search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95509"

    திருமலையில் உள்ள வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 29-ந்தேதி நடக்கிறது. இரவு கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.
    திருமலையில் உள்ள வராஹசாமி கோவில் விமான கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி நடந்து வந்தது. அதற்காக, கோவில் முக மண்டபத்தில் வராஹசாமி மாதிரி கோவில் அமைக்கப்பட்டு, அதன் கருவறையில் வராஹசாமி, லட்சுமி தாயாரின் சிலைகளை அத்திமரத்தால் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. அங்கு தினமும் வராஹசாமிக்கும், லட்சுமி தாயாருக்கும் பூஜைகள் செய்யப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் பதிக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.

    இந்தநிலையில் வராஹசாமி கோவில் மகா கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை ஏழுமலையான் கோவிலில் இருந்து விஷ்வக்சேனர் வசந்த மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். வராஹசாமி கோவிலில் இரவு 9.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை அங்குரார்ப்பணம் நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை வராஹசாமி கோவில் சன்னதியில் யாக சாலையில் காரியக்கர்மங்கள் நடக்கிறது. இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பிரபந்த பாராயணம், வேத பாராயணம் நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையிலும், மீண்டும் இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் வைதீக காரியக்கர்மங்கள் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) வராஹசாமி கோவிலில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    28-ந்தேதி வராஹசாமி கோவில் யாக சாலையில் காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை வைதீக காரியக்கர்மங்கள், மாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மகாசாந்தி பூர்ணாஹுதி, மகாசாந்தி திருமஞ்சனம், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை யாக சாலையில் சயனாதி வாசம் ஆகியவை நடக்கிறது.

    29-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை பூர்ணாஹுதி, பிரபந்த சாத்துமுறை, வேதபாராயண சாத்துமுறை, காலை 9.15 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை தனுர் லக்னத்தில் கோவில் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் வீதிஉலா நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று பக்த ஆஞ்சநேயர் சாமி சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் 24 அடி உயர பக்த ஆஞ்சநேயர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று பக்த ஆஞ்சநேயர் சாமி சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜைகள், பிம்பசுத்தி, நாடிசந்தானம், ரக்‌ஷாபந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பிடாரி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விஜயகணேசர், அய்யனார், துர்க்கை அம்மன், அங்காளம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
    திருப்பூரில் வருகிற 22-ந்தேதி கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள்.
    திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரியில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத கந்தபெருமான் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேக விழா நடத்த திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை முடிவு செய்தது. இதன்படி அறக்கட்டளை சார்பில் முதற்கட்டமாக கோவிலை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

    பின்னர் கோவிலில் 72 அடி உயரத்தில், சிற்ப சாஸ்திர முறைபடி 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி நிறைவு பெற்றது. மேலும் கோவிலுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியான கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், குளியலறை, சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கோவிலின் உள்பிரகாரம் கருங்கல் பதித்து, மூல கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல் என அனைத்து திருப்பணிகளும் முடிவடைந்துள்ளன.

    கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி காலை நடைபெறுகிறது. முன்னதாக 18-ந்தேதி காலை 8.30 முதல் மதியம் 1.30 மணி வரை மூஷிக வாகனனுக்கு முதல் யாக பூஜையுடன் விழா தொடங்குகிறது. மேலும் தினமும் காலை மற்றும் மாலையில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    19-ந்தேதி மாலை 4 மணிக்கு அணைபாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக கந்தபெருமான் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா 22-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால யாக பூஜையுடன் தொடங்குகிறது.

    காலை 8.45 மணிக்கு மஹாபூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 9.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத கந்தபெருமான் கோவில் விமானம், நூதன ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரம் மற்றும் மூலாலய பரிவார மூர்த்திகளுக்கு திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி காலை 7 மணி முதல் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாணம், கந்தபெருமான் திருவீதி உலா ஆகியவையும் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி, கும்மியாட்டமும், ஆன்மிக சொற்பொழிவு, காவடியாட்டம், சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவுக்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
    புளியங்குடி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    புளியங்குடி டி.என்.புதுக் குடி இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 15-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. பின்னர் மகா சங்கல்பம், புண்யாவாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், தனபூஜை, கலசபூஜை, கோபூஜை மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளும் நடந்தது.

