search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
    • முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி முத்தமிழ் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). இவர் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். இந்த நிலையில் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகில் வசிப்பவர்கள் அவருக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உடனடியாக அவர் ஊருக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.
    • 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்

    சேலம்:

    ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி சின்னவடகம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 39). கட்டிட மேஸ்திரி. அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அவர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2¼ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து சேகர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்.இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லேப்டாப்பை திருடி அவர் கொண்டு வந்த பையில் வைத்துக் கொண்டார்.
    • ஊழியர் சந்தேகத்தால் திருப்பிக் கொடுத்து ஓட்டம்

    கோவை,

    கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகள், லேப்டாப் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இங்கு லேப்டாப் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைக்கு வாலிபர் மற்றும் ஒரு இளம்பெண் வந்தனர். அங்கு பணியில் இருந்த விற்பனையாளரிடம் கம்ப்யூட்டருக்கு மவுஸ் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த விற்பனையாளர் இளம் பெண்ணுடன் வந்த வாலிபருக்கு மவுஸ் காண்பித்துக் கொண்டிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட அந்த இளம்பெண் கடையில் டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடி அவர் கொண்டு வந்த பையில் வைத்துக் கொண்டார். இதையடுத்து வாலிபரிடம் மவுஸ் காண்பித்துவிட்டு வந்த அந்த விற்பனையாளர் டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த லேப்டாப் மாயமானதால் அந்த இளம்பெண் மீது விற்பனையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் இதுகுறித்து இளம்பெண்ணிடம் அவர் கேட்டுள்ளார். முதலில் அந்த பெண் தான் எடுக்கவில்லை என மறுத்தார். அவரது பேச்சில் சந்தேகமடைந்த விற்பனை யாளர் பெண்ணிடம் இருந்த பையை திறந்து காண்பி க்கும்படி வலியுறு த்தியுள்ளார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை திறந்து பார்த்த போது அதில் லேப்டாப் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்து விற்பனையாளரிடம் திரும்ப கொடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து இருவரும் எதுவும் வாங்காமல் கடையை விட்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தன்னை சோலார் இன்ஸ்பெக்டர் எனவும், உங்கள் வீட்டில் உள்ள சோலாரை சரிபார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
    • திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    கோவை:

    சுந்தர் சி நடித்த நகரம் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதிலும் அவர் டிஸ் அன்டனாவை சரி செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இந்த காட்சியை எப்போது பார்த்தாலும் சிரிப்பு வந்து கொண்டே இருக்கும்.

    அதே பாணியில் தற்போது கோவை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் அரசினால் கட்டிகொடுக்கப்பட்ட பசுமை வீடுகளுக்கு சென்று, அங்கு சோலார் பேனலை சரி செய்து தருவதாக கூறி நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம்(61). இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தன்னை சோலார் இன்ஸ்பெக்டர் எனவும், உங்கள் வீட்டில் உள்ள சோலாரை சரிபார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    பரமசிவமும் அதனை உண்மை என நம்பினார். பின்னர் அந்த வாலிபர் வீட்டின் மேல் ஏறி சோலாரை சரி செய்து இருக்கிறார். அப்போது கீழே நின்ற பரமசிவத்திடம் வீட்டிற்குள் மின்சாரம் சரியாக வருகிறதா என பார்க்க கூற, அவரும் அதனை பார்த்துள்ளார்.

    பின்னர் கீழே வந்த அந்த வாலிபர், தான் வீட்டிற்குள் சென்று மின்சாரம் சரியாக வருகிறதா என பார்க்கிறேன். நீங்கள் மேலே சென்று சோலாரை பாருங்கள் என கூறியுள்ளார்.

    பரமசிவமும் மேலே சென்றுவிட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட வாலிபர், வீட்டில் இருந்த 9 பவுன் நகையை திருடிவிட்டார். பின்னர் சோலார் பேனல் சரியாக இருக்கிறது. நான் வருகிறேன் என கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    அவர் சென்ற பின்பு பரமசிவம் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் அதனை சோதனை செய்தார். அப்போது அதில் இருந்த நகை மாயமாகி இருந்தது.

