search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    அமாவாசை தினங்கள் என்பது மூதாதையர்களை வழிபடுவதற்குரிய தினமாகவே கருதப்படுகிறது. பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.
    மறைந்த நம் முன்னோர் தங்கியிருக்கும் இடம், `பிதுர் லோகம்‘ எனப்படும். அங்கே, `பிதுர் தேவதைகள் இருக்கின்றனர். நம் உறவினர் ஒருவர் இப்போது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாக பிறந்திருந்தால் கொள்ளாகவும். யானையாக பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப் புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும்.

    இதை சேர்க்கும் வேலையை, `பிதுர் தேவதைகள்’ செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார். இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்கு பின்னும் தொடர வேண்டும். கிராமங்களில் இன்றும் ஒரு வழக்கம் உண்டு. யாராவது தன் சகோதரிகளைக் கன்னிப் பருவத்தில் இழந்து விட்டால், அவர்களுக்கு புடவை, தாவணி, பாவாடை படைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.

    இந்த புடவையை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு வருடம் வரை வீட்டில் ஒரு மூலையில் தொங்க விடுவர். அந்தப் பெண் இந்த புடவையை பயன்படுத்திக் கொள்வாள் என நம்புகின்றனர். பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால் பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய்விடும்.
    வாசகர்களே... இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசை தினமாகும். அன்று தர்ப்பணம் கொடுத்து பித்ருக்களை நினைத்து ஒவ்வொரு வரும் வழிபாடு செய்ய வேண்டும்.
    அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனர்.

    சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனர். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனர்.

    அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசை யன்று நடத்துகின்றனர்.
    முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

    சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக் கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும் அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
    நம்மை யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? நமக்குத் தர்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும். எனவே அமாவாசை அன்று கண்டிப்பாக நாம் நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவா சையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்ன தானம் செய்யலாம். அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குலதெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாத வர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

    அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீர்த்தமாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

    உற்றார், உறவினர் தொடர்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடி களையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தை, ஆடி, புரட்டாசி அமா வாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். தானங்கள் தருவது அவரவர் வசதியைப் பொறுத்தது. அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    எதுவும் செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

    முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு வரும் இதைச் செய்ய வேண்டும். இந்த ஆண்டு தை அமாவாசை நாளை மறுநாள் (ஞாயிறு) நள்ளிரவு 12.58 மணிக்குத் தொடங்குகிறது. திங்கட்கிழமை இரவு 3 மணி வரை உள்ளது. எனவே திங்கட்கிழமை அதி காலையில் புனித நீராடி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யலாம்.

    நாளை மறுநாளே பித்ரு பூஜைக்கு தேவையானவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் தான் திங்கட்க்கிழமை அதிகாலை முன்னோர் வழிபாட்டை தங்கு தடையின்றி சிரமம் இல்லாமல் நடத்தி முடிக்க முடியும்.
    தை அமாவாசை தினத்தையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
    ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் நீர்நிலை உள்ள பகுதிகளில் திரளும் பொதுமக்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இதன் மூலம் முன்னோர் களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் குவிந்தனர்.

    இதற்கான ஏராளமான சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் தயார் நிலையில் இருந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் வைத்து முன்னோர்களின் நினைவாக பல்வேறு பூஜைகள் செய்து வழிபட்ட பொது மக்கள் பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் தேங்கியிருந்த நீரில் கரைந்து பின்னர் புனித நீராடி வழிபட்டனர்.


    தை அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் இன்று புனித நீராடிய காட்சி.

    முன்னதாக புரோகிதர்கள் முன்னோர்களின் பெயர்களை படித்து வேதங்கள் ஓதி இந்த வழிபாட்டை நடத்தினர். காவிரி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்கிறது. அதில் பக்தர்கள் புனித நீராடினர். சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த குழாய்களில் நீராடினார்கள்.

    அம்மா மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை வழங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த மேடையில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

    தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல் குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் தை அமாவாசை தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    அகத்திய முனிவருக்கு இந்த உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அவைகளை குணமாக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளிய பவித்திரமான திருத்தலம் இது.
    பிருங்கி முனிவர் ஒருமுறை திருக்கயிலாயம் சென்று, சிவபெருமானை மட்டும் வழிபட்டார். அருகில் இருந்த உமையவள் ஈசனோடு உரசியபடி அமர, அப்போதும் வண்டு உருவம் கொண்டு ஈசனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார் பிருங்கி முனிவர். கோபம் கொண்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரின் சக்தியை தன்னுள் கிரகித்துக் கொண்டார். இதனால் முனிவரால் நடக்கக்கூட முடியவில்லை. உடனே சிவபெருமான் அவருக்கு ஊன்றுகோல் வழங்கினார்.

    அனைவருக்கும் சக்தியும் சிவனும் ஒன்றே என்று உணர்த்த, சிவனில் சரிபாதியை பெறுவதே சரியானது என்று பார்வதி முடிவு செய்தாள். அதன்படி அம்பாள் மேற்கொண்ட விரதம் ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘கேதாரம்’ என்பது இமயமலைச் சாரலில் உள்ள சிவ தலம் ஆகும். கவுதம முனிவரின் வழிகாட்டுதல்படி, கேதாரத்தில் உள்ள சிவபெருமானை நினைத்து பார்வதி தேவியாக ‘கவுரி’ இருந்த விரதம் என்பதால் ‘கேதார கவுரி விரதம்’ ஆனது. அதன் வாயிலாக ஈசனின் சரிபாதியைப் பெற்றார் என்பது வரலாறு.

    இதையறிந்த பிருங்கி முனிவர், தான் செய்த தவறுக்காக பல சிவ தலங்களுக் குச் சென்று வழிபாடு செய்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது சென்னை திருவான்மியூராக இருக்கும் பகுதிக்கு வந்து அங்குள்ள அமுதீஸ்வரர், சொக்கநாயகி அம்மன் ஆகியோரை வழிபாடு செய்தார். அப்போது அம்பாள், முனிவருக்கு மீனாட்சி, காமாட்சி, மூகாம்பிகை, காந்திமதி என அத்தனை சக்தி வடிவங்களையும் தன்னுள் காட்டி நின்றாள். இதனால் இத்தல அம்மனை ‘திரிபுரசுந்தரி’ என்றும் அழைக்கிறார்கள். இத்தல அம்மனை வழிபடுவதால் உலகிலுள்ள அனைத்து திருக்கோவில் களிலும் உள்ள அம்பாளை வழிபட்ட பெரும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இத்தலத்தின் மேற்கில் உள்ள சிறுகுன்றில் பிருங்கி மகரிஷி சில காலம் தங்கி, திருவான்மியூர் ஈசனை வழிபட்டு வந்தார். ஆகையால் இத்தல ஈசனும் மேற்கு நோக்கி கோவில் கொண்டுள் ளார். எனவே தான் இத்தல ஈசன் மேற்குநோக்கி கோவில் கொண்டுள் ளார் என்கிறார்கள். அப்பய்ய தீட்சிதரின் பொருட்டும் ஈசன் மேற்குநோக்கி அருளலானார் என்றும் கூறுகிறார்கள். பிருங்கிமுனிவர் தங்கியிருந்து திருவான்மியூர் ஈசனை வழிபட்டுவந்த அந்த சிறுகுன்று ‘பிருங்கி மலை' ஆனது.

    பாற்கடலைக் கடைந்தபோது வெளிப் பட்ட அமிர்தத்தால், தேவர்கள் அனை வரும் இத்தல ஈசனை வழிபட்டனர். அதனால் இத்தல இறைவன் அமுதீஸ் வரர் ஆனார். திருவான்மியூர் ஆலயத் தின் மூலவர் கருவறையின் பின்புறம், அதாவது கிழக்குப்பகுதியில் கேதார கவுரி விரதத்தின் நாயகன் கேதாரீஸ் வரரை தனிச்சன்னிதியில் கண்டு தரிசிக்கலாம். இவரை வழிபடுவதால் வறுமை, பிணி அகலும். கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும். திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கைத் துணை அமையும்.

    அகத்திய முனிவருக்கு இந்த உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அவைகளை குணமாக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளிய பவித்திரமான திருத்தலம் இது. எனவே தான் இங்கு சுயம்புவாய் அருளும் ஈசனை ‘மருந்தீஸ்வரர்’ என்கிறோம். இங்கு வழங்கப்படும் ஈசனின் திருநீறு, நம் நோய்களை நீக்கும் வல்லமை உடையது.

    இங்கு உள்ள பாவநாசினி தீர்த்தத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடி இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், தவறான வழியில் செல்லும் பிள்ளைகள் நல்வழிக்குத் திரும்புவார்கள். ஆலயத்தில் தினமும் அதிகாலை யில் கோ பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் தொடர்ந்து 21 நாட்கள் தவறாமல் கலந்து கொண்டால், நம் கர்மவினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும்.

    பிரம்ம தேவனின் மகனான ரட்சசு, நாரதரின் வழிகாட்டலின் படி இத்தல ஜென்ம நாசினி தீர்த்தத்தில் நீராடி, மருந்தீஸ்வரரை வழிபாடு செய்தான். இதனால் அவனுடைய பெண்ணுருவம் மறைந்து மீண்டும் ஆண் உருவத்தைப் பெற்றான் என்கிறது தல புராணம். எனவே இத்தல ஜென்ம நாசினி தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி ஈசனை வழிபட்டால், மலட்டுத் தன்மை, ஆண்மை குறைபாடு முதலியன நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வால்மீகி முனிவருக்கு ஈசன் இங்கு காட்சி தந்ததால் ‘வான்மீகியூர்’ ஆகி வான்மியூர், திருவான்மியூர் ஆனது. காமதேனு ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டதால் இத்தல மருந்தீஸ்வரரை ‘பால் வண்ண நாதர்’ என்றும் அழைக்கிறார்கள். சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் மருந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    வேதாரண்யத்தில் புயலால் சேதமான தென்னையை அகற்றியபோது மண்ணில் புதைந்து கிடந்த 4 1/2 அடி உயர சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா செட்டிப்புலம் கிராமத்தில் வசித்து வருபவர் சந்திர சேகரன் (வயது 65). இவரது வீட்டின் பின்புறம் ஏராளமான தென்னை மரங்களை வளர்த்து வந்தார். இந்நிலையில் கஜா புயல் தாக்குதலில் இவரது வீட்டு தென்னை மரங்கள் பல அடியோடு சாய்ந்து சேதமானது.

    இந்நிலையில் அந்த மரங்களை வேருடன் அகற்ற முடிவு செய்து நேற்று அதற்கான பணிகள் நடந்தன. அப்போது ஒரு தென்னை மரத்தை வேருடன் அகற்றியபோது அதன் அடியில் 4 1/2 அடி உயரமுடைய மிக பழமையான சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதனையடுத்து அதனை சேதமில்லாமல் முழுமையாக அகற்றி மேல கொண்டுவந்து சுத்தப்படுத்தி வைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து அந்த சிவலிங்கத்திற்கு மலர்களால் அலங்கரித்து வழிபாடு நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான், உலகெங்கும் போற்றி வழிபடும் தெய்வமாகத் திகழ்கிறார். இவரை ஒரு விநாயகர் முதல், கோடி விநாயகர் வரை எண்ணிக்கை வடிவங்களில் வழிபடுகிறார்கள்.
    முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான், உலகெங்கும் போற்றி வழிபடும் தெய்வமாகத் திகழ்கிறார். இவரை ஒரு விநாயகர் முதல், கோடி விநாயகர் வரை எண்ணிக்கை வடிவங்களில் வழிபடுகிறார்கள். அதுபற்றி சிறு தகவல் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

    ஏக தந்தன்

    ‘ஏகம்’ என்பதற்கு ஒன்று என்று பொருள். ஏகாட்சரன், ஏகதந்தன், ஒற்றைக்கொம்பன், ஒற்றை மழுவன் என ஒன்று எண்ணிக்கையில், விநாயகர் வணங்கப்படுகிறார்.

    இரட்டைப் பிள்ளையார்

    ஒரு தெய்வத்தை இரண்டாக வைத்து வழிபடும் வழக்கம், பல நூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது. இப்படி இரண்டு விநாயகர்கள் அருள்வதை ‘இரட்டைப் பிள்ளையார்’ என்கிறார்கள். இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இன்றும் காணப்படுகின்றன.

    மூன்று விநாயகர்

    மா, பலா, வாழை எனும் முக்கனிகளை விரும்பி உண்ணும், மூஷிக வாகனன் என்றும் விநாயகரை அழைக்கின்றனர். முக்கனிகளை இறைவனுக்குப் படைக்க நிவந்தங்கள் ஏற்படுத்திய செய்தியை, தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. முச்சந்தி விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், மும்முக விநாயகர், மும்முடி விநாயகர், முக்குறுணி விநாயகர் (மூன்று குருணி), மூவடுக்கு விநாயகர், முக்கால விநாயகர், மும்மதத்தன் என மூன்று விநாயகருக்குப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் மூன்று விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

    சதுர்முக விநாயகர்

    சதுர் என்பது நான்கைக் குறிக்கும். அரிய கோலமான பிரம்ம கணபதியாக காட்சியளிக்கும் இவர், ‘சதுர்முக விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். சதுர்முகி, சதுக்கப் பிள்ளையார் என்ற பெயரிலும் சில தலங்களில் விநாயகர் உள்ளார். சூரிய மண்டலத்தில் வீற்றுள்ள கணபதி, ‘சவுர விநாயகர்’ எனப்படுகிறார்.

    பஞ்சபூத விநாயகர்

    பஞ்சலிங்கப் பிள்ளையார், பஞ்சபூத விநாயகர், பஞ்சாட்சர விநாயகர், பஞ்சசந்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர், ஐங்கலக்காசு விநாயகர் உள்ளனர். இதில் ஐங்கலக்காசு விநாயகர் திருவாரூரில் மூலட்டநாதர் சன்னிதி அருகேயும், பஞ்சசந்தி விநாயகர் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலிலும் உள்ளனர்.

    சப்தவிடங்க விநாயகர்

    திருவாரூர், திருக்காரவாசல், திருக்கோளிலி, திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருமறைக்காடு, திருவாய்மூர் என சிவபெருமானின் சப்தவிடங்கத் தலங்களில் வாழும் விநாயகர், ‘சப்தவிடங்க விநாயகர்’ என அழைக்கப்படுகிறார்.

    எண்திசை விநாயகர்

    திருவண்ணாமலை, திருக்கடையூர் தலங்களில் மாடவீதிகளின் எட்டுத் திசைகளிலும் எட்டு விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவரே ‘எண்திசை விநாயகர்’ ஆவார். இது தவிர, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என எட்டு இடங்களில் இருந்து வழிகாட்டும் விநாயகர் ‘அஷ்டமூர்த்திகள் விநாயகர்’ என்று வழங்கப்படுகிறார். சிவபெருமானுக்கு அட்டவீரட்டத் தலங்கள் உள்ளது போல, விநாயகப் பெருமானுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட கணபதி தலங்கள் இருக்கின்றன.

    நவசக்தி விநாயகர்

    நவரத்தினங்களால் ஆன விநாயகரை, ‘நவரத்தின விநாயகர்’ என்கிறோம். இதே போல, நவக்கிரக விநாயகர், நவசக்தி விநாயகர், நவசந்தி விநாயகர் என ஒன்பது எண்ணிக்கையிலும் விநாயகர் அருள்கிறார். மயிலாப்பூர் லஸ் கார்னரில் புகழ்பெற்ற நவசக்தி விநாயகர் ஆலயம் உள்ளது.

    ஏகாதச விநாயகர்

    ‘ஏகாதசம்’ என்பது பதினொன்றைக் குறிக்கும் சொல். சிவபெருமானிடம் தோன்றிய ருத்திரர்களை, ஏகாத ருத்திரர்கள் என்பது வழக்கம். இதேபோல, விநாயகரையும் பதினோரு வடிவங்களில் அமைத்து வழிபடுவது ‘ருத்ரகணபதி’ ஆகும்.

    திருவள்ளூர் மாவட்டம், திருப்பாசூர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலத்தில் ஒரே இடத்தில் பதினோரு பிள்ளையார்கள் விற்றிருக்கின்றனர். அந்த இடத்திற்கு ‘விநாயகர் சபை’ என்று பெயர்.

    பன்னிரு திருநாம விநாயகர்

    பன்னிரு சூரியர்கள், விநாயகரை வணங்கும் போது, அவர்களுக்கு பன்னிரண்டு வடிவங்களாக விநாயகர் காட்சியளித்தார் என்று விநாயகர் புராணம் சொல்கிறது. இந்தப் பன்னிரு விநாயகரைப் பாடித் துதித்ததால், ஆயிரம் பெயர்களைச் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    32 கணபதி

    விநாயகர் தன் பக்தர்களைக் காத்தருள பல்வேறு வடிவங்களைக் காட்டியருளினார். இருப்பினும் அவற்றில் 32 வடிவங்கள் மட்டுமே பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது.

    51 விநாயகர்

    லலிதா பரமேஸ்வரி வழிபாட்டில் 51 விநாயகர் பெயர்களும், அவருக்கான தேவியரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    57 விநாயகர்

    காசி மாநகரில் ஏழு ஆவரணங்களில் தலா எட்டு பேர் வீதம் ஐம்பத்து ஆறும், நடுவில் ஆதி மூர்த்தியாக துண்டி விநாய கரும் சேர்ந்து, 57 விநாயகர் அமைந்துள்ளனர்.

    108 விநாயகர்

    சமய வழிபாட்டில் 108-க்கு தனிச்சிறப்பு உள்ளது. 108 சிவலிங்கங்கள், 108 சக்தி பீடங்கள், 108 திவ்ய தேசங்கள் போன்றவை இதனை உறுதி செய்கின்றன.

    திருவள்ளூர் மாவட்டம், சின்னக்காவனம் தலத்தில் அகத்தியர் உருவாக்கிய விநாயகர், 108 சிவலிங்கத்தின் ஒருங்கிணைப்பு என தலபுராணம் கூறுகிறது. இதேபோல, திண்டுக்கல் நகரில் நன்மை தரும் விநாயகர் கோவிலில் 108 விநாயகர் இருக்கிறார்.

    ஐநூற்றுவர்

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் தலத்தில் உள்ள விநாயகருக்கு ‘ஐநூற்றுவர்’ என்ற திருப்பெயர் வழங்கப்படுகிறது.

    கரும்பாயிரம் விநாயகர்

    கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் கரும்பாயிரம் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்து விநாயகர், பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றி, ஆயிரம் கரும்புகளைக் காணிக்கையாக ஏற்றதால், விநாயகருக்கு இப்பெயர் வழங்கலானது.

    மழை தந்த பிள்ளையார்

    திருவாலவாய் உடையார் திருவிளையாடல் புராணம் எழுதிய பெரும்பற்றப்புலியூர் நம்பி தோன்றிய ஊர் வேம்பத்தூர். இங்குள்ள விநாயகர் ‘2008 விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். மழை வேண்டி 2008 விநாயகரை வைத்து வேள்வி செய்ததால் மழை பெய்தது. அதற்கு நன்றிக்கடனாக 2008 பேருக்கு வீடு, நிலம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    நாலாயிரம் பிள்ளையார்

    திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அடுத்த கோசக்குடியில் உள்ள விநாயகர் ‘நாலாயிரம் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். நான்காயிரம் அந்தணர்களை ஆதரித்து உருவான விநாயகர் என்பதால், இப்பெயர் வழங்கலானது.

    பொள்ளாப் பிள்ளையார்

    திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் உள்ள பொள்ளாப் பிள்ளையாருக்கு, ‘நாற்பத்தெட்டாயிரம் பிள்ளையார்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இந்தப் பகுதியில் வாழ்ந்த வேளாளர்கள், தங்கள் பாதுகாப்புக்காக உருவாக்கிய சேனையின் எண்ணிக்கையே, விநாயகருக்கும் வந்துவிட்டது. இதனை இங்குள்ள கல்வெட்டு உறுதிசெய்கிறது.

    கோடி விநாயகர்

    சுவாமிமலை அருகே உள்ள கொட்டையூர் சிவபெருமான், கோடி வடிவம் கொண்டு காட்சி தந்ததால், ‘கோடீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். அதுபோல அத்தலத்து விநாயகரும் ‘கோடி விநாயகர்’, முருகன் ‘கோடி முருகன்’ என்று வழங்கப்படுகிறார்கள்.
    ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.
    மக்கள் கூடும் தலங்கள்

    ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவார்கள்.

    புனித நீராடல்

    ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலைகள், தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். இதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். அப்போது ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    பிடித்த உணவு படையல்

    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் வருவார்கள். மகாளய, தை அமாவாசையில் பக்தர்கள் கூட்டமாக திதி பூஜைகளை மேற்கொள்வார்கள். தை அமாவாசை தினத்தில் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, இரவு கோவிலில் தங்கி அடுத்த நாள் அதிகாலை கோவில் குளத்தின் கரையில் வாழை இலை போட்டு முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டு, பிண்டங்களை குளத்தில் கரைத்து வழிபாடுகளை பூர்த்தி செய்வார்கள்.

    சூரியனின் கல்யாண விழா

    இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில்தான் சூரியனுக்கு கோவில் உள்ளது. ஒன்று வடக்கே ஒடிசாவிலும் மற்றொன்று தெற்கே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கே சூரியபகவான் சாயா மற்றும் உஷா தேவியருடன் சிவசூரியன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன. சூரியனார் கோவில் எனும் இத்தலம் நவகிரகங்களுக்கென தனிப்பட்ட முறையில் அமைந்து இருப்பதால் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வருகிறார்கள். தை அமாவாசை தொடங்கி பத்து நாட்கள் சூரிய பகவானின் திருக்கல்யாண விழா இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    லட்ச தீபம்

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில் முழுவதும் ஒளிச்சுடர்களாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

    மோட்ச தீபம்

    பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், அங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பதாக ஐதீகம். விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் துன்புறுவோருக்காகவும் அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தர்ப்பணத்திற்கு ஏற்ற தலங்கள்

    அக்னி தீர்த்த கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்ச நதிக்கரை ஆகியவை பித்ரு பூஜைகளுக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவை தவிரவும் நமது பகுதிகளில் உள்ள பல்வேறு தலங்களிலும் பித்ரு கர்மாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    ராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    கைகேயி

    அயோத்தி மன்னனான தசரதரின் மனைவியர்களில் ஒருத்தி கைகேயி. இவள் பரதனின் தாய் ஆவாள். ஆரம்ப காலத்தில் கவுசல்யாவின் மகனான ராமனையும் தன் பிள்ளைப் போலவே பாவித்து வந்த கைகேயியின் மனதை, மந்தரை என்பவள் மாற்றினாள். அதன் காரணமாக, தசரதன் தனக்கு தருவதாக ஏற்கனவே சொல்லியிருந்த 2 வரங்களை இப்போது சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள், கைகேயி. அதன்படி ஒரு வரத்தால், ராமன் வனவாசம் செல்ல வேண்டும் என்றும், மற்றொரு வரத்தால் தன்னுடைய மகன் பரதன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்றும் தசரதனிடம் வரம் பெற்றாள். இதனால் தான் ராமன், 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டி வந்தது.

    கத்ரு

    காசியப முனிவரின் மனைவியில் ஒருவள் கத்ரு. இவள் ஒரு முறை தன்னுடைய கணவரிடம், சக்திகள் படைத்த ஆயிரம் பிள்ளைகள் தனக்கு வேண்டும் என்று வரம் கேட்டாள். அதன்படி அவளுக்கு சேஷநாகா, வாசுகி, காலியா உள்ளிட்ட 1000 நாகங்கள் பிறந்தன. இவளின் சகோதரியே, கருட பகவானின் தாய் வினதை. கருடனின் தாயை, கத்ரு அடிமையாக வைத்திருந்த காரணத்தால், தாயை விடுவிக்க தேவேந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தை கொண்டு வந்து கத்ருவிடம் கொடுத்தார் கருட பகவான். தாயை அடிமையில் இருந்து மீட்டெடுத்ததும், மீண்டும் அமிர்த கலசத்தை தேவேந்திரனிடமே ஒப்படைத்து விட்டார் கருடன். இதனால் நாகர்களுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது என்பதாக புராணக் கதைகள் சொல்கின்றன.

    கிஷ்கிந்தை

    வானரங்களின் தலைமை இடமாக இருந்த பகுதியே கிஷ்கிந்தை என்று ராமாயணம் குறிப்பிடுகிறது. இந்த இடத்தை பலம் பொருந்திய வாலி அரசாட்சி செய்து வந்தான். ஒரு சில காரணங்களால் வாலிக்கும், அவரது தம்பி சுக்ரீவனுக்கும் பகை இருந்தது. இதனால் சுக்ரீவனை கிஷ்கிந்தையில் இருந்து விரட்டி விட்டதோடு அவனது மனைவியையும் அபகரித்துக் கொண்டான் வாலி. இந்த நிலையில் சீதையை மீட்பதற்காக சுக்ரீவனின் உதவியை நாடி வந்த ராமன், அவனுக்காக வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்றார். பின்னர் சுக்ரீவனை, கிஷ்கிந்தையின் அரசனாக்கினார். வாலியின் முன்பாக நின்று அவனை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பலத்தில் பாதி, வாலியை சென்றடையும் என்ற வரம் காரணமாக, ராமன் மறைந்திருந்து அவனைத் தாக்கினார் என்கிறது ராமாயண காவியம்.

    காதம்பரி

    உஜ்ஜையினி நகரத்து அரசன் சந்திரபீடன், கந்தர்வப் பெண்ணான காதம்பரி என்பவளை காதல் திருமணம் செய்து கொண்டான். இந்த வரலாற்றை இலக்கியமாக சொல்லிய நூல் தான் ‘காதம்பரி.’ இந்த நூலை ஹர்சவர்த்தன் என்ற அரசனின் அவைப் புலவராக இருந்த பாணபட்டர் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலானது ‘பூர்வ பாகம்’, ‘உத்தர பாகம்’ என இரு பகுதிகளைக் கொண்டது.

    கபந்தன்

    ராமனும், லட்சுமணனும் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையை தேடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கால்களும், தலையும் இல்லாத கோர தோற்றம் கொண்ட கபந்தன் என்ற அரக்கன் அவர்களை தடுத்தான். உடனே ராமனும், லட்சுமணனும் அம்பு எய்து, அந்த அரக்கனுக்கு கைகள் இல்லாமல் செய்தனர். பின்னர் அவனது உடலை எரித்தனர். அந்த சாம்பலில் இருந்து சாப விமோசனம் பெற்று ஒரு அழகிய உருவம் கொண்ட கந்தர்வன் வெளிப்பட்டான். தேவலோகத்தில் இசை பாடகனாக இருந்த கந்தர்வன், இந்திரனின் சாபத்தால் இவ்வாறு ஆகியிருந்தான். விமோசனம் பெற்ற அந்த கந்தர்வன் தான், ராவணனிடம் இருந்து சீதையை மீட்க சுக்ரீவனின் உதவியை நாடும்படி ராமனுக்கும் லட்சுமணனுக்கும் ஆலோசனை வழங்கினான்.
    முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று புறநானூறும் முருகனை புகழ்கின்றன.
    முருகனது ஆயுதங்களில் அவர் கையில் வைத்திருக்கும் வேல் சிறப்பாக போற்றப்படுகிறது. வேல்வல்லான் என்று கலித் தொகையும் வல்வேல் கந்தன் என்று புறநானூறும் முருகனை புகழ்கின்றன.

    முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி. இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.
    பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் ஐதீகம், சிக்கலில் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் மகா கந்தசஷ்டி திருவிழாவின் ஐந்தாம் நாள், சிக்கல் சிங்கார வேலர், அன்னை பராசக்தி வேல் நெடுங்கண்ணியின் சன்னதிக்குச் சென்று வேலைப் பெறுகின்றார்.

    வேல் வாங்குதல் சிக்கலிலும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலும் உச்சநிலைச் சிறப்புகளுடன் நடைபெறுகின்ற காரணத்தினால், சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம் என்ற பழமொழி தோன்றியது.

    முருகனது வேல் மகிமையுடையது. மேன்மையானது. தலைமையானது, தெய்வீகத் தன்மையுடையது. எனவே, இது சிறப்பான வழிபாட்டிற்குகிரியது. பண்டை காலத்தில் தனிக்கோட்டம் அமைத்து முருகனது வேலை வழிபட்டனர். இதற்கு வேல் கோட்டம் என்று பெயர். முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.

    ஆதிகாலத்தில் இந்த ஊர் வேல்கோட்டம் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீடுகளில் செம்பாலும், பொன்னாலும், ஐம்பொன்னாலும் வெள்ளியாலும் வேல்களைச் செய்து போற்றி வழிபடுகின்றனர். இந்த வேல்களின் உயரம் ஆறங்கு லத்திற்குள் இருக்க வேண்டும்.வேலைத்தனியாகவும் வழிபடலாம். அல்லது பீடத்தில் எழுந்தருளச் செய்தும், திருவாசி அமைத்தும் வழிபடலாம். சிலர் வேலின் நடுவில் சிவப்புக் கல்லைப் பதிக்கின்றனர். இப்படி பதிப்பது மிக நல்லது. முருகனை வழிபடுவதைப் போலவே வேலையும் வழிபட வேண்டும்.

    சிலர் பரம்பரை பரம்பரையாக ஒரே வேலை பாதுகாத்து வழிபட்டு பக்திப் பெருமிதம் கொள்கின்றனர். வேலைத் தினமும் வழிபடுவது நல்லது. குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபட வேண்டும். மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்.
    முருகனுக்கு நேர்த்திகடன் கழிக்க அலகு குத்திக் கொள்ளுதல் வழிபாடு கடுமையானதாக இருந்தாலும், பக்திப் பரவசத்துடன் நேர்த்திக்கடன் முடிப்பவர்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்.!.
    பக்தர்கள் நாக்கிலும், கன்னங்களிலும், உடலெங்கிலும் வேல்களைக் குத்திக் கொண்டு அலகு குத்திக் கொண்டு பழனி முதலான திருத்தலங்களுக்கு வந்து முருகனை வழிபடுகின்றனர். அலகு குத்திக் கொள்ளுதல் நான்கு வகைப்படும்.

    1. நாவின் நடுவில் வேலைக்குத்திக் கொள்ளுதல். இதனைத் தாள் போடுதல் என்பர்.

    2. வேல், இரு கன்னங்களிலும் நேராக ஊடுருவிச் செல்லு மாறு குத்திக் கொள்ளுதல்.

    3. உடலின் மேற்பகுதிகளில் சிறுசிறு வேல்களைக் குத்திக் கொள்ளுதல்.

    4. இரண்டு நீண்ட இரும்புச் சட்டங்களை வளைத்து, பல துளைகளைச் செய்து, அவற்றில் நீண்ட வேல்களைச் செருகி உடலெங்கும் குத்திக் கொள்ளுதல்.

    இவை நான்கும், நேர்த்திகடன் கழிக்க, வேல்களைத் துணையாகக் கொண்டு செய்யப்படுகின்ற முருக வழிபாடு. இம்முறை கடுமையானதாக இருந்தாலும், பக்திப் பரவசத்துடன் நேர்த்திக்கடன் முடிப்பவர்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்.!.
    முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் வடிவாக பார்க்கப்படுகிறார். மேலும் அவர் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்பவராகவும் இருக்கிறார்.
    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் வடிவமாக இருக்கிறார். மு-என்ற எழுத்து ‘முகுந்தன்’ என்ற விஷ்ணுவையும், ரு-என்ற எழுத்து ‘ருத்திரன்’ என்ற சிவனையும், க-என்ற எழுத்து ‘கமலம்’ என்னும் தாமரையில் உதித்த பிரம்மனையும் குறிப்பதாகும்.

    எனவே முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் வடிவாக பார்க்கப்படுகிறார். மேலும் அவர் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்பவராகவும் இருக்கிறார்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலத்தில் மாசி, ஆவணி மாத திருவிழாவின் போது மாலையில் முருகப்பெருமான் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமான் அம்சமாகவும், மறுநாள் காலையில் வெண்ணிற ஆடை உடுத்தி பிரம்மதேவன் அம்சத்திலும், மதியவேளையில் பச்சைப் பட்டு சாத்தி பெருமாள் அம்சத்திலும் பக்தர்களுக்கு அருள்வார்.
    தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தில் புதிர் விருந்து என்னும் நிகழ்வு விசேஷமானது. இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில், விவசாயிகள் இந்த நிகழ்வை சமயச் சடங்காகவே செய்கின்றனர்.
    தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தில் புதிர் விருந்து என்னும் நிகழ்வு விசேஷமானது. இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில், விவசாயிகள் இந்த நிகழ்வை சமயச் சடங்காகவே செய்கின்றனர். தைப் பூசம் அன்று அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து நீராடி, நெல் பயிரில் அதிக மகசூல் கிடைக்க இறைவனை வேண்டுவார்கள்.

    வீட்டில் குத்துவிளக்கேற்றி, பிள்ளையார் பிடித்து, நிறைகுடம் தண்ணீர் வைத்து, அவற்றின் முன்பாக நெல் அறுக்கும் அரிவாளையும் வைப்பார்கள். பின்னர் அவற்றுக்கு தேங்காய் உடைத்து தூப, தீபம் காட்டுவார்கள்.

    வழிபாடு முடிந்ததும் குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் அரிவாள்களுடன் தங்களின் வயலுக்குச் செல்வார்கள். அங்கு கிழக்கு திசையில் நின்று, சூரியனை வணங்கி விட்டு தேங்காய் உடைத்து வழிபட்டு விட்டு, நெற்கதிர்களை அறுத்து வீட்டுக்கு கொண்டு வருவார்கள். அந்த நெற்கதிரை, இறைவனின் படத்திற்கு முன்பாக வைத்து வழிபடுவர். வயலில் இருந்து முதல் முதலாக நெல் தானியங்களை வீட்டிற்கு எடுத்து வருவதை ‘புதிர் எடுத்தல்’ என்பார்கள்.

    அப்படி எடுத்து வரப்பட்ட நெல்கதிரில் இருந்து அரிசி மணிகளைப் பிரித்து, அதில் பொங்கல் வைப்பார்கள். கறி வகைகள், நெய், தயிர், பழங்கள், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றுடன் உணவு படைக்கப்பட்டு, அதனை வீட்டில் உள்ளவர்களும், உறவினர்களும் உண்பார்கள். இதுவே ‘புதிர் விருந்து’ ஆகும்.
    ×