search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
    • அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த பி. என்.பாளையத்தை சேர்ந்தவர் கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கீதா கேட்டபோது முத்துக்குமரன் மனைவி மங்கைக்கும், கீதா தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் மங்கை மற்றும் கீதா ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் மங்கை கொடுத்த புகாரின் பேரில் கீதா, ராஜா, அசலாம்பாள், ராதா ஆகியோர் மீதும், கீதா கொடுத்த புகாரின் பேரில் மங்கை மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதியில் செயல்படும் பட்டாசு ஆலையில் 2 தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு 3 அறைகள் சேதமாகின.

    இதுகுறித்து ஒத்தையால் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் அங்கு ஆய்வு செய்து விருதுநகர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் ஆலையின் உரிமையாளர் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய தாயில்பட்டியை சேர்ந்த வினோத், அன்பில் நகரத்தை சேர்ந்த பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரங்கள் வெட்டி கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இதுபற்றி மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேடிவந்த செல்வம்(வயது62), விவசாயியான இவருக்கு உப்போடைப்பட்டியில் மாந்தோப்பு உள்ளது. இவர் அங்கு விலை உயர்ந்த மரம், செடி, கொடிகளை வளர்த்து வருகிறார்.

    இந்தநிலையில் தேடிவந்த செல்வம் சம்பவத்தன்று மதியம் மகன் விவேக்குடன் உப்போடைப்பட்டி மாந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு 5பேர் கும்பல், அவரது தோப்பில் உள்ள மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தது. அதனை விவேக் தட்டிக்கேட்டார். அதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சரமாரியாக அவரை தாக்கினர். இதில் விவேக் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி மேலவளவு போலீசில் தேடிவந்த செல்வம் புகார் செய்தார். அந்த மனுவில், எனக்கும் அ.வல்லாளப்பட்டியை சேர்ந்த ராஜபிரபு, இளவரசன், சவுந்தரவேல், மகேந்திரன், கடத்திநேந்தல், கணபதிநகர் சேது ஆகிய 5 பேருக்கும் இடையில் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் அவர்கள் எனது தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்து, ரூ.20லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி லாரியில் கடத்திச்சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் மேலவளவு போலீசார், புகார் கூறப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் சேது என்பவர் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது
    • எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார்.

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. (வயது 29). இவர் பெண்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார்.

    பாதிரியார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். அதன்படி பாதிரியார் மீது 5 பிரிவுகளில் சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவரது லேப்-டாப்பில் உள்ள விவரங்களையும் போலீசார் கேட்டறிந்தனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் பாளையங்கோட்டை ஜெயிலில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ அடைக்கப்பட்டார். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். புகாரில் பாதிரியாருடன் செல்போனில் சாட்டிங் செய்தேன்.

    பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காததால் ஒதுங்கி கொண்டேன். ஆனால் அவர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
    • டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்துாரில் டாக்டர் ஞானமணி (வயது 35) மற்றும் தனியார் லேப் உரிமையாளர் பஷீர் (36) ஆகியோர் இணைந்து கிளினிக் வைத்து நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதில் டாக்டர் ஞானமணி அம்பகரத்துார் பகுதியிலேயே தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இதனால் இவர்களுக்கு இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பஷீர் உள்ளிட்ட 31 பேர் ஞானமணி கிளினிக்கில் புகுந்து டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த டாக்டர் ஞானமணி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அம்பகரத்துார் போலீசார் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார்.
    • கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா, கனகராஜை வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்திவிட்டார்.   சம்பவத்தன்று கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட இளையராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், அருள், வேல் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேஷன் கடை பெண் ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறான்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த வர் மகாலிங்கம். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ராஜேஸ் வரி சமயநல்லூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறான். இந்த நிலையில் தோடனேரியை சேர்ந்த கதிரவன் மனைவி நாக ஜோதி என்பவர் தனது 83 செண்ட் நிலத்தை விற்க முன்வந்தார்.

