search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95492"

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. கோவிலில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 6.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் தீர்த்த கோஷ்டி நடந்தது.

    இரவு 7.45 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொது ஜன சேவை நடந்தது. இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து வருகிற 28-ந்தேதி வரை இதேபோன்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 1-ந்தேதி இரவு 7 மணிக்கு தாயார் தெப்பம் கண்டருளுகிறார்.

    வருகிற 2-ந்தேதி பந்தக்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’ என்று பொருள் தரும். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    ‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’ என்று பொருள் தரும். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 7 சப்த விடங்க தலங்கள் இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் பார்க்கலாம்.

    * திருவாரூர் - வீதி விடங்கர் - அசபா நடனம்

    * திருநள்ளாறு - நகர விடங்கர் - உத்மத்த நடனம்

    * திருநாகைக்காரோகணம் - சுந்தர விடங்கர் - வீசி நடனம்

    * திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்

    * திருக்குவளை - அவனி விடங்கர் - பிருங்க நடனம்

    * திருவாய்மூர் - நீல விடங்கர் - கமல நடனம்

    * திருமறைக்காடு - புவன விடங்கர் - அம்சபாத நடனம்
    ராமனுக்கு உதவி செய்த சுக்ரீவனின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். ராமனுக்கு நளன் உதவிய கதையை அறிந்து கொள்ளலாம்.
    ராமனுக்கு உதவி செய்த சுக்ரீவனின் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நளன். வானர வீரரான இவர், சிறந்த போர் வீரராக இருந்தார். இலங்கை சென்று சீதையை மீட்க வேண்டுமானால், கடலைக் கடக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

    அந்த நேரத்தில் ஒரு முனிவரின் சாபத்தால் ‘எதை கடலில் எறிந்தாலும் அது மிதக்கும்’ என்று சாபம் பெற்றிருந்த நளன், கடலின் நடுவே பாலம் அமைக்க முன் வந்தார். தன்னைப் போலவே சாபம் பெற்றிருந்த நீலனுடன் சேர்ந்து அவர் பாலம் அமைக்கத் தொடங்கினார்.

    அதன்படி மற்ற வாரன வீரர்கள் பாறைகளை கொண்டு வந்து குவிக்க, அவற்றை நளனும், நீலனும் தங்கள் கரங்களால் கடலில் போட்டனர். அந்த பாறைகள் மிதந்தன.

    இவ்வாறாக கடலில் பாலம் அமைக்கப்பட்டது. ராவண யுத்தத்தில், அசுர படை தளபதிகளில் ஒருவரான தபனன் உள்பட பல அசுரர்களை, நளன் அழித்தார். அதே நேரம் ராவணனின் மகன் இந்திரஜித் வீசிய அம்பு ஒன்று, நளனை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.

    இறைவனுக்கு வழிபாடு செய்வது பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன. இன்று சில முக்கியமான ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    எட்டு வித மலர்கள்

    இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவை, செண்பக மலர், நந்தியாவட்டை, பாதிரி மலர், நீலோற்பவம், வெள்ளெருக்கு மலர், புன்னை மலர், செந்தாமரை, அலரி ஆகியவையாகும்.

    ஏழு மலை

    திருப்பதி வெங்கடாசலபதியை ‘ஏழு மலையான்’ என்றும் அழைப்பார்கள். ஏழு மலையின் மீது வீற்றிருப்பதால் அவருக்கு இந்தப் பெயர் வந்தது. கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். அவை, எருது மலை, கரு மலை, சைல மலை, பாம்பு மலை, கருட மலை, நாராயண மலை, வேங்கட மலை.

    ஒன்பது வகை துளசி

    பெருமாளுக்கு உகந்த அர்ச்சனைப் பொருட்களில் ஒன்று துளசி. பெருமாள் ஆலயங்களில் துளசியை தீர்த்தமாகத் தருவார்கள். அது உடலுக்கு அருமருந்தாக அமைந்தது. துளசியில் ஒன்பது வகையான துளசிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை இங்கே பார்க்கலாம். கருந்துளசி, கற்பூரத் துளசி, காட்டுத் துளசி, கரிய மால் துளசி, செந்துளசி, நாமத் துளசி, பெருந்துளசி, சிவ துளசி, நீலத் துளசி.

