தி விசாரித்தனா்.

    விசாரணையில் அவா் கடலூா் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சோ்ந்த ஆறுமுகம் (44) என்பதும், இவா் கனகரத்தினத்தின் கடையில் இருந்து 15 கிலோ இரும்புகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா். 

    • சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியில் தான் வீட்டில் கழட்டி வைத்திருந்த 11¼ பவுன் தாலி செயினை காணவில்லை எனவும், அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
    • அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலக். இவரது மனைவி அருணா (வயது 38). இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் அருண்பென், இவரது மனைவி அபிராமி மற்றும் தீபா.

    இந்த நிலையில் அருண்பென், தனது வீட்டிற்கு உறவினரை இடப்பற்றாக்குறை காரணமாக, கடந்த 20-ந் தேதி அருணா வீட்டில் தங்க வைத்துள்ளார். இதற்காக அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் அருணா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    இதற்கிடையே அருணா, தான் வீட்டில் கழட்டி வைத்திருந்த 11¼ பவுன் தாலி செயினை காணவில்லை எனவும், அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காய்கறிகளை வாங்கி கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
    • வங்கியில் இருந்து ரூ. 4 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள கம்பளியம்பட்டி, அரண்மனைபுதூரை சேர்ந்த பழனிச்சாமி மகன் விஜயராஜ் (வயது 60) ,விவசாயி. இவர் நேற்று வியாழக்கிழமை பகல் 12 மணி அளவில் வெள்ளகோவிலில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து தனது தேவைக்காக ரூ. 4 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு அதை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். பின்பு தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு காய்கறி கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்கி கொண்டு மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பணம் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காங்கேயம் போலீஸ் துணை டி.எஸ்.பி பார்த்திபன் மற்றும் போலீசார் வெள்ளகோவிலில் திருட்டுப் போன இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

    அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதும் விஜயராஜ் கடைக்குச் சென்று திரும்புவதற்குள் அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தில் இன்னும் 2 நபர்கள் கூடுதலாக விஜயராஜை வங்கியில் இருந்து பின்தொடர்ந்து வந்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து பணத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    • முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட யஷ்வந்த் என்பவரை போலீசார் கைது செய்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    • யஷ்வந்த் திருடிய 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தார்.

    அதில் சந்தேகப்படும் நபராக கருதப்பட்ட முண்டியம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது மகன் யஷ்வந்த் (வயது 19) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்தனர். இதில் அவர் மோட்டார் சைக்கிள்களை திருடியது போலீசாருக்கு தெரியவந்தது. விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து யஷ்வந்த் திருடிய 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த கமலா வீட்டைப் பூட்டிவிட்டு திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • 16 கிராம் தங்க நகைகள், 525 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரை சேர்ந்தவர் மலர்வண்ணன். இவரது மனைவி லாவண்யா (வயது 37). இவர் இடையாத்தி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த இவரது மாமியார் கமலாவும் வீட்டைப் பூட்டிவிட்டு திருவையாறில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார்.

    இந்த நிலையில் கமலா நிகழ்ச்சி முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 16 கிராம் தங்க நகைகள், 525 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை சேகரித்தனர்.

    இது பற்றி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சேலம்:

    மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.

    இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

    இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

    • மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சேலம்:

    மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.

    இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.

    சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது

    இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.

    • அரவக்குறிச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு போனது
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    அரவக்குறிச்சி அருகே, பள்ளப்பட்டி, டி.எம்,எச்., நகரை சேர்ந்த அப்துல்லா என்பவரது மனைவி அஜிதாஜ்மின் (வயது 30) கூலி தொழிலாளி. இவர் கடந்த 18ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு நாகப்பட்டினத்துக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஏழு பவுன் நகை, மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அஜிதாஜ்மின் அரவக்குறிச்சி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.




    • ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார்.
    • ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார். அவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து முருகையன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால், மின் வயர் திருட்டு தொடர்பாக புகார் வாங்க மறுத்து விட்டனர். இதனால் ஆன்லைன் மூலம் முருகையன் புகார் அளித்தார்.

    • ஊராட்சி மன்ற தலைவர் அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • அலுவலகத்தில் இருந்த மானிட்டர் திருடப்பட்டிருந்தது.

    காவேரிப்பட்டணம் ,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த எர்ர அள்ளியில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்புறம் காவேரிப்பட்டினம் சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ் உள்ளது. எர்ர அள்ளி ஊராட்சி மன்ற தலைவராக தி.மு.க.வை சார்ந்த செந்தாமரை உள்ளார்.

    இந்நிலையில் நேற்று அலுவலகத்தை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றுள்ளனர் .இன்று காலையில் அலுவலகம் பூட்டு இன்றி கதவு மட்டும் மூடப்பட்டு இருந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது ஊராட்சி மன்ற தலைவர் அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அவருடைய அறையில் இருந்த பீரோ மற்றும் ஊராட்சி மன்ற கிளர்க் அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டிருந்தது. மேலும் அலுவலகத்தில் இருந்த மானிட்டர் திருடப்பட்டிருந்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கடந்த வாரம் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றின் மின்விசை பம்பு பூட்டை உடைத்து நீரேற்றும் பம்பின் ஸ்டார்டர் திருடி கொண்டு சென்று விட்டனர். இதன் மதிப்பு சுமார் 15000 இருக்கும்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கும் போது ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே இரவில் தினமும் நிறைய வாலிபர்கள் அமர்ந்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நாங்கள் அந்த வாலிபர்களிடம் கூறினால் போதை போட்டு வந்து எங்களிடம் தகாத வார்த்தைகளில் சண்டையிட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து எங்களுக்கும், எங்களது குடும்பத்திற்கும் பாதுகாப்பு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார்
    • பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி செல்வமணி(வயது 55). இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்வமணி கழுத்தில் அணிந்திருந்த 8. 3/4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பித்து சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து நகை பறித்து ஓடியது சென்ற மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.

    ×