    நேற்று முன்தினம் சிவசூர்ய பூஜை, மகா மண்டப பூஜை மற்றும் 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு பிம்பசுத்தி, 4-ம் கால யாகசாலை பூஜைகள், யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சியை தொடர்ந்து 10 மணிக்கு கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மன் சப்பர வீதி உலா நடந்தது.

    கும்பாபிஷேக விழாவில் கண்ணா மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுபாஷ் கண்ணா, கண்ணா மருத்துவமனை டாக்டர் ரவீந்திரன், எம்.ஆர்.எஸ். முகஅழகியல் மருத்துவமனை டாக்டர் ராஜேஷ், பி.வி.பில்டர்ஸ் பாலமுருகன், ஆர்.எம்.பில்டர்ஸ் மாணிக்கம், அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி தாளாளர் முருகன், அன்னை மீனாட்சி பப்ளிக் பள்ளி தாளாளர் சிதம்பரம், ஞானமுத்து நாடார் டிரேடர்ஸ் பரமசிவன், அரிசிக்கடை குமரேசன், கோகுலம் ஸ்டீல்ஸ் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நாடார் பேரவை ராஜ்ஜியம், இந்து நாடார் உறவின்முறைக்கமிட்டி முன்னாள் தலைவர் சங்கரபாண்டியன், பில்டிங் காண்டிராக்டர் மாரியப்பன், தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் சேர்மன் முருகேசன், எஸ்.வி.ஜூவல்லர்ஸ் ராஜ், ஸ்ரீபாலாஜி ஜூவல்லர்ஸ் பழனி, எஸ்.கே.ஜூவல்லர்ஸ் ராமகிருஷ்ணன்,

    கே.பி.என்.டிராவல்ஸ் விவேகானந்தன், சுதன் மெடிக்கல்ஸ் மாரியப்பன், பத்திர எழுத்தர் வைகுண்டமணி, கீர்த்தி டிரேடிங் கண்ணன், காமராஜர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் சபரிநாதன், கண்ணன், குமார், முருகேசன், சின்னையா நாடார் சங்க நிர்வாகிகள், காவியத்தலைவன் நாடக சபா நிர்வாகிகள், மாரியம்மன் வாரச்சந்தா குழு நிர்வாகிகள், காமராஜர் மெமோரியல் சினிகிரிக்கெட் கிளப் மற்றும் காமராஜர் நினைவு ரத்ததானக்குழு நிர்வாகிகள் மற்றும் வன்னியராஜ், மணிவண்ணன், கருப்பையா, திருமலையாண்டி, கதிரேசன், சின்னச்சாமி, கருப்பசாமி, செல்வசிதம்பரகுமார், சரவணகுமார், முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நாட்டாண்மைகள், நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    ஆவடி அருள்மிகு சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் நாளை மறுநாள் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய பிரார்த்தனை தலம் இதுவாகும்.

    இந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷே ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. விளம்பி வருடம், மாசி மாதம் 29-ம் நாள் நாளை மறுநாள் 13.3.2019 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள்ளாக ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள் மற்றும் மாரிதாஸன் சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பபிஷேக விழா 9-ம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று காலையில் நவகிரஹ ஹோமம் அக்னி ஸங்கிரஹனம், தீர்த்த சங்கரஹணம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், மஹாதீபாராதனை நடைபெற்றது.

    நாளை 12-ம் தேதி விசேஷசந்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, மஹா தீபாராதனையும், மாலையில் விசேஷசந்தி, பாவனாபிஷேகம், வேத பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, 1008 தாமரை புஷ்பத்தால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், இரஜதபந்தன சாற்றுதல், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ம் தேதி நான்காம் கால யாக பூஜை, கோபூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, நாடீசந்தானம், தத்வார்ச்சனை, நாமகரணம், நவகுண்ட பட்டுபுடவை வஸ்திர சமர்ப்பணம், ஜயாதி ஹோமம், க்ரஹப்ரீதி யாத்ரா ஹோமம், யாத்ராதானம், கலச புறப்பாடு, மூலஸ்தான விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம், சுயம்பு அம்பாளுக்கு மற்றும் சப்த கன்னிகைக்கும் மூலஸ்தான அம்பாளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வெங்கடாசலபதி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகிற 13-ந்தேதி நடக்கிறது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடத்தில் வெங்கடசாலபதி கோவில் கட்டப்பட்டு வந்தது.

