search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95209"

    பெட்ரோல் லிட்டர் ரூ.81.26 ஆகவும், டீசல் ரூ.73.81 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல்- டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விட்டது. சர்வதேச சந்தையின் விலைக்கேற்ப தினமும் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. ஒரு வருடமாக தொடர்ந்து அதிகரித்து வந்த இவற்றின் விலை 20 நாட்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    கடந்த 13-ந்தேதி முதல் மீண்டும் விலை உயரத் தொடங்கியது. 15 நாட்களாக தினமும் 20 காசு, 30 காசு என அதிகரித்தது. ஏறக்குறைய பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் சிறிது சிறிதாக கூடி பெட்ரோல் லிட்டர் ரூ.80-ம் டீசல் ரூ.72-ம் தாண்டியது. இன்று அவற்றின் விலை மேலும் உயர்ந்தது.

    பெட்ரோல் லிட்டர் ரூ.81.26 ஆகவும், டீசல் ரூ.73.81 ஆகவும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. உணவு பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றின் விலை போக்குவரத்து செலவு அதிகரிப்பால் தொடர்ந்து உயருகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு ‘குருடாயில்’ விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருவதுதான் முக்கிய காரணமாகும். மற்ற நாடுகளை விடவும் நம் நாட்டில் பெட்ரோல்- டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு அவற்றின் மீது மத்திய- மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் முக்கிய காரணம். குருடாயிலில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றி நிர்ணயிக்கப்படும் விலையை விட மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி அதிகமாகும்.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்க தலைவர் கே.பி. முரளி கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு முன் வரவேண்டும். மாநிலம் விதிக்கும் மதிப்பு கூட்டு வரி (வாட்) மத்திய அரசின் சுங்கவரி போன்றவை சதவிகித அடிப்படையில் நிர்ணயித்துள்ளது. ஒரு லிட்டருக்கு பெட்ரோல், டீசல் விலை விகிதாச்சார முறையில் வரியை நிர்ணயித்து வசூலிப்பதால் குருடாயில் விலை உயரும் போது வசூலிக்கும் வரியும் அதிகரிக்கிறது. அந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்காமல் ஒரு லிட்டருக்கு வாட் வரி, சுங்க வரி என நிர்ணயம் செய்தால் மக்களை பாதிக்காது. சதவிகித அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதே விலை உயர்வுக்கு மற்றொரு காரணமாகும்.

    சர்வதேச சந்தையில் குருடாயில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் லிட்டருக்கு இவ்வளவு வரி என்று விதித்தால் இந்த அளவிற்கு உயர வாய்ப்பு இல்லை. குருடாயில் விலை உயரும் போது அரசு வாட், சுங்க வரியை குறைத்து விலை உயர்வை தவிர்க்கலாம். விலை குறையும் போது வரியை அதிகரித்து சரி செய்து கொள்ள முடியும்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் குள் பெட்ரோல் - டீசல் கொண்டு வந்தால் நாடு முழுவதும் ஒரே விலையில் விற்க முடியும். பெட்ரோல்- டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு இன்னும் அதுபற்றி தெளிவாக எதையும் கூற வில்லை. பெட்ரோல்- டீசல் மீது 50 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் இந்த வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்கிறது. எனவே எண்ணை விலையை வரம்புக்குள் வைத்துக் கொண்டால் பொது மக்களிடம் இருந்து எதிர்ப்பு வராது. மக்களும் விலை உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Petrol #Diesel
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,664-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் கடந்த 24-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 920 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.23 ஆயிரத்த 872-க்கு விற்றது.

    இன்று பவுனுக்கு ரூ.208 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 664 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.26 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ2,958-க்கு விற்கிறது.

    பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலரின் மீதான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்கிறது. #Tamilnews
    கோத்தகிரியில் கேரட் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நெடுகுளா, கூக்கல்தொரை, ஈளடா உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறி கேரட், முட்டைகோஸ், உருளைகிழங்கு, பீட்ரூட், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.

