search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95786"

    • வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
    • போலீசார் 2 சிறுவர்களை திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

    திருச்சி,

    திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 48). இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர், திருச்சி மத்திய பஸ் நிலையம் டவுன் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது இவர் அருகில் வந்த திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் 2 பேர் தாமோதரன் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 300 பணத்தை திருடிக் கொண்டு ஓட முயன்றனர். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் அந்த சிறுவர்களை பிடித்து திருச்சி கண்டோன்மென்ட் குற்ற பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் 2 சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு திருச்சி இபி ரோட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.



    • சப்ளையரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

    கரூர்:

    கரூர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டி(வயது 50). இவர் தற்போது ஆண்டாங்கோவில் புதூரில் வசித்து வருகிறார். இவர் ரெட்டிபாளையம் டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்தவர் கவுதம், ஜீவா இருவரும் ரெட்டிபாளையம் டாஸ்மாக் பாருக்கு வந்து பாண்டியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு பாண்டி பணம் இல்லை என கூறியுள்ளார்.

    இதனையடுத்து கவுதம், ஜீவா ஆகியோர் பாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பாண்டி கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் கவுதம், ஜீவா ஆகியோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் மெக்கானிக்காக பணி செய்து வந்தார்.
    • நான் கடலூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி சென்று விட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என்.புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இங்கு பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் (31) மெக்கானிக்காக பணி செய்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெளியில் சென்று பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 22-ந்தேதி விழுப்புரம் மார்க்கெட்டு பின்புறம் அழைத்து சென்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இளம்பெண்ணுக்கு தாலி கட்டினார்.

    அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து பண்ருட்டி எல்.என். புரம் மின்வாரிய அலுவலகம் அருகில் இறக்கி விட்டு விட்டு உன்னுடன் வாழ எனக்கு விருப்பமில்லை நான் கடலூரில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி சென்று விட்டார் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ருட்டி மகளிர் போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

    • நடராஜன் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
    • ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கடன் தவணை கட்டாத வரை தாக்கிய ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 46). ஆசாரி வேலை செய்யும் இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன் டி.வி.எஸ்., கம்பெனியில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கினார். வாகனம் வாங்கியதற் கான தவணை தொகையை சரியாக கட்டி முடித்ததால் டி.வி.எஸ்., கிரிடிட் கம்பெனி மூலம் பர்சனல் லோன் ரூ.50 ஆயிரம் நடராஜனுக்கு வழங்கினர்.

    இதற்கான மாத தவணை தொகையை சரியாக கட்டவில்லை. நேற்று முன்தினம் புதுப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டிக்குப்பம் பெட்ரோல் பங்கில் நடராஜன் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டி.வி.எஸ்., பைனான்ஸ் வசூல் ஊழியர் விக்னேஷ், ந-டராஜனிடம் தவணை தொகை கேட்டார். இதில் விக்னேஷ்க்கும் நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விக்னேஷ் நடராஜனை தாக்கினார். இதனால் காயமடைந்த நடராஜன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • எதிர்பாராமல் முரளிதரன் வீட்டில் பந்து விழுந்துவிட்டது.
    • மோதலில் முரளிதரன், முருகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 21). அதே பகுதியில் 4 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் முரளிதரன் வீட்டில் பந்து விழுந்துவிட்டது. இது தொடர்பாக முரளிதரன் கிரிக்கெட் விளையாடிய நபர்களிடம் கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இந்த மோதலில் முரளிதரன், முருகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகிய3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விக்கி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர், முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன்(23). இவரை 4 நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவருக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அருண்பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சிவகங்கை மாவட்டம் மித்ராவயல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(60).இவர் பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள கண்மாயில் ஏலம் எடுத்து மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • நாவப்பிள்ளை கிராம நிர்வாக அலுவலர்.
    • கொலை மிரட்டல்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் நாவப்பிள்ளை (வயது 57). இவரிடம் பரமநத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த ஏழுமலை, முருகன் ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து நிலப்பட்டா வழங்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுத்த கிராம நிர்வாக அலுவலர் நாவப்பிளையை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து நாவப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, முருகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • போதையில் இருந்த முத்துகுமரன் வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது50) கூலி தொழிலாளி.இவர் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் பணம் கொடுக்காததால் மனைவியு டன் தகராறில் ஈடுபட்டார். அப்போது போதையில் இருந்த முத்துகுமரன் வீட்டிலிருந்த மண்எண்ணையை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்தார். இதனையடுத்து தீ உடல் முழுவதும் பரவி துடித்தார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் முத்துகுமரனை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடித்து சிதறி அறைகள் தரைமட்டமானது. இதில் காளிராஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து சாணார்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சாந்தி சம்பவ இடத்தில்ஆய்வு செய்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் மாடசாமி, மேலாளர் முத்துக்குமார், போர்மென் முத்துகருப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பட்டாசு கடை அருகில் முத்தமிழ்புரம் காலனியை சேர்ந்த அருணாசலம் (32) என்பவருக்கு சொந்தமான செட்டில் பாதுகாப்பின்றி அட்டை பெட்டியில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.

    • சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
    • வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரங்கதுரை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது வைத்தீஸ்வரி தரப்பினருக்கும், ரங்கதுரை தரப்பினருக்கும் திடீரென்று மோதல் ஏற்பட்டது. மேலும் வைத்தீஸ்வரியை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

    மோதலில் ரங்கதுரை தரப்பில் சபிதா என்பவரு க்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வைத்தீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ரங்கதுரை மற்றும் 5 பேர் மீதும், சபிதா கொடுத்த புகாரின் பேரில் குமரேசன் உட்பட 3 பேர் என 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் போஜ்ஜா கூடேமை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு.

    இவரது மகள் இந்திரஜா (வயது 9). வெங்கடேஸ்வரலுவிடம் சேகர் என்பவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு அனந்தகிரியில் வெங்கடேஸ்வரலுவின் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.

    பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.

    காரில் இருந்து சிறுமி இந்திரஜா வெளியே தலையை நீட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார்.

    சிறுமி தலையை காருக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதை கவனிக்காத கார் டிரைவர் சேகர் திடீரென கார் கண்ணாடியை ஏற்றினார். இதில் சிறுமியின் கழுத்து இறுகி மூச்சு அடைத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த இந்திரஜாவின் பெற்றோர் சிறுமியின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

    இதுகுறித்து அனந்தகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

    • ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
    • போக்குவரத்து காவல்துறை போலீசார் இருசக்கர வாகனம் திருட்டுப் போவதை தடுக்கும் விதமாக ஆய்வு மேற்கொண்டனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் ஷகீரா பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் பகுதிகளில் போக்குவரத்து காவல்துறை போலீசார் இருசக்கர வாகனம் திருட்டுப் போவதை தடுக்கும் விதமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் அமர்ந்து சென்ற 25 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் சென்ற 120 பேர் மீதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ற வாகனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதி மீறிய 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மீண்டும் ெஹல்மெட் அணியாமலோ, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினாலோ அல்லது அனுமதிக்கு புறம்பாக 2 பேருக்கு மேல் வாகனங்களில் அமர்ந்து சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தும் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    ×