    ஒன்பது தீர்த்தங்கள்

    நம் நாட்டில் ஒன்பது வகையான புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, காவிரி, குமரி, பாலாறு, சரயு ஆகியவையாகும். இந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் ஒருவரின் முன்ஜென்ம பாவங்கள் மற்றும் இந்த ஜென்ம பாவங்கள் மட்டுமல்லாது, அவரது பல தலைமுறை சந்ததியினரின் பாவங்களும் கூட கரைந்து போகும். 
    இமயமலைப் பகுதியில் உள்ள தலங்களில் மிகவும் விசேஷம் மிக்க கேதார்நாத் ஆலயத்தோடு சேர்ந்த இன்னும் 4 ஆலயங்களும் இருக்கின்றன. இவை ஐந்தும் சேர்ந்து ‘பஞ்சகோதர தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
    இமயமலைப் பகுதியில் உள்ள தலங்களில் மிகவும் விசேஷம் மிக்கது கேதார்நாத் திருத்தலம். இந்த ஆலயத்தோடு சேர்ந்த இன்னும் 4 ஆலயங்களும் இருக்கின்றன. இவை ஐந்தும் சேர்ந்து ‘பஞ்சகோதர தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

    அவற்றை சிவபெருமானின் உடலில் உள்ள ஐந்து பாகங்களாக குறிப்பிடுவது வழக்கம். அதன்படி சிவபெருமானின் இடுப்பு தான் கேதார்நாத் என்று சொல்லப்படுகிறது.

    துங்கநாத் என்ற திருத்தலம் சிவபெருமானின் தோள் பகுதி என்றும், ருத்ரநாத் ஈசனின் முகம் என்றும், மத் மகேஸ்வரர் கோவில் சிவனின் நாபி (தொப்புள்) எனவும், கல்பேஸ்வரர் ஆலயம் சிவ பெருமானின் திருமுடியாக அமைந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
    ஆந்திர மாநிலம் முன்னொரு காலத்தில் ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.
    ஆந்திர மாநிலம் தற்போது தெலுங்கு தேசம் என்று அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் அது ‘திரிலிங்க தேசம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதற்கு அந்தப் பகுதியில் இருந்து மூன்று முக்கியத்துவம் வாய்ந்த சிவ ஆலயங்களே காரணமாகும்.

    அதாவது ஆந்திரத்தில் தெற்கு பகுதியில் ஸ்ரீகாளகஸ்தி என்ற புகழ்பெற்ற திருத்தலமும், மேற்குப் பகுதியில் ஸ்ரீசைலம் என்ற சிறப்புமிக்க ஆலயமும், வடக்கு பகுதியில் ஸ்ரீத்ராட்சராமம் என்ற மகத்துவம் வாய்ந்த திருத்தலமும் அமைந்திருந்தன.

    இதனால் ஆந்திரம் ‘திரிலிங்க தேசம்’ என்று பெயர் பெற்று விளங்கியது. அதோடு இன்னும் சிலர் அந்தப் பகுதியை ‘மகாலிங்க சேத்திரம்’ என்றும் அழைத்தனர்.
    தேவாரப் பாடல்களில் சிவபெருமானின் காதில் மட்டும் ஏழு வகையான காதணிகள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    சிவபெருமான் புலித் தோல் ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து அருள்பாலிப்பவர். அவர் பொன் நகைகளால் அலங்காரம் செய்யப்படாதவர். இருப்பினும் அவர் தன்னுடைய உடலில் நிறைய அணிகலன்களை அணிந்திருக்கிறார் என்று, அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    அவற்றில் சிவபெருமானின் காதில் மட்டும் ஏழு வகையான காதணிகள் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவம், பொற்றோடு, ஓலை ஆகிய 7 அணிகலன்களை சிவபெருமான் அணிந்திருப்பதாக தேவாரப் பாடல்கள் சொல்கின்றன.

    சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. இந்த ஐந்து முகங்களில், ஒவ்வொன்றில் இருந்தும் கங்கை உற்பத்தியானதாக புராணங்கள் சொல்கின்றன.
    சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. நான்கு திசைகளை நோக்கி நான்கு முகங்களும், ஐந்தாவது முகம் நடுவில் மேல் நோக்கியும் அமைந்திருக்கும். தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், ஈசானம் ஆகியவையே அந்த ஐந்து முகங்களாகும்.

    இந்த ஐந்து முகங்களில், ஒவ்வொன்றில் இருந்தும் கங்கை உற்பத்தியானதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி உற்பத்தியான ஐந்து கங்கைகளுக்கும் ஒவ்வொரு பெயர்கள் இருப்பதாக சிவபுராணம் சொல்கிறது. இந்த கங்கைகளை மொத்தமாக ‘சிவ அமுதசாகரம்’ என்பார்கள்.

    சிவபெருமானின் கிழக்கு முகத்தில் இருந்து ரத்தின கங்கையும், மேற்கு முகத்தில் இருந்து தேவ கங்கையும், வடக்கு முகத்தில் இருந்து கயிலாய கங்கையும், தெற்கு முகத்தில் இருந்து உக்கிர கங்கையும், மேல் நோக்கிய முகத்தில் இருந்து பிரம்ம கங்கையும் தோன்றியதாக சிவபுராணம் கூறுகிறது.
    மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுகிறான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கு 900 முறை மூச்சு விடுகிறான்.
    மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, வெளியேற்றுகிறான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கு 900 முறை மூச்சு விடுகிறான். அந்த கணக்குப்படி பார்த்தால், மனிதன் ஒரு நாளைக்கு 21 ஆயிரத்து 600 முறை மூச்சு விடுகிறான். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா?

    சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் ஆகாய தலமாக இருக்கும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், அம்பலத்தின் மேல் கூரை பொன்னால் வேயப்பட்டது. அதில் பல ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும். அதே போல் திருப் பெருந்துறை என்ற ஊரில் உள்ள ஆலயத்திற்கு ஆத்மலிங்கம் என்று பெயர். இந்த ஆலயத்தின் விமானத்திலும் கூட ஆணிகள் அடிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். இந்த இரண்டு ஆலயங்களிலும் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 21 ஆயிரத்து 600.
    கடும் வெயில் நிலவியதையும் பொருட்படுத்தாமல், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ரோப்கார், மின்இழுவை ரெயில்வழியாகவே மலைக்கோவிலுக்கு அதிகம் சென்றனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும் போது தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

    திருவிழா காலங்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை, கோடைவிடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். அதன்படி வாரவிடுமுறை தினமான நேற்று பழனியில் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் பழனி பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக பக்தர்கள் குடைபிடித்தபடியும், துண்டை தலையில் போட்டுக்கொண்டும் சென்றனர்.

    பழனி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று படிப்பாதையை அதிகம் பயன்படுத்தாமல் மின்இழுவை ரெயில், ரோப்காரில் மலைக்கோவிலுக்கு அதிகம் சென்றனர். இதனால் அங்கு கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக கயிற்றால் ஆன விரிப்பு தரையில் விரிக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக பெரிய கேன்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலை பொருட்படுத்தாது வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பழனியில் வெயில் வாட்டி வதைத்து வருவதால், மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் கூடுதல் விரிப்புகளை விரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே சென்று அடுப்பூதி பொங்கல் வைக்கின்றனர். நேர்த்திகடன் தீர்க்க ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபடுகின்றனர்.
    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 3 கி.மீ., தூரத்தில், கொட்டிப்பள்ளம் நீரோடை அருகே சிங்கிபுரம் ஊராட்சி பழனியாபுரம் காலனி எல்லையில், மிரட்டும் கண்கள், முறுக்கு மீசை, கையில் அரிவாள் சகிதமாக கம்பீரமாக காட்சியளிக்கும் பழமையான முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. ‘அஞ்சலான் குட்டை’ அருகே அமைந்ததால், இக்கோவில் ‘அஞ்சலான் குட்டை முனியப்பன் கோயில்’ என பெயர் பெற்றது.

