search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95212"

    • முருக வழிபாடு தமிழகத்தில் அதிகமாக உள்ளது.
    • கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் கலியுக கடவுளாக உள்ளார்.

    உலக வாழ்வில் மனிதன் எவ்வளவோ பாவங்கள் செய்து வருகிறான். இதில் மனிதனை நெறிப்படுத்தி ஆன்ம ஞானத்தை அடைய வழிவகை செய்வது தெய்வ வழிபாடு. இதில் முருக வழிபாடு தமிழகத்தில் அதிகமாக உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் முருகனை தங்கள் குலதெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். ஏனெனில் உண்மையான பேச்சுக்கும், மொழிக்கும் துணையாக இருப்பது முருகனின் திருநாமங்கள். கர்மவினைகளுக்கு ஆட்பட்டு உலக வாழ்க்கையில் அல்லல்படுவதில் இருந்து காப்பது முருகனின் பன்னிரு புயங்கள் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.

    ஆறுமுகனின் வேலும், திருக்கையும் துணையாக நின்று எம பயத்தை போக்கக்கூடியது.அதர்மத்தை அழித்து அருளையும், பொருளையும் கொடுக்க கூடியது. முருகன், சித்தர்களுக்கு எல்லாம் தலைவனாகியதால் சித்தனாதன் என பெயர் பெற்றார். போகர் என்ற சித்தர் வடிவமைத்த நவபாஷாண சிலையே பழனி மலைக்கோவிலில் மூலவராக உள்ளது. சூரபத்மனின் ஆணவத்தை அழித்து, இரு கூறாக்கி அதில் ஒன்றை மயிலாக்கி மற்றொன்றை சேவலாக்கினார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியிலும் வைத்துக் கொண்டார். இதன் காரணமாகத்தான் தன் தலைவனை காண மயில்கள் பழனி மலையை சுற்றிலும் ஆங்காங்கே நடனமாடி உலா வருகின்றனவோ.. என்று எண்ணும் வகையில் ஆங்காங்கே மயில்களை காண முடியும்.

    முருகனின் ஆறுமுகங்கள் தான் மனிதர்களின் ஆறு சக்கரங்களையும் சுழல வைத்து உடலை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது. தனது சக்தியெனும் அருளால் பக்தர்களிடம் தீயசக்திகள் நெருங்காமல் முருகப்பெருமான் காக்கின்றார். மாறா இளமையுடன் பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கிய செந்தமிழ்வேலன், பக்தர்களின் அறைகூவலுக்கு, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் கலியுக கடவுளாக உள்ளார்

    • மலையை வலம் வந்து வணங்கினாலே பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றான் முருகன்.
    • தமிழகத்தில் கிரிவலத்துக்கு பெயர் பெற்றது திருவண்ணாமலை.

    பழனிக்கு வரும் பக்தர்கள் மலை மீது அருள்பாலிக்கும் ஞான தண்டாயுதபாணி சுவாமியை வணங்கி செல்கின்றனர். ஆனால் மலை மீது ஏறி சென்று வழிபட்டால் தான் நற்பயன் கிடைக்கும் என்று அல்லாமல், மலையை வலம் வந்து வணங்கினாலே பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றான் முருகன். இதை, 'பைங்கயிலை போலும் பழனியே' என்று மாம்பழ கவிசிங்கரும், 'காசியின் மீறிய பழனி' என்ற அருணகிரிநாதரின் பாடல்வரி மூலம் அறியலாம்.

    தமிழகத்தில் கிரிவலத்துக்கு பெயர் பெற்றது அய்யன் அருள்கொண்ட திருவண்ணாமலை. அதற்கு அடுத்ததாக பழனியிலும் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக மலையை சுற்றிய பாதைகளில் காவடி, அலகு குத்தி வரும் பக்தர்கள் கிரிவலம் வந்த பின்னரே மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

    பழனி மலையை சுற்றிய பகுதியில் கடம்ப மரங்கள் அதிகமாக உள்ளதால் காலை, மாலை வேளையில் கிரிவலம் செல்லும்போது வீசும் காற்று உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது. சூரிய பகவான் வெம்மையால் வாட்டும் நாளில் மக்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது வழக்கம். ஆனால் பழனியில் பங்குனி மாத கடைசி 7 நாட்கள், சித்திரை முதல் 7 நாட்கள் பழனி மலையை கிரிவலம் வருவது அக்னி நட்சத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    • ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான்.
    • முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும்.

    ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பூசத்தில் வழிபாடு செய்யுங்கள் என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான். நமது ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலை, அதன் பலம் அறிந்து, நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும் ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் உடனுக்குடன் நற்பலன்களைக் காணலாம்.

    அந்த அடிப்படையில் தை மாத பூச நட்சத்திரமன்று, முருகப்பெருமான் ஆலயத்துக்கு சென்று 'ஓம்' என்ற பிரணவத்தின் பொருளை போதித்து தகப்பன்சாமியை வழிபட்டால், சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். தைப்பூச திருநாளில் "வேலை வணங்குவதே வேலை" எனக் கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும். தைப்பூசத்தன்று கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும். பாதயாத்திரை செல்ல இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    பன்னிரு கரத்தாலும் அவன் அள்ளிக் கொடுப்பதால்தான், அவன் 'வள்ளல்' என்று பெயர் பெறுகிறான். வேலால் சூரபத்மனை வென்று அவனை சேவலும், மயிலுமாக மாற்றிய பெருமை முருகப்பெருமானுக்கு உண்டு. பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தரப்பம் நெய்வேத்தியம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் கவலைகள் எல்லாம் நீங்கும்.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது.
    • பழனியில் முருகப்பெருமான் 3 இடங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    தமிழ்கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு பல கோவில்கள் இருந்தாலும் அறுபடை வீடுகள் தனிச்சிறப்பு. அந்த அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி திகழ்கிறது.

    பழனி என்றதும் நம் கண்முன் வருவது மலை மீது உள்ள கோவில்தான். ஆனால் பழனியில் முருகப்பெருமான் 3 இடங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    மலைக்கோவிலில் தண்டாயுதபாணியாகவும், திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுதசுவாமியாகவும், ஊர்க்கோவிலில் (பெரியநாயகிஅம்மன் கோவில்) வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியாகவும் தனித்தனியே எழுந்தருளியுள்ளனர்.

    இது பழனிக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. பழனிக்கு வரும் பக்தர்கள் இந்த 3 கோவில்களுக்கும் சென்று வணங்கி வருகின்றனர்.

    • முருகன் தமிழ் கடவுள்.
    • முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம்.

    முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிக தொன்மையானது. 'முருகு' என்ற சொல்லுக்கு அழியாத அழகு, குன்றாத இளமை, இயற்கை மணம், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை என பல பொருள் உண்டு. 'மு' என்பது திருமாலையும் 'ரு' என்பது சிவபெருமானின் அம்சத்தையும் 'க' என்பது பிரம்மனையும் குறிக்கும். உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும்.

    மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் முழுமுதற் கடவுள் முருகன். அதனால் முருகனைக் 'குறிஞ்சிக் கிழவன்', 'மலைகிழவோன்' என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள்.

    முருகன் தமிழ் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். உடலே ஞானமாகவும், பெரிய உலகமே கோவிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நூறாயிரம் சூரியன்கள் ஒரே காலத்தில் ஒளி வீசுவது போன்ற பேரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன்.

    முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம். முருகனை வணங்கினால் பல கடவுளை வணங்கி அடையும் பயன்களை பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால் தந்தை தாயாகிய சிவன்-பார்வதி, தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும். தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது. முருகன் தன் அடியவர் வேண்டும் நலங்களை எல்லாம், அவர்கள் வேண்டியவாறே விரும்பிக் கொடுத்தருளும் பெருந்தன்மை வாய்ந்தவன். முருகனை அன்புடன் வழிபட்டு முருகா.. முருகா... என கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது.

    • கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம்.
    • வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும்.

    தெய்வங்களின் திருவருளைப் பெரிதும் பெறுவதற்கு அருந்துணை புரிவன விரதங்கள் ஆகும். முறையாக விரதங்களை மேற்கொண்டு ஒழுகினால் நிறைவான வாழ்வு பெறலாம். இவைகளை திதி, வார, நக்ஷத்திர விரதங்கள் என்பர்.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கிறது.

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

    செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் மாதம் தோறும் வரும் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

    மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

    • தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும்.
    • தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும்.

    நாளைய தினம் சஷ்டி விரதம் வருகிறது. மாதந்தோறும் வருகிற சஷ்டி நாளைய தினம் வருகிறது. சஷ்டி விரதம் மேற்கொள்பவர்கள், அல்லது முருகப் பெருமானைத் தரிசிக்க மட்டும் செய்பவர்கள், நாளைய தினம், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப்பெருமானுக்கு வீட்டில் சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வீட்டின் கருத்துவேற்றுமைகள் நீங்கும். தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும். வழக்கு முதலான சிக்கல்கள் அனைத்தும் தீர்த்து அருளுவார் செந்தில்வேலன்.

    நாளைய தினத்தில், விரதம் இருந்து முருக வழிபாடு செய்யுங்கள். முருகக் கடவுளைத் தரிசியுங்கள். பன்மடங்கு பலன்களைப் பெற்று, சகல ஐஸ்வரியங்களுடன் இனிதே வாழ அருளுவார் கந்தக்கடவுள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    நாளை விரதம் இருந்து மறக்காமல் முருகப்பெருமானை தரிசித்து பிரார்த்தனை செய்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும்!

    நாளைய விரத நாளில், கந்தப் பெருமானை நினைத்து, காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றுங்கள். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலமாக வழங்குங்கள்.

    செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டி முருகப்பெருமானை அலங்கரியுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்கோ அல்லது சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சந்நிதிக்கோ சென்று தரிசியுங்கள். குறிப்பாக செவ்வாய் தோஷக்காரர்கள் மறக்காமல், முருக தரிசனம் செய்வது அவர்களை தோஷ நிலையில் இருந்து விடுவிக்கும் என்பது உறுதி என்கிறார்கள்.

    நாளை முருகப்பனை கண்ணாரத் தரிசித்து மனதார வேண்டுங்கள். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் நல்ல வேலை, வேலையில் பதவி, சம்பள உயர்வு ஆகியவை அடுத்தடுத்துக் கிடைக்கும். நிலம், பூமி தொடர்பான சிக்கல்களும், வழக்குப் பிரச்சினைகளும் தீர்வுக்கு வரும். நல்ல முடிவைத் தந்தருள்வார் முருகக்கடவுள்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த

    27-ந்தேதி கொடி ஏற்றத்து டன் தொடங்கியது. இந்த திருவிழா நேற்று வரை 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து அபிஷேகமும், சிறப்பு வழிபாடும், யாகசாலை பூஜையும் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரதீபாராதனையும், பக்தர்களுக்குபிரசாதம் வழங்குதலும்நடந்தது. மாலையில் சமய உரையும், இரவுபஜனையும்நடந்தது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க பவனிவந்தநிகழ்ச்சிநடந்தது.

    10-ம் திருநாளான நேற்று தைப்பூச திருவிழா நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு யாக சாலை பூஜையும் 11.30 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனையும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை6மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதலும், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை திருக்குளத்தில் வேல்முரு கன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு தீர்த்தவாரி ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாகசுவாமிக்கும், அம்பாள்விக்ரகங்களுக்கும் பொய்கைதிருக்குளத்தின் கரையில்வைத்துபால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம்களபம், குங்குமம், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விக்ரகங்களுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து முருகன் குன்றத்தின் மேல் பகுதியில் கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன.
    • பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தைப்பூசம் அன்று வரக்கூடிய பவுர்ணமி நாளன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் நடைபெறும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனை தேர் நோன்பு என்றும் கூறுவர். இந்நாளில் மக்கள் பொங்கல் வைத்தும், கும்மியடித்தும் பழனி முருகனை வழிபடுகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உமாதேவியார் முருகனிடம் வேலை எடுத்துக் கொடுத்து தாரகன் என்றும் அசுரனை வென்று வரும்படி கூறிய நிகழ்வினை போற்றும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது என்பது ஐதீகமாகும்.