    கணிசமான நிலப்பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டுபாளையம் மண்டிகளுக்கு தான் இங்கு விளைவிக்கப்படும். மலை காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ கேரட்டுக்கு அதிக பட்சமாக 8 ரூபாய் விலை மட்டுமே கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    தோட்ட பராமரிப்பு செலவினங்களை கடந்து அறுவடைசெய்த கேரட் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூலி மற்றும் லாரி வாடகை என கணக்கிட்டால் விவசாயிகளுக்கு ஒரு கிலோ கேரட் குறைந்தப்பட்சம் 50 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால் மேட்டுபாளையம் கமி‌ஷன் மண்டியில் 8 ரூபாய்க்கு விலை கிடைப்பதால் செலவிட்ட முதலீடு கூட விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

    பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாராகியும் அறுவடை செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். மழை பெய்தாலும் தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் தோட்டம் அழுகிவிடும் அபாயம் உள்ளது.
    வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயை தாண்டியது. டீசல் ரூ.72.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. #PetrolDiesel
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 13-ந் தேதி வரையில் 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல்தான் காரணம் என்ற கருத்து வெளிப்படையாக பரவியது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது.

    கடந்த 14-ந் தேதி பெட்ரோல் ரூ.77.61-க்கும், டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79-க்கும், டீசல் ரூ.71.87-க்கும் விற்பனை ஆனது.

    இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55-க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.

    அந்த வகையில், வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது. (நேற்று டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்தது.)

    கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.35-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 
    டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது.
    சென்னை:

    டீசல் விலை உயர்வு காரணமாக சென்னையில் லாரி தண்ணீர் கட்டணம் கடந்த 21-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டாலும் வீடு, நிறுவனங்களுக்கு குடிநீர் வாரியத்தில் பதிவு செய்தால் தனியாக லாரி தண்ணீர் அனுப்பும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மினி லாரி தண்ணீர் ரூ.400-க்கு விற்கப்பட்டது. இப்போது இதன் விலை ரூ.475 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் ரூ.510-ல் இருந்து ரூ. 700 ஆக உயர்ந்துள்ளது.

    9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீர் ரூ.600-ல் இருந்து ரூ.700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கு ரு.765-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.

    16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரி தண்ணீர் ரூ. 1070-ல் இருந்து விலை உயர்த்தப்பட்டு ரூ.1200-க்கு விற்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு வழங்கப்படும் லாரி தண்ணீர் ரூ.1360-ல் இருந்து ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது.

    இதுபற்றி சென்னை குடிநீர் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்தது. பல்வேறு கால கட்டங்களில் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளோம்.

    வீடுகளுக்கு விற்கப்படும் லாரி தண்ணீர் விலை 5 சதவீதம் அதிகமாகி உள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விற்கப்படும் தண்ணீர் விலை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Diesel
    ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு இந்த வாரம் நடவடிக்கை எடுக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Petrol #Diesel
    புதுடெல்லி:

    வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் வேளையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது.

    நாட்டிலே மிகக்குறைவான விலை என்றால் அது டெல்லி விலைதான். அங்கு நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.87, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.68.08 ஆகும்.

    மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். இதற்கு மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரி அல்லது மதிப்பு கூட்டு வரிதான் காரணம் ஆகும். மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது.

    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

    இது பற்றி மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது அரசுக்கு நெருக்கடியான சூழல் ஆகும். இதற்கு கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி பெட்ரோலியம் அமைச்சகத்துடன் நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

    உற்பத்தி வரி குறைப்புக்கான சாத்தியக்கூறுகளை நான் மறுப்பதற்கு இல்லை. இருந்தபோதும் அதை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. உற்பத்தி குறையை குறைத்தால் ஏற்படுகிற நிதி பாதிப்புகளை மனதில் கொள்ள வேண்டியது இருக்கிறது. பெட்ரோல், டீசல் சில்லரை விலையில் 20 முதல் 35 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் வரியாக உள்ளது. எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை எழுந்து உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு இந்த வாரம் சில நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

    டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு ( ஒரு டாலரின் மதிப்பு ரூ.67.97 ஆகும்) வீழ்ச்சியை சந்தித்ததும் விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் 1 ரூபாய் 35 காசு, டீசல் 1 ரூபாய் 48 காசு உயர்ந்துள்ளது. #Petrol #Diesel
    சென்னை:

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல் - டீசல் விலை உயராமல் இருந்தது.

    தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.



    கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. ஒவ்வொரு நாளும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை விபரம் வருமாறு:-

    19-ந்தேதி ரூ.78.74 இன்று மட்டும் பெட்ரோல் 32, காசு டீசல் 25 காசு உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் 1 ரூபாய் 35 காசு, டீசல் 1 ரூபாய் 48 காசு உயர்ந்துள்ளது.