    இரு நூற்றாண்டுக்கு முன், சிங்கிபுரம் காலனி மலைக் குன்றுக்கு அருகில் ஒரு கிராமம் இருந்துள்ளது. தனியாக இருந்த அக்கிராமத்திற்கு அடிக்கடி கொள்ளையர்கள் சென்று, மக்களை தாக்கி பொருட்களை பறித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களின் அட்டகாசத்தால், அங்கு வசித்த மக்கள் வேறு பகுதியில் குடியேறியுள்ளனர். அதனால், அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் ஆள் நடமாட்டமில்லாத அடர்ந்த வனப்பகுதியில் தனிமையானது.

    வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பெண்கள் சென்றால் ‘முனி’ தாக்குவதாகவும், இரவில் குறி சொல்லும் குடுகுடுப்பை வேட்டுவர்கள் கோவிலில் தங்கி சக்தி திரட்டுவதாகவும் கருதி, பெண்கள் சென்றால் தெய்வக்குற்றம் ஏற்படுமெனக் கூறி, பெண்கள் செல்லவும் வழிபடவும் முன்னோர்கள் தடை விதித்துள்ளனர். அதனால், இரு நூற்றாண்டுகள் கடந்தும் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை.

    ஆண்கள் மட்டுமே சென்று அடுப்பூதி பொங்கல் வைக்கின்றனர். நேர்த்திகடன் தீர்க்க ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபடுகின்றனர். சுவாமிக்கு வைத்த பொங்கல் மட்டுமின்றி, சமைத்த கறியையும் பெண்கள் சாப்பிடுவதில்லை. சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக கருதப்படும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் விபூதியை கூட, பெண்கள் வைத்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கற்சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ள மூலவருக்கு வட திசையில், சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட மூன்று முனியப்பன் சுவாமி சிலைகள் நூற்றாண்டு கடந்து காணப்படுகிறது. அந்த சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் அவ்வப்போது வர்ணம் தீட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

    ஆண்களே பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலிகொடுத்து கறி சமைத்து உண்டு மகிழ்ந்து வழிபடும் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு, வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டுமின்றி, சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் வாரந்தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் குவிந்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

    நல்ல மனைவி அமைய நண்பர்களுக்கு கிடா விருந்து

    நல்ல மனைவி அமையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வீடு, மனை, தொழில் வளம் சேரவும், நோய் நீங்கி நலம் பெறவும் வரம் கேட்கும் ஆண் பக்தர்கள், சுவாமி அருளால் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறினால், கேட்ட வரம் கொடுத்த முனியப்ப சுவாமிக்கு நேர்த்திகடன் தீர்க்க ‘கிடா’ வெட்டி , நண்பர்களுக்கு விருந்து வைப்பது அக்கோவிலின் சிறப்பாகும்.

    நேர்த்தி கடனுக்காக குதிரை, மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடை சிற்பங்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் சிற்பங்களையும் கோவில் வளாகத்தில் செய்து வைப்பதும், அந்த சிற்பங்களுக்கும் படையல் வைத்து பூஜை செய்து வழிபடுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.
    சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர். இவருடைய பத்தினியே ரேணுகாதேவி. கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுக்கவே, கார்த்திவீரியன் மூர்க்கத்தனமாக போர் செய்தான். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார்.

    இந்த பாவம் தீர பரசுராமர் மகேந்திர மலையில் தவம் செய்யும் போது, கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர். கணவன் இறந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள். உடனே இந்திரன், சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. உடனே ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.

    அப்போது வானில் தோன்றிய சிவபெருமான், ‘மானிட பெண்களில் நீயும் ஒருத்தி என்று நினைத்து துயர் கொள்ளாதே. நீ என் தேவியாகிய பராசக்தியின் சகல அம்சங்களில் ஓர் அம்சம் ஆவாய். உன் மகிமையை இந்த உலகத்தினர் அறியும் பொருட்டு நடந்த சக்தி தேவியின் விளையாட்டே இது. எனவே, நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக ‘மாரியம்மன்’ எனும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வா’ என்று அருளினார். இதுவே ‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு ஆகும். அந்த வகையில் உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கி.பி.1788- 1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்ரகமும் அமைத்து வழிபட்டனர்.

    அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.
    ×