    உடனடியாக சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாகவே சூலூர் பகுதிகளில் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், அதில் ஈடுபடும் நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதையடுத்து திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று தென்னம்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(வயது34) என்பதும், சூலூரில் பசுமை வீடுகளில் சோலார் பேனலை சரி செய்வதாக கூறி தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    தொடர், விசாரணையில், முத்துக்குமார் பசுமை வீடுகள் எனப்படும் அரசால் கட்டி கொடுக்கப்பட்டுள்ள வீடுகளை நோட்டமிட்டே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வீட்டிற்கு சென்றதும் தன்னை ஒரு சோலார் இன்ஸ்பெக்டர், உங்கள் வீட்டில் சோலாரை சரி செய்ய வந்துள்ளேன் என கூறி விட்டு, அதனை சரி செய்வது போல நடித்து நகை, பணத்தை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இவர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு போனது
    • இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் முத்துலட்சுமி நகர், 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகரன் (வயது 35). இவரது மனைவி ரங்கீலாவுக்கு குழந்தை பிறந்ததால், அவர் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மணிமேகரனுடன் தாய் சந்தானலட்சுமி வசித்து வருகிறார். மணிமேகரனின் தந்தை ராமராஜ் வாலிகண்டபுரத்தில் மரப்பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அவர் அங்குள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி மாலை மணிமேகரனும், சந்தானலட்சுமியும் வாலிகண்டபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம், 1 பவுன் மோதிரம், 50 கிராம் வெள்ளி காசு ஆகியவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு மணிமேகரன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மணிமங்லம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த காவனூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயரங்கன். நேற்று முன்தினம் விஜயரங்கன், அவரது மனைவி, 2 மகள்களும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    மாலையில் விஜயரங்கனும், அவரது மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து திருட்டு
    • விசாரணை நடத்திய போலீசார் திருடிய பெண்ணை கைது செய்தனர்

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அய்யம்பாளையம் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன், கூலித் தொழிலாளி. இவர் வழக்கம் போல் காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தோட்டத்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டின் சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு சென்றனர். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக வீடு திரும்பினர்.அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 250 பணம் திருடப்பட்டது தெரியவந்தது.பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது ஒரு ஒரு மர்மப் பெண் வீட்டிலிருந்தே வெளியே வருவதை பார்த்ததாக தெரிவித்தனர்.உடனே இது பற்றி சிதம்பரநாதனின் மனைவி சுலோச்சனா மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லால்குடி அரியூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த மேனகா காந்தி (வயது 32) என்ற பெண்ணை கைது செய்தனர்.

    • புதுக்கோட்டையில் ஓடும் பேருந்தில் ரூ.37 ஆயிரம், 6 கிராம் தங்கம் திருட்டு போனது
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யப்பன் வயல் பகுதியை சேர்ந்த முருகேஷன் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (வயது 38). அட்சய திருதியை முன்னிட்டு புதுக்கோட்டை கடைவீதிக்கு சென்றுள்ளார். இதற்காக 37 ஆயிரம் ரூபாய் பணம், 6 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை ஒரு பையில் வைத்துக்கொண்டு கீரனூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார். பையை தனது அருகில் வைத்து விட்டு பயணம் செய்துள்ளார்.