    கோவில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று கோவிலில் அங்குரார்பணம் நடந்தது. மகாகும்பாபிஷேக விழாவையொட்டி 13-ந்தேதி நள்ளிரவு 2.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை சுப்ரபாத சேவை, கும்பாராதனை நைவேத்தியம், மகா பூர்ணாஹுதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு உற்சவர்களான சீனிவாசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவிலில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின்னர் மூலவர் சன்னதியில் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

    பிரம்மகோஷா பூஜைகள், வேத சாத்து முறையை தொடர்ந்து 7.30 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 4 மணியில் இருந்து 5.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது உற்சவர்களான சீனிவாசபெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    பின்னர் உற்சவர்கள் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மாலை 7.30 மணி அளவில் கொடியிறக்கம் செய்யப்பட்டு கோவில் நடைசாத்தப்படுகிறது. பின்னர் மறுநாள் காலை 5 மணி அளவில் மீண்டும் கோவில் நடைதிறக்கப்படும்.

    இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி லட்சுமிகாந்தம் தெவித்துள்ளார்.
    ஆவடி அருள்மிகு சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மார்ச் மாதம் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய பிரார்த்தனை தலம் இதுவாகும்.

    இந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷே ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. விளம்பி வருடம், மாசி மாதம் 29-ம் நாள் 13.3.2019 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள்ளாக ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள் மற்றும் மாரிதாஸன் சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் :

    9.3.2019 அன்று யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. அன்றைய தினம் குருவந்தனம், விக்னேஷ்வர பூஜை, கிராம தேவதை அனுக்ஞை, ஸ்ரீ வாஞ்சாகல்ப மஹா கணபதி ஹோமம் ஸ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி மூலமந்திர ஹோமம் கோபுர கலச பூஜை, மஹா தீபாராதனை பிரசாத விநியோகம் நடைபெறுகிறது. மாலையில் நவரத்தின யந்திர பிரதிஷ்டை ஸ்ரீ ரக்தூள் பரமேஸ்வரி பிரதிஷ்டை வாஸ்து சாந்தி, சப்த கனயகா பூஜை ஷோடச சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.

    10-ம் தேதி அன்று கோபூஜை, தன பூஜை ஏகாதச ருத்ரஹோமம் ஸ்ரீ சுதர்தன ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம், த்ரவ்யாஹூ ஹோமம், தீபாரதனையும், மாலையில் கிராம சாந்தி, சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம், துர்கா சப்தசதீ பாராயணமும் நடைபெறுகிறது.

    11-ம் தேதி காலையில் நவகிரஹ ஹோமம் அக்னி ஸங்கிரஹனம், தீர்த்த சங்கரஹணம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், மஹாதீபாராதனை பிரசாத விநியோகமும், மாலையில் விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம், யாகசாலை பிரவேஷம், முதல்கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

    12-ம் தேதி விசேஷசந்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, மஹா தீபாராதனையும், மாலையில் விசேஷசந்தி, பாவனாபிஷேகம், வேத பாராயணம், மூன்றாம் கால யாக பூஜை, 1008 தாமரை புஷ்பத்தால் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, கோபூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், இரஜதபந்தன சாற்றுதல், மஹா தீபாராதனையும் நடைபெறுகிறது.

    13-ம் தேதி நான்காம் கால யாக பூஜை, கோபூஜை, கஜ பூஜை, அஷ்வ பூஜை, நாடீசந்தானம், தத்வார்ச்சனை, நாமகரணம், நவகுண்ட பட்டுபுடவை வஸ்திர சமர்ப்பணம், ஜயாதி ஹோமம், க்ரஹப்ரீதி யாத்ரா ஹோமம், யாத்ராதானம், கலச புறப்பாடு, மூலஸ்தான விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம், சுயம்பு அம்பாளுக்கு மற்றும் சப்த கன்னிகைக்கும் மூலஸ்தான அம்பாளுக்கும் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனையும், மாலையில் மஹாபிஷேகம் மண்டலாபிஷேகம் நடக்கிறது.