    இந்நாளில் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதன் தாக்கம் குறைகிறது என்ற நம்பிக்கை இருக்கிறது.

    தங்களின் வாழ்க்கை செழிப்பாகும், நினைத்த காரியம் கைக்கூடும் என்று நினைத்து பழனிக்கு வரும் மக்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாமும் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.

    • முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும்.
    • தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.

    கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது. "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.

    தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழு மதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும். இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.

    • சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர்.
    • பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும்.

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் 'பாதயாத்திரை' என்பது தனி சிறப்பு பெற்று விளங்குகிறது. மார்கழி மாதத்தில் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தை மாதத்தில் இருந்து முருகனை எண்ணி தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். ஆகவே தை மாதம் தொடங்கி விட்டாலே பழனியில் பக்தர்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியும்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, நத்தம், திருச்சி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியே காவடி எடுத்து, முருகா...! முருகா...! என்ற சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர். அப்போது அவர்கள் முருகனுக்கு பிடித்த காவி, பச்சை வண்ண உடையை அணிந்து பரவசத்துடன் வருவதை பார்க்கலாம்.

    இதில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி நகரத்தார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயில்காவடி, சேவல்காவடி, எடுத்து ஆடிக்கொண்டே வருகின்றனர். பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும். தோஷங்கள் விலகும். வாழ்வில் ஆனந்தம் பெருகும். பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.

    • சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.

    தை மாதம் பூச நட்சத்திர மும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோவில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    குன்றத்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர், முருகப் பெருமான் வள்ளி, தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 'முருகனுக்கு அரோகரா' என்று பக்தி பரவசத்துடன் கூறி சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யும் வகையில் 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனம் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் தாம்பரம், பூந்தமல்லி, போரூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    பக்தர்கள், தங்களது உடலில் அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக இன்று இரவு 11 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆங்காங்கே இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த குன்றத்தூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக விலங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப் பூசத்தையொட்டி அதிகாலை மூல வருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    விழாவில் தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காவடிகளுடன் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் மற்றும் பக்தி இன்னிசை பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்றனர். மலைக்கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் தைப்பூச விழாகளை கட்டியது.

    பொது வழியில் சென்று சுவாமி தரிசனத்திற்கு சுமார் 3 மணி நேரம் ஆனது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசித்தனர். காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்.

    இன்று மாலை உற்சவர் சண்முகர் மயில் வாகனத்தில் மலைக்கோவில் மாட வீதியில் உலா நடை பெறுகிறது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி அடுத்த சின்ன காவனம் வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா நடை பெற்றது. இதில் ஏராள மானோர் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

    ஆண்டார்குப்பத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதில்சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது.

    காஞ்சீபுரம் குமரக் கோட்டம் கோவிலில் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சீபுரம் குமரக்கோட்டம் கோவிலில் உற்சவமூர்த்தி யான முருகன் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

    அதிகாலை முதலே பக்தர்கள் 'அரோகரா அரோகரா' என்ற கோஷத்துடன் முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கினர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலிலும் வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் முருகப்பெருமான் கோவிலிலும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடந்தது

    திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சென்னை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வேண்டு தலை நிறைவேற்றும் வகையில் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் மாட வீதியில் வலம் வந்தனர்.

    நேற்று இரவு கோவில் சரவணப் பொய்கையில் தெப்பல் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ×