search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    நமது பரம்பரையில், நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, எத்தனை சந்ததிகள் இறந்துபோயிருந்தாலும், அவர்களுக்காக செய்யும் சிராத்தம் மகாளய சிராத்தமாகும்.
    மகாளய பட்சம் என்று கூறப்படும் புண்ணிய நாட்களில் பித்ருக்கள் வஸீ, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபமாக நம் இல்லம் தேடி வந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தில தர்ப்பணம் மூலமாக ப்ரீதி செய்தால் விசேஷமாகும். மகாளய பட்சத்தில் அனைத்து நாட்களிலும் நாம் மகாளய தர்ப்பணம் விதிமுறையாக செய்தல் அவசியம். முக்கியமாக பித்ருக்களின் திதியை. மகா பரணி, மத்யாஷ்டமி, வ்யபாத தினங்களில் சிலர் செய்கிறார்கள்.

    நமது பரம்பரையில், நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, எத்தனை சந்ததிகள் இறந்துபோயிருந்தாலும், அவர்களுக்காக செய்யும் சிராத்தம் மகாளய சிராத்தமாகும். இதை தகப்பனார் இல்லாதவர்கள் மட்டுமே செய்யக்கூடும்.

    ஆண் வாரிசு இல்லாத மனைவி, கணவனுக்கு மகாளய சிராத்தம் செய்வதானால் மகாளய அமாவாசை அன்று செய்வது விசேஷமாகும். தகப்பனார், தாயாரின் வார்ஷிக சிராத்தம் மகாளய பட்சத்தில் வந்தால் அந்த சிராத்தத்தை செய்த பிறகு மட்டுமே மகாளய சிராத்தம் செய்தல் வேண்டும். அதற்கு முன்பு செய்யக்கூடாது.

    மகாளய பட்சத்தில் ஒரு நாளாவது மகாளய சிராத்தம் செய்ய வேண்டும். இதை செய்வதினால் நாம், நமது வம்சத்தில் எல்லோரும் சகல சவுபாக்யங்களுடன் வாழ நமது பித்ருக்கள் அனுக்ரகம் செய்வர் என வேதம் கூறுகிறது.
    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஸ்ரீயோகா ஞான தட்ணாமூர்த்தி கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    குரு பகவான் நேற்று இரவு 10.05 மணி அளவில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ந்தார்.

    இதையொட்டி திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஸ்ரீயோகா ஞான தட்ணாமூர்த்தி கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    முன்னதாக கோவிலில் 8 மணிக்கு துர்கா ஹோமம், காளி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தட்சணாமூர்த்தி மூலமந்திரம் ஹோமம், ஸ்ரீயோகஞான தட்சணாமூர்த்தி அஸ்த்ர ஹோமம் நடந்தது.

    தொடர்ந்து தட்சணா மூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. சரியாக இரவு 10.05 மணிக்கு குரு பெயர்ச்சி அடையும் நேரத்தில் மகா தீபாராதனை நடந்தது.

    இதில், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் பரிகார மகா யாகத்தில் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பரிகார ஹோமங்கள் நடத்தப்பட்டது.
    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டியதில்லை.

    பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சிக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.



    கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்து கொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மனவேதனை அடைந்தால், பித்ருதோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

    ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் பித்ரு தோஷம் வருவது ஏன்?


    ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும் பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு பித்ரு தோஷம் தொடரும்.
    இந்த தோஷம் கடுமையாக உள்ள சில குடும்பங்களில் மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி குழந்தை பிறக்கலாம். 
    இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    முதல் நாள் - பிரதமை     பணம் சேரும்
    2--ம் நாள்    துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
    3-ம் நாள்    திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்

    4-ம் நாள்     சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
    5-ம் நாள்    பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
    6-ம் நாள்    சஷ்டி - புகழ் கிடைத்தல்
    7-ம் நாள்    சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்

    8-ம் நாள்    அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
    9-ம் நாள்    நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
    10-ம் நாள்    தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்

    11-ம் நாள்    ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
    12-ம் நாள்    துவாதசி - தங்கநகை சேர்தல்
    13-ம் நாள்    திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

    14-ம் நாள்    சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
    15-ம் நாள்    மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
    புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதையருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண்புகளையும் தரவல்லது.
    புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதையருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண்புகளையும் தரவல்லது.

    எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் காலம் சென்ற மூதாதையரின் படம் இருக்குமானால் அதன் முன் இக்காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.

    பழவகைகளில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர்களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.

    மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும்.

    காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், திதி தர ஏற்ற இடங்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம் சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம்., பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருக்கோவரணம் போன்ற இடங்கள் திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பிண்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.
    பட்சம் என்றால் 15 நாட்கள், மகாளயம் என்றால் மகான்களின் இருப்பிடம். இறந்து போய்விட்டாலும் கூட நமது முன்னோர்கள் மகாளய பட்சம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம்.
    பட்சம் என்றால் 15 நாட்கள், மகாளயம் என்றால் மகான்களின் இருப்பிடம். இறந்து போய்விட்டாலும் கூட நமது முன்னோர்கள் மகாளய பட்சம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம். ஆகவே தான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னம் அளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யக்கூடாது என்கிறது சாஸ்திரம்.

    மகாளயத்தை எப்படிச் செய்யலாம்? மகாளயத்தை 1. பார்வணம், 2. ஹிரண்யம், 3. தர்ப்பணம் என்று மூன்று வழிகளில் செய்யலாம்.

    1) பார்வணம் என்பது ஆறு பிராமணர்களை (பித்ருக்களாக) வரித்து, தந்தை, தாய், தாத்தா, பாட்டி ஆகியோருக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போடுவது.
    2) ஹிரண்யம் என்பது அரிசி வாழைக்காய் ஆகியவைகளை தந்து தர்ப்பணம் செய்வது.
    3) தர்ப்பணம் என்பது அமாவாசை போல் தர்ப்பணமாக செய்வது.

    இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் தனது பித்ருக்களுக்கு மகாளயத்தை செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
    ஒருநாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள், மகாபரணி (28-09-18 வெள்ளி), மத்யாஷ்டமீ (02-10-18 செவ்வாய்), மகாவ்யதீபாதம் (01-10-18 திங்கள்), கஜச் சாயா (06-10-18 சனி), ஆகிய நாட்களில் ஏதாவது ஒருநாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

    சன்யாசியாக சித்தியானவர்களுக்கு 06-10-18 சனி அன்றும், விபத்தால் துர்மரணம் அடைந்தவர்களுக்கு 07-10-18 ஞாயிறு அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயம் மற்றும் பிரம்மச்சாரிகளுக்கு செய்யும் மகாளயத்தை 08-10-18 திங்கள் அமாவாசை அன்றும் செய்யலாம்.

    மகாளய பட்சத்தில் தாய்- தந்தையருக்கு வருடா வருடம் செய்யும் சிராத்தம் நேர்ந்தால், சிராத்த நாளன்று சிராத்தம் செய்து விட்டு அதற்கு பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தை செய்ய வேண்டும்.
    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரிய நாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா, வருகிற 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரிய நாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா, வருகிற 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜைக்கு பிறகு காலசந்தி பூஜையில் சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், வள்ளி- தெய்வானை, துவாரபாலகர்கள் ஆகியோருக்கு காப்பு கட்டப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி 9-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். 11 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் நிறைவு நாளான வருகிற 19-ந்தேதி விஜயதசமி ஆகும். அன்றைய தினம் மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 3.05 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடு நடைபெறும்.

    பின்னர் பராசக்தி வேலுடன் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோதை ஈஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் பராசக்தி வேல் மலைக்கோவில் வந்தடைந்து, இரவு 10 மணிக்கு மேல் சம்ரோட்சண பூஜைக்கு பின்பு ராக்கால பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகையாற்று கரையில் குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் வளாகத்தில் நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் கோடி புண்ணியம் வழங்கும் குருபகவான் ளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.

    இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான குருப் பெயர்ச்சி விழா கடந்த 2-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று மாலை வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு ரெங்கநாத பட்டர், ஸ்ரீதர் பட்டர், சடகோப பட்டர் உள்பட உப அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழங்க பரிகார யாகபூஜையை நடத்தினர். மேலும் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    குருவித்துறை கோவிலில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

    இதனைத்தொடர்ந்து இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியில் இருந்து வந்த குருபகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மன்னாடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயதேவி, நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி வரதராஜ பண்டித் தலைமையில் குருபகவானுக்கு பரிகார யாகபூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபரும், பா.ஜ.க. நிர்வாகியுமான மணி முத்தையா, எம்.வி.எம். கலைவாணி பள்ளி தாளாளர் மருதுபாண்டி, நிர்வாகி வள்ளிமயில், கோவில் தக்கார் சுசிலாராணி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியாக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படும் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா கடந்த 1-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இரவு 10.05 மணிக்கு குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அப்போது குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். இதையொட்டி பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி சந்தனகாப்பு அலங்காரத்தில் வெள்ளி அங்கியுடன் காட்சி அளித்தார்.

    முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைதொடர்ந்து உற்சவர், 6 கார்த்திகை பெண்கள், 4 முனிவர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். குருப்பெயர்ச்சியான நேரத்தில் மூலவர், உற்சவர் மற்றும் கோபுரம் ஆகியவற்றிக்கு ஒரே நேரத்தில் சிறப்பு மகா தீபாராதனைகள் நடந்தது.

    குருப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நேற்று நீண்டவரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராம.வீரப்பச்செட்டியார் குடும்பத்தினர் செய்திருந்தனர். 
    திருவேங்கடம் என்றாலே நம் வினை நீங்கிவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் திருமலைக்கு புரட்டாசி பெருவிழா சிறப்பானது. அத்தனை பெருமைகள் கொண்டது புரட்டாசியும், அதில் வரும் பெருமாள் வழிபாடும்.
    திருவேங்கடம் என்றாலே நம் வினை நீங்கிவிடும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் திருமலைக்கு புரட்டாசி பெருவிழா சிறப்பானது. அத்தனை பெருமைகள் கொண்டது புரட்டாசியும், அதில் வரும் பெருமாள் வழிபாடும். நமது முன்னோர்கள் மிகச்சிறந்த அறிவாளிகள், ஜோதிடம், கணிதம், வானசாஸ்திரம் எல்லாம் அறிந்த ஞானிகள். சந்திரன் முழு நிலவாகத்தெரியும் பவுர்ணமியில் வரும் நட்சத்திரமே அந்த மாதத்தின் பெயராகவும், கோவில் திருவிழாவாகவும் வைத்தனர். மின் விளக்கில்லாத போது நிலவு ஒளியில் மக்கள் கோவிலில் கூடுவது சிறப்பு.

    ‘மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
    என்றாள் ஆண்டாள் நாச்சியார்.
    முழுநிலவை ஒட்டியே திருவிழாக்கள் நடை பெறுகிறது.
    புரட்டாசி கன்னிமாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் கன்னிமாதம். (கன்னியாமாதம்)
    இந்த மாதத்தில் ‘பெய் தால் மண் உருகப்பெய்யும், காய்ந்தால் பொன் உருகக் காயும்’ என்பார்கள் அதாவது பகலில் பொன் உரு கும் அளவு வெப்பம், சூடு?இருக்கும். இரவு மண் கரைந்தோடும் அளவு மழை பெய்யும் என்று அர்த்தம்.

    ‘குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!’ நீ கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி நிலையா கக் கோவிலில் திருமலை யில் நிற்கின்றாய் என்று உணர்ந்து ‘மலை யப்பா, மணிவண்ணா, கோவிந்தா, கோவிந்தா, கோபாலா’ என நெற்றியில் திருமண் (நாமம்) தரித்து பஜனை செய்து, வீடுகளில் பாத்திரத்தில், செம்பில், பிச்சை ஏற்று அதைச் சமைத்து விரதம் முடிப்பவர் பலர்!

    இந்த மாதம் ஏன் பெருமாளுக்கு வழிபாடு?

    புதன் கிரகத்துக்கு அதிதேவதை திருமால். திருமால் என்ற பெருமாள் வழிபாடு தமிழருக்கு புதிதல்ல. நிலத்தை 5 வகையில் பிரித்த தமிழர் ‘முல்லை-காடும் காடு சார்ந்த இடமும், அதன் கடவுள் திருமால், ஆயனாக- கோபாலனாக வந்த கண்ணன், ‘மாயோன் மேயக்காடுறை உலகம்’ என்றனர். அந்த புதன் உச்சமாயிருப்பது கன்னி ராசியில்தான் புரட்டாசி கன்னி மாதமாதலால் அதில் திருமாலுக்கு வழிபாடு பொருத்தம் தானே! இறைவனைப்பாடி பிச்சை ஏற்று, அதை வாங்கி அந்த அரிசி மாவில் மாவிளக்கு ஏற்றுவோரும் உண்டு!

    அரிசிமாவில் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து, ஏலக்காய்ப்பொடி தூவி, அதை குன்றுமலை போல் அமுக்கிப் பிடித்து, உச்சியில் ஒரு பள்ளம் வைத்து நெய் ஊற்றித் திரிபோட்டு நாற்புறமும் சந்தனம், குங்குமம் வைத்து இறை நாமம் பாடி விளக்கை ஏற்றுவது மாவிளக்கு வழிபாடு. அது முடிந்தபின், திரியை சமனப்படுத்தி (அணைத்து) வெற்றிலையில் வைத்துவிட்டு, அந்த மாவிளக்கை பிசைந்து தேங்காய்த் துருவல் கலந்து பிரசாதமாகத் தருவர். அதன் சுவை சத்து அளப்பரியது.

    இந்த மாதத்தில் நமது தமிழகத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் அசைவம் தவிர்த்து விரதம் இருப்பர். சைவச்சாப்பாடு மட்டும் உண்பர். வீடுகளில் ‘நாங்கள் புரட்டாசி மாசக்காரர்கள்’ என்று சொல்லி சைவத்திற்கு மாறுவார்கள். ஏன் என்றால் இந்த மாதத்தில் உணவில் கட்டுப்பாடு உண்டு.

    விஞ்ஞான ரீதியான காரணம்

    புரட்டாசி மாதத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவு, வெயில் அதிகம். அப்போது, காரம், எண்ணை அதிகமாக உள்ள புலால் உணவு உண்டால், செரிமானம் குறையும், வயிற்று உபாதைகள் அதிகமாகும். அதனால் முன்னோர் இந்த மாதம் சைவ உணவுக்கு மாறி விரதம் மேற்கொண்டிருப்பார்கள் போலும்.

    சுக்கிரன் கண் பார்வைக்குரிய கோள், சுக்கிரன் அம்மாதத்தில் கன்னி ராசியில் நீச பலத்தோடு அமர்கிறான். சூரியனோடு இணைந்து அஸ்தமனம் பெறுகிறான். இந்த மாதம் கண் நோய்கள் வரும். ‘மெட்ராஸ் ஐ’ என்ற நோய் செப்டம்பர், அக்டோபரில் அதிகம் தாக்கும். சூரியன், புதன், சுக்கிரன் சேர்ந்து சந்திரனுடைய ஆதிக்கமும் வரும்போது மழை பெய்யும். பகலில் சூடு, இரவில் மழை என்ற பருவ மாற்றத்தைத் தாங்க உணவுக் கட்டுப்பாடு தேவை. ஆகவே இந்த மாதம் பாவத்தை (உயிர்க்கொலையை) ஓரளவு குறைக்கும் புண்ணிய மாதம் தான். உணவு சாத்வீகமானால் உணர்வு சாந்தமாகும்.

    சனிக்கிழமை

    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களில் கூட்டம் நிறைந்திருக்கும்! அது ஏன் என்றால் புதன், சனி இயல்பாகவே பெருமாளுக்கு உகந்த நாட்கள். புரட்டாசி என்றாலே சனி தான். அது சனி பகவான் அவதரித்த நாள். மலையப்பனான திருவேங்கடவன் தன்னை வெளிப்படுத்திய தினமும் புரட்டாசிச் சனிக்கிழமையே ஆகவே புரட்டாசியில் சனிக்கிழமை வழிபாடு சிறப்பு பெறுகிறது.

    துளசி கிருமி நாசினி

    வீட்டில் துளசிச்செடி இருந்தால் பூச்சிகள், விஷ ஜந்துகள் வராது. தட்பவெட்ப மாற்றத்தில் இருந்து உடல் நலத்தைக் காப்பது துளசி. துளசி தீர்த்தம், சளி, காய்ச்சல், வயிறு உபாதைகளைப் போக்கும். அதை பக்தி என்ற நோக்கத்தில் பெற்றுப் பருகும் போது நமக்குப் பலன் அதிகம் கிடைக்கும். யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் தானே! ஏகாதசி முழுவதும் துளசி தீர்த்தம் பருகிய பின் விரதம் முடிப்பது இதனால் தான். புரட்டாசி சனிக்கிழமை எல்லாப் பெருமாள் கோவிலிலும் கருட சேவை உண்டு. எங்கள் பூர்வீகம், நெல்லை அருகே உள்ள கருங்குளம். மலை மீது உள்ள இரண்டு மரக்கட்டைகளே வெங்கடாசலபதியின் திருவுரு. அங்கே சனிக்கிழமை கருட சேவை முக்கியம்.

    கருடன் யார்?

    வைந்தேவன், பெரியதிருவடி, கருடாழ்வார் - பெருமாள் வாகனம். அவர் வினதையின் மகன் ஆவார். கருடன் மீது பெருமாள் உலாவருவது கருட சேவை. இதை தரிசித்தால், மறுபிறவி கிடையாது என்பர். நாகத்திற்கு எதிரி கருடன். சர்ப்பதோஷம் உள்ளவர்கள் கருட சேவை காண்பது நல்லது. கருடன் கடைசி நேரத்தில் திருமாலின் திருத்தோளில் ‘தரிசித்ததால் மோட்சம் பெற்றான். கருடனின் ஆற்றல், பக்தி இவற்றைக் கண்ட திருமால் அந்தக் கருடனை தன் முக்கிய வாகனமாக ஏற்றார். அதனால் கருடன் பெரிய திருவடி என்றானது.

    அனுமன் சிறிய திருவடி


    ‘வாகனமும் கொடியும் ஆனவன்’ என ஆபிதான சிந்தா மணி கூறுகிறது. பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் கருடக் கொடி ஏற்றப்படும். ‘பறவை ஏறும் பரமபுருடா’ என்றார் ஆழ்வார். ‘மேலாய்ப் பறந்து வெயில் காப்பான் வின்னத சிறுவன் என்றார் ஆண்டாள். குடந்தை அருகே நாச்சியார்கோவில் கல் கருடன் பிரசித்தம். இங்கு சாலிக் கிராமத்தால் ஆன கருடனுக்குத் தனி சன்னதி.

    இவருக்கு மோதகம் 6 வேளையும் பூஜையின் நிவே தனம். வேறு எங்குமில்லாமல் கல் கருடன் மீது பெருமாள் எழுந் தருள்வது நாச்சியார்கோவிலில் மட்டுமே. முதலில் 4 பேர் வெளியே எழுந்தருளச் செய்வர். வாசலுக்கு வந்ததும் 8 பேர், பின் 16 பேர் என்று கனம் அதிகமாகும். அது எப்படி? ஏன்?. அடியவர்களின் குற்றம், பாவம் இவற்றை அவர் ஏற்றுக் கொள்வதால் கனத்து விடுகிறாராம். என்ன அழகான தத்துவம்! கருடன் மீது பெருமாளை தரிசிப்பது, அதுவும் சனிக்கிழமையில் புரட்டாசிச் சனிக்கிழமையில் தரிசிப்பது நாம் செய்த புண்ணியம்.

    திருமலையில்...

    திருமலையில் பெருமாளின் பிரம்மோற்சவத்தை பிரம்மனே நடத்துவதாக ஐதீகம். கோவிலின் அருகில் நடத்துவதாக ஐதீகம், கோவிலின் அருகில் கூடிய கூட்டம் தலையா கடல் அலையா என்று சொல்லும்படி பக்தர் கூடி ‘கோவிந்தா கோவிந்தா’ என அதிர வைக்கும் கோஷமிட ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி, ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார். வைகுண்டம் பூமிக்கு வந்ததோ என மகிழ்வார்கள் பக்தர்கள். பெரிய திருவோணம் என்பது புரட்டாசியில் வரும் திருவோணம். திருமால் ஓணத்தில் அவதரித்தாராம். ஆகவே ‘ஓணத்தான்’ என்பார்கள்.

    பித்ருக்களுக்கு

    இறைவனுக்கு மட்டுமல்ல, இறந்த மூதாதையரான பித்ருக் களுக்கும் உகந்த மாதம் புரட்டாசி. இறந்தவருக்கு உணவாக எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது அவசியம். திதி என்ற சிரார்த்தம் தருவது அவசி­யம். பவுத்தர் கூட தூய வெள்ளை ஆடை உடுத்தி, வருடத்தில் ஒரு முழுநிலவு நாளில் அல்லது அமாவாசை நாளில் கூடி, மந்திரம் சொல்லி நதிக்ரை, கடற்கரை அல்லது ஏரிக்கரையில் இறந்தோருக்கு திதி தருவது வழக்கம்.

    மகாளயபட்சம் புரட்டாசி பவுர்ணமி முதல் நவராத்திரி தொடங்கும் அமாவாசை வரை 15 நாள்கள். அதில் முன்னோர் நமது பிண்டத்தை (உணவை) எதிர்ப்பார்த்துக் காத்திருப்பார்களாம். ஏதாவது ஒரு நாளில் மற்றும் மகாளய அமாவாசையில் முன்னோர் நினைவாக எள்ளும் நீரும் இறைத்தல் அவசியம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்.

    நவராத்திரி கலைவிழா தொழில் வெற்றிக்கு ஆயுத பூஜை கொலு வைப்பது கலை, தொழில் வளர்ச்சிக்கே. நீர்வாழ் உயிர்களின், பொம்மை, அடுத்து பறவைகள், விலங்குகள், மனிதர், மகான்கள் அவதார புருஷர்கள், தெய்வங்கள், எனப்படிப்படியாக பொம்மைகள் வைப்பது அழகு. அறிவுடைமை! பாடல், ஆடல், பஜனை, விதவிதமான அலங்காரம், விதவிதமான பிரசாதங்கள் செய்தல் இவை நவராத்திரியின் சிறப்புகள்.

    9 நாளும் 9 சக்தியை எண்ணி வழிபடுவது நவராத்திரி ஆயக்கலைகள் 64 தரும் கலைமகளுக்கு சரஸ்வதி பூஜை அன்று ஆயுத பூஜை, ராமன் ராவணனை வென்ற திருநாள் விஜயதசமி என்று வடஇந்தியாவில் ராம லீலா என கொண்டாடுவர். நாம் சக்தி அசுரர்களை வென்றநாள் விஜயதசமி என்போம். புரட்டாசியில் ராமாயணம் படிக்கும் வழக்கம் பல இடங்களிலும் இருக்கிறது. குறிப்பாக செட்டிநாட்டில் ஏடுபடித்து ராமர் பட்டாபிஷேகம் செய்வர்.

    ஆக, இந்த மாதம் தூய்மையாக பக்தி செய்யும் மாதம். உயிர்க்கொலை, புலைப்புசிப்பு இல்லாத மாதம். பல விரதங்கள், விழாக்கள் நிறைந்த மாதம் கன்னியர் நவராத்திரி விரதம், புரட்டாசிச்சனிக்கிழமை விரதமிருந்தால், ஐப்பசி, கார்த்திகையில் மணம் கை கூடும். சனியின் பாதிப்பு நீங்கும். சர்ப்ப தோஷம் அகலும். நல்ல சிந்தனைகள் வளரும். காக்கும் கடவுள் திருமால் கை தூக்கிவிடுவார். அனுமனும், கருடனும் விரைந்தோடி வந்து பெருமானைத் தரிசிக்க வைப்பார்கள். சக்தி நமக்குச்சக்தி தருவாள். என்ன அன்பர்களே புரட்டாசி வழிபாட்டைத்தொடங்கிவிட்டீர்கள்தானே.
    வாழ்க வளமுடன்.
    குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு.
    குருப்பெயர்ச்சியன்று குருவை நாம் ஒவ்வொருவரும் கோவிலுக்குச் சென்று நேரில் பார்த்து வழிபடுவதே சிறப்பு. அதிகாலையில் சான்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், குருவாக நம்மை வழிநடத்திச் செல் பவர்களிடம் நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக ஆசி பெறுவது நல்லது.

    நமது ஜாதகத்தில் குரு வரப்போகும் இடத்தைப் பொறுத்து, பெயர்ச்சிக்கு முன்னதாக அல்லது பெயர்ச்சியன்றோ எப்படி, எப்போது எங்கு குருவை வழிபடுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா கிரகங்களையும் பெயர்ச்சிக்குப் பின்னால் தான் வழிபடுவர். ‘குரு’ சுப கிரகம் என்பதால் நாம் பெயர்ச்சி அன்று அல்லது அதற்கு முன்னால் நமது ஜாதகப்படி யோகபலம் பெற்றநாளில் சென்று வழிபட்டு வரவேண்டும் என்பர்.

    அவ்வாறு வழிபட்டால் நாளும் நல்லதே நடக்கும். எல்லா தெய்வங்களுக்கும் உதவியாளர்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்யலாம். ஆனால் குருவிற்கு மட்டும் தாங்களே சென்று வழிபட்டால் தான் ‘குருபார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழிக்கு ஏற்ப கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரத் தொடங்கும்.

    இல்லையேல் யார் வழிபடச் செல்கிறார்களோ அவர்களுக்குத் தான் பலன் கிடைக்கும். குரு சன்னிதியில் குரு கவசம் பாடினால் காரியங்களில் வெற்றி கிட்டும். சுண்டல், கடலை தானம் கொடுத்தால் அண்டிவந்த துயரங்கள் அகன்று ஓடும். குரு பகவானைக் கொண்டாடி வழிபட்டால் நன்மை செய்வார். 
    எந்தக் குருப்பெயர்ச்சிக்கும் இல்லாத பெருமை இந்தக் குருப் பெயர்ச்சிக்கு உண்டு. காரணம் இந்த முறை குரு பெயர்ச்சியாகும் நாள், குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை.
    சுபஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18-ம் நாள் (4.10.2018) வியாழக்கிழமை இன்று இரவு 10 மணிக்கு விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் விருச்சிக ராசியில் குரு பகவான் சஞ்சரிக் கின்றார்.

    எந்தக் குருப்பெயர்ச்சிக்கும் இல்லாத பெருமை இந்தக் குருப் பெயர்ச்சிக்கு உண்டு. காரணம் இந்த முறை குரு பெயர்ச்சியாகும் நாள், குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை. அதுமட்டுமல்லாமல் குருவிற்குரிய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் ஆகும். மேலும் விருத்தியம்சம் தருகின்ற ராசி விருச்சிக ராசி.

    3 யோகங்கள்

    விருச்சிக ராசிக்கு குரு பகவான் அடியெடுத்து வைத்து 9-ம் பார்வையாக சந்திரனை பார்த்து ‘குருச்சந்திர யோகம்’ உண்டாக்குகின்றார். குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் உச்சம்பெற்ற செவ்வாய், சந்திரனைப் பார்த்து ‘சந்திர மங்கள யோகம்’ உருவாகின்றது. சுக்ரன் துலாம் ராசியில் சொந்த வீட்டில் சஞ்சரித்து புதனுடன் இணைந்து ‘புத-சுக்ர யோகம்’ தருகின்றார். இந்த 3 யோகங்களும் அமைந்த நேரத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்வதால் மக்கள் அனைவருக்கும் மகத்தான பலன் கிடைக்கப் போகின்றது. சிக்கல்கள் தீரும், செல்வநிலை உயரும். அக்கம் பக்கத்தில் உள்ளவர் களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகம் தழைக்கும்.

    நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்கு திருவருள் கிடைக்கும். அப்படிப்பட்ட குருவின் பார்வையை பெறும் 3 ராசிகள் ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிகளாகும். ஜென்ம ராசியில் சஞ்சரித்தாலும் தன பஞ்சமாதிபதியாக விளங்கும் குரு பகவான் தன வரவை அதிகரிக்க வைக்கும் ராசியாக விருச்சிக ராசி விளங்குகின்றது. எனவே மேற்கண்ட 4 ராசிக் காரர்களுக்கும் தொட்டது துலங்கும், தொகை வரவு உயரும். பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும்பெருகி இயல்பான வளம் கிடைக்கும்.

    மற்ற ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே குரு பீடங்களுக்குச் சென்று மஞ்சள் வண்ண வஸ்திரமும், முல்லைப்பூ மாலையும் அணிவித்து, வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் எல்லையில்லாத நற்பலன்கள் இல்லம் தேடிவரும்.

    விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். தனுசு ராசிக்கு அதிசாரமாகவும் செல்கின்றார். 13.3.2019 முதல் 18.5.2019 வரை தனுசு ராசிக்கு மூல நட்சத்திரக் காலில் குரு பகவான் சஞ் சரிக்கும் பொழுது, அதன் பார்வையால் மேஷம், மிதுனம், சிம்மம், ஆகிய 3 ராசிகளும் புனிதமடைகின்றன. எனவே அந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

    குருப்பெயர்ச்சிக் காலத்தில் ராகு-கேதுக்களும் பெயர்ச்சியாகின்றன. 13.2.2019 அன்று கடக ராசியில் சஞ்சரிக்கும் ராகு மிதுன ராசிக்குச் செல்கின்றார். மகர ராசியில் சஞ்சரிக்கும் கேது தனுசு ராசிக்குச் செல்கின்றார். இந்தப் பின்னோக்கிச் செல்லும் கிரகங்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும்.

    இருப்பினும் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் யோகபலம் பெற்ற நாளில் நாகசாந்திப் பரிகாரங்களை, தங்கள் சுயஜாதக அடிப்படையில் அனுகூலமான ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்தால் தனவரவில் இருக்கும் தடைகள் அகலும். எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

    குருவின் வக்ர இயக்கம், அதிசார இயக்கம், ராகு-கேது பெயர்ச்சி, சுழலும் மற்ற கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குருப்பெயர்ச்சிப் பலன்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    மேஷத்திற்கு அஷ்டமத்து குருவாகவும், மிதுனத்திற்கு ரோக ஸ்தான குருவாகவும், சிம்மத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், தனுசுக்கு விரய குருவாகவும், கும்பத்திற்கு 10-ம் இடத்து குருவாகவும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள், தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடக்கும் திசாபுத்தி பலம் பார்த்து, பாக்கிய ஸ்தானத்தில் உள்ள கிரகத்தின் பலமறிந்து, அதற்கு பொருத்தமான ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் வளர்ச்சியின் உச்சத்துக்குச் செல்லலாம். திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவரவு போன்ற அனைத்தையும் வரவழைத்துக்கொள்ள இயலும்.

    தங்கம், வீடு, மனைகள் விலை உயரும்

    குருப்பெயர்ச்சிக் கால கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தங்கத்தின் விலை நினைக்க இயலாத அளவு உயரப்போகின்றது. அதே நேரம் வெள்ளியின் விலை குறையும்.

    ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூமி விற்பனை செய்பவர்களுக்கு இது பொன்னான நேரமாகும். உச்சம் பெற்று செவ்வாய் விளங்குவதால் பூமியின் விலை பலமடங்கு உயரப்போகின்றது. கட்டிட உபயோகப் பொருட்கள் கிடைப்பது அரிதாகி பல கட்டிடங்களின் பணிகள் பாதியிலேயே நிற்கலாம்.

    அரசியல் களம்

    நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் இப்போது அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார்கள். இனி மேலும் சில திரைப்படக் கலைஞர்கள் புதிது புதிதாக அரசியலில் நுழைவார்கள்.

    ஆயினும் அவர்கள் தனித்து இயங்கி வெற்றிபெறுவது அரிது. ஏதேனும் ஒரு அரசியல் அமைப்போடு இணைந்து செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.

    சனிபகவான் ‘வில்’ சின்னம் பெற்ற தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் அரசியல் களம் மிக மிகச் சூடுபிடிக்கும். தலைவர்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உருவாகி கட்சிகள் உடையலாம், ஓட்டுகள் பிரியலாம்.

    அரசு அதிகாரிகளுக்கு திடீர், திடீரெனச் சிக்கல்கள் உருவாகும். அவர்களுக்கு இது சோதனைக்காலம் என்ப தால் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது.

    மழை-வெள்ளம்

    செவ்வாயோடு கேதுவும், சந்திரனோடு ராகுவும் இணைந்திருப்பதால் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளங்களால் தத்தளிப்பு போன்றவை அதிகரிக்கலாம்.

    பெட்ரோல், டீசல் விலை உயரும்

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகலாம். இருப்பினும் வாங்கும் திறன் மக்களுக்கு அதிகரிக்கும்.

    பொதுவாக விருச்சிக குருவின் காலத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் பலமடங்கு உயரும் வாய்ப்பு உண்டு.

    வழிபாட்டு தலங்கள்

    குரு பீடமாக விளங்கும் திருச்செந்தூர், திருவாரூர் மடப்புரம் தட்சிணாமூர்த்தி, தஞ்சை மாவட்டம் ஆலங்குடி, திட்டை ராஜகுரு, பட்டமங்கலம் திசைமாறிய தட்சிணாமூர்த்தி, குருவித்துறை, திருவேங்கிவாசல், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியிலுள்ள பாடுவார் முத்தப்பர் ஆலயம், அனைத்து சிவாலயங்களிலும் உள்ள அறுபத்து மூவர் வழிபாடு, சிங்கம்புணரி முத்துவடுகநாதன் சித்தர்ஆலயம், தக்கோலம், புளியரை, சென்னை திருவாலி தாயம், திருவெற்றியூர், திருவாடானை ஆகிய இடங் களில் இருந்து அருள்வழங்கும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

    உள்ளூரில் உள்ள சிவாலயத்தில் இருந்து அருள்வழங்கும் நவக்கிரகத்தில் உள்ள குருவையும், குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபடலாம். குருவருள் இருந்தால் உங்களுக்கு கூடுதல் வளர்ச்சி ஏற்படும். வரலாற்றிலும் இடம்பெற்று வாகை சூடி மகிழலாம்.

    ×