    இதுபற்றி நிதி ஆலோசனை நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூ‌ஷனல் இக்விட்டில்ஸ் கூறுகையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வரும் வாரங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம் என்று அறிவித்துள்ளது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் கால் டாக்சி கட்டணத்தை உயர்த்துவது குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். #Petrol #Diesel
    கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்களாக விலை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தில் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் சிறிது சிறிதாக உயர்த்தி ரூ.5 வரை அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. #Petrol #Diesel
    சென்னை:

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல்-டீசல் விலை உயராமல் இருந்தது.

    தேர்தலின் போது பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டால் அது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணை நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்தன.

    கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி முடிந்த பிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.

    ஒவ்வொரு நாளும் உயர்ந்த பெட்ரோல்-டீசல் விலை விவரம் வருமாறு:-


    கடந்த 5 நாட்களில் பெட்ரோல் 1 ரூபாய் 3 காசு, டீசல் 1 ரூபாய் 23 காசு உயர்ந்துள்ளது.

    இதுபற்றி நிதி ஆலோசனை நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூ‌ஷனல் இக்விட்டிஸ் கூறுகையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வரும் வாரங்களில் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறி உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம் என்று அறிவித்துள்ளது.

    ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டிஸ் நிறுவனம் கூறுகையில் பெட்ரோல்-டீசல் விலையை அண்மையில் 20 நாட்களாக உயர்த்தாமல் இருந்ததால் தங்களுக்கு லிட்டருக்கு 31 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. #Petrol #Diesel
    பெட்ரோல் லிட்டருக்கு 23 காசும், டீசல் லிட்டருக்கு 24 காசும் அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். #Petrol #Diesel
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல்- டீசல் விலை அதிகரித்துள்ளது.

    பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய பின்னர் விலையேற்றம் அதிகரித்து வருகிறது.

    சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுவது போல் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதால் தினமும் சிறிது சிறிதாக அதிகரித்து பெரியளவில் உயர்ந்து விட்டது.

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வு பொருளாதாரத்திலும் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் 12 ரூபாய் உயர்ந்துள்ளது.

    கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்கள் மட்டும் விலை உயர்த்தப்படாமல் நிலையாக வைக்கப்பட்டு இருந்தது. கடந்த மாதம் 24-ந்தேதி முதல் இம்மாதம் 13-ந்தேதி வரை பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் நிலையாக இருந்தது. தேர்தல் முடிந்த உடனே அவற்றின் விலை உயர்த்தப்பட்டது.


    கடந்த 13-ந்தேதி வரையில் பெட்ரோல் லிட்டர் ரூ.77.82 ஆகவும், டீசல் லிட்டர் ரூ. 69.92 ஆகவும் இருந்தன. 20 நாட்களுக்கு பிறகு 14-ந்தேதி மீண்டும் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 20 காசும், டீசல் லிட்டருக்கு 24 காசும் அதிகரித்தது.
    தொடர்ந்து 3 நாட்களாக ஏறுமுகமாக இருந்த பெட்ரோல்- டீசலின் விலை இன்று 4-வது நாளாக மீண்டும் உயர்ந்தது. நேற்று பெட்ரோலின் விலை ரூ78.33 ஆகவும், டீசலின் விலை ரூ.70.62 ஆகவும் இருந்தன. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசு அதிகரித்து ரூ.78.56 ஆக உயர்ந்தது. டீசல் லிட்டருக்கு 24 காசு அதிகரித்து ரூ.70.86 ஆக உயர்ந்தது. 4 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 39 காசும், டீசல் 46 காசும் அதிகரித்துள்ளன.

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவு அதிகமானால் பொருட்களின் விலை உயரும்.

    இதனால் ஏழை, அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்தி குறைந்து பாதிக்கப்படுவார்கள். காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு ஏழை-நடுத்தர மக்களை அதிகமாக பாதிக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். #Petrol #Diesel
    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து, ஒரு சவரன் ரூ.23,768-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    கடந்த 10-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 912 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்றத்தால் பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ24 ஆயிரத்து 64 ஆக இருந்தது.

    நேற்று ரூ.64 குறைந்து பவுன் ரூ.24 ஆயிரமாக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரு.232 குறைந்து ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 768 ஆக உள்ளது.

    கிராமுக்கு ரூ.29 குறைந் துள்ளது. ஒரு கிராம் ரூ.2,971-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரமாக உளளது. ஒரு கிராம் ரூ.43-க்கு விற்கப்படுகிறது.
    ×