    யாக சாலை 4 காலங்களிலும் கோபூஜை மற்றும் வேதம், ஆகமம், திருமுறை பாராயணங்கள் நடைபெறும்.

    மஹாகும்பாபிஷேகத்தில் பூஜை செய்த பித்தளை கலசங்களை பக்தர்களுக்கு கொடுக்க இருப்பதால் ரூ.300 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற இருப்பதால் ஒருநாள் பூஜைக்கு ரூ. 2000 திருக்கோவிலில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகிறது.
    தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடியில் உள்ள விநாயகர், முத்துமாரியம்மன், முத்து முனியாண்டவர் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டும், பத்ரகாளியம்மனுக்கு புதிய கோவில் கட்டப்பட்டும் உள்ளது. இந்த கோவில்களில் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது.

    காலை 10 மணிக்கு தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பாலச்சந்திர விநாயகர் கோவிலில் இருந்து புலியாட்டம், செண்டைமேளம், தப்பாட்டம், சிலம்பாட்டம், யானை, குதிரை, ஆடு, மாடு ஆகிய ஊர்வலத்துடன் புனித நீர் எடுத்து வரப்பட்டு மேலவஸ்தாசாவடியில் அமைந்துள்ள பத்ர காளியம்மன் கோவிலை வந்தடைகிறது.

    நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

    17-ந் தேதி(ஞாயிற்றுக் கிழமை) காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து 10.15 மணிக்கு விநாயகருக்கும், 10.40 மணிக்கு முத்து முனியாண்டவருக்கும், 11 மணிக்கு முத்து மாரியம்மனுக்கும், 11.15 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மேலவஸ்தாசாவடி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். #Thirunallar #SaneeswaraBhagavanTemple #Kumbabishekam
    காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.1 கோடி செலவில் கோவில் திருப்பணி நடந்தது. கோவிலில் வர்ணங்கள் பூசப்பட்டன. சிலைகள் புதுப்பிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 3-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து 802 யாக குண்டங்களில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை 8-ம் காலயாக பூஜை நடைபெற்றது. யாக குண்டங்களில் இருந்து புனிதநீர் கலசங்களை கோபுரத்துக்கு எடுத்து சென்றனர்.

    காலை 9.18 மணிக்கு ராஜகோபுரம், தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வர பகவான், அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள 3 நிலை கோபுரங்களில் உள்ள அனைத்து கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 150 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.



    கும்பாபிஷேக விழாவில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    விழாவையொட்டி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் சுற்றுப்புற வளாகங்களில் 125 இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தியும், 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகையையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து காரைக்காலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காரைக்காலுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.  #Thirunallar #SaneeswaraBhagavanTemple #Kumbabishekam
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேசுவரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்த யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து பஸ் போக்குவரத்தும் செய்யப்பட்டுள்ளது. எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம்.
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றது. இதையொட்டி நாளை காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேஸ் வரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்து யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெறவுள்ளன. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகம் குறித்து மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனீஸ்வரர் தனி சன்னதி கொண்ட தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இறுதிகட்ட பணிகளாக கோபுரங்களில் கலசங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    சனீஸ்வர பகவான் சன்னதியில் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணிகளை நிறைவு செய்தல், விழாவிற்கு, வரும் பக்தர்கள் திருநள்ளாறு பகுதியில் உள்ள அனைத்து நிரந்தர, தற்காலிக கழிப்பறைகளை தயார் நிலைக்கு கொண்டு வருதல், மாவட்ட போக்குவரத்து துறை மூலம் பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை உறுதி செய்துள்ளோம்.

    எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம். சனிப்பெயர்ச்சி விழாவின்போது செய்யப்பட்ட விரிவான வசதிகள் கும்பாபிஷேகம் விழாவிலும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    ×