    புதுக்கோட்டை வந்ததும் பேருந்தை விட்டு இறங்குவதற்காக தனது பையை எடுக்க நினைத்த போது, அது காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சரவணம், பணம், தங்கம், வெள்ளி பொருட்களுடன் பையை திருடி சென்ற மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • தா.பழூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு போனது
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் சிலால் நால்ரோடு பகுதியில் வானதிரையான் பட்டினம் செல்லும் சாலையில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். மெடிக்கலுக்கு அருகிலேயே அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் வழக்கம் போல் கணபதி மளிகை கடையை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது அவரது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதேபோலவே அவர் கடைக்கு அருகில் உள்ள செல்லம்மாள் நடத்தும் மெடிக்கல் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக கணபதி செல்லம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். மளிகை கடைக்குள் சென்று பார்த்தபோது சாமி படம் அருகில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. அதுபோலவே மெடிக்கல் உள்ள கல்லாப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    அத்துடன் மெடிக்கலில் இருந்து வெள்ளி கொலுசு உள்ளிட்ட சில பொருட்களையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து உடனடியாக தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தடவியல் சப் இன்ஸ்பெக்டர் சத்யராஜ் சம்பவ இடத்திலிருந்து கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே தனது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • பல இடங்களில் கடந்த சில நாட்களாக தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பச்சூரைச்சேர்ந்தவர் தியாகு. தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் இவர், கடந்த 12-ந் தேதி, பிள்ளைத்தெருவாசல் சாலை அருகே தனது ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி மேற்கொண்டார். சிறிது நேரம் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள் இல்லை. பல இடங்களில் கடந்த சில நாட்களாக தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிசென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • அரசு மருத்து வமனையில் தொடர்ந்து மர்ம நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
    • இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுக்குள் யார் வருகி றார்கள்?, யார் போகி றார்கள்? என்பது தெரியாமல் உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வெளி மற்றும் உள் நோயா ளிகளாக தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிதடி தகராறில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இருந்த பகுதிக்கு, இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை மிரட்டி சென்றனர்.

    அடிக்கடி அந்த மர்மந பர்கள் வந்து சென்றதால், மூதாட்டி மருத்துவ அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து வலியுறுத்தி யதின் காரணமாக பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் அரசு மருத்து வமனையில் தொடர்ந்து மர்ம நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுக்குள் யார் வருகி றார்கள்?, யார் போகி றார்கள்? என்பது தெரியாமல் உள்ளது.

    இதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூர் அருகே ராயர்பாளை யத்தை சேர்ந்த பெண் பிரச வத்திற்காக சேர்க்கப்பட்டி ருந்தார். அவருக்கு துணையாக இருந்த, அந்த பெண்ணின் தாய் கைப்பை யில் 2 செல்போன்கள், பணம், கொலுசு உள்ளிட்டவை வைத்திருந்தார்.

    இந்நிலையில் இரவில் பிரசவ வார்டிற்கு வந்த மர்ம நபர்கள், செல்போன், கொலுசு, பணம் வைத்தி ருந்த கைப்பையை திருடி சென்று விட்டனர். இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் தெரிவித்தார்.

    அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கண்கா ணிப்பு கேமராவை பரிசோ தனை செய்தாகவும் தெரி வித்துள்ளார். மேலும் போலீசில் புகார் செய்யு மாறு அறிவுறுத்தியுள்ளார். அவர்களும் திருச்செங்கோடு போலீசில் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மருத்துவ மனை நிர்வாகமும் இதை கண்டுகொள்ளவில்லை.

    இதே நிலைமை நீடித்தால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் உடமை களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். எனவே திருட்டு, நோயாளிகளை மிரட்டுவதை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நோயா ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனி 3-வது கிராஸ் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் தாமோதரன் (57). ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்டில் உள்ள டெக்ஸ்டைல்சில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற தாமோதரன் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த கம்மல் தோடு, மோதிரம் என முக்கால் பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு போய் இருந்தது.

    இது குறித்து தாமோதரன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் கைரேகைகளை சேகரித்தனர்.

    குடியிருப்பு பகுதியில் பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் வீரப்பன்சத்தி ரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சின்னமுத்து வீதியி ல் அடுத்தடுத்த சந்துகளில் உள்ள 2 வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.

    ஒரு வீட்டில் வெள்ளி குத்துவிளக்கும், வெள்ளி கொலுசும் திருட்டு போயிருந்தது. மற்றொரு வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் ஒரு நபர் நடந்து செல்வதும், திருட்டு நடந்த வீட்டில் இருந்து செல்வதும் பதிவாகி இருந்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த 3 திருட்டிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×