search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • 159 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல்
    • போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி. உத்தரவு

    கரூர், 

    கரூர் மாவட்டத்தில் 90 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகள் 12 மணி முதல 10 மணி வரை செயல்படுகிறது. ஆனால் இதன் பார்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவையடுத்து, மாவட்ட மது விலக்கு போலீசார்களும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் கரூர், வெள்ளியணை, தென் னிலை, தாந்தோணிமலை, பசுபதிபாளையம், வெங்க மேடு, லாலாப்பேட்டை, மாயனூர், வாங்கல், வேலா யுதம்பாளையம் மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 17 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 159 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய் யும் நிகழ்வுகள் தொடர்ச் சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார் களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    • வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லியை சேர்ந்தவர் காயத்ரி(வயது26). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் எனக்கும், உறவினர் பிரியதர்சன் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    வரதட்சணையாக 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. பிரியதர்சன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இதனால் நான் எனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டேன்.

    இந்த நிலையில் எனது நகையை விற்று கார் வாங்கியதோடு பிரியதர்சன், சிவானந்த லட்சுமி என்பவரை 2-வது திரும ணம் செய்துள்ளார். இதற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனவே இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சம்பந்தப் பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பிரியதர்சன், அவரது பெற்றோர் பரமசிவம்-செல்வி, சகோதரர் பிரசன்ன குமார் உள்பட 8 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி படத்துடன் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • பாரதிய ஜனதா கட்சியினர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    நாகர்கோவில் :

    ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஒழுகினசேரியில் உள்ள சுடுகாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி படத்துடன் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பாரதிய ஜனதா கட்சியினர் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இந்த நிலையில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் 40 பேர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஜல்லிக்கட்டு காளை குறித்து அவதூறு பரப்பியதால் தகராறு
    • 2 சிறுவர்கள் உள்பட சிலர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவி(வயது 20). இவர் அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளையை படம் பிடித்து, தனது செல்போனில் வாட்ஸ்-அப்பில் பிடி மாடு என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அதே ஊரை சேர்ந்த அஜித் (27) மற்றும் சிலர் சேர்ந்து, சஞ்சீவியிடம் சென்று எதற்காக எங்கள் உறவினர் மாட்டை பிடி மாடு என பதிவிட்டுள்ளாய் என்று கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த சஞ்சீவி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவியை தாக்கிய அஜித் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 91 வழக்குகளில் 108 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 64 லிட்டர் சாராயம், 32 லிட்டர் புதுவை மாநில சாராயம் மற்றும் 72 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரப்பின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்துதல். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மதுபானங்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பராக் போன்ற போதை புகையிலைப் பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி வேட்டை நேற்று நடைபெற்றது. இதில் மது வழக்குகள் 63 பதிவு செய்யப்பட்டு 63 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 64 லிட்டர் சாராயம், 32 லிட்டர் புதுவை மாநில சாராயம் மற்றும் 72 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும், 12 பேர் மீது குட்கா வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோ குட்கா பொருட்கள் கைப்ப ற்றப்பட்டது. இதேபோல 5 பேர் கஞ்சா வழங்கில் கைது செய்யப்பட்டு 380 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தவிர 26 நபர்கள் சூதாட்ட வழக்கிலும், 2 பேர் லாட்டரி விற்பனை வழக்கிலும் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம், 91 வழக்குகளில் 108 பேர் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.

    • பெண்ணுக்கு மாமனார் அடிக்கடி வேதவள்ளிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படு கிறது.
    • அனைத்து மகளிர் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தாசனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி வேதவள்ளி (வயது 20). கடந்த 2021 -ம் வருடம் இருவருக்கும் திருமணமாகிய நிலையில் 6 மாதமாக குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    ேமலும் இவருடைய மாமனார் அடிக்கடி வேதவள்ளிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படு கிறது. இது குறித்து தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 17 வயது பெண்ணின் அனுமதி இல்லாமல் கடந்த வருடம் அங்கானம்புதூரை வேடியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
    • இருவருக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது பெண். இவருடைய அனுமதி இல்லாமல் இவருடைய பெற்றோர் கடந்த வருடம் அங்கானம்புதூரை வேடியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.இதனால் இருவருக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தங்கத்தின் மீது வெளிநாடுகளில் முதலீடு செய்தால் அதிக பணம் என்று மோசடி
    • 5பேர் மீது வழக்கு பதிவு

    திருச்சி.

    திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்தவர் ரத்தனகிரி, இவரது மனைவி லதா (வயது 36.)இவரிடம் சேலத்தில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் திருச்சி கிளை அலுவலர்கள் தொடர்பு கொண்டு பேசினர் . அப்போது வெளிநாடுகளில் தங்கத்தின் மீது முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட பணம் கூடுதலாக மாதந்தோறும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறினர்.இதனை நம்பிய அவர் சில லட்சங்களை முதலீடு செய்தார். மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சொல்லி அவர்களும் ரூ 26 லட்சம் வரை முதலீடு செய்து உள்ளனர்.மேலும் ஒரு லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ 18 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர்.பின்னர் அந்த நிறுவனத்தார் ரூ 4 லட்சத்து 66 ஆயிரம் பணத்தை வழங்கிவிட்டு மீதி பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்தனர். இந்த நிலையில் நீண்ட காலமாகியும் முதலீடு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதை தொடர்ந்து திருச்சி ஜே எம் 1நீதிமன்றத்தில் லதா வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் தனியார் கம்பெனியின் நிர்வாக இயக்குனர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய சிறிது நேரத்திலேயே சேகர் வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம், 63 ஆயிரத்து 900, 80 ஆயிரம், 90 ஆயிரம் என எடுக்கப்பட்டதாக சேகர் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்தது.
    • திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த வாரம் இவரது செல்போனிற்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில் உங்களுடைய கூகுள் பே அக்கவுண்ட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினால் உங்கள் எண்ணிற்கு கமிஷன் தருவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சேகர் தனது கூகுள் பே அக்கவுண்ட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மெசேஜ் வந்த எண்ணிற்கு அனுப்பினார். அதைத்தொடர்ந்து சேகர் கூகுள்பே எண்ணிற்கு ரூ.150 வந்தது.

    இதேபோல் சேகர் எண்ணிற்கு 3 எண்களில் இருந்து மெசேஜ் வந்தது. மெசேஜ் வந்த 3 எண்ணிற்கும் கூகுள் பே ஸ்கிரீன் ஷாட் அனுப்பினார்.

    ஸ்கிரீன் ஷாட் அனுப்பிய சிறிது நேரத்திலேயே சேகர் வங்கி கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரம், 63 ஆயிரத்து 900, 80 ஆயிரம், 90 ஆயிரம் என எடுக்கப்பட்டதாக சேகர் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வந்தது. இதனைக் கண்டு அதிர்ந்து போன சேகர் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர் ரெட்டி இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சேகர் எண்ணிற்கு மெசேஜ் வந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது மதுரையை சேர்ந்தவர்கள் சேகர் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் மதுரைக்கு சென்று பண மோசடியில் ஈடுபட்ட மதுரை வாலிபர்கள் 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2. 63 லட்சத்தை பறிமுதல் செய்து சேகரிடம் ஒப்படைத்தனர்.

    • கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பாலூர் சன்னியாசிப்பேட்டை ஊர் இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
    • இதனால் அங்கு இருந்த ஏராளமான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர்

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பாலூர் சன்னியாசிப்பேட்டை ஊர் இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.

    தாக்குதல்

    இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று ஒரு கும்பல் சன்னியாசி பேட்டை ஊர் பகுதியில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சென்று சரமாரியாக கற்கள் மற்றும் உருட்டு கட்டைகளை வீசினார்கள். இதனால் அங்கு இருந்த ஏராளமான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர். இதில் வீட்டின் ஓடுகள், டிராக்டர் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்ததோடு , பா.ம.க. பேனர் கிழிக்கப்பட்டன.

    இத் தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நடுவீரப்பட்டு போலீசார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட தலைவர்கள் தடா. தட்சிணாமூர்த்தி, நவீன் பிரதாப் மற்றும் பா.ம.க.நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டனர்.

    30 பேர் மீது வழக்கு

    பின்னர் போலீசாரை முற்றுகையிட்டு சம்பந்த ப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் சன்னியாசிபேட்டையை சேர்ந்த மோகன் கொடுத்த புகாரின் பேரில் குயிலாப் பாளையம் காலனியை சேர்ந்த பிரதாப், சந்துரு உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிரதாப் (24), சந்துரு (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சன்னியாசிப்பேட்டை மற்றும் குயிலாபாளையம் பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மூணாம் கரடு அடுத்த பொம்மனசெட்டிக்காடு அருகே போலீஸ்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாஸ்கர். இவரை நேற்று முன்தினம் வழிபறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், கோழி பாஸ்கர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக கூறி அவரது தாயார் மகாலட்சுமி (வயது 64), மனைவி உஷா (42), மகள் கவுசல்யா (22) மற்றும் உறவினர்கள் லதா (40), கீதா (40), தாரணேஸ்வரி (21) ஆகியோர், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மண் எண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனைக் கண்ட போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்தி டவுன் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில், சேலம் டவுன் போலீசார் பாஸ்கரின் மனைவி உள்பட 6 பெண்கள் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனுக்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் அபுதாபியில் வேலைக்கு சென்ற நிலை யில் மனைவியை பெற்றோர் வீட்டில் இருக்குமாறு தெரி வித்துள்ளார்.

    இதனையடுத்து வைத்தீஸ்வரி தாய் வீட்டில் இருந்து வந்ததுள்ளார். மாமனார் தியாகராஜன், மாமியார் வளர்மதி ஆகி யோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா சென்றுள்ளனர். இதன் பின்னர் தீபாவளிக்கு வந்துள்ளனர்.

    அப்போது வைத்தீஸ்வரி கணவர் வீட்டுக்கு வந்து தனக்கு தேவையான பொருட்களை எடுக்க சென்றுள்ளார். அதற்கு மாமனார்-மாமி யார் அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம். அந்த பணத்தை வரதட்சணை யாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் விவாக ரத்து செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வைத்தீஸ்வரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படை யில் அனைத்து மகளிர் போலீசார் மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    ×