    நாங்கள் அதனை பணம் கொடுத்து வாங்கி பத்திரப் பதிவு செய்து கொண்டோம். ஆண்டிப்பட்டி பங்களாவில் நாகஜோதி ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நாக ஜோதியின் மகன் சூரஜ் குமார், சரத்குமார், ஷர்மிளா தேவி, மணிகண்டன் ஆகி யோர் எங்களுக்கு சொந்த மான இடத்தில் 28 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு நாகஜோதி, அவரது மகள் சரண்யா மற்றும் தோடனேரி நடுத்தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமார் (வயது 48). இவருக்கும் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சன்னியாசி மகன் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த குமார் மற்றும் மணிவேல் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி மகன்கள் செல்வம், மணிவேல், ஏழுமலை, முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் விஜி, குமார், பூங்கொடி, பவுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஏழுமலை என்பவரை கைது செய்தனர்.

    • முக்கல் நாயக்கன்பட்டியில் உள்ள திருப்பதி கொட்டாய் பிரிவில் சாலையின் அருகே தி.மு.க கட்சி கொடியை பிடுங்கி எரிந்ததாக கூறப்ப டுகிறது.
    • தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பனை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள பூர்சன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது38). இவர் முக்கல் நாயக்கன்பட்டியில் உள்ள திருப்பதி கொட்டாய் பிரிவில் சாலையின் அருகே தி.மு.க கட்சி கொடியை பிடுங்கி எரிந்ததாக கூறப்ப டுகிறது.

    மேலும் இதனை தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பனை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மூக்கல் நாயக்கன்பட்டி தி.மு.க கிளை செயலாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரூர் பத்திர பதிவு அலுவலகத்தில் நிலத்துக்காக ஆசைப்பட்டு கேசவராஜ் மனைவியின் நிலத்தை தன்னுடைய பேரில் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • போலீசார் மணிமேகலை, ராஜம்மாள், கேசவராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோபிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவரது மனைவி ராஜம்மாள் (வயது65). இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் 57 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

    அதே போல் அதே பகுதியை சேர்ந்தவர் குடியரசு. இவரு டைய மனைவி பெயரும் ராஜம்மாள் (63). இருவருடைய பெயரும் ஒரே மாதிரி இருக்கிறது.

    இதனால் குடியரசு மனைவி ராஜம்மாள் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அரூர் பத்திர பதிவு அலுவலகத்தில் நிலத்துக்காக ஆசைப்பட்டு கேசவராஜ் மனைவியின் நிலத்தை தன்னுடைய பேரில் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கேசவராஜ் அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அரூர் போலீசார் மணிமேகலை, ராஜம்மாள், கேசவராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • லாரி டிரைவரின் வீட்டில் கல் வீசிய பெண்ணின் உறவினர்கள்
    • 4 பேர் மீது வழக்கு பதிவு

    திருச்சி,

    திருச்சியை அடுத்த ராம்ஜி நகர் அருகேயுள்ள கே.கள்ளிக்குடி காந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி வள்ளியம்மாள் என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவுக்கும் செம்பட்டு திருவளர்ச்சி பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் (40) என்பவரின் உறவு பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.இந்த தகவல் அறிந்து சேகர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சேகர் தனது உறவினர்கள் சண்முகம் (50), அவரது மனைவி விஜயலட்சுமி (47), சடையன் (57) ஆகியோருடன் ராஜாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் அவரது மனைவி வள்ளியம்மாள் இருந்துள்ளார்.அவரிடம் ராஜா, உனது கணவர் எனது உறவு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார். இதனை அவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் உன்னையும் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என மிரட்டியோடு, வீட்டின் மீது சரமாரியாக கற்களையும் வீசி தாக்கியதாக கூறப்பட்டது.இதில் ராஜாவின் வீட்டு மேற்கூரை ஓடுகள் உடைந்து நொறுங்கின. இதுகுறித்து வள்ளியம்மாள் ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சேகர் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் கணக்கு கேட்டபோது தகராறு
    • அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது65). இவர் அப்பகுதியில் நாட்டார் ஆக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கோவில்கள் அருகில் மகாலிங்கம் பணி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் பூமிநாதன், கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல் ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதோடு, அருகில் இருந்த கருங்கல்லால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காயம் அடைந்த மகாலிங்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.இச்சம்பவம் குறித்து மகாலிங்கம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×